இதோ இன்னுமொரு மஞ்சள் மலர் இந்த வாரத்திலே செவ்வந்திதான் செருந்தியோ என ஐயம் இருந்தது இதுவும் மஞ்சள் நிற மலர் தான் ஆனாலும் செவ்வந்தி அல்ல, செருந்தி நல்ல மஞ்சளில் இதழ்கள் செய்து, அதை அழகுற அருகருகே அடுக்கி வைத்தது போல அத்துணை அழகு இந்த மலர்கள், மொட்டும் மலர்களும் கொத்துக் கொத்தாய் மலர்ந்திருக்கும் அழகு காண்போரை மதி மயக்கும் அழகிய பச்சையில், அடர் வண்ணத்தில் இலைகள், அதைத் தாங்கும் கிளைகள், என மரம் மொத்தமும் அங்கிங்கெனாதபடி அழகு கொட்டி கிடக்கிறது விஷேச வாசனை கிடையாது, இருப்பினும் இதன் விதைகளுக்கான அமைப்பு வித்தியாசமானது. சிறு குவளை போன்ற அமைப்பின் உள்ளே பொத்தி வைத்த முத்துகளாய் விதைகள், இந்த அமைப்பு அழகிய சிவந்த நிறம் கொண்டவை மலர்களை விட கவர்ச்சியானவை, விதைகள் முதலில் பச்சை நிறத்தில் இருக்கும், பின் முற்றுகையில் நல்ல கருப்பு வண்ணத்தில் மாறும் இந்த விதைகளுக்கான அமைப்பு காண டிஸ்னி-இன் கேலிச் சித்திர கதாபாத்திரம் மிக்கி மௌஸ் போலத் தோற்றம் தருவதால் இந்த தாவரம் ஒரு சிலரால் மிக்கி மௌஸ் தாவரம் எனவும் அழைக்கப்படுகிறது Name : Ramdhan Champa, Golden champak, Mickey Mouse Plant Botanical Name : Ochna obtusata Family : Ochnaceae
very nice venimohan. naan serunthinaa sembaruthi poovonu nenachuttu ulla vatha. aaana oru puthu malarai kanda santhosam nandri ka
very nice poem and nice information of agian with some new flower. we came to know abt the new new flowers from u venima!! hats off to ur poem and all the best for ur future works dear...........
அன்புள்ள ராம், முதல் பின்னூட்டம் தந்த எனது தம்பிக்கு நன்றிகள் பல. ஆமாம் ராம், பல பூ வந்து நாம் இதுவா இருக்குமோன்னு நெனச்சு பொய் பாத்தா அது வேற பூவா இருக்கு. இந்த லிஸ்ட் முடியறதுக்குள்ள நெறைய பூ நமக்குத் தெரியப் போகுது.
அன்புள்ள வினு மா, இப்படி நீங்க டெய்லி வந்து என் எல்லாப் பூ கவிதையும் படிச்சு பின்னூட்டம் தந்தா நானும் எழுதிக்கிட்டே இருக்கலாம் தான். நன்றிகள் உங்களுக்கு, இந்த அழகிய பின்நூட்டத்திருக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும்.
செருந்தியா.... சிலந்தியா... மஞ்சளா ..உங்கள் அஞ்சலா? வியக்க வைக்கிறது. பூவும், பூவுக்கு கவிகோத்த உங்கள் முன்னுரையும் நன்றி.
மஞ்சளில் இத்துனை பூக்களா? அவற்றுக்கு ஏத்த கவிதை வரிகள், உங்கள் கைவண்ணத்தில், நித்தமும் பூக்க, பூரிப்பே எங்களுக்கு.