1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சிலருக்கு கசிலருக்கு கண்ணீர் வரலாம்ண்ணீர் வரலாம்

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Jun 25, 2022.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,746
    Likes Received:
    12,565
    Trophy Points:
    615
    Gender:
    Male
    சிலருக்கு கண்ணீர் வரலாம்

    இந்த சம்பவம் நடந்தது 2014 ஆம் ஆண்டு.
    இதை எழுதியவர் ஒரிசாவில் உள்ள புவனேஸ்வரில் உள்ள கலிங்க விஹார் MIG காலனியில் வசித்து வரும் அன்று சப் கலெக்டர் ஆக இருந்த ஷிசிர்காந்த பாண்டா.
    அன்று மாலை நான் எனது டூர் முடிந்து அலுவலகம் வந்தேன்.
    என் அலுவலகம் வெளியே சுமார் 55 வயதுள்ள ஒரு பெண்மணி அமர்ந்து இருந்தார்.
    என்ன விஷயம் என்று கேட்டேன்....
    அவரின் நிலத்தை விற்பது சம்பந்தமாக அனுமதி கேட்டு வந்திருந்தார்.
    ஒரிசாவில் அரசு இலவசமாக வழங்கிய நிலத்தை யாராவது வேறு ஒருவருக்கு விற்க வேண்டும் என்றால் தகுந்த காரணம் சொல்லி / ஆதாரம் காட்டி,
    குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் அனுமதியுடன் அரசு அனுமதியும் வாங்கிய பிறகே விற்க முடியும்.
    எனவே இவரின் ஃபைலை கொண்டு வர சொன்னேன்.
    இவர் மூன்று முறை இவரின் நிலத்தை விற்பதற்காக விண்ணப்பம் செய்திருந்தார்.
    அவரின் ஓய்வூதியம், கணவரின் வங்கி ஊதியம், பிள்ளைகளின் வருமானம் ஆகியவற்றில் பெரும்பாலான தொகை ஏழை, எளிய, பழங்குடி மக்களுக்கு செலவிடப்பட்டது.
    எனவே வங்கியில் கடன்.
    வங்கியில் வாங்கி இருந்த கடனை குடும்ப சூழ்நிலை காரணமாக செலுத்த இயலாததால் நிலத்தை விற்று வங்கி கடனை அடைக்க எண்ணி உள்ளார்.
    அவருக்கு மூன்று முறையும் அனுமதி கிடைத்தது.
    ஆனால் விற்க இயலவில்லை.
    முதல் அனுமதி 2009 ல் கிடைத்தது.
    ஆனால் விற்பதற்குள் முதல் மகன் விபத்தில் மரணம்.
    அதனால் விற்க இயலவில்லை.
    பெற்ற தாயின் மன உளைச்சலை எண்ணிப் பாருங்கள்.
    மன அழுத்தம் குறைந்து, 2012 ஆம் ஆண்டு இறுதியில் இரண்டாம் அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தார்.
    அனுமதி கிடைத்தது.
    ஆனால், விற்பதற்குள் 2013 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இரண்டாவது மகனும் மரணம்.
    விற்க இயலவில்லை.
    மீண்டும் மன உளைச்சல்.
    2014 ல் மீண்டும் விண்ணப்பம்.
    மீண்டும் அனுமதி.
    விற்பதற்குள் *_வங்கி அதிகாரியாக இருந்த கணவரும் மரணம்._*
    இப்போது இவரும், 2013 ஆம் ஆண்டு முதல் *_யூகோ வங்கியில் பணியில் அமர்ந்துள்ள_* இவரின் ஒரே மகள் மட்டுமே.
    நான் உடனே அவரிடம் மூன்று முறை அனுமதி பெற்றும், விற்க இயலாத சூழ்நிலையை விளக்கி ஒரு அஃபிடிவிட் தாக்கல் செய்ய சொன்னேன்.
    மறுநாளே தாக்கல் செய்தார்.
    உடனே நான்காவது முறையாக அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
    *_இது வரை சப்-கலெக்டரின் பதிவு_*.
    *_இனி இவர் குறித்த என் தேடல்கள் மற்றும் பதிவு._*
    20.06.1958 இல் பிறந்தவர்.
    BA படித்தவர்.
    இவர் ஆரம்ப நாட்களில் ஒரிஸ்ஸா அரசு அலுவலகத்தில் அசிஸ்டன்ட் ஆக பணியில் இருந்து ஏழை எளிய, பழங்குடியின மக்களுக்கு சேவை செய்ய வேண்டி *_விருப்ப ஓய்வில்_* வந்தவர்.
    பிறகு 1997 இல் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து *கவுன்சிலர்,_* இரண்டு முறை *சட்டமன்ற உறுப்பினர்,_*
    போக்குவரத்து, வர்த்தகம், மீன் வளத்துறை போன்ற துறைகளில் 2000 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை *_ஒரிஸ்ஸா மாநில அமைச்சர்._* என படிப்படியாக முன்னேறியவர்.
    இப்படி இருந்தவர் தன்னுடைய நிலத்தை விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டவர்.
    *_இரண்டு மகன்கள், கணவரை_* இழந்த சோகம் வேறு.
    இத்தனையையும் மீறி 2015 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் பதவி இவரைத் தேடிவந்தது.
    அப்பொழுதும் ஏழை, எளிய, பழங்குடி மக்களுக்கு சேவை.
    தற்போது இந்தியாவின் முதல் குடிமகனாக, பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் பெண்ணாக குடியரசு மாளிகையை அலங்கரிக்க உள்ளார்.
    அவர்தான் குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளர் *_திருமதி. த்ரௌபதி முர்மு அவர்கள்._*
    பார்த்து மகிழ கணவர், இரண்டு மகன்களும் இல்லை.
    தற்போது உடன் இருப்பது *_யூகோ வங்கி மேலாளர் ஆக உள்ள ஒரே மகள் இதிஶ்ரீ முர்மு_* மட்டுமே.
    திருமதி. த்ரௌபதி முர்மு அவர்களின் பழைய ஒரு யூடூப் நேர்காணல் கண்டேன்.
    அதில், அவர் என் வாழ்வில் அவ்வளவு கஷ்டங்கள்.
    ஏற்ற இறக்கங்கள்.
    எத்தனை முறை நொறுங்கி போனேன் என்று சொல்லி மாளாது.
    எல்லாம் வல்ல சிவபெருமான் என்னை ஆரம்பம் முதல் காத்து, ஆசிகள் வழங்கி என்னை மேலும் மேலும் ஏழை, எளிய, பழங்குடி மக்களுக்கு சேவை செய்ய பணித்து உள்ளான்.
    ஒம் நம சிவாய என்று சொல்லி முடித்தார்.
    அந்த லிங்க் மிஸ் ஆகி விட்டது.
    யூகோ வங்கியில், மேலாளர் பணியில் உள்ள, அவரின் மகள் இதிஶ்ரீ முர்மு அவர்களை தொடர்பு கொண்டு அவரை வாழ்த்தி, அவரின் தாய்க்கும் என் வணக்கம் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்.
    *அவரின் _65 ஆவது பிறந்த நாளான 20.06.2022_ அவர் குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்!!*
    *_என்ன ஒரு யதார்த்தமான ஒற்றுமை_*.
     

Share This Page