1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice
  2. Would you like to join the IL team? See open jobs!
    Dismiss Notice
  3. What can you teach someone online? Tell us here!
    Dismiss Notice
  4. If someone taught you via skype, what would you want to learn? Tell us here!
    Dismiss Notice

சிரிப்பு படைப்பு

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Nov 12, 2020.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    6,231
    Likes Received:
    6,532
    Trophy Points:
    470
    Gender:
    Male
    :hello: சிரிப்பு படைப்பு:hello:

    ஒவ்வொரு
    இளைஞனின்
    மன உளைச்சலுக்கும்
    காரணம்?
    மதிப்பெண்ணும்!
    மதிக்காத பெண்ணும்!!

    வசதி இல்லாதவன்
    ஆடு மேய்க்கிறான்!
    வசதி உள்ளவன்
    நாய் மேய்க்கிறான்!!

    என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும் கப்பல் கிளம்பும்போது
    பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும்
    சங்கு ஊதிட்டுதான்
    கிளம்பும்!!

    FILE க்கும் PILE க்கும் என்ன வித்தியாசம்?
    FILE ல் உட்கார்ந்து பார்க்கணும்.
    PILE க்கு பார்த்து உட்காரணும்.

    கணிப் பொறிக்கும் எலிப் பொறிக்கும் என்ன வித்தியாசம்???
    கணிப் பொறியில்
    மவுஸ் வெளியே இருக்கும்.
    எலிப் பொறியில்
    மவுஸ் உள்ளே இருக்கும்.

    டாக்டருக்கும்
    ஆக்டருக்கும்
    உள்ள ஒற்றுமை என்ன?
    இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க!!

    சிவகாசிக்கும்
    நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?
    சிவகாசில காச கரியாக்குவாங்க!
    நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க!!


    செல்போனுக்கும்
    மனிதனுக்கும் என்ன
    வித்தியாசம்?
    மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலனஸ் பண்ண முடியாது.
    செல் போன்ல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது.

    திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்” : வாட்சாப்
    வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்.

    அதே போல் எதிர் மறையாக இருந்தால் கூட இதை நேர் மறையாக மாற்றி சிந்திப்பவர்.
    இவர் ஒரு கூட்டத்திற்கு போகும் வழியில் நாத்திகர்கள்
    திருநீறு இட்டார் கெட்டார்..
    திருநீறு இடாதார் வாழ்ந்தார்
    என்று எழுதி இருந்தார்கள்.

    உடன் வந்தவர், “காலம் கெடட்டுப் போச்சு. என்ன எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?” என்றார்.

    அதற்கு வாரியார், “இல்லை... சரியாகத்தானே எழுதி இருக்கிறார்கள்” என்றார்.
    “சாமி, நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களே?”, என்றார்.

    அதற்கு வாரியார், “நன்றாக பதம் பிரித்து படித்து பார்”, என்று சொல்லி, அவரே பதம் பிரித்துச் சொன்னார்.
    “திரு நீறு இட்டு யார் கெட்டார் (இட்டு + யார் = இட்டார்)” என்றும்.... அடுத்தது,
    “திருநீறு இடாது யார் (இடாது+யார்=இடாதார்) யார் வாழ்ந்தார்” என்றும் சொன்னார்.
    அவருக்கு முருகன் தந்த அறிவுக் கொடை.
    படித்ததில் பிடித்தது
     
    MULLAI62 likes this.
    Loading...

Share This Page