1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சத்தும் உண்டு... சுவையும் உண்டு...சப்ஜீஸ் 32![from a Tamil

Discussion in 'Posts in Regional Languages' started by bharathymanian, Mar 10, 2016.

  1. bharathymanian

    bharathymanian Silver IL'ite

    Messages:
    66
    Likes Received:
    79
    Trophy Points:
    58
    Gender:
    Male
    சத்தும் உண்டு... சுவையும் உண்டு...சப்ஜீஸ் 32!

    ஆக்கம்:வாசகி பிருந்தா ரமணி

    சிம்பிள் தால்

    தேவை:

    பாசிப்பருப்பு-1 கப், தக்காளி - 2, பச்சை மிளகா - 1 (கீறியது), உப்பு - தேவைக்கு, மிளகுத்தூள் - 1/2டீஸ்பூன்,

    மல்லித்தழை - அலங்கரிக்க.

    தாளிக்க: சீரகம், நெய்- தலா 1 டீஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை- 1 ஆர்க்கு.

    செய்முறை:

    குக்கரில் பாசிப் பருப்பு, நறுக்கிய தக்காளித் துண்டுகள், கீறிய பச்சை மிளகா போட்டுத் தேவையான தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். 3 விசில் வந்ததும் எடுத்து விடவும். தாளிக்க வேண்டிய பொருட்களைத் தாளித்துப் பருப்புக் கலவையில் சேர்த்து மிளகுத் தூள், மல்லித்தழை போட்டுக் கலந்து பரிமாறவும். {This we do at home often.}

    பைங்கன் பர்த்தா

    தேவை:

    பெரிய கத்தரிக்கா- 1, வெங்காயம் - 1, பூண்டு (நறுக்கியது)- 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி (துருவியது)- 1 டீஸ்பூன், தக்காளி ப்யூரி - லு கப், மிளகாத்தூள், மல்லித்தூள் - தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4டீஸ்பூன், உப்பு- தேவைக்கு.

    தாளிக்க: கடுகு, சீரகம்- தலா 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன், மல்லித்தழை- அலங்கரிக்க.

    செய்முறை
    கத்தரிக்காயின் மீது லேசாக எண்ணெய் தடவி நெருப்பில் நன்கு சுட்டு எடுக்கவும். ஆறியதும் தோல் உரித்து நன்கு மசித்து வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும். பிறகு பூண்டு, இஞ்சி துருவல் போட்டு நன்கு வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டுச் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியவுடன் தக்காளி ப்யூரியை விட்டு 2 நிமிடம் கிளறவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாத்தூள், மல்லித்தூள் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு கிளறி மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும். 2-3 நிமிடங்கள் கழித்து, மசித்து வைத்திருக்கும் கத்தரிக்காயைப் போட்டுக் கிளறவும். மசாலா சேர்ந்தாற்போல வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும். {We do at home differently.}

    டொமேட்டோ பனீர் கிரேவி

    தேவை:

    தக்காளி ப்யூரி - 1 கப், பனீர் துண்டுகள் - 1/2கப், பெரிய வெங்காயம் - 1, இஞ்சி, பூண்டு விழுது- 1 டீஸ்பூன், மிளகாத்தூள்- 2 டீஸ்பூன், மல்லித்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள்- 1/2டீஸ்பூன், சீரகம், கசூரி மேத்தி - தலா 1 டீஸ்பூன், மல்லித்தழை- அலங்கரிக்க, எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை:

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் தாளித்து வெங்காயத்தை வதக்கவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டால் சீக்கிரம் வதங்கி விடும். வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் கழித்து, தக்காளி ப்யூரியை விட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். 2 நிமிடங்கள் கழித்து எல்லாப் பொடி வகைகளையும் போடவும். பனீர் துண்டுகளைப் போட்டுத் தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கிளறி விடவும். வாண லியை மூடி, தீயைக் குறைத்து வைக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைக்கவும். கசூரி மேத்தி இலையைப் போட்டுக் கலக்கவும். பரிமாறுவதற்கு முன்பாக மல்லித்தழை தூவவும்.

    பின்குறிப்பு: பனீர் துண்டுகளை எண்ணெய்யில் பொரித்தும் போடலாம். {We can try.}

    பாம்பே மசாலா

    தேவை:

    கடலை மாவு-1 கப், மிளகாத்தூள்- 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4டீஸ்பூன், உப்பு- தேவைக்கு, பெரிய வெங்காயம்- 2

    (மெலிதாக நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்)

    தாளிக்க: கடுகு, உ.பருப்பு, ஊறவைத்த க.பருப்பு- தலா 1 டீஸ்பூன், பெருங்காயத் தூள்-1/4டீஸ்பூன், இஞ்சி துருவியது-1 டீஸ்பூன், கறிவேப் பிலை - சிறிது, எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாத்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டுக் கலந்து தண்ணீர் விட்டுத் தோசை மாவு பதத்திற்குக் கரைத்து வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம் தாளிக்கவும். இஞ்சி துருவல், கறிவேப்பிலை போட்டுப் பொரிந்தவுடன் வெங்காயம், ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு நன்கு வதக்கவும். கரைத்து வைத்திருக்கும் மாவுக் கலவையை விட்டுக் கிளறவும். தீயைக் குறைத்து வைக்கவும். நன்றாக வெந்தவுடன் இறக்கி, விரும்பினால் மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    பின்குறிப்பு: இதில் மிளகாத் தூளுக்குப் பதில் பச்சை மிளகாயையும் பயன்படுத்தலாம். பச்சை மிளகாயை நறுக்கி, கறிவேப்பிலை போடும் போது சேர்த்து தாளிக்கவும். {To try}

    சௌசௌ பட்டாணி சப்ஜி

    தேவை:

    சௌசௌ- 1, பட்டாணி- 1/2கப், துவரம் பருப்பு- 1/4 கப், உப்பு -தேவைக்கு.

