சூரியன் பார்க்காத கிணறு: தண்ணீர் வற்றாத &#2949

Discussion in 'Jokes' started by jaisapmm, Oct 1, 2008.

  1. jaisapmm

    jaisapmm Silver IL'ite

    Messages:
    531
    Likes Received:
    16
    Trophy Points:
    55
    Gender:
    Male
    தியாகதுருகம் : தியாகதுருகம் மலை மீது திப்பு சுல்தான் காலத்தில் படை வீரர்களுக்காக ரகசிய இடத்தில் உருவாக்கிய "சூரியன் பார்க்காத கிணறு' இன் றும் தண்ணீர் வற்றாமல் உள்ளது.விழுப்புரம் மாவட் டம் தியாகதுருகம் மலை கடந்த 17ம் நூற்றாண்டுகளில் வரலாற்று சிறப்பு மிக்க பல போர்கள், வீரச் சம்பவங்கள் நடந்த இடமாக இருந்துள் ளது. ராணி மங்கம்மாள் காலத் தில் தஞ்சாவூரிலிருந்து சித்தூருக்கு போடப் பட்ட நூறடி சாலை இந்த மலையை ஒட்டிச் செல்கிறது. அதனால் இந்த சாலை ராஜபாதையாக மிகவும் பாதுகாப்பு நிறைந்த சாலையாக பயன்படுத்தியுள் ளனர். இந்த சாலையில் செல்பவர்களை கண்காணிக்க தியாகதுருகம் மலையை கண்காணிப்பு கோபுரமாக அக்காலத்திய அரசுகள் பயன்படுத்தியுள்ளன.பிரெஞ்சு அரசிடமிருந்து 1760ம் ஆண்டு தியாகதுருகம் மலையை ஹைதரலி கைப்பற்றினார். அதன் பின் 1790ம் ஆண்டுகளில் இந்த மலையை திப்பு சுல் தான் கைப்பற்றி அதன் மீது கோட்டை ஒன்றை உருவாக்கி வீரர்களை நிறுத்தி கண்காணிப்பு கோபுரமாக பயன்படுத்தியுள்ளார். எதிரிகளை வீழ்த்த மலை உச்சியில் மூன்று பெரிய பீரங்கிகள் அமைக்கப் பட்டது. இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு தேவையான தண் ணீரை பாறை இடுக் கில் உள்ள குகை போன்ற அமைப்பின் உட்பகுதியில் இருளான இடத்தில் ஒரு கிணறு அமைத்து எடுத் துள்ளனர்.இந்த கிணற்றில் சூரியக் கதிர்கள் படுவதில்லை. அதனால் இதற்கு சூரியன் பார்க்காத கிணறு என்ற பெயர் ஏற்பட்டது. போர் காலங்களில் குடிநீர் நிலைகளில் விஷத்தை கலந்து எதிரிகளை அழிக்கும் யுத்தி அக்காலத்தில் நடைமுறையில் இருந்தது. அதனால் இது போன்று ரகசியமான குகை போன்ற இடத்தில் கிணறு அமைத்து எதிரிகளுக்கு தெரியாமல் தண்ணீர் எடுக்க பயன்படுத்தியுள்ளனர்.இக்கிணறு இன் றும் நீர்வற்றாமல் இருப்பது நேரில் பார்ப்பவர்களை ஆச்சர் யபடுத்துகிறது. இதிலுள்ள நீர் நூற் றாண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தாமல் இருப்பதால் நிறம் மாறி துர்நாற்றம் வீசுகிறது. தொல்பொருள் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக இதை அறிவித்தாலும், இதனை பராமரிக்க இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போன்ற பண்டைய சிறப்புகளை கூறும் வரலாற்று நினைவு சின்னங்களை பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     
    Loading...

  2. asharvi67

    asharvi67 New IL'ite

    Messages:
    58
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Re: சூரியன் பார்க்காத கிணறு: தண்ணீர் வற்றாத &#

    Wow... never heard of this.
    Posting my reply in englishBig Laugh:crazy

    Thanks for sharing
     

Share This Page