1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோதையின் கீதை (20) முப்பத்து மூவர் !

Discussion in 'Regional Poetry' started by PavithraS, Dec 4, 2016.

  1. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    20) ஆண்டாள் பாடல் ( இந்தப் பாசுரமும் மார்கழி நோன்பிற்கு நப்பின்னை கண்ணன் இருவரையும் ஒரு சேர, உறக்கம் விட்டு எழுமாறு விண்ணப்பித்தல் )

    முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
    கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
    செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
    வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
    செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
    நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
    உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
    இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்


    பாசுரப் பொருளுரை


    "(கண்ணனை எழுப்புதல்) தேவர் கூட்டத்தையும், அவர்களூக்குத் தலைவர்களாக விளங்கும் முப்பத்து மூன்று தேவர்களையும், இடர்கள் நெருங்குவதற்கு முன்னமே, அவர்கள் அச்சத்தை விலக்கி, காத்தருளும் நாயகனே கண்ணா! கண் விழிப்பாயாக! எடுத்த காரியத்தை நிறைவுறச் செய்பவனே! குற்றமில்லாதவனே! மிக்க வலிமை பொருந்தியவனே! எங்கும் நிறைந்தவனே! பகைவருக்கு துன்பங்களைக் கொடுப்பவனே! உறக்கம் விட்டு எழுவாயாக!
    (நப்பின்னையை எழுப்புதல் )கவிழ்த்த செப்பைப் போன்ற மென்மையான மார்பகங்களையும், சிவந்த உதடுகளைக் கொண்ட வாயையும், மெல்லிய இடையையும் உடைய நப்பின்னை பிராட்டியே! திருமகளைப் போன்றவளே! துயில் விட்டெழுவாய்! எங்கள் நோன்புக்குத் தேவையான ஆலவட்டத்தையும்(விசிறியையும்) கண்ணாடியையும் வழங்கி, உன் கணவனான கண்ணனையும் எங்களுடன் அனுப்பி, நாங்கள் நோன்பு நீராட வழி செய்வாயாக!"

    பாசுரக் குறிப்பு

    இப்பாசுரத்திலும் புருஷகார தத்துவத்தின் அடிப்படையில் , நப்பினையையும், கண்ணனையும் சேர்த்துத் துயில் எழுப்புவதாக வருகிறது. சென்ற பாசுரத்தில் உனக்குத் தத்துவமன்று, தகாது என்றெல்லாம் கடிந்து கொண்டார்களல்லவா ? இங்கே நைச்சியமாகப் பேசி, அவள் அழகிய சொரூபத்தைப் போற்றிப் பணிந்து, புருஷகாரம் செய்யச் சொல்லி விண்ணப்பிக்கிறாள்,ஆண்டாள் !நப்பின்னையை எழுப்பும் 3 பாசுரங்களில்(18,19,20) இது இறுதிப் பாசுரம். 5 X 5 + 5 இல் இது நான்காம் ஐந்தின் இறுதிப் பாசுரமாகும்.

    மேலும் ஓர் செய்தி. 'அம்பரமே' எனத் தொடங்கும் 17 ஆம் பாசுரத்தில் முதலெழுத்து ' 'காரம். 'உந்து மத' எனத் தொடங்கும் 18 ஆம் பாசுரத்தின் முதலெழுத்து ''காரம். 'முப்பத்துமூவர்' எனத் தொடங்கும் 20 ஆம் பாசுரத்தில், இந்தப் பாசுரம், முதலெழுத்து 'ம'காரம். இந்த மூன்று எழுத்துகளும் , 'அ'காரம் +'உ'காரம் +'ம'காரம் ,சேர்ந்தால் வருவதே ப்ரணவம் . நடுவில் வரும் 19 ஆம் பாசுரம் 'குத்துவிளக்கெரிய' அதன் முதலெழுத்து 'கு' இது வினையையும் பெயரையும் இணைக்கும் வேற்றுமை உருபு. எனவே 17,18,20 ஆகிய பாசுரங்களை இணைக்கும் பாசுரம் 19. இவை நான்கும் ஒன்றோடொன்று தொடர்புடைய வகையில் அமைந்து ப்ரணவத்தைக் குறித்தன. தமிழின் சிறப்பும், ஆண்டாளின் திறமையும் ஓங்கி விளங்கும் இடங்களில் இவையும் ஒன்று!