    அரைக்க: தேங்காத்துருவல் - 1/4கப், பச்சை மிளகா- 2, சீரகம்- 1 டீஸ்பூன், கசகசா-1/2டீஸ்பூன் (வெதுவெதுப்பான பாலில் ஊறவைக்கவும்).

    தாளிக்க: கடுகு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன், மிளகா வற்றல் -1, கறிவேப்பிலை- 1 ஆர்க்கு, பெருங்காயத்தூள் - 1/4டீஸ்பூன், எண்ணெய் -2 டீஸ்பூன்.

    செய்முறை:

    ஒரு குக்கரில் நறுக்கிய சௌசௌ துண்டுகள், பச்சைப் பட்டாணி, துவரம்பருப்பு எல்லாவற்றையும் போட்டுத் தண்ணீர் விட்டு 3 விசில் வந்தவுடன் எடுத்து வைக்கவும். ‘அரைக்க‘ என்று கொடுத் துள்ளதை அரைத்து வைக்கவும். ஒரு வாணலியில் வெந்த காகறிக் கலவை, அரைத்த விழுது, உப்பு போட்டுக் கலந்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். இதில் ‘தாளிக்க’ என்று கொடுத்திருக்கும் பொருட் களைத் தாளித்துக் கொட்டிப் பரிமாறவும். {Good to try}

    ஆலு, பாலக், ராஜ்மா கிரேவி

    தேவை:

    வேகவைத்த உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக நறுக்கி வைக்கவும்), பாலக்கீரை (ஆய்ந்தது)- 1 கைப்பிடி, ராஜ்மா (வேகவைத் தது)- 1/4கப், பச்சை மிளகா கீறியது - 1, வெங்காயம், 1 (பொடியாக நறுக்கி வைக்கவும்), தக்காளி -2 (சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்), சீரகம், மிளகாத்தூள், மல்லித்தூள் - தலா1 டீஸ்பூன், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள்- தலா லீ டீஸ்பூன், பூண்டு பற்கள்- 1 டேபிள் ஸ்பூன்,

    இஞ்சித் துருவல் -1 டீஸ்பூன், எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன், உப்பு -தேவையானது

    செய்முறை:

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சீரகத்தை தாளிக்கவும். பிறகு கீறிய பச்சை மிளகா, நறுக்கிய வெங்காயம், பூண்டுப் பற்கள், இஞ்சி துருவல், ஒரு சிட்டிகை உப்பு போட்டு வதக்கவும். அதில் தக்காளித் துண்டுகளைப் போடவும். வதங்கியவுடன், பொடி வகைகளைப் போடவும். 2 நிமிடங்கள் கிளறிய பிறகு பாலக் கீரையைப் போட் டுக் கிளறவும். அடுத்து உருளைக்கிழங்கு துண்டுகள், தேவையான உப்பு, வேகவைத்த ராஜ்மாவைப் போட்டுக் கிளறி, தேவையான தண்ணீரையும் விட்டுக் கொதி வந்தவுடன் இறக்கி, மல்லித்தழை தூவிப் பரிமாறவும். {A new item to try.}

    மிளகா பிரட்டல்

    தேவை:

    அரைக்க: மிளகா வற்றல் - 15, புளி- சிறிது, உப்பு - தேவைக்கு.

    தாளிக்க: கடுகு, உ.பருப்பு தலா - 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - லீ டீஸ்பூன், கறிவேப்பிலை - 1ஆர்க்கு, பெரிய வெங்காயம்- 3, எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை:

    ‘அரைக்க’ என்று கொடுத்துள்ளதைத் தண்ணீர் விட்டு நன்கு விழுதாக அரைத்து வைக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெய் விட்டுக் காந்தவுடன் கடுகு, உ.பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பெருங்காயம் போடவும். பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டுச் சிறிது நேரம் வதக்கவும். பிறகு அரைத்து வைத்திருக்கும் மிளகா விழுதைப் போட்டுக் கிளறவும். நன்றாக சுருண்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி விடவும். இதை ஒரு வாரத்திற்கு மேல் வைத்திருந்து பயன்படுத்தலாம். வெளி யிலேயே வைக்கலாம். {Awful to look at!}

    முப்பருப்பு தால்

    தேவை:

    கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு- தலா 1/2 கப், மிளகா வற்றல்- 2, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.

    தாளிக்க: சீரகம்-1 டீஸ்பூன், பெரிய வெங்காயம்- 1 (பொடியாக நறுக்கி வைக்கவும்), மிளகாத்தூள், மல்லித்தூள்- தலா1 டீஸ்பூன், மிளகுத்தூள்- 1/2 டீஸ்பூன், உப்பு- தேவைக்கு, எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன், மல்லித் தழை- அலங்கரிக்க.

    செய்முறை:

    பருப்புகளுடன் மிளகாய் வற்றல், மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் சீரகத்தை தாளிக்கவும். அதில் வெங்காயம், ஒரு சிட்டிகை உப்பு போட்டு வதக்கவும். வதங்கியவுடன் மிளகாத்தூள், மல்லித் தூள் போட்டுக் கிளறவும். பச்சை வாசனை போனவுடன் மசித்து வைத்திருக்கும் பருப்புக் கலவை, உப்பு போட்டுக் கிளறவும். நன்கு கொதி வர ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, மிளகுத்தூள், மல்லித் தழை போட்டுக் கலந்து பரிமாறவும். {Protein galore!}

    மூங்தால் சப்ஜி

    தேவை:

    பாசிப்பயறு -1 கப், தக்காளி- 3, பச்சை மிளகா- 4, சீரகம்- 1 டீஸ்பூன், கறிவேப்பிலை- 1 ஆர்க்கு, பெருங்காயத்தூள்- 1/2டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 1 கப், மல்லித்தழை- சிறிது, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

    செய்முறை:

