1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சந்தனத் தென்றல் - ஸ்ரீஜோ!

Discussion in 'Stories in Regional Languages' started by Sivasakthigopi, Apr 27, 2016.

  1. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    panniten ma!
     
  2. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Pottuten Priya!
     
    sreeram likes this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    GOOD .Sakthi next episode soon
     
  4. Rajijb

    Rajijb Silver IL'ite

    Messages:
    56
    Likes Received:
    62
    Trophy Points:
    58
    Gender:
    Female
    very nice. I eagerly await your next episode! Thanks!
     
  5. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    சூப்பர் ஓ சூப்பர் சக்தி. ஆனால் மதியை பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது. இவர்களது எதிர்காலம் என்ன, முன் கதை சுருக்கம் என்ன :smash2:.
     
  6. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    அத்தியாயம் - 9

    ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மதி, அபியின் சிணுங்கலில் மெல்ல கண்விழித்தாள். அவனை அணைத்து மீண்டும் அவள் உறங்க முற்பட, பார்த்திபனின் குரல் கேட்டது. மெதுவாக கண் திறந்து பார்த்தவள், அங்கு கோபத்தில் முறைத்துக்கொண்டு இருந்த ஆதியைக் கண்டு மெல்ல எழுந்து உட்கார்ந்தாள்.

    "விடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு, எழுந்து கிளம்பு. டாக்டர் வர்றார்."

    அவள் பதிலேதும் பேசாமல் அவர்களது அறைக்குள் இருந்த குளியலறைக்குள் குளிக்க போக, அவன் அபியை எழுப்பினான். எழுந்தவனை, அந்த அறையில் இருந்த குளியலறையில் குளிக்க வைத்து தயார் செய்தான்.

    அது அவனது பெற்றோரால் அவர்களது அறைக்குள் குழந்தைகென்றே உருவாக்கிய பிரத்யேக அறை.

    இளமஞ்சள் நிறத்தில் சுடிதார் அணிந்து, ஈரத்தலை முடியை இருபக்கமும் இருந்து எடுத்து ஒரு சிறு கிளிப் போட்டு, ப்ரீ ஹேர் விட்டு வந்த மதியைப் பார்த்த பார்த்திபனின் உள்ளம் சில நொடிகள் தடுமாறவே செய்தது.

    ஆனால் அது அவள் மீது கோவத்தை கிளப்ப, அவளை முறைத்துக்கொண்டே குழந்தையை கீழே கூட்டிச்சென்றான்.

    மதி அவர்களைப் பின் தொடர, மீனா அவர்களுக்கு பால் கொண்டு வந்து தந்தார். பார்த்திபன் குழந்தைக்கு வாங்கி தர, மதி அங்கிருந்த டைனிங் ஹாலில் அமர்ந்து குடிக்க ஆரம்பித்தாள்.

    அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

    முன் தினம் காலை இருவரது உடைமைகள், அபியுடைய பொம்மைகள் என அனைத்தும் எடுத்து வைத்தவள், சாரதாவிடம் சென்றாள்.

    அவளை அணைத்துக்கொண்ட சாரதா, "உனக்கு இந்த நிலைமை எப்படியும் ஒரு நாள் வரும். எந்த ஆதாரமும் இல்லாத அன்னிக்கே நீ அங்க தைரியமா இருந்த, இப்ப அபி இருக்கறப்ப உனக்கு என்ன கவலை?"

    "இல்லம்மா. எனக்கு அன்னிக்கு கிடைச்ச சந்தர்பம் மறுபடியும் கிடைக்காது. கிடைக்கவும் விட மாட்டாங்க. நாம இனி சந்திக்க முடியாதுன்னு தெரியும். நீங்க மட்டும் இல்லைனா நானும் அபியும் என்ன ஆகி இருப்போம்?" என கண் கலங்க பேசியவள், "உங்களுக்கு நான் ரொம்ப கடமை பட்டு இருக்கேன். அடுத்த ஜென்மத்தில உங்களுக்கு மகளா பிறக்கனும்மா"

    "என்ன மதி இது. இந்த வீடு கதவு என்னிக்கும் உனக்காக திறந்திருக்கும். நான் கண்டிப்பா உனக்கு உதவி செய்ய எப்படியும் வருவேன். நீ தைரியமா இரு. பழசை நினைக்காதே"

    "முயற்சி பண்றேன்மா. உங்க போன் வேணுமே"

    "சீக்கிரம் பேசி வைச்சுடு"

    அவள் போனை எடுத்து சுரேஷுக்கு அழைக்க, "சொல்லுங்கத்தை"

    "சுரேஷ்"

    "மதி! சொல்லு மதி. எங்க ரெண்டு நாளா உன் போன் பிராப்ளமா இருக்கு. ரிப்பேர்னு சொன்னியாம்."

    "சுரேஷ்" என அவள் கேவி கேவி அழ ஆரம்பித்தாள்.

    அவள் குரலே சரி இல்லை என்பதை அறிந்த சுரேஷ்,"என்ன மதி? என்ன ஆச்சு?" என பதற, அவளிடம் இருந்து போனை வாங்கி அவரது அறைக்குள் நுழைந்து சாரதா பேச ஆரம்பித்தார்.

    அவள் முதல் முறை சுரேஷ் என்று அழைக்கும் போதே வந்த பார்த்திபன், அவள் அழுவதையும், அவனிடம் போனில் பேசுவதையும் கண்டு ரௌத்திர மூர்த்தியாக இருந்தான்.

