சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் பற்றிய &

Discussion in 'Astrology Numerology & More!' started by harijothishalay, Apr 13, 2012.

  1. harijothishalay

    harijothishalay New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male

    சுதந்திர உணர்வும், சீர்திருத்தக் கொள்கையும் கொண்ட சித்திரை மாதத்தில் பிறந்த நேயர்களே! நீங்கள் அனைவரிடமும் எளிதில் பழகி விடுவீர்கள். அரசியலில் உயர்ந்த மனிதர்களிடம் எளிதில் நெருங்கிப் பழகும் வாய்ப்பு உங்களைத் தேடி வரும். வருங்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை முன் கூட்டியே சிந்திக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கும். கம்பீரம் மிக்கவர்கள். நீங்கள், எதிலும் அவசரமாக ஈடுபடும் நீங்கள் மிகவும்:thumbsup கவனமாகச் செயல்பட வேண்டும். வீரதீரச் செயல்களில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள். சில நேரங்களில் தங்களின் கருத்துக்களையே மேலானதாக நினைப்பவரா கவும் பிடிவாத குணம் கொண்டவராகவும் காணப்படுவீர்கள். அதிகமாகக் கோபப்படுவதால் பிறரிடம் எளிதில் பகையைப் பெற நேரிடும். இதனால் சமுதாயத்தில் தன்னிலையைத் தாழ்த்திக்கொள்ள வேண்டியிருக்கும்.

    நீங்கள் ஈடுபடும் செயலில் தலைமைப்பொறுப்பும், நம்பகத் தன்மையைம் உங்களைத் தேடி வரும். உங்களிடம் பணியாற்றும் சக ஊழியர்களிடம் நீங்கள் அன்போடும் அரவனைப்போடும் பேசி வேலையை முடிக்க வேண்டும். மற்றவர்களின் ஆலோசனைகள் உங்களுக்குப் பல வழிகளில் உதவியாக இருக்கும். அரசியல், அரசு, நிறுவனம் போன்றவற்றில் முக்கியப் பொறுப்பு வகிப்பதால் மக்களிடமும், சக ஊழியர்களிடமும் எளிதில் பழகும் சுமூக வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் எவரையும் எளிதில் நம்பமாட்டீர்கள். அப்படி நம்பிவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்யத் துணிந்து விடுவீர்கள்.

    தாய், தந்தை மீது அதிக அன்பும் பக்தியும் கொண்டிருக்கும் நீங்கள் குடும்ப உயர்வுக்காகவும், நலனுக்காகவும் பாதுகாப்பாக நடந்து கொள்வீர்கள். பிறருக்கு அறிவுரை கூறுவதில் அலாதிப்பிரியம் கொண்டவராக இருப்பீர்கள். தந்தை விட்டுச்சென்ற பணிகளை முறையாகச் செய்து முடிப்பீர்கள்.

    உங்களிடம் உள்ளகுறை என்னவென்றால் எதற்கெடுத்தாலும் முன் கோபமும் அவசரப்படுவதும் இவற்றைக் குறைத்துக் கொண்டால் வாழ்வில் எளிதில்வெற்றி பெறலாம். உங்களின் வாழ்க்கைத் துணை நீங்கள் விரும்பி ஏற்றுக் கொண்டவராக அமையும் நிலை ஏற்படும். நண்பர்களுக்காக எதையும் செய்து கொண்டிருப்பீர்கள். ஆன்மீகம், ஆலயம், தெய்வத் திருப்பணிகளுக்காகப் பணியாற்றுவதில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருப்பீர்கள். தந்தை வழி உறவினர்களுக்காக எதையும் செய்து, அவர்களின் ஆசியையும், ஆதரவையும் பெறுவீர்கள். பொதுநலத் தொண்டு, சமூக சேவை ஆகியவற்றில் ஈடுபடுவதன் மூலம் ஆத்ம திருப்தி அடைவீர்கள். சமூகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகப் பல திட்டங்களையும், செயல்களையும் தீட்டி வெற்றி காணும் அரசியல்வாதியாகவும் ஒரு சிலர் காணப் படுவார்கள். நீங்கள் சமூகத்தைப் பாதுகாக்கும் காவல்துறை, இராணுவம் போன்ற துறையில் கடமை தவறாத அதிகாரியாகவும் இருப்பீர்கள்.

    பொறியாளர், இயந்திர இயக்குநர், கனிம வளத் தொழில், மருத்துவர், அறுவைச் சிகிச்சை நிபுணர், இரும்புத் தொழில் வல்லுநர்கள், அன்றாடம் பொது மக்களிடம் நெருங்கிய தொடர்பு கொள்ளும் பணி இவை போன்ற பணிகளை ஆற்றும் வாய்ப்பு உங்களுக்கு அமையும். எத்தொழிலும் சேவை மனப்பான் மையோடு ஈடுபடுவீர்கள்.
    உங்களுக்கு உஷ்ண தேகமென் பதால், அசைவ உணவு, கொழுப்பு, எண்ணெய் உணவுகளைத் தவிர்த் தால் உயர்ந்த இரத்த அழுத்தம், இதய அடைப்பு, இதயக்கோளாறு, நரம்பியல் தொல்லைகள் போன்ற வற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

    உலக நன்மைக்காகவும், மக்களின் உயர்வுக்காகவும் பல சீர்திருத்தக் கருத்துக் களையும் வகுத்துத் தந்த மகான்களும், சித்தர்களும், ரிஷி முனிவர்களும் எண்ணற்றோர் சித்திரை மாதத்தில் அவதரித்து புண்ணியங்கள் பல செய்து வாழ்ந்துள்ளனர்.
     
    Loading...

Share This Page