1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

ஙே

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Jun 2, 2021.

 1. Thyagarajan

  Thyagarajan Finest Post Winner

  Messages:
  10,115
  Likes Received:
  10,934
  Trophy Points:
  590
  Gender:
  Male
  :hello: ஙே :hello:

  ஒரே தலைவலி.
  மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில் இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான்.

  உனது ‘ஓனர்’ எங்கேப்பா என்று கேட்டேன்.
  அவருக்குச் சரியான தலைவலி. அதோ அந்தக் காப்பிக் கடையில் காப்பி சாப்பிடப் போயிருக்கிறார் என்றான் அவன்!
  என் கையிலிருந்த தலைவலி மாத்திரை ஸ்டிரிப் என்னைப் பார்த்து ‘ஙே’ என்று விழித்தது!

  வைஃப்புக்கு பிபியும் (BP) ஷுகரும் ஏறி விட்டது. ஆகவே அலறி அடித்துக் கொண்டு டாக்டரைப் பார்க்க காலையிலேயே அவளுடன்கிளம்பினேன்.
  டாக்டர் யோகா செய்து கொண்டிருந்தார். முக்கால் மணி நேரம் காத்திருந்தோம்.
  செக் பண்ணிப் பார்த்த டாக்டர் மருந்துகளை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்த வேண்டும் என்றும் வேளாவேளைக்குச் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை பகன்றார். அவர் எழுதித் தந்த அதிகப்படியான 5, 6 மாத்திரைகள் கொண்ட சீட்டை வாங்கிக் கொண்டேன்.
  ஒரு ஆவல் உந்த, “டாக்டர், நீங்கள் யோகா செய்கிறீர்களா?” என்று கேட்டேன். 15 வருடமாகச் செய்து வருவதாகவும் அதனால் தான் பிபி, ஷுகர் இல்லாத ஆரோக்கிய வாழ்வைக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
  பிபி, ஷுகரைக் குறைக்க அவர் எழுதித் தந்த நீண்ட மாத்திரை சீட்டைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று என்னைப் பார்த்து விழித்தது.


  மனைவியின் தலைமுடி கோரமாக ஆகிக் கொண்டிருப்பதாக அவளுக்கு ஒரு உணர்வு. "சரி, வா பியூட்டி பார்லர் போவோம்!" என்றேன்.
  நமது நலனைக் கருதி பல்வேறு பேக்கேஜ்கள் நமக்கு உகந்ததாக இருப்பதாக ரிஸப்ஷனிஸ்ட் அன்புடன் சொன்னாள்.
  1200 ரூபாயில் ஆரம்பம். 3000 ரூபாய் வரை போகிறது லிஸ்ட்.
  பேரம் பேசி 3000 ரூபாய் பேக்கேஜை 2400'க்கு முடித்தேன். (அட, என்ன எனது சாமர்த்தியம் பார்த்தீர்களா!)
  மனைவியின் கேசத்தைக் கோதி விட்டுக் கொண்டிருந்த பெண்மணியின் தலை முடி அழகாக இருந்ததோடு கம கமவென ஒரு நறுமணமும் அதிலிருந்து வந்தது.
  ‘அட, நல்ல வாசனையாக இருக்கிறதே’, என்று அவளைப் பாராட்டினேன்.
  அவள் நன்றி தெரிவித்ததோடு, காலம் காலமாக அனைவரும் உபயோகித்து வரும் சம்பிரதாயமான எண்ணெயைத் தான் சூடத்தைக் கலந்து உபயோகித்து வருவதாகவும் அதனால் முடி நீண்டு அழகாக இருப்பதாகவும் தெரிவித்தாள்.

  2400 ரூபாய்க்கு பேரம் பேசிய என்னைப் பார்த்து என் மனைவி விழிக்க அவளைப் பார்த்து நான் விழித்தேன்.

