1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சொல்லும் சொல்லை அழகாக்கு

Discussion in 'Regional Poetry' started by natpudan, Dec 17, 2010.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சொல்லும் சொல்லை அழகாக்கு

    சொல்பவரின் சொல்லில் கருத்தில்லையா?
    சொல்பவரின் சொல்லில் சுரத்தில்லையா?
    சொல்பவரை பிடிக்கவில்லையா?
    சொல்வது பிடிக்கவில்லையா?

    சொல்லின் செல்வரல்ல அனைவரும்,
    சொல்லும் சொல்லில் சூடிருந்தால்,
    சொல்லும் முறையை சொல்லிடு.

    சொல்பவர் சொல்லின், கேட்காதோர் உண்டோ?
    சொல்லாமல் புரிந்துகொள்ள, சொல்பவருக்கு அறிவுமில்லை,
    சொல்லாமல் இருந்தால், சொல்பவர் சொல்லிக் கொண்டே தானிருப்பர்,
    சொல்லிக் கேட்க, சொல் கேட்க அருகில் யாருமே இல்லாதவரை.

    சொல்பவர் பிடித்திருந்தால், சொல்லும் முறையை சொல்வது தானே,
    சொல்லிற்கு அழகு, சொல்வதற்கு அழகு, சொல்லிடு அழகே,
    சொல்லி சோகம் அதை நீக்கிடு, சொல்பவர் சொல்லும் அழகாகும்..
     
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Nats

    Oru Chollai vaithu enna azhagana kavidhai ezhudhi vitteer
    Its said na Words plus eggs should be handled with care
    for words once spoken and eggs once broken
    are the hardest things to repair.

    viji
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சொல்பவரின் சொல்லில் கருத்தில்லையா? சுரத்தில்லையா?
    சொல்பவரை பிடித்திருந்தால் இரண்டும் உண்டு
    பிடிக்காதிருந்தால் இரண்டும் இல்லை .

    பிடிக்காதிருந்தால்
    சொல்லும் முறையை சொல்லி விடு -இல்லையெனில்
    சொன்னால் கேட்பவரின் வழி சொல்லி விடு.
    சொல்பவர் சொன்னால் கேளாமல் போவாரோ?

    சொல்லும் வழி இருந்தும் நீ சொல்லாமல் இருந்து விட்டால்
    சொல்வழியே உன்னைக் கொள்வார்
    சொல்பவர் உன்னைக் கொல்வார்
    சொல் பேச்சு கேட்காத அந்த சொல்வளச்செல்வர்

    சொல் அழகாய் சொல்வதற்கு
    சொல்பவர் சொல் அழகாவதற்கு
    சொல்லிடு அழகாய் நீ
    சொல் சொல்லும் முறைமையை சுணக்கம் இன்றி.

    நட்ஸ்
    மிக மிக அருமை ....Bow.Bow.Bow.

    இதோ பிடிங்க
    சொல்லின் செல்வர் கிற பட்டம் உங்களுக்கு :):):)
     
  4. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நீங்கள் நம்பமாட்டீர்கள் நட்ஸ்... இப்போது தான் ஒருவரிடம் சொல்லிவிட்டு வந்தேன்.... சொல்லுபவர் சொன்னால் கேட்கத்தானே செய்வர் என்று....சொல்லிலேயே சொல் அமைத்து சொல் பற்றி வந்த உங்கள் கவிதை அருமை நட்ஸ்.:thumbsup:thumbsup
     
  5. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    எல்லாம் சரி, ஆனா இது யாருக்கு சொல்றீங்க?
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    லதா
    அது என்னன்னா எப்பவுமே அவரு நமக்கு புரியாத மாதிரி எழுதித் தள்றார் இல்லையா
    அது உங்களுக்கு புரியலனா உடனே "எனக்கு நீங்கஎழுதி இருக்கிறது புரியல"ன்னு சொல்லச் சொல்றார்.
    (அதை தானே நாம எப்பவும் செய்யறோம் ன்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது.ஆனா அவருக்கும் கேக்கணும் இல்லையா.)

    இல்லனா.....
    யார் சொன்னா அவர் கேப்பாரோ அவங்ககிட்ட சொல்லி சொல்லச் சொல்றார்.
    (அது யாருன்னு நீங்களே அவரை கேளுங்க)


    இப்போ என்ன சொல்ல வர்றார்னா உங்களுக்கு புரிகிற மாதிரி அவர் எழுதனும்னா "எனக்கு புரியும்படி எழுதுங்க"ன்னு நீங்க அவர் கிட்ட சொல்லனும்னு எதிர் பார்கிறார்.இல்லனா அவர யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியாதாம். :exactly:அப்பிடி நீங்க உங்க சோகத்த சொன்னா தான் அவர் எழுத்து அழாகா இருக்குமாம்.


    இப்போ உங்களுக்கு புரியுதா யாருக்கு இவ்ளோ வெளக்கமா அவர் சொல்லி இருக்காருன்னு. :coffee:coffee:coffee
     
    Last edited: Dec 18, 2010
  7. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    ayo saroj, enake romba adhisayama purinjiduchu, nan ketadhu neenga sonnadhai dhann (அது யாருன்னு நீங்களே அவரை கேளுங்க)
     
  8. kanthaeikon

    kanthaeikon Gold IL'ite

    Messages:
    988
    Likes Received:
    333
    Trophy Points:
    190
    Gender:
    Female
    Dear Natus

    ஆஹா நீங்கள் என்ன சொன்னாலும் எதை சொன்னாலும் எப்படி சொன்னாலும் நான் படிப்பேன் ரசிப்பேன் சில சமயம் பின்னோட்டமும் கொடுப்பேன் நீங்களும் வேணியும் எழுதும் தமிழை காலை படித்துதான் (மற்றும் சரோஜ் எழுதும் cm thread today's thought ) என் வேலை ஆரம்பம் ஆகும்
    ஆகையால் தொடரட்டும் உங்கள் தமிழ் பணி
    என்றென்றும் நட்புடன்
    kantha
     
  9. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    ஆக மொத்தம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க?:)
    சொல்லாதீங்க சொல்லாதீங்க.. அனேகமா இனி நீங்க சொல்லாமலே எனக்குப் புரிஞ்சுடும்(வேற வழி?:bonk)

    jokes apart..ரொம்ப அழகான கவிதை நட்ஸ்..
     
    Last edited: Dec 18, 2010
  10. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Thanks Viji Ma.

    Mutta odanjaa saaptralaam. Aanaa ithu apdi illamaa. Sarithaanae?
     

Share This Page