1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சித்திரமாம் கால் பழக்கம்...

Discussion in 'Regional Poetry' started by natpudan, Jul 19, 2011.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சித்திரமாம் கால் பழக்கம்...

    கண்களால்
    நான் காதல் சொல்ல
    கால் விரல்களால்
    நீ கோலம் வரைந்தாய்
    கோலம் அல்ல கோலம்
    அது நீ வரைந்த நம் வாழ்க்கைச் சித்திரம்
    சித்திரமாம் கைப் பழக்கம்
    இல்லை இல்லை
    சித்திரமாம் கால் பழக்கம்
    இன்றிலிரிந்து...

    அண்ணே அண்ணே அப்ப செந்தமிழாம் நாப்பழக்கம் என்னான்னே?

    டேய் அரை டிக்கட் இங்க பேச்சுக்கே இடமில்லடா - நா பழக்கம் டா நா பழக்கம்...
     
    Loading...

  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    என்ன எப்போதும் காதலை கலாய்க்கும் பெரியவர் இன்று கால் பழக்கத்தை காதலில் சொல்கிறார்!
    நான் கூட செருப்படியை தான் சொல்றாரோன்னு வந்தேன்!
    நட்ஸ் நல்லா தானே இருக்கீங்க எதுவும் ஆயிடலயே??:confused2::confused2:
    கவிதை எப்பவும் போல :thumbsup
     
  3. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    :rotfl:rotflஎந்த காலத்தில் இருக்கீங்க நட்ஸ்?? இப்போ எல்லாம் வெக்கம் கிலோ என்ன விலைன்னு கேக்குற காலம்....கோலம் ஓல்ட் ஃபேஷன் ஆகிடுச்சு!
     
  4. FirstBite825

    FirstBite825 Bronze IL'ite

    Messages:
    280
    Likes Received:
    10
    Trophy Points:
    33
    Gender:
    Male
    பழக்கம் பழக்கம் என்று சொல்கின்றீர்கள்.... ஒவ்வொரு வாய் சாப்பாடாக சாப்பிட்டு பழக்கபடுத்தினாலும்.......போகும்போது ஒரேயடியாக போய்விடுகிறது நட்ஸ்.....
     
  5. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அம்மா தேவா அப்படி ஒட்டு மொத்தமா சொல்லிட கூடாது!
    என் காதல் சொன்னதும் என்னவர் வெட்க பட்ட அழகு இருக்கே!
    அப்பப்பா!
    அதை காலத்துக்கும் மறக்க முடியாது!
    ஒரு மாதிரி தலைய சொறிஞ்சிட்டே நிப்பாரு!
     
  6. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இந்த கூத்து இன்னும் நல்லாருக்கே........நான் கூட நீங்க தான் எதோ வெட்கப்பட்டு அதுக்காக கோபமோ ன்னு நினைச்சேன்.......பசங்க இந்த லெவலுக்கா இறங்கிட்டாங்க?? :rotfl
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பெரியவர்? சிறியவர்? காதலில் அனைவரும் ஒருவரே...

    எப்பதான் புரியப் போவுதோ இந்த இளசுகளுக்கு... :)
     
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    கோலம் செய்த காலமடா
    காலம் செய்த கோலமடா...:)
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அது பக்கத்து இலையில் இருந்து
    சாப்ட்டா அப்படித் தான் போகும்... :)
     
  10. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    ஒரு காலத்தில் ஆண்கள் இட்ட மெட்டியை இன்று பெண்கள் போடவில்லையா??
    அது போல் தான் எல்லாமே மாறும் ஒரு நாள்!
    ஏன் பொண்ணுங்க தான் வெட்க படனுமா??
    ஆண்களும் தான் கொஞ்சம் படட்டுமே!
     

Share This Page