1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோலம்... எத்தனைக் கோலமடி !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, May 16, 2015.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    இருள் பிரியா விடியலிலே
    விரியும் வாசல் மாக்கோலம் !

    காலாற நடக்கின்ற
    சோலையெல்லாம் பூக்கோலம் !

    வாடைக்காற்று வீசுகின்ற
    ஓடை எல்லாம் நீர்க்கோலம் !

    கீழ்வானம் சிவக்க வரும்
    வாழ்வருளும் கதிர்க்கோலம் !

    தாகமது தீர்த்திடவே
    மேகம் கொட்டும் மழைக்கோலம் !

    தென்றல் தவழ் வேளையிலே
    மன்றல் எங்கும் சுகக்கோலம் !

    அலைகடலின் ஆழத்திலே
    நிலை கொள்ளும் அமைதிக்கோலம் !

    வசந்தம் வீசையிலே
    இந்த பூமியெல்லாம் புதுக்கோலம் !

    எண்ணிப் பார்க்கையிலே ,
    மனிதன் வாழ்க்கையிலே ,

    இறைவன் போட்டுவைத்தான்
    நிறைவான காலக்கோலம் !

    கொஞ்சிச் சிரிக்கும்
    பிஞ்சின் கன்னக்குழிக்கோலம் !

    பள்ளிப் பருவத்தில் சுகம்
    அள்ளுகின்ற இன்பக்கோலம் !

    இளமைப் பருவத்திலோ
    காளை நெஞ்சின் குறும்புக்கோலம் !


    காதல் வயப்படுகையிலே ,
    மோதும் விழி நாணக்கோலம் !

    கனவுகள் வளர்த்தபடி
    கன்னி காணும் மணக்கோலம் !

    தாய்மையுற்ற நேரத்திலே
    வாய்க்கும் கைக்கு வளைக்கோலம் !

    தொண்டு செய் பருவத்தில்
    நீண்டதொரு கடமைக்கோலம் !

    ஓய்வான முதுமையிலே
    சாய்வு தேடும் தோள் கோலம் !

    அமைதி தேடும் நேரத்தில்
    அமைந்து விடும் தவக்கோலம் !

    ஆட்டமெலாம் முடிந்து உயிர்
    ஓட்டம் விடும் நிறைவுக்கோலம் !

    காலம் நமக்குத் தரும் கோலம் அனைத்திலுமே,
    சீலமாய் வாழ்ந்திட்டால் ,ஞாலப் புகழ் பெறலாம் !
     
    6 people like this.
    Loading...

  2. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ஆஹா எத்தனை விதமான கோலங்கள் .மனதை கொள்ளை கொள்ளும் அழகிய கோலம் .நேர் புள்ளியோ ஊடு புள்ளியோ இணைக்கும் விதமாக இணைத்து விட்டால் நேர்த்தியான கோலம் பளிச்சிடும் .வார்த்தை புள்ளிகளை நேர்த்தியாக அமைத்து அழகிய கோலம் படைத்து விட்டீர்கள் பவித்ரா
     
    1 person likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    "நேர்"மைக் கோலமது கலைந்துவிட்டால் மனமெல்லாம் அலங்கோலம் ...
    "ஊடு"ருவும் அன்புக்கோலம் தான் வாழ்வின் ஆதாரக்கோலம் !!

    நன்றி @periamma ,

    என்றும் அன்புடன்,

    பவித்ரா
     
    1 person likes this.
  4. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Hi @PavithraS,

    Beautiful and lovely.:clap
     
  5. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @Harini73 ,

    Thank you !:thankyou2:

    Regards,

    Pavithra
     
  6. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Wah reh wah what a talent, so beautiful, lovely lines written in lovely tamil, I wish I could write like you in tamil. Last lines some words are new to me can you help me knowing the meaning. Keep posting ! I'm enjoying reading all of your poems!
     
  7. ayyasamy1944

    ayyasamy1944 Silver IL'ite

    Messages:
    250
    Likes Received:
    237
    Trophy Points:
    93
    Gender:
    Male
  8. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    @ayyasamy1944 ,

    :thankyou2:


    @Poetlatha ,

    Thank you . Seelam means ozhukkam and here I used it to denote living with principle and Gnaalam means world. Is this is what you meant ?

    Regards,

    Pavithra
     
  9. Poetlatha

    Poetlatha Platinum IL'ite

    Messages:
    1,058
    Likes Received:
    1,944
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Yes Pavithra thank you for the prompt response! Azhagiya tamizhil yennama Kavidhai mazhai pozhighirirghal! Thanks again for conveying the meaning.
     

Share This Page