  நெருங்கிய உறவினருக்கு பெரிய பண்ணை ஒன்று உண்டு. அதில் அயல்நாட்டு கறவைப் பசுக்கள் 150 ஐ அவர் வளர்த்து வந்தார். அவை தரும் பாலைக் கறந்து எடுத்து மெஷின்களில் வைத்துப் பாதுகாத்து வெளிச் சந்தையில் நல்ல விலைக்கு அவர் விற்று வந்தார். அதே பண்ணையில் தொலைவில் இரண்டு நமது உள்ளூர் பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. ‘அது எதற்காக’, என்று கேட்டேன்.
  அது குடும்பத்தினரின் உபயோகத்திற்குத் தேவைப்படும் நெய், பால் ஆகியவற்றிற்காக வளர்க்கப்படுவதாகவும் அதைத் தவிர வேறு எந்த நெய், பாலையும் தங்கள் குடும்பத்தினர் உபயோகிப்பதில்லை என்றும் அவர் சொன்னார்.
  பிராண்டட் மில்க் சாப்பிடுவோரை நினைத்துக் கொண்டே நமது தேசீயப் பசுக்களைக் கையெடுத்துக் கும்பிட்டேன்.
  ஒருநாள் மதிய உணவிற்குப் புகழ் பெற்ற உணவு விடுதிக்குக் குடும்பத்தோடு சென்றேன்.
  சாப்பிட்டு முடிந்தவுடன் பில்லை நீட்டிய மானேஜர், “சாப்பாடு எப்படி சார் இருந்தது? பசு நெய், சுத்தமான ஆயில், பாஸ்மதி அரிசி மட்டும் தான் நாங்கள் உபயோகிக்கிறோம். அடிக்கடி வாருங்கள்” என்று சொன்னார். அத்துடன் தன் கேபினுக்கு அழைத்து தனது விஸிடிங் கார்டையும் கொடுத்தார்.
  அங்கிருந்த டிபன் கேரியரை நான் பார்த்தேன். அப்போது ஹோட்டல் பணியாளர்கள் இருவர் தங்களுக்குள் பேசிக் கொண்டதையும் கேட்டேன்.
  “ரியாஸ் , ஓனரோட டிபன் பாக்ஸை எடுத்து தனியே வை. அவர் சாப்பிட வர இன்னும் பத்து நிமிடமாகும்”
  அவரைப் பார்த்து நான் கேட்டேன், “ஏன், உங்கள் ஓனர் இந்த ஹோட்டலிலேயே சாப்பிட மாட்டாரா?”
  “ஊஹூம்! ஒருபோதும் சாப்பிட மாட்டார். அவருக்கு வீட்டு சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும்!”
  என் கையில் இருந்த 1670 ரூபாய் பில்லைப் பார்த்தேன்.
  அது ‘ஙே’ என்று விழித்தது.
  அடடா, இது மாதிரி எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டு விட்டன.
  சில சமயம் சிரிப்பாய் இருக்கிறது; சில சமயம் சிந்திக்கவும் வைக்கிறது.

  இந்த மல்டி நேஷனல் கம்பெனிகளால் உருவாக்கப்பட்டு வாழ்கையை நடத்துபவர்களாக நாம் ஆகி விட்டோமா என்று தோன்றுகிறது.
  நம்மை ஏடிஎம் மெஷினாக அவர்கள் ஆக்கி விட்டார்கள். தேவைப்படும் போது நம்மிடமிருந்து பணத்தைப் பெருமளவில் கறக்கிறார்கள்.

  இதில் ரகசியம் என்னவென்றால் அவர்கள் விற்கும் பொருள்களை அவர்கள் ஒரு நாளும் நுகர்வதில்லை; அவர்கள் குடும்பத்தினருக்கோ அதைக் காண்பிப்பது கூட இல்லை.

  நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தோமானால் நமக்கு செலவுக்குச் செலவும் மிச்சம்.
  ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் அற்புதமாக நிலைத்து நீடித்திருக்கும்.