    அர்த்த பஞ்சகத்தின் கீழ் வரும் இந்த மூன்று பாசுரங்கள் 18,19,20, இவை ஜீவாத்ம நிலையானது , புருஷகாரத்தை முன்னிட்டுச் சரணடைதல் பற்றிச் சொல்கின்றன. பரந்தாமனுடைய உயரிய குணங்களைப் பாடி, ஸ்ரீதேவி பூதேவி,நீளா தேவியின் மொத்த உருவாக விளங்கும் திருமகளுடைய பரிபூர்ண அழகினைப் பாடி, இருவரும் அடியார் மீது பொழியும் கருணையினைச் சொல்லி, சரணாகதம் செய்பவருக்கு வழி காட்டியும், வீடுபேறு அளித்தும் அருளிடுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்ளுதல். இறைவனும் இறைவியும் அடியாருக்கு அருள் செய்யக் காத்துக் கிடக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது எல்லாம் அவர்களைப் பணிந்து சரணம் செய்தலே எனும் கருத்தை வைணவ நெறியாளர்கள் விளக்குகிறார்கள்.
     
    periamma likes this.
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    பதார்த்தம்- சொற்பொருள்

    கணத்தில் சென்று அழைக்கும் முன்னே
    வானோர் நடுக்கம் தீர்க்கும் தலைவனே !
    உனையேத் தொழுதோம்,உறக்கம் கலைவாய் !
    குணத்தில் நேர்மையும் திறமையும் உடையோய் !
    பணிந்தவுன் அடியார் தமக்குக் கொடுமை
    நினைப்போரை உன் பகையெனக் கொண்டு
    சினத்தின் தீயில் வாட்டும் இறைவனே !
    அஞ்ஞான இருள் நெருங்கா முதல்வனே !
    உனையேப் பணிந்தோம்,விழி திறந்திடுவாய் !
    நனிசெய் செப்பின் குடம் கவிழ்த்தாற்போல்
    புனித முலையும், சிவந்த மென்னிதழும்
    மணிகள் அணிந்த சிற்றிடை அழகும்
    அணியாய்ப் பெற்ற நப்பின்னை தேவி,
    உன்னைப் பணிந்தோம் திருவிழி திறவாய் !
    தண்ணெனக் காற்றினை வீசிட விசிறியும்,
    புனை அலங்காரங்கள் செய்திட ஆடியும்,
    நோன்பினை நோற்கும் எமக்குத் தருவாய் !
    இணைபிரியா உன் நாதனை நாங்களும்
    துணையென அடைந்து நீராடி மகிழ்ந்திட
    கணவனை எழுப்பி அருள் புரிந்திடுவாய் !

    முப்பத்து மூவர் அமரர்- 8 வசுக்கள் 11 உருத்திரர்கள் 12 ஆதித்தியர்கள் 2 அஸ்வினித் தேவர்கள் . தேவர்களுக்கு எந்தத் துன்பம் வந்தாலும் காப்பாற்றச் சொல்லிப் பரந்தாமனைத் தானே நாடுவார்கள்? .
    முன் சென்று- அவர்கள் உதவி எனக் கேட்கும் முன்னமே அருள்வது. தேவர்களது துயர் துடைப்பவனே, எங்கள் குரல் கேட்டு உறக்கம் தவிர்த்து எழுந்திராய் ! எங்களுக்கு அமரரைப் போல் செல்வநிலை வேண்டாம். உன் பக்தர்களான எங்களுக்கு பயமும் இல்லை. உன் அருளொன்றே எங்களுக்கு வேண்டும்.

