1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சின்னியம்மாள் வார்த்தை _ ரகசியம் தெரியுமோ ?

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Mar 19, 2023 at 12:45 PM.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    10,370
    Likes Received:
    11,176
    Trophy Points:
    590
    Gender:
    Male

    சின்னியம்மாள் வார்த்தை _ ரகசியம் தெரியுமோ ?
    ஒரு நாள் திரு நெல்வேலி நாங்கு நேரி ஒன்றான வானமாமாலை ஜீயர் ஸ்வாமியிடம் சின்னியம்மாள் என்ற ஒரு பெண் தண்டன் ஸமர்பித்து நிற்க, ஜீயர் அவளைக் கடாக்ஷித்து 'பெண்ணே உனது தேசம் எது ?, நாடு
    எது ? நித்ய வாசமேது ? என்று சில வினாக்களை வினவ அவளும் ஶ்ரீவைஷ்ணவ நிஷ்டைக்கேற்ப பதில்களை விண்ணப்பித்தாள்.
    இந்த கேள்விகளும் பதில்களும்
    "சின்னியம்மாள் ரஹஸ்யம் " என்று போற்றப்படுகிறது .
    அவை வருமாறு :
    1. பெண்ணே! உன் தேசம் எது? நாடு எது? நித்ய
    வாசமேது ?
    பதில் :- திருவழுதிநாடு .
    2. ஊர் எது ?
    பதில் :திருக்குரு கூர்
    3. வீடு எது ?
    பண்டுடையான் வீடு
    4. குலம் எது ?
    அச்யுத குலம்
    5. வேதம் எது ?
    திராவிட வேதம்
    6. கோத்ரம் எது ?
    பராங்குச கோத்ரம்.
    7. ஸூத்ரம் எது?
    ராமாநுஜ ஸூத்ரம்
    8. காரிகை ஏது?
    பரகால காரிகை
    9. குடி எது ?
    அஞ்சுகுடி
    10. பந்துக்கள் யார் ?
    ஆத்ம பந்துக்கள்
    11. உறவு யார் ?
    ஒட்டவுணர்ந்தவர்
    12. உற்றார் யார் ?
    உற்றது முன்னடியார்
    13. தகப்பனார் யார் ?
    தெய்வ நாயகன்
    14. தாயார் யார் ?
    சீவரமங்கை
    15. புக்கவிடம் எவ்விடம் ?
    வான மாமலை
    16. பர்த்தா யார் ?
    வரமங்கை முனிவர்
    17. மாமனார் யார் ?
    காந்தோ பயந்ததா
    18. உத்யோகம் என்ன ?
    பாகவத கைங்கர்யம்
    19. அத்தால் ப்ரயோஜனம்
    என்ன ?
    அதுவே ப்ரயோஜனம்
    20. அதிகாரம் ஏது ?
    ஸர்வா திகாரம்
    21. நிஷ்டை எது ?
    பஞ்சமோ பாய நிஷ்டை
    22. உபாயம் எது ?
    சரமோபாயம்
    23. அபிமானம் எது?
    பாகவதாபிமானம்
    24. ப்ரார்த்தனை
    எது ?
    கைங்கர்யப் ப்ரார்த்தனை .
    ஆசாரியர் கேட்ட கேள்விகள் பொதுவாக பெரியோர்கள் சிறியோர்களை கேட்கக் கூடியவை .
    சின்னியம்மாளின் பதில்கள் ஆசார்ய நிஷ்டைக்கு சேர அமைந்தவை .
    நம்மாழ்வார் ப்ரபந்ந ஜன கூடஸ்தர் . அந்த ஸம்பந்தத்தை யிட்டு ஆழ்வார் திருநகரியை
    (திருக்குருகூர்) பிறந்தகமாக கூறுகிறார் .
    புகுமூர் , பர்த்தா மற்ற விஷயங்கள் ஆசார்ய ஸம்பந் தத்தையிட்டுப் பேசபட்டவை .
