1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சீரடிசெல்லும் பாதையிலே

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh, Jun 28, 2014.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    சீரடிசெல்லும் பாதையிலே என் சிந்தையும் இருக்கிறது - அங்கு
    ஆட்சி புரியும் அண்ணலைக் காண இதயமும் துடிக்கிறது

    (சீரடிசெல்லும் பாதையிலே)

    ஆறுதல் தேடி அடியவர் இங்கு அனுதினம் வருகின்றார் – அவர்
    சீரடி மண்ணில் காலை வைத்ததும் சகலமும் பெறுகின்றார்
    ஆறுதல் தேடி அடியவர் இங்கு அனுதினம் வருகின்றார் – அவர்
    சீரடி மண்ணில் காலை வைத்ததும் சகலமும் பெறுகின்றார்
    மானுடம் வாழ மண்மேல் வந்த மன்னவன் நகரல்லவா – அவர்
    வாழ வைத்திடும் காவல் தெய்வம் அன்னைக்கு நிகரல்லவா

    (சீரடிசெல்லும் பாதையிலே)

    என்னால் முடிந்தது பாடல்கள் எழுதி உன்னைத் துதிக்கின்றேன் – நீ
    என்னுடன் நிஜத்தில் இருக்கின்றாயென நானும் நினைக்கின்றேன்
    என்னால் முடிந்தது பாடல்கள் எழுதி உன்னைத் துதிக்கின்றேன் – நீ
    என்னுடன் நிஜத்தில் இருக்கின்றாயென நானும் நினைக்கின்றேன்
    சின்னவன் செய்த தவறுகள் பொறுத்து காத்திடவே வேண்டும் நான்
    தினமும் உன்மேல் செந்தமிழ் பாடல்கள் யாத்திடவே வேண்டும்

    (சீரடிசெல்லும் பாதையிலே)
     
    5 people like this.
  2. bhucat

    bhucat Platinum IL'ite

    Messages:
    1,870
    Likes Received:
    2,572
    Trophy Points:
    283
    Gender:
    Female
    NIce words....
     
  3. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    மிக்க நன்றி blucat. ஓம் சாயி ராம்.
     
  4. meenueash

    meenueash Platinum IL'ite

    Messages:
    1,975
    Likes Received:
    1,346
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Thanks for Sharing beautiful poem of Saima

    Om Sairam
     
  5. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    மிகவும் நன்றாக இருந்தது வெங்கடேஷ்! வாழ்த்துக்கள்!


    ஆயிரம் காதம் பயணமென்றாலும்
    ஓரடியில் தொடங்கிடும் அது தானே!
    பல்லாயிரம் பேரின் துயரமென்றாலும்
    சீறடியில் தொலைந்திடும் அவை தாமே!


    உள்ளோர், இல்லோர் என அனைவருமே
    உடன் நாடுவதும் என்றும் உனைத் தானே!
    உள்ளம் உருகிட உனைத் துதித்ததுமே,
    உடன் பொழியும் உன்னருள் அவர் மீதே!


    இல்லையென்றே உன்னிடம் வருவோர்
    குறை இல்லை என மகிழ்ந்தே திரும்பிடுவார்!
    உன் பெயரே மந்திரமென உச்சரிப்பார்
    வாழ்வில் நலமெல்லாம் அவர் பெறுவார்!


    சிறு அகல் ஒளியும் பேரிருளை
    விரட்டி விடும்; நாங்களும் அது போலே
    உன் பெயரைச் சொல்லிட விரைந்தோடும்
    எம் கசடும், தீமையும் புகை போலே!
     
    1 person likes this.
  6. saidevo

    saidevo Gold IL'ite

    Messages:
    1,268
    Likes Received:
    429
    Trophy Points:
    158
    Gender:
    Male
    அழகிய கவிதை வெங்கடேஷ்! பாராட்டு்கள்.

    'நகரல்லவா, நிகரல்லவா' சொற்களை 'நகரன்றோ, நிகரன்றோ' என்று மாற்றினால் ஓசை மேலும் சிறக்கும்.

    ரமணி


     
  7. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    மிக்க நன்றி மீனு
     
  8. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male

    மிக்க நன்றி ஆர் ஜி எஸ்
     
  9. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    ரமணி ஜி மிக்க மகிழ்ச்சி. வசிஷ்டர் வாயால் ப்ரும்ம ரிஷி!
     

Share This Page