    அமரர் என்றால் மரணமற்றவர்கள். ஆயினும் அவர்கள் தமது உடமைப் பொருட்கள் அரக்கரால் கவரப்படும் போது அச்சத்துடன் இறைவனை நாடி, அவனை போரில் முன்னிறுத்தி, கூரிய ஆயுதங்களை எதிர்கொள்ளச் செய்வார்கள் ! இருப்பதை வைத்துத் திருப்திப்படாதவர்கள் இந்த அமரர் கூட்டத்தினர். எப்போதும் தாங்கள் சுகமாக இருப்பதையே விரும்புபவர்கள். ஆண்டவனையே தாங்கள் விரும்பவேண்டிய பொருளாகக் கருதாமல், அமுதத்திற்காக அலைபவர்கள்.ஆனால் ஆயர்குலப் பெண்கள், கண்ணனுக்குத் தொண்டு செய்யவே எண்ணுபவர்கள். ஆகவே தேவர்களுக்கு உதவுவதைக் காட்டிலும் எங்களுக்கு அருள் செய்யத் துயிலெழுவாய் என்கிறாள், ஆண்டாள் !

    "வீரமுடைய ஆண்களாம் தேவரைக் காப்பதற்கு,அவர்கள் கூப்பிட்டக் குரலுக்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறாயே ! நாங்களோ அபலைப் பெண்கள்! எங்களுடைய இரைஞ்சுதலுக்கு இரங்கி வரமாட்டாயா கண்ணா ?" என்று கேட்கிறாள். எங்களுக்கு ஏதேனும் துயர் வந்தால் நாங்களும் தேவர்களைக் காப்பாற்றும் படி வேண்டமாட்டோம் ! இறைவா நலம் தரும் சொல்லாம் நாராயண ஒலியை நாங்கள் கண்டுகொண்டோம் ! அதுவொன்றே எங்கள் துன்பத்தைத் தவிர்த்தும், தீர்த்தும், எங்களது மனநடுக்கத்தைப் போக்கிவிடும் என்று நாங்கள் திடமாக நம்புகிறோம் . ஆகவே எங்களுக்கு அருள் செய்வாய் !

    கப்பம்- வடமொழிச் சொல்லான கம்பனம் என்ற சொல்லிலிருந்து தமிழுக்கு வந்தது. பொருள், நடுக்கம். இவ்விடம் மன நடுக்கம், அச்சம், குழப்பம்.இன்னொரு பொருள் திரை, வரி,வட்டி,காணிக்கை . ஒருவர் அச்சமின்றி வாழ இன்னொருவர் தரும் பாதுகாப்பிற்கு வரியாக, திறையாக செலுத்தும் பொருள்'கப்பம்.நமக்குத் துன்பம் வராதபடி ஒருவர் நம்மைக் காத்தால் அவருக்குப் பிரதிபலனாக நாம் தருகின்ற சன்மானமே கப்பம். அல்லது ஒருவரால் நமக்குத் துன்பம் வராதபடியிருக்க நாம் முன்னமே அவருக்கு அளிக்கும் கையூட்டு. ஆகமொத்தம் கட்டாயப்படுத்தப்படும் முறையில் நடக்கும் பொருள் பரிவர்த்தனை.

    தவிர்த்து - இறைவன் அடியார்களைக் காப்பாற்ற எவ்வித பிரதிபலனும் கேட்பதில்லை. கலி - ஒலியெனப் பொருள் படும். இங்கே ஒலியாவது மூலமந்திரமாகிய எட்டெழுத்து மந்திரமே ! அரக்கர்களால் தேவர்களுக்கு அச்சமும்,மனக்கலக்கமும் வரும்போதெல்லாம் " நாராயணா காப்பாற்று!" என்று வைகுண்டத்தில் முறையிட ஓடுவார்களல்லவா ? அவனோ, அந்தத் துன்பம் கூட அவர்களுக்கு வருமுன்பே மனநடுக்கத்தைப் போக்குவானாம். இதற்காக அவர்களொன்றும் இறைவனுக்குக் கைமாறு செய்ய வேண்டாமாம். நான் உன்னைக் காப்பாற்றினேன், எனக்கு இதைக் கொடு என்று கேட்கும் எண்ணமில்லாதவன் அல்லவா இறைவன் ? நாம் தான் அவனிடம் வியாபாரம் பேசுகிறோம். எனக்கு இன்னின்னது வேண்டும். அவ்வாறு செய்தால் இதைக் காணிக்கையாக்குகிறேன், அதைச் செய்கிறேன் என்றெல்லாம் கீழ்மையாய்ப் போகிறோம். இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றுதான். தூய்மையான உள்ளத்தில் அன்போடு அவனை நம்புதல் மட்டுமே.