    குக்கரில் ஊறவைத்த பாசிப் பயறு, தக்காளித்துண்டுகள், கீறிய பச்சை மிளகா போட்டுத் தேவையான தண்ணீர் விட்டு 3

    விசில் வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்துச் சூடானதும் சீரகம், கறிவேப்பிலை போடவும். பொரிந்ததும் பெருங்காயத் தூள், நறுக்கிய வெங்காயம், ஒரு சிட்டிகை உப்பு போட்டு வதக்கவும். வதங்கியவுடன், வேகவைத்திருக்கும் பாசிப் பயறுக் கலவை யைக் கரண்டியின் அடிப்பாகத்தால் நன்கு மசித்து அடுப்பில் உள்ள வாணலியில் விட்டு, தேவையான உப்பு போட்டுக் கொதிக்க விட்டு இறக்கவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    பின்குறிப்பு: பாசிப்பயறை முளைகட்டியும் பயன்படுத்தலாம். சத்துக் கள் இன்னும் அதிகமாகக் கிடைக்கும். {New item to prepare.}

    பாலக், மேத்தி சப்ஜி

    தேவை:

    பாலக்கீரை- 1/2 கப், வெந்தயக்கீரை- 1 கப், வெங்காயம், தக்காளி - தலா 1, வெந்த துவரம்பருப்பு -1/2கப், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் - தலா 1/2டீஸ்பூன், மிளகாத்தூள்- 1 டீஸ்பூன், உப்பு- தேவைக்கு.

    தாளிக்க: கடுகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், வேர்க்கடலை- 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை:

    வெந்தயக் கீரையை உப்பு கலந்த தண்ணீரில் 15 நிமிடங்கள் போட்டு எடுத்து நறுக்கி வைக்கவும். பாலக் கீரையையும் தண்ணீரில் அலம்பிக் கிள்ளி வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்க வும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம் போட்டு வெடித்ததும் வேர்க்கடலையைச் சேர்க்கவும். சிவந்தவுடன், நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளித் துண்டுகளைப் போட்டு வதக்கவும். நன்றாக மசிந்தவுடன் 2 கீரைகளையும் சேர்த்துத் தேவையான தண்ணீர் விட்டு வேகவிடவும். கீரை வெந்தவுடன், வெந்த துவரம்பருப்பு, மிளகாத்தூள், கரம் மசாலா தூள், உப்பு போட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கவும். தேவையெனில் 1 துண்டு வெல்லத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.

    பின்குறிப்பு: கரம் மசாலா வாசனை பிடிக்காதவர்கள் அதைப் போடாமலும் செய்யலாம். சுவை குறையாது. {Good & healthy preparation.}

    அரைக்கீரை சப்ஜி

    தேவை:

    அரைக்கீரை (ஆய்ந்தது) - 1 கப், ஊறவைத்த பாசிப்பயறு- 1/4 கப், தக்காளி -1, சாம்பார்ப் பொடி- 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

    அரைக்க: தேங்காத்துருவல், வேர்க்கடலை - தலா 1 டேபிள் ஸ்பூன்.

    தாளிக்க: சீரகம்-1 டீஸ்பூன், பூண்டு - தட்டியது 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள்- லி டீஸ்பூன், எண்ணெ - 2 டீஸ்பூன்.

    செய்முறை:

    குக்கரில் கீரை, பாசிப்பயறு, தக்காளி நறுக்கியது,

    சாம்பார்ப் பொடி, தேவையான தண்ணீர் விட்டு 3 விசில் வைத்து எடுக்க வும். ஒரு வாணலியில் எண்ணெ விட்டு அடுப்பில் வைத்துச் சூடான வுடன் சீரகம் போடவும். வெடித்தவுடன் தட்டி வைத்திருக்கும் பூண்டு, பெருங்காயத்தூள் போட்டுப் பொரிந்தவுடன், வேகவைத்திருக்கும் கீரைக் கலவை, அரைக்கக் கொடுத்திருக்கும் பொருட்களை அரைத்த விழுது, தேவையான உப்பு போட்டுக் கலந்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துப் பரிமாறவும். {It is always supposed that it is a healthy recipe.}

    ஆனியன் சப்ஜி

    தேவை: வெங்காயம்- 2, தக்காளி, உருளைக்கிழங்கு - தலா 1, சாம்பார் பொடி, கடுகு, உ.பருப்பு -தலா 1 டீஸ்பூன், எண்ணெ- 2 டேபிள் ஸ்பூன், உப்பு -தேவைக்கு, மல்லித்தழை- அலங்கரிக்க.

    செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். உருளைக்கிழங்கை வெளிப்பக்கம் எண்ணெ தடவி, அடுப்பில் வைத் துச் சுட்டு எடுக்கவும். சுட்டு எடுத்தவுடன் தோலை உரித்து விட்டு உள் பகுதியை எடுத்துத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெ விட்டு கடுகு, உ.பருப்பு போட்டு வெடித்தவுடன் நறுக்கிய வெங்காயம், ஒரு சிட்டிகை உப்பு போட்டு வதக்கவும். வதங்கியவுடன் தக்காளிப் பழத்துண்டுகளைப் போட்டு வதக்கவும். பிறகு சாம்பார்ப் பொடி, உப்பு, உருளைக்கிழங்குத் துண்டுகள் போட்டுத் தேவையான தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும். {Onion is always good for health; good recipe.}

    பிரிஞ்சால், மேத்தி கிரேவி

    தேவை: கத்தரிக்கா - 3, வெந்தயக்கீரை - 1 கைப்பிடி, தக்காளி -2, வெங்காயம் -1, இஞ்சி-பூண்டு விழுது-1 டீஸ்பூன், மிளகாத்தூள்-1 டீஸ்பூன், மல்லித்தூள்- 2 டீஸ்பூன், மஞ்சள் தூள்- லீ டீஸ்பூன், உப்பு- தேவைக்கு, கடுகு, சீரகம்- தலா 1 டீஸ்பூன், எண்ணெ, தேங்காத் துருவல் - தலா 2 டேபிள் ஸ்பூன், முந்திரி-6, மல்லித்தழை- அலங்கரிக்க.