  நன்றி வாட்ஸ் ஃப்
   
  vidhyalakshmid likes this.
 2. jayasala42

  jayasala42 IL Hall of Fame

  Messages:
  5,255
  Likes Received:
  10,382
  Trophy Points:
  438
  Gender:
  Female
  Dear Shri Thyagarajan Sir,
  Thank you for reciting so many instances as to how we are fooled by the business world and are immersed into a pool of '‘ஙே’
  This expression of of our foolish looks seems to be of recent origin.
  The letter ' ங ' reminds us of so many other things

  ' ங 'போல் வளை
  இது ஔவையாரின் கூற்று.
  இந்த எழுத்து சொல்லின் முதலிலோ கடைசியிலோ
  வராத போதிலும் மற்ற எழுத்துக்களைத் தன்னோடு
  அரவணைத்துப் பொருள் தருகிறது .
  இது வணங்கும் தோற்றத்தில் உள்ள ஒரே எழுத்து.
  ங கற்றுத் தரும் பாடம்
  1 .உடல் நன்றாக வளைந்து கொடுக்கும் அளவுக்கு உடல் நலம் இருக்க வேண்டும்.
  2 .இந்த எழுத்து தனியே வராது.ங் என்ற மெய் எழுத்துடன் இணைந்தே இருக்கும்.அனைவருடன் ஒற்றுமையுடன் இருக்கும் உயர்வை உணர்த்துகிறது.
  3 .ங எப்படி மேலும் கீழும் வளைந்துள்ளதோ ,அது போல நீ வாழ்வில் நிமிர்ந்தும் வளைந்தும் இருக்க வேண்டும்.கௌரவத்தை விட்டுக் கொடுக்காமலும்,அது அஹங்காரமாக,பிடிவாதமாக மாறி விடாமல் வளைந்து
  கொடுத்தும் வாழ வேண்டும்.
  4 .நீ வளைந்து உன் இனத்தைக் காப்பாற்று .
  பல்லவர் கால கல்வெட்டுகளில் உள்ள ங என்ற எழுத்து ரிஷபத்தின் முகம் மற்றும் மேல் பகுதி போல் உள்ளது. எனவே பல்லவ காலத்தைச் சேர்ந்த
  திருநாவுக்கரசர் ,நந்தியை ங வடிவில் காண்கிறார்.
  சிவனின் வாகனமான நந்திகேஸ்வரர் 'ங' போல் வளைந்து பணிவன்புடன் உலக உயிர்களை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும் என்பது மக்களின் பிரார்த்தனை.

  Arunachaleswarar
  [​IMG] Arunachaleswarar on Adhikara Nandi Vahana


  The temple at Thiruvur, today known as Tirur,

  there are two Adhikara Nandis belonging to recent times, holding deer and axe, signifying the deer symbolism throughout the temple.

  [​IMG]
  Adhikara Nandi as Dwarapalakas outside the Tiruvur temple


  There is athikara nandhi in velleeswarn koil, Mylapore .In some temples there is a special sannithi for nandhi and his consort.

  " Gomukeswara snatched away all the four vedas from Brahma and kept them hidden under the ocean.In the absence of vedas ,Dharma failed on earth and Adharma began to rule over.At that time,Dharma escaped from vedas, took the form of a bramachari and worshipped Lord Siva in Thiruvaavaduthurai .Pleased with the worship, Siva transformed the brahmachari into a white Rishaba and made it his vaahana.
  Rishabam is Dharma incarnate"
  என்று ஆவடுதுறை தல புராணம் கூறுகிறது.
  எனவே 'ங ' நந்தி உருவம் .
  நந்தி தர்ம ஸ்வரூபம் .'ங' வை 'தர்மத்தை போதிக்கும் ஆசிரியர் 'என்று கொள்வதில் வியப்பேதும் இல்லை .

  We can better think of Dharma than being reminded of our being fooled.,while thinking of 'ங'

  Jayasala42
   
  vidhyalakshmid likes this.

Share This Page