    ஆசார்யன் சிஷ்யன் ஆருயிரை பேணுபவன் ஆகையால் அவரை பர்த்தா என்று சொல்லிற்று .
    பாகவத கைங்கர்யமும் அதன் மூலம் ப்ரீதி அடையும் ஆசார்ய முக்கோல்லா ஸமுமே (ஆநந்தம்) ப்ரதான ப்ரயோஜனம் .
    ஆசார்ய அபிமானமே உய்வு பாயம் - உத்தாரகம் .
    ஆசார்ய கைங்கர் யமே புருஷார்த்தம் என்று உணர்ந்து கூறியுள்ளார்.
    இந்த பதில்களைக் கேட்டு மகிழ்ந்த ஜீயர் சுவாமிகள், “உன்னைப்பற்றி அனைத்தும் தெரிந்திருந்த போதும், நான் உன்னிடம் இவ்வளவு கேள்விகள் ஏன் கேட்டேன் தெரியுமா?
    ஒரு பக்தனுக்குரிய இலக்கணங்கள் என்ன என்பதை உலகம், உன்மூலம் அறியட்டும் என்பதைக் கருதியே நான் கேட்டேன்.
    நீ சொன்னது போல், தன் ஊருக்கு அருகிலுள்ள ஆழ்வாரின் அவதாரத் தலத்தையே தன் பிறந்த ஊராக ஒவ்வொரு பக்தனும் சொல்லிக் கொள்ளவேண்டும்.
    உன் உறவினர்கள் யார்?” என்று ஜீயர் கேட்க, “ஆத்ம பந்துக்கள்!” என்று சொன்னார் சின்னியம்மாள். (உடல்ரீதியான உறவுகளுள் பக்திக்கு விரோதமாக இருப்போர் உண்மையான உறவினர்கள் அல்லர்.
    ஆத்மா பரமாத்மாவை அடைய உதவும் சிறந்த பக்தர்களே உண்மையான உறவினர்கள் ஆவர் என்பது தாத் பரியம்)“
    உன் பெற்றோர் யாவர்?” என்று கேட்டார் ஜீயர்.
    தனது ஊரான வானமாமலையில் கோவில் கொண்டு ள்ள பெருமாள் – தாயாரின் திருப் பெயர்களையே தன் பெற்றோர் பெயராகக் குறிப்பிட்டு, “தெய்வ நாயகனும் – ஸ்ரீவர மங்கைத் தாயாரும் !” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள்.
    நீ எந்த வேதத்தைப் பின்பற்றுகிறாய்?” என்று கேட்டார். ரிக் வேதமோ, யஜுர் வேதமோ, ஸாம வேதமோ, அதர்வண வேதமோ எதையுமே சொல்லாமல், “திராவிட வேதம்!” என்றார் சின்னி யம்மாள்.
    தமிழ்வேதமாகிய ஆழ்வார்களின் பாசுரங்களின் நெறியில், தான் நிற்பவள் என்று உணர்த்துகிறார்.
    உன் கோத்திரம்?” என்ன என்று ஜீயர் கேட்க, “பராங்குச கோத்திரம்!” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள். (வசிஷ்டர், விஸ்வா மித்ரர், பரத்வாஜர் போன்ற பல முனிவர்களின் பெயர்களில் கோத்திரங்கள் உண்டு.
    ஆனால், அவர்களை விட ஏற்றம் பெற்ற பராங்குசரான நம்மாழ்வாரை இட்டு, அவரதுவு கோத்திரம் என்று இப்பெண் பதில் சொல்லி யிருக்கிறார்
    “நீ எந்த குலம்?” என்று ஜீயர் கேட்க, “அச்சுத குலம் !” என்று பதில் சொன்னார் சின்னியம்மாள்.
    இறையடியார் களுக்குள் என்றுமே ஏற்றத்தாழ்வு கிடையாது. அச்சுதனாகிய திருமாலைப் பற்றிய அனைவரும் அச்சுத குலம் என்ற ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் தானே?
     
    Loading...

Share This Page