    செய்முறை: கத்தரிக்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்கா, முந்திரியைச் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெ விட்டு சூடானதும் கடுகு, சீரகத்தைப் போடவும். பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், ஒரு சிட்டிகை உப்பைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியவுடன் இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டுப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளித் துண்டுகளைப் போட்டு வதக்கவும். பிறகு பொடி வகைகளைப் போட்டுக் கிளறிவிடவும். பிறகு வெந்தயக்கீரை, கத்தரிக்காத் துண்டுகளைப் போட்டு வதக்கவும். 2 நிமிடம் வதக்கிச் சிறிது தண்ணீர் விட்டு வாணலியை மூடி வைக்கவும். தீயைக் குறைத்து வைக்கவும். கா வெந்தவுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். மல்லித் தழை தூவிப் பரிமாறவும். {Good recipe.}

    நூல்கோல் சோயா சங்க்ஸ் சப்ஜி

    தேவை:

    நூல்கோல், வெங்காயம், தக்காளி - தலா 1, மஞ்சள் தூள், மிளகாத்தூள் - தலா லீ டீஸ்பூன், மல்லித்தூள்- 1 டீஸ்பூன்.

    அரைக்க: தேங்காத் துருவல்- லி கப், மிளகு - லீ டீஸ்பூன், பச்சை மிளகா- 1, கசகசா- 1 டீஸ்பூன்.

    தாளிக்க: கடுகு, சீரகம்- தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, எண்ணெ -1 டேபிள் ஸ்பூன், மல்லித்தழை-அலங்கரிக்க.

    செய்முறை: குக்கரில் நறுக்கிய நூல்கோல், தக்காளி, மஞ்சள் தூள்,

    தேவையான தண்ணீர் விட்டு 3 விசில் வைத்து எடுக்கவும். ‘அரைக்க’ என்று கொடுத்துள்ளதை அரைத்து வைக்கவும். கடுகு, சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு பொடி வகைகளைப் போட்டுக் கிளறவும். அத்துடன் வெந்த காகள், அரைத்த விழுது, உப்பு போட்டுத் தேவையான தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும். {Good.}

    பூரி மசால்

    தேவை:

    உருளைக்கிழங்கு- 2, பெரிய வெங்காயம் - 1, இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன், பச்சை மிளகா-3, கறிவேப்பிலை- 1 ஆர்க்கு, மஞ்சள் தூள்- லீ டீஸ்பூன் , பொட்டுக் கடலை மாவு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள்- லி டீஸ்பூன், கடுகு, உ.பருப்பு, ஊறவைத்த க.பருப்பு- தலா 1 டீஸ்பூன், எண்ணெ - 1 டேபிள் ஸ்பூன். செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோல் உரித்து, துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெ விட்டு கடுகு, உ.பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். சிவந்தவுடன் பச்சைமிளகா, இஞ்சி துருவல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுப் பொரிந்த வுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும். நன்றாக வதங்கியவுடன் மஞ்சள் பொடி போட்டுக் கிளறி, தேவையான உப்பு, தண்ணீர் விட்டு உருளைக்கிழங்கு துண்டுகளையும் போட்டுக் கொதிக்க விடவும். 2 நிமிடங்கள் ஆன பிறகு பொட்டுக் கடலைப் பொடியைத் தூவிக் கலந்து ஒரு நிமிடம் கழித்து இறக்கவும். {Usual good recipe!}

    ஆலு சப்ஜி

    தேவை:

    உருளைக்கிழங்கு - 3 (சிறிய துண்டுகளாக நறுக்கியது), கசூரி மேத்தி -1 டீஸ்பூன், மிளகாத்தூள் - 2 டீஸ்பூன், கரம் மசாலா, மஞ்சள் தூள் - தலா லீ டீஸ்பூன், ஆம்சூர் பவுடர், சீரகம்- தலா 1 டீஸ்பூன், மல்லித்தழை- சிறிது, பெருங்காயத்தூள்- லி டீஸ்பூன், உப்பு -தேவைக்கு.

    செய்முறை:

    ஒரு வாணலியில் எண்ணெ விட்டு சீரகம், பெருங்காயம் தாளிக்கவும். பிறகு நறுக்கிய உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், தேவை யான தண்ணீர் விட்டு மூடி வைத்து வேகவிடவும். வெந்ததும் கசூரி மேத்தி, மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலாத் தூள், ஆம்சூர் பவுடர் போட் டுக் கொதிக்கவிடவும். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    பின்குறிப்பு: இங்கு நாம் வெங்காயம் சேர்க்காமல் செதிருக்கிறோம். விரும்பினால் சீரகம் போட்டுப் பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளலாம். கரம் மசாலாத் தூள் வாசனை பிடிக்காதவர்கள் போடாமலும் செயலாம். சுவை குறையாது. {Aalu always go for different avatars.}

    மூன்று கீரை தட்டைப்பயறு கிரேவி

    தேவை:

    அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, முளைக்கீரை எல்லாம் சேர்ந்து - 1 கப், வேகவைத்த தட்டைப்பயறு- லீ கப், தக்காளி -2, வெங்காயம் - 1, இஞ்சித் துருவல்-1டீஸ்பூன், கறிவேப்பிலை -1 ஆர்க்கு, சீரகம், மிளகாத் தூள், மல்லித்தூள் - தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள், கரம் மசாலாதூள் - தலா லீ டீஸ்பூன், உப்பு -தேவைக்கு, தேங்காத் துருவல்- 1 டேபிள் ஸ்பூன், பாதாம் -6, எண்ணெ -2 டேபிள் ஸ்பூன். செய்முறை:

