*ஒரு கணவன் மனைவி.இருவரும் வேலைக்கு செல்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.* *மனைவியின் பெற்றோர்கள் மகனுடன் அமெரிக்கா வில் இருக்கிறார்கள். கணவனுக்கு அம்மா மட்டும் அவர்கள் குழந்தையை பார்த்துக் கொள்கிறார்கள்.* *இப்போது அந்த அம்மாவின் அம்மாவிற்கு ரொம்ப முடியாமல் கிராமத்தில் இரு க்கிறார்கள்.அதனால் அம்மா கிராமத்திற்கு சென்று விட்டார்கள்.* *குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக இருவரும் லீவு ட்ரை பண்ணுகிறார்கள். இருவர் ஆஃபீஸிலும் ப்ராஜெக்ட் ஒர்க் டயிட்டாக இருக்கிறது.லீவு கிடைக்க மாட்டேன் என்கிறது. என்ன பண்ணுவது என தெரியவில்லை.* *இந்த சமயத்தில் கொரோனா காரணமாக வீட்டில் இருந்தே வேலை பார்க்க சொல்லி விட்டார்கள்.* *இப்போ ரெண்டு பேருமே வீட்டிலேயே இருக்கிறார்கள். கிராமத்தில் பாட்டியும் இறந்து விட்டார்கள். பஸ் வந்தால் அம்மாவும் வந்து விடுவார்கள்.* *ஒரு வாரமாய் என்ன செய்வது என்று தெரியாமல் உலகையே சபித்துக் கொண் டு இருந்தவர்களுக்கு கொரோனா காலம் வந்து எல்லாவற்றையும் எளிதாக்கி விட்டது.* *அதே சமயம் மிக உச்சத்தில் இருந்த தொழில் அதிபர் ஒருவர் இந்த கொரோ னாவின் பின் விளைவை எண்ணி கலங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்.* *ஒரே நிகழ்வு தான் ஒருவருக்கு நன்மை தருவதாகவும் மற்றொருவருக்கு துன்பம் தருவதாகவும் இருக்கிறது.* *நமக்கு பகல் என்றால் அமெரிக்காவில் இரவு.அவர்களது பகல் நமக்கு இரவு.* *ஒரே உலகு தான் .அவங்களுக்கு வேற மாதிரி.நமக்கு வேற மாதிரி. இது தான் யதார்த்தம்.* *நான் காணும் உலகங்கள் நீ காண்பதில்லை. நீ காணும் உலகங்கள் நான் காண்பதில்லை....இது தான் நிஜம்.* *ஆனா நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் என்று விரும்புகிறோம். அது நடக்கவே நடக்காது.* *உலகம் ஒரே மாதிரி தான் இருப்பது போல் தெரிகிறது.ஆனால் அது உண்மை அல்ல.* *ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் பார்வைக்கு ஏற்றவாறு உலகம் வேறுபடும்.தனி மனிதனின் உலகு அவனுக்கு மட்டுமே சொந்தமானது.* *எல்லோருமே அவரவர் கருத்துப் படி அவர் காணும் உலகம் தான் சரி என்று நம்புகிறார்கள்.* *உண்மையில் இங்கு நாம் காண்பது அனைத்துமே நாடகம் தான்.எதுவுமே நிஜம் இல்லை.* *நாம் கனவு காண்கிறோம்.அந்த கனவில் நாமும் இருக்கிறோம். சூழலுக்கு தகுந்தவாறு கவலை,பயம்,வலி,இன்ப துன்பம் அனைத்துமே வருகிறது.* *ஆனாலும் கனவை நம் விருப்பப் படி மாற்றி அமைக்க முடியாது. அது இஷ்ட த்துக்கு தான் எல்லாம் நடக்கும்.* *இந்த உலகமும் ஒரு கனவு தான் .இந்த கனவை நமது மரணம் மட்டும் தான் கலைக்க முடியும்.* *இங்கு மனதால் நாம் ஒன்றும் பண்ண முடியாது. ஆனால் உடலால் செயல்கள் செய்ய முடியும்.* *நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் நிச்சயம் உண்டு. அதற்கான வினையை நாம் எதிர் கொண்டு தான் ஆக வேண்டும்.* *இன்று நாம் எதிர் கொள்ளும் பல விஷயங்கங்கள் நாம் முன்பு எப்போதோ செய்த செயல்களின் விளைவுகளே என்று பெரியவர்கள் சொல்வதுண்டு.* *அது உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம்.அதுவும் ஒரு நம்பிக்கையே. நமக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது.* *நல்லது செய்தல் நல்லது நடக்கும். கெடுதல் செய்தால் கெடுதல் நடக்கும் என்கிறார்கள்.* *நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை. கெடுதல் செய்யாமல் வாழ்ந்தாலே போதும்.* *பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!* *தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!* *முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!* *#வாழ்த்துகள்.* *#வாழ்க_வளத்துடன்.*