    செப்பம்-
    வழுவாத நேர்மை,நடுவு நிலைமையை உடையவன் . பிரம்மா விஷ்ணு சிவன் என்ற மும்மூர்த்தியிலும் நடுவில் நிற்பவன் அவனே ! விருப்பும் வெறுப்புமின்றி நடுநிலையோடு ஆராய்ந்து அருள் செய்பவனும் அவனே ! எந்தக் குறையும் சொல்லமுடியாத நிறைவுடையவன். பூர்ணமானவன். குணபரிபூரணன்.

    திறல் - திறமையுடையவன்,வலிமையுடையவன் , துணிவுடையவன் , வெற்றியுடையவன்,ஒளிமயமானவன் என்றெல்லாம் பொருளுண்டு.

    செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா
    - செற்றார்- பகைவர், இவ்விடம் இறையடியார்க்குத் தீங்கு எண்ணுபவர். இறைவன் கருணையே வடிவானவனாக இருந்தாலும், விருப்பு வெறுப்பற்றவனாக இருந்தாலும்,தானே விரும்பி எவருக்கும் தீங்கிழைக்காதவனாக இருந்தாலும், தன்னுடைய அடியவருக்குத் தீங்கு எண்ணுபவர்களைத் தன்னுடைய பகைவராகவே எண்ணுவான். அவர்களைக் கட்டாயம் தண்டிப்பான்.

    விமலன்- அஞ்ஞானம் நெருங்க முடியாதவன். மலம் என்றால் குற்றம். விமலன்- அவன் குற்றங்கள் அற்றவன் – விபீஷண சரணாகதியின் போது, அங்கே இருந்த சுக்ரீவன் முதலானவர்கள் எல்லோரும் தடுக்க, இராமன் சொல்கிறான் – அந்த இராவணனே என்னிடம் சரணடைய வந்தாலும் அபயம் தருவேன் என்று . அதுவே அவனது பெருந்தன்மைக்குச் சான்று !

    செப்பன்ன மென்முலை- செப்புக்குடங்களைக் கவிழ்த்தாற்போன்ற மார்பகங்கள்.சிறு மருங்குல்-சிற்றிடை. நப்பின்னை, நங்காய், திருவே = நீளா, பூ, ஸ்ரீ - தேவிகளின் உருவே! இறைவனோடு என்றும் பின்தொடர்ந்திருப்பவள் (நம்பியைப் பின் தொடரும் நப்பின்னை, நீளாதேவி ), எவ்வளவோ குற்றம் குறைகளோடு பாவங்கள் புரியும் சீவன்களையும் கருணையோடு தாங்கும் பொறுமை நிரம்பிய பெண் பூமா தேவி (நல்ல குணமுள்ள மங்கை-நங்கை) இறைவனுக்குச் சொன்ன அனைத்து குணநலங்களும் நிரம்பப்பெற்ற செல்வத்திருமகள், (திரு)பிராட்டி- இவர்களின் மொத்த உருவாக இருப்பவள், நப்பின்னையாகிய மஹாலக்ஷ்மி !

    செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்- இவையெல்லாம் தாம்பத்திய அந்நியோன்யத்தைக் குறிக்கும் சொல்லாடல்கள். விரசமாக எடுத்துக் கொள்வது, அவரவர் மனவிகாரத்தினால் தான்.