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெ ஊற்றி, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். இஞ்சித் துருவலைப் போட்டு பொன்னிற மானதும், நறுக்கிய வெங்காயம், ஒரு சிட்டிகை உப்பு போட்டு வதக்க வும். நன்றாக வதங்கியவுடன் தக்காளித் துண்டுகளைப் போட்டு வதக்க வும். பிறகு பொடி வகைகளைப் போட்டுப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு கீரை வகைகளைப் போட்டுத் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். கீரை வெந்தவுடன், வெந்த தட்டைப்பயறு, தேங்காத் துருவல், பாதாம் அரைத்த விழுது சேர்த்து, தேவையான உப்பையும் சேர்த்துக் கொதி வந்தவுடன் இறக்கவும். பின்குறிப்பு: பாதாம் போட விரும்பாதவர்கள் அதற்குப் பதில் 1 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலையைப் பயன்படுத்தலாம்.{Good.}

    சோயா சங்க்ஸ் ஆலு கிரேவி

    தேவை:

    சோயா உருண்டைகள் - 25, வேகவைத்த உருளைக்கிழங்கு - 2, வெங்காயம்- 1 ( நறுக்கியது), பால் -2 டீஸ்பூன், உப்பு -தேவைக்கு.

    அரைக்க: தேங்காத் துருவல்- 2 டேபிள் ஸ்பூன், மிளகு, மஞ்சள் தூள்-தலாலீ டீஸ்பூன், பெருஞ்சீரகம், கசகசா -தலா 1 டீஸ்பூன், வெங் காயம், பெரிய தக்காளி - தலா 1 (வதக்கி அரைக்கவும்).

    தாளிக்க: சீரகம், மிளகாத்தூள், மல்லித்தூள், இஞ்சி-பூண்டு விழுது-தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை- 1 ஆர்க்கு, வெங்காயம்- 1 (பொடியாக நறுக்கியது), எண்ணெ- 2 டேபிள் ஸ்பூன், மல்லித்தழை- அலங்கரிக்க. {Colorful too.}

    செய்முறை:

    தண்ணீருடன் பால் சேர்த்துக் கொதிக்க விட்டு அதில் சோயா உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் மூடி வைத்து, பிறகு எடுத்து குளிர்ந்த நீரில் அலசி ஒட்டப் பிழிந்து வைக்கவும். அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை அரைத்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெ விட்டு சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதில் வெங் காயம், ஒரு சிட்டிகை உப்பு போட்டு வதக்கி, இஞ்சி-பூண்டு விழுதைப் போட்டுப் பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு அரைத்த விழுது, மிளகாத்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் போட்டுக் கிளறி வாணலியை மூடி வைக்கவும். எண்ணெ பிரிந்து வந்தவுடன் சோயா உருண்டைகள், உருளைக்கிழங்கு, உப்பு, தண்ணீர் சேர்த்து, கொதிக்க விட்டு இறக்கி, மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    ஆலு மேத்தி கிரேவி

    தேவை:

    உருளைக்கிழங்கு- 2, வெந்தயக்கீரை (ஆந்தது )-1 கைப்பிடி, தக்காளி- 2, வெங்காயம் - 1, இஞ்சி துருவியது - 1 டீஸ்பூன், பூண்டு (நறுக்கியது)- 2 டீஸ்பூன், மிளகாத்தூள் -2 டீஸ்பூன், மல்லித் தூள் -1 டீஸ்பூன், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள் - தலா லீ டீஸ்பூன், பெருங்காயத்தூள்- 1/2டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு-1 டேபிள் ஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், வேர்க்கடலை-1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை- அலங்கரிக்க.

    செய்முறை:

    உருளைக்கிழங்கைத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வெந்தயக் கீரையை உப்பு கலந்த தண்ணீரில் 15 நிமிடங்கள் போட்டு வைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெ விட்டு சீரகம் தாளிக்கவும். வெடித்தவுடன் இஞ்சி, பூண்டு, தக்காளி, வெங்காயம் போட்டு வதக் கவும். பிறகு பொடி வகைகளைப் போட்டுக் கிளறவும். நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகள், ஆந்த வெந்தயக் கீரை, தேவையான தண்ணீர் விட்டுக் கிளறி வாணலியை மூடி வைக்கவும். கிழங்கு வெந்த வுடன் உப்பு, கரகரப்பாகப் பொடித்த வேர்க்கடலை தூவி இறக்கவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும். {Sure it is a healthy recipe.}

    வாழைத்தண்டு பட்டாணி சப்ஜி

    தேவை:

    வாழைத்தண்டு (நறுக்கியது) - 1 கப், பச்சைப் பட்டாணி- லீ கப், துவரம்பருப்பு - லி கப், தக்காளி- 2, உப்பு -தேவைக்கு.

    அரைக்க: தேங்காத்துருவல் - 2 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகா-3, சீரகம்- 1 டீஸ்பூன், மிளகு- லீ டீஸ்பூன், பொட்டுக்கடலை -1 டேபிள் ஸ்பூன்.

    தாளிக்க: கடுகு, உ.பருப்பு- தலா 1 டீஸ்பூன், கறிவேப்பிலை- 1 ஆர்க்கு, பெருங்காயத்தூள் - லி டீஸ்பூன், எண்ணெ -2 டீஸ்பூன்.

