1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஜப்பானிய பண்பாடு

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Sep 21, 2021.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,746
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello: ஜப்பானிய பண்பாடு :hello:

    'டைட்டானிக்’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அந்தப் படத்தில் காட்டப்படாத ஒரு சம்பவம் இருக்கிறது.
    கப்பல் பழுதடைந்து கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும். அவர்களைக் காப்பாற்ற பல படகுகள் வரும். முதலில் கப்பலில் இருந்து படகுக்குப் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே செல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள்.

    அப்படி, கப்பலில் இருந்து படகுக்கு செல்லும்போது ஒரு ஜப்பானியன், பெண்களோடு கலந்துபோய் படகில் ஏறி தப்பித்துக் கொள்கிறார். அந்த நபர் தன்னுடைய நாடான ஜப்பானுக்குச் செல்லும்போது, அந்த மக்களும் நாடும் அவரை வரவேற்கவில்லை. மாறாகப் புறக்கணிக்கிறார்கள்.

    அதற்கு காரணம் ஜப்பானியர்களுக்கு ஒரு பண்பாடு உண்டு. அதை விளக்க அங்கிருக்கும் பள்ளிகளில் ஒரு குட்டிக் கதை வைத்திருக்கிறார்கள். ஒரு ராணுவப் படை வீரர்கள் குதிரையில் கும்பலாக வருகிறார்கள். கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்க்கிறார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர்.

    தெருவில், இரண்டு கைக்குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.
    ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது. இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும். இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள். சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள்.
    இறக்கிவிடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது.

    அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார். ' ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே! அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பலிகொடுக்கத் துணிந்தாய்?’ என்று.
    அந்த பெண் கண்ணீருடன் சொன்னாள்...
    'என் குழந்தைக்கும், பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ராணுவம் வந்தது. பக்கத்து வீட்டுக் குழந்தையை இறக்கிவிட எனக்கு அதிகாரம் கிடையாது. அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்!’ என்று சொன்னாள்.

    அந்தப் பெரியவர் கண் கலங்கினார்.
    நமக்காக வாழாமல் பிறருக்காக வாழ வேண்டும் என்ற மனித வாழ்வியல் நெறியைக் கொண்ட நாடு ஜப்பான். அந்த நாட்டில் பிறந்த ஒருவர் கோழையாகத் தப்பி வந்ததை அந்த மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

    இது போன்ற ஏராளமான பாடங்களை வரலாற்றில் இருந்துதான் நாம் கற்றுக் கொள்ள முடியும்!''
     
    Loading...

Share This Page