1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சீருடை நாட்கள்

Discussion in 'Regional Poetry' started by mccian, Feb 20, 2010.

  1. mccian

    mccian New IL'ite

    Messages:
    60
    Likes Received:
    4
    Trophy Points:
    8
    Gender:
    Female
    [​IMG]

    அருணாக்கயிறில் குடித்தனம் நடத்திய
    அந்த அழுக்கு அரைக்கால் டிரவுசரின்
    வாசனையை உணர முடிகிறது...
    என் பழைய பள்ளிக் கட்டடத்தை
    கடந்து போக நேர்கையில்

    பலமுறை என் தத்தா செத்துப்போனதாய்
    அறிவித்த விடுமுறை விண்ணப்பங்களையும்
    ஆரஞ்சு மிட்டைக்கான ஆர்வக் கோளாறில்
    தேசியக் கொடியைத் தலைகீழாக
    குண்டூசியில் ஏற்றிய
    ஆகஸ்டு பதினைந்துகளையும்
    எல்லப்பனின் தகர டப்பாவை
    மறைத்து வைத்ததனால் ஏற்ப்பட்ட மனஸ்தாபத்தில்
    இன்று வரை பேசாமலிருப்பதும்
    கூட்டாஞ்ச்சோத்துக்காக சுள்ளிகள் பொறுக்கிய
    சொப்பு விளையாட்டுகளையும்
    அசைபோடத் தோன்றுகிறது...
    "மௌஸ் ஹேங்க் ஆயிடிச்சி டாடி"
    என்கிற என் மகனின் குரலால்...

    -முத்தாசென் கண்ணா
     
    Loading...

  2. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    dear mukta

    super. Technology valarchiyayum inraiya thalaimuraikalin mana nokkayum romba elimaiyaga choliitteenga. besh!!!


    ganges
     
  3. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    Nanraaga sonneergal..andha naal seerudai naatgalum, indha naalin seerdai naatigalin...difference ai..

    sriniketan
     
  4. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    nyabagam varuthe, nyabagam varuthe........
    pokishamaga nengjil puthaintha .........

    serudai nattkalai yaralum marakkaiyalathu,
    nalla kavithai.
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கலா,

    சீராக சென்ற அந்த சீருடை நாட்கள் - அன்றோ
    ஜோராக செல்லும் கணினி முன் நாட்கள் - இன்றோ

    குழந்தைகள் மட்டும் அல்ல,
    பெற்றோர்களும் மாறித்தான் பொய் விட்டோம்.

    ஆகஸ்ட் 15, ஜனவரி 26:
    அன்று - குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பினார்கள்
    இன்று - குழந்தைகள் போகலாம் என்றாலும்;

    tv ஐப் போட்டுப் பாருடா,
    ராஜ் பவன்ல நடக்கிற மார்ச் பாஸ்ட் லைவா காட்டுவாங்க,
    அப்பாவுக்கு இன்னைக்கு ஒரு நாள் தான் லீவு ரெஸ்ட் எடுக்கணும் கண்ணா,
    என்று நாமும் தானே மாறிப் போய்விட்டோம்.

    அந்த நினைவுகளை....என்னவென்று சொல்லுவது .

    அருமையான நினைவுகள்.
     

Share This Page