    செய்முறை

    குக்கரில் வாழைத்தண்டு, பட்டாணி, துவரம்பருப்பு, தக்காளித் துண்டுகள், தேவையான தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு எடுக்கவும். இதனுடன் உப்பு, அரைத்த விழுதைப் போட்டுக் கலந்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். இதில் ‘தாளிக்க’ கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துக் கொட்டிப் பரிமாறவும். {Good}

    மிக்ஸ்டு வெஜிடபிள் ரைத்தா

    தேவை:

    பெரிய வெங்காயம், கேரட், தக்காளி - தலா 1, கெட்டித்தயிர் -1 கப், பச்சை மிளகா - 1, கடுகு- 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள்- லி டீஸ்பூன், எண்ணெ- 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகா, துருவிய கேரட், உப்பு, கெட்டித் தயிர் விட்டுக் கலக்கவும். கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டி மல்லித்தழை தூவிப் பரிமாறவும். {Right, left, salute and do!}

    முள்ளங்கி, கேரட் சப்ஜி

    தேவை:

    முள்ளங்கி, கேரட், தக்காளி - தலா 1, சின்ன வெங்காயம் (தோல் உரித்தது) -15, சீரகம், மிளகாத்தூள், மல்லித்தூள் - தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - லீ டீஸ்பூன், பெருங்காயத்தூள் - லி டீஸ்பூன், எண்ணெ -1 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவைக்கு, மல்லித்தழை - அலங்கரிக்க.

    அரைக்க: தேங்காத் துருவல்- லீ கப், முந்திரி/பாதாம் - 10.

    செய்முறை:

    முள்ளங்கி, கேரட்டை துருவி வைக்கவும். அரைக்க என்று கொடுத்துள்ளதை அரைத்து வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெ விட்டு சீரகம் போட்டுப் பொரிந்ததும் சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள் போடவும். வதங்கியவுடன் தக்காளித் துண்டுகளைப் போடவும். தூள் வகைகளைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியவுடன் துருவிய முள்ளங்கி, கேரட்டை போடவும். 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு தேவையான தண்ணீர் விட்டு வேகவிடவும். வெந்ததும் அரைத்த விழுது, உப்பு போட்டுக் கொதிக்க வைத்து இறக்கவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும். {Good}

    பாலக் பனீர் கிரேவி

    தேவை:

    பாலக் கீரை (ஆந்தது)-1 கப், பனீர் துண்டுகள்- 100 கிராம், தண்ணீர் -1 கப், உப்பு -1 சிட்டிகை, சர்க்கரை- லி டீஸ்பூன்,

    அரைக்க: பச்சை மிளகா-1, வெங்காயம்- 1, தக்காளி-3

    தாளிக்க: சீரகம்- 1 டீஸ்பூன், பூண்டு (நறுக்கியது) -லீ டேபிள் ஸ்பூன், மிளகாத்தூள், தனியாத் தூள், கரம் மசாலாத் தூள் - தலா 1 டீஸ்பூன், உப்பு- தேவைக்கு.

    செய்முறை:

    முதலில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் சர்க்கரை, உப்பு போட்டுப் பாலக் கீரையை 5 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்து, குளிர்ந்த நீரில் போட்டு எடுத்து அரைத்து வைக்கவும். தக்காளியைப் பின்புறம் கூட்டல் குறி மாதிரிக் கீறி வெந்நீரில் போட்டு, தோல் எடுத்து வெங்காயம், பச்சை மிளகாயுடன் சேர்த்து அரைத்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெ விட்டு சீரகம், பூண்டை போட்டு வதக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகா அரைத்த விழுது, சிறிது உப்பு போட்டு வதக்கவும். வதங்கியவுடன் தக்காளி விழுதைப் போட்டு வதக் கவும். இதில் மிளகாத்தூள், தனியா தூள் போட்டு வதக்கவும். தீயைக் குறைத்து மூடி வைத்து வேகவிடவும்.10 நிமிடங்கள் கழித்து பாலக் கீரை அரைத்த விழுது, கரம் மசாலாத் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். பனீர் துண்டுகளையும் சேர்த்து கொதித்தவுடன் இறக்கிப் பரிமாறவும். {Good}

    வாழைப்பூ, தட்டைப்பயறு சப்ஜி

    தேவை:

    வாழைப்பூ ஆந்தது- 1 கப், ஊறவைத்த தட்டைப்பயறு - லீ கப், தக்காளி ப்யூரி- லீ கப், வெங்காயம் நறுக்கியது - லீ கப், சாம்பார் பொடி- 3 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள்- லி டீஸ்பூன், எண்ணெ - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு, மல்லித் தழை - சிறிது, தேங்கா, பொட்டுக் கடலை - தலா லி கப்.

    செய்முறை:

    வாழைப்பூவுடன் சிறிது மஞ்சள் தூள், உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். தட்டைப்பயறை வேகவிட்டு வைக்கவும். தேங்கா, பொட்டுக் கடலையை அரைத்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெ விட்டு அடுப்பில் வைத்துச் சூடானதும் கடுகு, சீரகம் போட வும். வெடித்தவுடன் பெருங்காயத் தூள் போட்டுப் பொரிந்ததும் நறுக் கிய வெங்காயம், ஒரு சிட்டிகை உப்பு போட்டு வதக்கவும். வதங்கியவுடன் தக்காளி ப்யூரியை விட்டுக் கொதிக்க விடவும். இதில் சாம்பார்ப் பொடி, வேகவைத்த வாழைப்பூ, தட்டைப்பயறு போட்டுக் கொதிக்கவிடவும். 5 நிமிடங்கள் கொதித்த பிறகு தேங்கா, பொட்டுக்கடலை அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும். {Healthy recipe.}

    சென்னா மசாலா

    தேவை:

    கொண்டைக்கடலை -1 கப், நறுக்கிய வெங்காயம் - லீ கப், தக்காளி ப்யூரி- லி கப், புளி- பெரிய நெல்லிக்கா அளவு, பட்டை, ஏலக் கா, கிராம்பு- தலா 2, மிளகாத் தூள்- 2 டீஸ்பூன், மல்லித்தூள் -1 டீஸ் பூன், மஞ்சள் தூள் -லீ டீஸ்பூன், தேங்காத் துருவல்-லி கப், முந்திரி- 10, இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன், எண்ணெ -1 குழிக்கரண்டி, மல்லித்தழை- அலங்கரிக்க.

