1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சோம்பல் தவிர்!

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Dec 1, 2010.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    நினைத்தது எல்லாம் கிடைத்திடும் என,
    நீ எண்ணம் கொள்வதில் தவறில்லை.
    நில்லாது உழைத்துக் கொண்டிருந்தால்,
    நீ இலக்கினை அடைவாய். தடையில்லை.

    சிறிதளவே நீயும் மெனக்கெட்டு, பின்,
    நெடுந்துயிலில் நீ ஆழ்ந்து விட்டால்,
    பெரிதளவில் தோல்வி வந்திடுமே, உன்
    பெயர் தெரியாது போய் விடுமே!

    கரம் துண்டுபடினும் ஒரு நாளும்
    இரந்துண்ண எண்ணாதே நீயும்.
    வரம் இந்த வாழ்க்கை என உணர்ந்து,
    உயர்ந்திடுவாய் நன்றாக உழைத்து.

    சோதனைகள் பல வரலாம் வாழ்வில்,
    சோர்ந்து போகக் கூடாது அயர்வில்.
    சோம்பலதைத் துரத்திடுவாய் நீயும்,
    சோகமில்லை உன் வாழ்வில் நாளும்.
    -ஸ்ரீ
     
    Loading...

  2. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    கரம் துண்டுபடினும் ஒரு நாளும்
    இரந்துண்ண எண்ணாதே நீயும்.


    என்ன ஒரு அழுத்தமான வரிகள் ஸ்ரீ, சோதனைகளை சாதனைகளாக்க வேண்டும், கருத்து நன்று...
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு நன்றி லதா.
    அவ்விரண்டு வரிகள் சில நாட்களாகவே மனதில் திரும்பத் திரும்ப மோதிக் கொண்டிருந்தன. மீதி வரிகள் இவற்றுக்கு முன்னும் பின்னுமாக எழுதப்பட்டவை. அவ்வளவு தான். சில சமயம் இது மாதிரி நேர்வதுண்டு. -ஸ்ரீ
     
  4. Artbrush

    Artbrush Gold IL'ite

    Messages:
    1,263
    Likes Received:
    57
    Trophy Points:
    110
    Gender:
    Female
    சோதனைகள் வரும் வாழ்வில் சோர்ந்து போகாமல் உழைப்பின்
    உயர்வை மிக அருமையாக சொன்னீர்கள் :clap:
     
  5. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    "சோதனைகள் பல வரலாம் வாழ்வில்,
    சோர்ந்து போகக் கூடாது அயர்வில்.


    கரம் துண்டுபடினும் ஒரு நாளும்
    இரந்துண்ண எண்ணாதே நீயும்.
    வரம் இந்த வாழ்க்கை என உணர்ந்து,
    உயர்ந்திடுவாய் நன்றாக உழைத்து."

    these lines attracted me even if a lazy person read your poem they too feel brisk.good and encouraging lines rgs
     
  6. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சோர்வும், சோம்பலும் உன்னுள்ளே
    இருந்தால் தோல்வி உன்னருகே
    சோம்பலை சாம்பலாக்கினால்
    வாழ்வில் வெற்றி உன்னருகே..

    என சோம்பல் நீக்கி வெற்றிக்கு வழி சொன்ன வரிகள் அருமை
     
  7. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    somba thavithu ..ayaraathu ulaithal verti unathe ena azhagaaga sonneergal sri arumai.....:)
     
  8. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு நன்றி கார்த்திகா. -ஸ்ரீ
     
  9. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    I know you are never lazy Sonia. UngaL "Athista" pOl neengaLum romba suRusuRuppu dhaan. Correctaa? Thanks for your nice feedback. -rgs
     
  10. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி வேணி. -ஸ்ரீ
     

Share This Page