1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சொர்கமே என்றாலும் அது நம் ஊரே போல வருமா? - In Chicago

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Jul 16, 2024.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    12,749
    Likes Received:
    13,487
    Trophy Points:
    615
    Gender:
    Male
    சொர்கமே என்றாலும் அது நம் ஊரே போல வருமா?

    வெளிநாட்டில் நம் தமிழ் நாட்டின் உணவுக்கான தேடல் கொண்ட ஓர் நபரின் பதிவு

    [​IMG]
    (1) அமெரிக்காவில் எங்கும் எப்போதும் கிடைக்கும் அவர்களது தேசிய உணவு என்றால் Burger, Pizza, Pork, Beef போன்றவைதான். நம்மைப் போன்ற Occasional visit செய்யும் இந்தியர்கள், அமெரிக்காவிற்குள் Trip செல்லும்போது, முதலில் இந்த Burger, Pizza-வைச் சாப்பிடும் போது கிடைக்கும் ஒரு அந்நியச் சுவையில் துவக்கத்தில் ஒரு ஈர்ப்பு தெரிந்தாலும், இரண்டு நாட்களுக்குள் திகட்டி விடுகிறது.

    (2) அங்கு இருக்கும் Coffee Shop-களில், நம்ம ஊர் Filter Coffee-யை எண்ணிக்கொண்டு ஆசையுடன் Coffee-க்கு ஆர்டர் செய்தால், அண்டா போலுள்ள ஒரு லிட்டர் பேப்பர்-கப்பில் தழும்ப தழும்ப அவர்கள் கொடுக்கும் Black Coffee, நம் Filter Coffee ஆசைக்கு ஆப்படித்து விடுகிறது.

    (3) இப்படித்தான், கடந்த வார Chicago Trip- முழுதும் Burger, Pizza-க்களால் திகட்டிப் போய், திணறிக்கொண்டிருந்தபோது, ஒரு தேன் சுவைச் செய்தி ஒன்று தென்றலாக வந்து காதில் விழுந்தது.

    (4) ஆம்! Chicago Downtown நகர்புற பகுதியிலிருந்து 30 மைல் தொலைவில் #A2Bஅடையாறுஆனந்தபவன் ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டு இயங்கிவருகிறது என்கிற செய்திதான் அது. அச்செய்தியில் இருந்த நம் இந்திய உணவின் சுவை, நம்மை ஈர்த்ததன் விளைவு அடுத்த 45 நிமிடத்தில் அந்த #A2B ஹோட்டலை அடைந்தோம்.

    [​IMG]
    (5) அங்கு சுமார் 200 கார்கள் பார்க்கிங் வசதியுடன் அமைக்கப்பட்டிருந்த நம்ம ஊர் #A2Bஅடையாறுஆனந்தபவன் ஹோட்டலைக் காணும் போது, நம் உறவினர் வீட்டைக் கண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. ஹோட்டல் உள்ளே நுழைந்ததும், காத்திருந்து இடம் பிடிக்கும் அளவிற்கு நிறைந்திருந்த நம் இந்திய மக்களைக் கண்டதும், இன்னும் மட்டற்ற மகிழ்ச்சி.

    (6) உள்ளே நுழைந்தவுடன், Dining Hall-ல் அமர்ந்து, டின்னருக்கான Order கொடுத்த சிறிது நேரத்தில், அந்த ஹோட்டல் ஊழியர் கொண்டு வந்து நம் முன்னே வைத்த, இட்லி, பொங்கல், வடை, தோசை, பில்ட்டர் காபி அடங்கிய, நம் தமிழ் மணத்துடன் கூடிய மினி டிபனைக் கண்ட போது, "சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப் போல வருமா?" என்ற திரை படப்பாடல்தான் நினைவுக்கு வந்தது.
     

Share This Page