    செய்முறை:

    கொண்டைக்கடலையை ஊறவைத்து வேகவைத்துக் எடுக்கவும். புளியை கரைத்து வைக்கவும். தேங்காத் துருவலுடன் முந்திரியைச் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெ விட்டு சூடானதும் பட்டை, ஏலக்கா, கிராம்பு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தைப் போடவும். நன்றாக வதங்கியவு டன் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்க்கவும். ஒரு நிமிடம் கழித்து, தக்காளி ப்யூரியைச் சேர்த்து வதக்கவும். இதில் தூள் வகைகளைச் சேர்த்துக் கிளறி அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். எண்ணெ பிரிந்து வந்தவு டன், புளிக் கரைசல், வெந்த கொண்டைக்கடலையைப் போடவும். தேவையான உப்பையும் சேர்த்து, கொதிக்க ஆரம்பிக்கும்போது தேங்கா, முந்திரி அரைத்த விழுதைச் சேர்த்து கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். {Good recipe.}

    கருணைக்கிழங்கு மசியல்

    தேவை:

    கருணைக்கிழங்கு -லி கிலோ, வெந்த துவரம்பருப்பு லீ கப், உப்பு- தேவையானது, தேங்காத்துருவல்- லி கப், புளி- கோலி அளவு.

    தாளிக்க: கடுகு, உ.பருப்பு -தலா 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள்- தலா லீ டீஸ்பூன், மிளகா வற்றல்- 5, கறிவேப்பிலை- சிறிது, எண்ணெ-1 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை:

    கருணைக்கிழங்கை வேகவைத்துத் தோல் உரித்து, மசித்து வைக்கவும். புளியைத் தண்ணீர் விட்டு ஊறவைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெ விட்டு அடுப்பில் வைக்கவும். சூடானதும் கடுகு, உ.பருப்பு, கிள்ளிய மிளகா வற்றல் போடவும். வெடித்தவுடன் பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை போட்டுப் பொரிந்ததும், மசித்து வைத்திருக்கும் கருணைக்கிழங்கு, புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். புளியின் பச்சை வாசனை போனவுடன் வெந்த துவரம் பருப்பைப் போட்டுக் கலக்கவும். தேங்காத்துருவல் தூவிப் பரிமாறவும். {Good recipe.}

    சேனைக்கிழங்கு சென்னா கிரேவி

    தேவை:

    சேனைக்கிழங்கு-லி கிலோ, வேகவைத்த கொண்டைக் கடலை- லீ கப், புளி - கோலி அளவு, மஞ்சள் தூள்- லீ டீஸ்பூன், வறுத்த சீரகத் தூள், இஞ்சித் துருவல், பூண்டு (நறுக்கியது) - தலா 1 டீஸ்பூன், பச்சை மிளகா -2, தக்காளி ப்யூரி - லீ கப், வெங்காயம் (நறுக்கியது) - லி கப், மிளகாத் தூள், மல்லித்தூள்- தலா 1 டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்கா - தலா- 2, எண்ணெ - 2 டேபிள் ஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு-தேவைக்கு.

    செய்முறை:

    சேனைக்கிழங்கைத் தோல் நீக்கி, சதுர துண்டுகளாக நறுக்கி வைக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசல்

    சேர்த்து வேகவைத்து நீரை வடிகட்டவும். ஆறியதும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். முதலில் பட்டை, கிராம்பு, ஏலக்காப் போட்டுப் பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சித் துருவல், பூண்டுப்பற்கள் போட்டு வதக்கவும். பொரிந்தவுடன் கீறிய பச்சை மிளகாயை போடவும். தக்காளி ப்யூரியைப் போட்டுக் கிளறவும். மசாலாத் தூள் வகைகளைப் போடவும். 2 நிமிடம் கிளறியவுடன், வறுத்து வைத்திருக்கும் சேனைக் கிழங்கு துண்டுகள், வேகவைத்த கொண்டைக்கடலை, உப்பு போட்டுத் தேவையான தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். கடைசியில் வறுத்த சீரகத் தூள், மல்லித்தழை தூவிப் பரிமாறவும். {Good one.}

    பீட்ரூட் ராஜ்மா கிரேவி

    தேவை:

    பீட்ரூட் - 2, ராஜ்மா - 1 கப், சின்ன வெங்காயம்- 20, தக்காளி ப்யூரி - 1 கப், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், சாம்பார் பொடி- 2 டீஸ்பூன், கரம் மசாலாத் தூள், சீரகம்- தலா 1 டீஸ்பூன், மிளகு - லீ டீஸ்பூன், எண்ணெ- 2 டேபிள் ஸ்பூன், மல்லித்தழை-அலங்கரிக்க, முந்திரி விழுது - 1 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை:

    ராஜ்மாவை ஊறவைத்து குக்கரில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். பீட்ரூட்டைச் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். சின்ன வெங்காயத்தைத் தோல் உரித்து வைக்கவும். ஒரு வாணலியில் எண் ணெ விட்டு அடுப்பில் வைத்துச் சூடானதும் சீரகம், மிளகைப் போடவும். வெடித்தவுடன் சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி ப்யூரி, இஞ்சி பூண்டு விழுது போட்டுப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு சாம்பார்ப் பொடி, கரம் மசாலா தூள் போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் கழித்து பீட்ரூட் துண்டுகளைப் போட்டு வதக்கித் தேவையான தண்ணீர் விட்டு வேக விடவும். அத்துடன் வேக வைத்த ராஜ்மா, முந்திரி விழுது, உப்பு, தேவையான தண்ணீர் விட்டுக் கலந்து கொதிக்க வைத்து இறக்கவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும். {Yes.}

    பேபி பொட்டேட்டோ கிரேவி

    தேவை:

    பேபி பொட்டேட்டோ -லி கிலோ (வேகவிட்டு தோல் உரித்து வைக்கவும்), சின்ன வெங்காயம் - 100 கிராம், இஞ்சி, பச்சைமிளகா, பூண்டு - அரைத்த விழுது- 2 டீஸ்பூன், தக்காளி ப்யூரி - லீ கப், சீரகம், காஷ்மீரி மிளகாத் தூள்- தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - லீ டீஸ்பூன், எண்ணெ -1 டேபிள் ஸ்பூன், உப்பு- தேவைக்கு, மல்லித் தழை- அலங்கரிக்க.

