1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!!

Discussion in 'Stories in Regional Languages' started by cherrybud, Dec 22, 2014.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    பெண்ணே சுழன்று அடிக்கும் சூறாவளி போல்
    நினைவலைகள் உன் மனதையும் தாக்குகிறதோ
    நிலத்தில் உள்ள தூசுகளை மழை நீர் அடித்து சசெல்வது போல்
    உன் எண்ண ஓட்டங்களும் அன்பு மழையில் மறைந்து விடும்
     
    1 person likes this.
  2. cherrybud

    cherrybud Silver IL'ite

    Messages:
    151
    Likes Received:
    110
    Trophy Points:
    93
    Gender:
    Female
    @periamma ..... Thankyou for the wonderful feedback and the encouraging words.... kavithai is so good as usual and thank you for tolarating my delays in posting. Please keep reading... Love,S.
     
  3. cherrybud

    cherrybud Silver IL'ite

    Messages:
    151
    Likes Received:
    110
    Trophy Points:
    93
    Gender:
    Female
    [h=2]சத்தமின்றி என்னை நெஞ்சோடு சேர்த்து!! - 17[/h]
    நிர்மல்?... இங்கேயா?..... அருணும் ஸ்மிருதியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்....

    தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்த போது அவர்கள் இருவரையும் பார்த்து அவனும் சற்று குழம்பிப் போனான் என்பதை அவன் முகமே காட்டியது.

    வாங்க.... சட்டென தன் முகபாவத்தை மாற்றிக் கொண்டவன் அவர்களை உள்ளே அழைத்தான்.

    அருணும் ஸ்மிருதியும் ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று நிர்மல் காட்டின இருக்கைகளில் அமர்ந்தனர்.

    சரி சொல்லுங்க.... என்றான் புன்னகையுடன் நிர்மல்.

    என்ன என்ற கேள்விக்குறியுடன் இருவரும் அவனை நிமிர்ந்து பார்க்க நிர்மல் முகத்தில் அதே புன்னகையுடன் ஸ்மிருதியை நோக்கி கை காட்டினான்.

    நீங்க தான்.... இன்னிக்கு உங்க உடம்புக்கு என்னாச்சுன்னு சொல்லுங்கன்னு கேட்டேன்....

    அவள் தனக்கு நேர்ந்ததை சொன்னாள். அமைதியாக அவள் சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டு அவள் கையை மெல்லியதாகப் பிடித்தான் அவன். நாடித்துடிப்பை சரி பார்த்து உறுதி செய்தான்.

    கொஞ்சம் உள்ளே வரீங்களா? என்றபடி தனக்கு அருகில் உதவிக்கு நின்றிருந்த நர்சைப் பார்க்க அவன் பார்வையின் அர்த்தம் புரிந்ததுபோல அவள் ஸ்மிருதியிடம் வந்து அவள் தோளை மெல்ல தட்டினாள்.

    ஸ்க்ரீனுக்கு அந்தபக்கம் மேடம்.... நர்சின் புன்னகை மிக அழகாக இருந்தது.

    அவள் அருணை ஒரு பார்வை பார்த்தபடி எழும்பி உள்ளே சென்றாள். இரண்டு நிமிடங்கள் கழித்து நிர்மல் உள்ளே சென்றான்.

    செக் அப் முடித்து இருவரும் ஸ்க்ரீனுக்கு வெளியே வந்தபோது ஐந்து நிமிடங்கள் கழிந்திருந்தன.

    வேறொன்னுமில்லை..... சும்மா இப்போதைக்கு யூரின் டெஸ்ட் மட்டும் தான் முடிச்சிருக்கேன். கொஞ்சம் லேட் ஆனதால ஹாஸ்பிடல் லேப் க்ளோஸ் ஆயிருக்கும்.... ப்ரெக்னன்சி கன்பார்ம் ஆயிருச்சு... கங்கிராட்ஸ்.....

    டீடைல்ட் செக் அப்காக நாளை திரும்பவும் வர வேண்டியிருக்கும்.... ஸ்கான் செய்யணும்... டீடைல்ஸ் நாளை தான் தெரியும்.... ரொம்ப தூரம் ட்ராவல் பண்றது கஷ்டம்னா உங்க பக்கத்துலையே நல்ல கைநேக்ஸ் இருந்தா ட்ரீட்மென்ட் அண்ட் கன்சல்டஷனை அவங்க கிட்டே வெச்சுக்கலாம்.... நிர்மல் முகத்தில் அப்போதும் அதே புன்னகை.