    உக்கமும் தட்டொளியும் - நோன்புக்கு வேண்டிய விசிறி, கண்ணாடி,பெருமாள் கோவிலில் அவருக்கு திரு ஆல வட்டம் என்னும் சாமரம் வீசுவார்கள். 16 வித உபச்சாரங்களில் தட்டொளியும் (கண்ணாடியும் ) காண்பிப்பார்கள்.அடியார்கள் திருமண் இட்டுக்கொள்ளும்போது பார்ப்பதற்குக் கண்ணாடி, அது அழியாமல் இருப்பதற்கு ஈரப்பதம் போக்க விசிறி. இதையே சிறுபெண்கள் அலங்காரம் செய்து கொள்ளக் கேட்பது போல் கேட்கிறாள் ஆண்டாள் !

    உக்கமும் தந்து, தட்டொளியும் தந்து, உன் மணாளனையும் தந்து’
    என்று பெரியோர்கள் பொருள் சொல்கிறார்கள். இது மனித உறவாக இருந்தால், மனைவியிடமே கணவனைக் கொடு என்று ஒரிருவரல்ல, ஐந்து லட்சம் கோபிகைகளும் போய் நின்று கேட்க முடியுமா ? இது தெய்வீக சம்பந்தம். எல்லோருக்கும் துளி எடுத்துக் கொடுத்தாலும் அப்போதும் அது பூரணமாக இருக்கும் . கொழுக்கட்டைக்குக் கிளறிய பூரணத்தைக் கிள்ளி சிறிதெடுத்துக் கொடுத்தாலும் அதுவும் இனிக்கும், மீதமுள்ள பூரணமும் இனிக்குமன்றோ ? அது போன்றே இறைவனும், எல்லோரும் பங்கிட்டுக் கொண்டாலும் தன்னுடைய நிலைக்கு குறைவற்றப் பூரணன் !

    உன் மணாளனை
    -கண்ணனாகிய பரந்தாமனை , எம்மை நீராட்ட ஏல் - எங்களுக்கு அருள் செய்ய அனுப்பு. கோபியர்களோடு இராஸக்ரீடை செய்தவன் தானே இந்தக் கண்ணன் ! ஆகவே தான் ஆண்டாள், நப்பின்னையிடம் நீராட அனுப்புமாறு குறும்பாகக் கேட்கிறாள் ! மார்கழி நீராடுவது தானே இவர்களது குறிக்கோளே ? அதற்குத்தான் கண்ணனை அனுப்பி எங்களை நீராட்டச் செய் என்கிறாள். ஆண்டாள் சொல்லும் நீராட்டமே இறைவனோடு கலந்து வீடுபேறு அடைவது தானே !
     
    periamma likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    தத்வார்த்தம்- உட்பொருள்