    செய்முறை:

    சீரகத்தைத் தாளித்து, பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அடுத்து இஞ்சி, பச்சை மிளகா, பூண்டு அரைத்த விழுது, தக்காளி ப்யூரி போட்டு வதக்கவும். 2 நிமிடங்கள் கழித்து தூள் வகைகளைப் போடவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். எண் ணெ பிரிந்து வரும்போது, வெந்த உருளைக்கிழங்குத் துண்டுகள், உப்பு, தேவையான தண்ணீர் விட்டுக் கலந்து கொதி வந்ததும் இறக்கவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

    பின்குறிப்பு: காரம் அதிகம் வேண்டும் என்று விரும்புபவர்கள் மிள காயின் அளவைக் கூட்டிக் கொள்ளலாம். காஷ்மீரி மிளகாத்தூள் நிறம் தான் நல்ல சிவப்பாக இருக்குமே தவிர காரம் அதிகம் இருக்காது. {Certainly it will be tasty.}

    கொத்துமல்லித் தொக்கு

    தேவை:

    மல்லித்தழை ஆந்தது - 3 கப், மிளகா வற்றல் - 10, உளுத்தம் பருப்பு-1 டேபிள் ஸ்பூன், புளி- சிறிய நெல்லிக்கா அளவு, பெருங்காயத்தூள்- 1 டீஸ்பூன், உப்பு -தேவையானது, எண்ணெ- 1 டேபிள் ஸ்பூன்.

    செய்முறை:

    மல்லித்தழையை ஆந்து தண்ணீர் விட்டு அலசி ஒரு காட்டன் துணியில் பரப்பி உலர வைக்கவும். வாணலியில் எண்ணெ விட்டு சூடானதும் புளியைப் போட்டு வறுத்து எடுக்கவும். பிறகு மிள கா வற்றலைப் போட்டு வறுத்து எடுக்கவும். அடுத்து உளுந்தம்பருப்பு, பெருங்காயம் போட்டு வறுத்து எடுக்கவும். கடைசியில் வாணலியில் மல்லித்தழையைப் போட்டு வதக்கி எடுக்கவும். ஆறியதும் உப்பு

    சேர்த்து மிக்ஸியில் போட்டுத் தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும். {It is usually prepared.}

    பரங்கிக்கா ஸ்வீட் - கார கிரேவி

    தேவை:

    பரங்கிக்காத் துண்டுகள் -1 கப், பொடித்த வெல்லம்-லி கப், தேங்கா, பொட்டுக்கடலை - தலா 1 டேபிள் ஸ்பூன், கடுகு, மிளகாத்தூள்- தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள்- லீ டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, முந்திரி- 6, நெ, எண்ணெ- தலா 2 டீஸ்பூன்.

    செய்முறை:

    வாணலியில் சிறிது நெ விட்டு முந்திரியை வறுத்து தனியே வைக்கவும். பிறகு சிறிது எண்ணெய் விட்டுக் காந்தவுடன் கடுகைப் போடவும். வெடித்தவுடன் பரங்கிக்காத் துண்டுகளைப் போட்டு மஞ்சள் தூள், மிளகாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும். வெந்தவுடன் தேங்கா, பொட்டுக் கடலை அரைத்த விழுது, வெல்லம், தேவையான தண்ணீர் விட்டுக் கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். மேலாக நெயில் வறுத்த முந்திரியைப் போட்டுப் பரிமாறவும். இது இனிப்பும், காரமும் கலந்து நல்ல சுவையாக இருக்கும். {A new recipe.}

    சோயா சங்க்ஸ் பனீர் கிரேவி

    தேவை:

    சோயா சங்க்ஸ் - 15, பனீர்- 100 கிராம், தக்காளி ப்யூரி - 1/4கப், வெங்காயம் (நறுக்கியது)-1/4கப், சீரகம், மிளகாத்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத் தூள்- தலா 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன், இஞ்சி- பூண்டு விழுது -2 டீஸ்பூன், எண்ணெ - 2 டேபிள் ஸ்பூன், உப்பு-தேவைக்கு, மல்லித்தழை - அலங்கரிக்க.

    செய்முறை:

    தண்ணீருடன் சிறிது பால் சேர்த்துக் கொதித்ததும் சோயா உருண்டைகளைப் போட்டு 5 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் அலசி ஒட்டப் பிழிந்து வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகம் போட்டு பொரிந்தவுடன், நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டால் சீக்கிரம் வதங்கி விடும். அடுத்து இஞ்சி-பூண்டு விழுது போட்டு 2 நிமிடங்கள் கழித்து தக்காளி ப்யூரியை விட்டுக் கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பொடி வகைகளைப் போட்டுக் கிளறவும். அடுத்து சோயா உருண்டைகள், பனீர் துண்டுகள், தேவையான உப்பு, தேவையான தண்ணீர் விட்டு நன்றாகக் கொதித்தவுடன் இறக்கவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும். {Recipe's name looks like Chinese words! Anyhow we can try.}
    ===============================================================
    குறள் 412:

    "செவுக்குண வில்லாத போழ்து சிறிது
    வயிற்றுக்கும் ஈயப் படும்."

    பொருளுரை:

    செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.


    "பாரதிமணியன்"
     
    Loading...

  2. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: சத்தும் உண்டு... சுவையும் உண்டு...சப்ஜீஸ் 32![from a T

    All are mouth watering dishes :thumbsup
     
  3. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

Share This Page