    ஆனால் அவனின் சாந்தமான அந்த முகம் ஸ்மிருதியின் மனதில் குற்ற உணர்ச்சியை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டிருந்தது. அதனால் வேறு மருத்துவரைப் பாருங்கள் என்று அவனே சொன்னபோது அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

    ஆனால் அந்த நிம்மதி ரொம்ப நேரம் நீடிக்கவில்லை....

    இல்ல டாக்டர்....உங்க கிட்டே வரோம்... வேற டாக்டர்ஸ் வேண்டாம்.... இது எங்களுக்குக் கெடச்ச வரம்.... அதை பத்திரமா பாத்துக்க வேண்டியது எங்க பொறுப்பு.... அதுக்கு உங்களை மாதிரி ஒரு திறமையான டாக்டர் தான் வேணும்.... ஒரு எல்லா வசதியுமுள்ள ஹாச்பிடலும் வேணும்.... அருண் சொன்னான்.

    ஓகே.... நீங்க என்மேல் வெச்சிருக்கிற நம்பிக்கைக்கு தாங்க்ஸ்...

    ஸ்மிருதி உள்ளுக்குள் நொறுங்கிப் போனாள்.....

    சரி.... அப்போ இன்னிக்கு நீங்க கெளம்பலாம்.... டேக் கேர்.... என்றபடி அருணுக்கு தன் கையை நீட்டினான்.

    ஓகே டாக்டர்.... தேங்க்ஸ்....என்றபடி அவனும் பதிலுக்குத் தன் கையை நீட்டி அவன் கையைப் பற்றிக் கொண்டான்....

    நோ மோர் டாக்டர்...... கால் மீ நிர்மல்..... என்று அவன் புன்னைகைத்தபடி விடை கொடுக்க ஸ்மிருதி ஒரு சிறு தலையாட்டலில் அவனிடமிருந்து விடை பெற்று அறைக்கு வெளியே இருவரும் வந்தனர்.

    காரிடார் வெறிச்சோடிப் போய்க் கிடக்க அதற்காகவே காத்திருந்தவன் போல் அவளை அள்ளி அனைத்து நெற்றியில் மென்மையாக தன் உதடுகளைப் பதித்தான் அருண். அவளும் அவனை விலக்க முற்படவில்லை. அந்த அணைப்பு தந்த பாதுகாப்பில் ஒன்றிப் போய் நின்றாள்.

    காதல் கரை கடந்து ஒழுக கட்டியணைத்தபடி அவர்கள் நின்றிருந்த அந்த இரண்டு நிமிடங்கள் இரண்டு யுகங்கள் போல் தோன்றினது அப்போது எதிர்பாராதவிதமாக வெளியே வர நேர்ந்ததால் அந்தக் காட்சியைக் காண நேர்ந்த நிர்மலுக்கு.

    அந்த காட்சி ஒருவன் மனதில் மட்டும் கனல் மழை சொரிந்ததை மட்டும் இருவரும் அறியவேயில்லை.

    (தொடரும்)
     
    1 person likes this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    First time reading a story here. @Periamma 's kavithai brought me here. Wonderful description. and all your poems along with the story is too good. Beautiful details all through. well written CB ...

    @periamma, saaral pol thangal kavithaigal ... menmaiyaaga, ithamaaga athanaiyum azhagu....
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Cb உண்மை காதலின் உணர்வுகள் மென்மையானது .நல்லா இருக்குமா .

    கதவுக்கு அந்த பக்கம் இருட்டா தான் இருக்கும்னு ஸ்மிர்திக்கு பயம் ..கதவை திறந்தா என்ன இருக்கும்னு தெரிய போகுது .
     
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    jskls credit goes to Cherrybud the writer of the story .Her writeup helps me to give my fb.in kavithai

    Thanks CB
     
  7. minjagan

    minjagan Gold IL'ite

    Messages:
    242
    Likes Received:
    392
    Trophy Points:
    123
    Gender:
    Female
    CB,

    Nalla seithi....

    Amma,

    Unga kavithai ellam super....
     
  8. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    The story is really very good. Kathaiku thunaiyay kavithai pramatham.

    Rest of the story?
     
  9. grukmani

    grukmani New IL'ite

    Messages:
    25
    Likes Received:
    0
    Trophy Points:
    6
    Gender:
    Female
    hello
    .can you please tell me where to read the rest of the story
    rukmani
     
  10. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @grukmani Author has stopped continuing the story
     

Share This Page