    நோவாய்த் தாக்கும் பாவங்கள் அழித்துக்
    காவல் செய்யுங்கள் என்றே நாங்களும்
    சாவா வரத்தால் என்றைக்கும் வாழ்கின்ற
    மூவா தேவர்கள் முப்பத்து மூவர்களை
    ஆவென்றலறி பாதம் பணிய கில்லாம் !
    காவல் செய்கின்ற அருட் பெருங்கடலே !
    தேவரை எண்ணோம் நாங்கள் உன்னையே
    ஆவலாய்ப் பணிந்து அடி கிடக்கின்றோம் !
    தேவாதிதேவா உமக்கே சரண் செய்தோம் !
    ஆவினங் காக்குமுன் நாமமே நாளும்
    கூவிக் கிடக்கின்றோம் -பிறவிப் பிணியின் .
    பாவங்கள் சேர்ந்து வாட்டும் முன்னமே
    காவல் தந்தெமை ஆட்கொள்ள வருவாய் !
    மாவலிமை கொண்டு, நேர்மையும் நிரம்பி,
    மூவுலகும் காக்கும் பெருந்திறன் உடையோய் !
    தூவென உன்னைத் தூற்றுவோர் தம்மையும்
    போவென மன்னிக்கும் அருங்குண இறையோய் !
    பாவனர் அடியார் துடித்திடும் வகையில்
    தீவினைப் புரிந்துத் துன்பம் விளைத்திடும்
    யாவராயினும் உன் பகையெனக் கொண்டு,
    அவரையுன் சினமெனும் தீயினால் சுடுவோய் !
    யாவரையும் ஒரே பார்வையில் நோக்கிடும்
    பாவனை உடையோய்,பணிந்தவர்க் கினியோய் !
    தீவினை புரிகின்ற பகைவர்க்குக் கூற்றோய் !
    எவ்விதமும் குறை நெருங்கா இறையோய் !
    தூவிமலர்க் கொண்டு தொழுகின்ற அடியார்
    பாவங்கள் நீங்கிட அருள்செய வேண்டும் !
    தூவெண் நிறமோடு தோன்றிய திருவே !
    அவயத்தில் அழகுகள் பொருந்திய தேவி ! .
    புவனத்தின் நாயகி பூமிபிராட்டி-தேவியர் !
    மூவரும் ஒன்றாய்க் கலந்திட்ட உருவே !
    அவல குணங்கள் மாற்றிடும் இறைவி !
    மாவெனும் பெயரால் விளங்கிடும் தாயே !
    ஆவினைக் கன்றுகள் நாடுமாற் போலே,
    கேவியழுது உந்தன் திருவடி புகுமெங்கள்
    பாவங்கள் தம்மைத் தீர்த்திட வேண்டும் !
    பாவியோம் எங்களைப் பிணியில் ஆழ்த்தும்
    மாவிருள் அகந்தையும் மமதையும் போக்கி,
    மேவிடும் உந்தன் அருளொளிப் பாய்ச்சித்
    தாவெனக் கேட்டோம் இரக்கம் கொள்வாய் !
    ஆவினம் எங்களைக் காக்கும் கண்ணன்
    கோவலன் அவனது அருளென்னும் நீரில்
    பாவங்கள் தீரக் குளிப்பிக்கச் செய்வாய் !
    பாவிகள் நாங்கள் பரமனை எண்ணிப்
    பாவையெனும் சரணம் செய்தோம் -எங்கள்
    தேவையாம் இறைப்பணி என்னும் பேற்றை
    தேவியே நீயும் அளித்திடச் சொல்வாய் !
     
  4. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று - சிறு தெய்வ வழிபாடு செய்வதினால் நன்மையில்லை. பரமனைப் பணிந்தால் உடனே அருள்வான் எனும் வைணவ நெறி

    கப்பம் தவிர்க்கும் கலியே
    - அச்சங்களை விலக்கி அபயமளிக்கும் பரமன். பரித்ராணாய சாதூனாம் வினாஸாயச துஷ்க்ருதாம் என்று கண்ணன் கீதையில் உரைத்தான். துஷ்டர்களை ஸம்ஹரிப்பதற்கும் சாதுக்களை ரக்ஷிப்பதற்கும் அவதாரம் செய்வேன் என்பது பொருள். இங்கும் "கப்பம் தவிர்க்கும்" என்றும் "செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் என்றும் ஆண்டாள் குறித்தது கண்ணன் உரைத்ததை பின்பற்றியே ஆகும்.

    கலியே துயில் எழாய்- இகவுலகாகிய சம்சாரத்திலிருந்து எங்களுக்கு விடுதலை கிடைக்கச் செய்வாய்,இறைவா ! இங்கே கலியே எனச் சொல்லுவது மூலமந்திரமாகிய எட்டெழுத்துத் திருமந்திரத்தை. இறைவனைத் துயிலெழச்செய்வதுடன், மிகவும் புதுமையாக அவனது திருநாமத்தையே துயிலெழாய் என்று பாடியவள் ஆண்டாள் !

    செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும்
    - அடியவருக்குத் துன்பம் தரும் பகைவர்களின் செருக்கை அழிப்பவன். தீயவர் தன் மீது கொள்ளும் பகைமையைக் கண்டு கோபம் கொள்ளாதவன்.

    செப்பமுடையாய்
    - நேர்மையான சொரூபம் கொண்டவன், வலிமை மிக்கவன். இனிமை, எளிமை, கருணை, தைரியம் என்று எண்ணற்ற குணங்களால் நிரம்பியவன் இறைவன்.