    எதேச்சையாக திரும்பிய மதி அவனைப் பார்த்ததும் சிலையென நின்றாள். அவனது பார்வை அவள் உடலில் ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது. வேகமாக அவள் தன்னறைக்குள் புகுந்தாள்.

    அவளைப் பின்தொடர்ந்தவன், கட்டிலில் அமர்ந்து இருந்த மதியை நெருங்கினான். அவனது அருகாமையில் அவள் நடுக்கம் அதிகரிக்க, மெல்ல அவள் அருகில் அமர்ந்தான்.

    "வீணா என் கோபத்தை கிளப்பாம, கிளம்பற வழிய பாரு. இப்ப இத ரொம்ப பொறுமையா சொல்றேன். இல்ல நான் வேற மாதிரி முடிவு எடுக்கணும் அப்டின்னு நீ நினைச்சா நான் பொறுப்பில்ல. விளைவுகள் மோசமா இருக்கும்" என்றவன் எழுந்து வெளியேறினான்.

    சில நிமிடங்களுக்கு பின் பைகளை எடுத்துக்கொண்டு வெளியேறியவளின் கைகளில் இருந்து ராமசாமி வாங்கிக்கொண்டார்.

    பின் அவரது கண்ணசைவில் மற்ற பொருட்களை அவர் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் கொண்டு சென்று அவர் ஏற்பாடு செய்திருந்த வண்டியில் வைத்தனர். அதில் ஏற்கனவே அபிக்கு வேண்டிய பொருட்கள், பொம்மைகள் இடம்பெற்று இருந்தது.

    நடப்பதை வேடிக்கை பார்த்தபடி மதி, சாரதாவின் தோளில் சாய்ந்து சோபாவில் அமர்ந்திருந்தாள்.

    சில நிமிடங்களுக்கு பின் வந்த பார்த்திபன் அவளை பார்க்க, அந்த பார்வையில் எழுந்தவள், அபிக்கென்று தனியாக வைக்கப்பட்டு இருந்த பையையும்,அவனது காரையும், நாய் பொம்மையையும் எடுத்துக்கொண்டு சாரதாவிடம் கண் கலங்க தலையை அசைத்து வெளியேறினாள்.

    காரில் ஏறியதில் இருந்து, அப்பாவும் மகனுமே பேசிக்கொண்டு வந்தனர். மடியில் இருந்த குழந்தை, வேடிக்கை பார்ப்பது, விளையாடுவது என அதன் போக்கில் இருந்தது.

    அன்றைய நள்ளிரவில் அவர்கள் வீட்டிற்கு வர, ராமசாமியின் மனைவி வனஜா ஆலம் சுற்றி வீட்டிற்குள் அழைத்தார்.

    பின் அவர்கள் இருவரும் விடைபெற்றனர்.

    உறங்கிய அபியை எடுத்துக்கொண்டே பார்த்திபன் முன்னே செல்ல, மதி பின் தொடர்ந்தாள்.

    குழந்தையை அவன் அறையில் படுக்க வைத்துவிட்டு, அவளை நெருங்கியவனைப் பார்த்த மதி சற்று பயந்து பின்னடைந்தாள்.

    "இனி இது தான் உன் வீடு. போன தடவ கொஞ்சம் விட்டுட்டேன். இனி 24 மணி நேரமும் நீ என் பார்வையில் தான் இருப்ப. புரிஞ்சு நடந்துக்கோ"

    அவள் எதுவும் பேசாமல் நிற்க, அவன் அங்கிருந்து நகர்ந்தான்.

    முந்தைய நினைவுகளில் இருந்தவள் பாலை குடிக்காமலேயே இருக்க, அவள் அருகில் வந்தவன், "எனக்கு எதிரா ஐடியா பண்ண கூட உனக்கு தெம்பு வேண்டும். சோ முதல்ல பால குடி" என்று அவள் காதருகே குனிந்து கூறினான்.

    அவனது இந்த திடீர் செயலில் விதிர்த்து திரும்பிய மதி, அவனது கண்களின் சீற்றத்தில் உறைந்து நின்றாள்.

    அவன் கண்கள் மேலும் சிவக்க, அந்த பார்வை வீச்சினை தாங்க முடியாமல் மயங்கிச் சரிந்தாள்.

    சட்டேன்று அவளைத் தாங்கியவன் அருகில் இருந்த ஜக்கில் இருந்த நீரை அவள் முகத்தில் தெளித்தான்.

    மயக்கம் தெளிந்து எழுந்தவள், அவன் கரத்தில் இருந்து தீச்சுட்டார் போல பதறி விலகி மேலே சென்றாள்.

    அவளைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தியவன், மீனாவை அழைத்து, அவளுக்கு பால் சூடு பண்ணித் தர பணித்து அபியுடன் வெளியேறினான்.

    -- தென்றல் வீசும்.

    Copy Right to Shrijo
     
  7. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Update Pottten Ma!
     
  8. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Thanks @Rajijb!
    please check update!
     
  9. Sivasakthigopi

    Sivasakthigopi Gold IL'ite

    Messages:
    956
    Likes Received:
    773
    Trophy Points:
    195
    Gender:
    Female
    Thanks Priya!
    Ethirgalam & Mun kathai surukam have some link. will wait and watch Priya!
     
    sreeram likes this.
  10. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Sure sure.... nice update and interesting too... neenga innum Athi ya marakala pola... instead of Parthiban you have mentioned as Athi in the beginning of this update...

    Romba kathaila muzhugi poirukeenga Sakthi...
     

Share This Page