    திறலுடையாய் - எங்கும் நிறைந்த பரம்பொருள், சாதுரியம் மிக்கவன், உலக ரட்சகன். அணுவுக்குள் அணுவாக, பெரியவற்றுக்கும் மிகப்பெரியதாக இருக்கும் இறைவன், சாமான்யர்களுக்குக் கிட்டக்கூடிய நிலையிலிருக்கிறான். அதுவே சாமர்த்தியமாகிய திறல்!

    அமலன், விமலன், நிமலன், நிர்மலன் -- - இவையாவும் இறைவனின் நற்குணங்களாகும். விமலன் - எவ்வித குறைகளும் அற்றவன், நிர்மலன் - தன்னிடம் சரணடைந்தவரின் குறைகளை ஆராயத தன்மை கொண்டவன், அனைவரையும் சமமாக பாவிப்பவன்.நிமலன் - பகைவர்களுக்கு அச்சத்தைத் தருபவன், அமலன் - நம் தீவினைகளை அழிப்பவன்-

    நப்பின்னை, நங்காய், திருவே
    - நீளாதேவி, பூமி தேவி, ஸ்ரீதேவி- இவர்களனைவரும் தாயாரான மஹாலக்ஷ்மியின் உருவகங்களே. கிருஷ்ணாவதாரத்தில் நப்பின்னையே மூத்த தேவியாக இருப்பதால், அவளை முதலில் குறித்து அனைவரையும் புருஷகாரம் செய்யுமாறு வணங்குகிறாள் ஆண்டாள்
    செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்- புறவழகும் , அடியார்க்கு அருளும்அகவழகும் அனைத்தும் ஒருங்கே வாய்த்த பிராட்டியின் குணநலன்களை வர்ணித்தல்

    நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்-அன்னை மஹாலக்ஷ்மியென்று பெயரோடு இருக்கும் நீ, அவளுக்கே உரிய கருணையோடு எங்களுக்கு அருள் செய்

    உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோரெம்பாவாய் - அகங்கார மமகாரங்களை நீக்கி மெய்ஞானத்தை அருளி,அடியார் மீது கருணை கொண்டு, பரமனிடம், எடுத்துச் சொல்லி (புருஷகாரம் )உடனே வீடுபேறு அருளச் செய்வாய். உன் மணாளனை எங்களிடம் கொடுத்து விடு என்கிறாள். அது பகவானிடம் பிராட்டிக்கு உள்ள உரிமையையும் எடுத்துக்காட்டுகிறது. சீவாத்மாக்களைப் பரந்தாமனிடம் சேர்ப்பிக்கவும், பரந்தாமனை சீவர்களிடம் சேர்ப்பிக்கவும் செய்யும் சக்தி வாய்த்தவள் பிராட்டியே !

    உக்கம் என்பது விசிறி, தட்டொளி என்பது முகம் பார்க்கும் கண்ணாடி. ஒன்று இறைப்பணியாகிய கைங்கர்யத்திற்கு. ஒன்று தமது சுயரூபத்தைப் பார்த்துக்கொள்ளுவதற்கு. நம்மை உணர்ந்துகொள்ளக் கூடிய ஞானத்தையும், அதன் மூலம் கைங்கர்யத்தையும் பிராட்டியிடம் கேட்டுப் பெற்று இறைவனை அடைவதே வீடுபேறு.
     
    periamma likes this.
  5. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நீராட்டம் என்றால் என்பதன் விளக்கம் இப்பாடலில் காண்கிறோம்.நீராட்டம் என்பது பகவத் கைங்கர்யம்.,

    முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று---இந்த பாசுரம் கஜேந்திர மோக்ஷத்தைக் குறிக்கும்.வருணன், இந்திரன், ப்ரம்ம, சிவன் போன்ற முப்பத்து முக்கோடி தேவதைகளும் கை விட்ட போது 'நானே ஆதி மூலம்' என்று அனைவருக்கும் முன்னே சென்று காப்பற்றினான் பரந்தாமன்.
    அர்ஜுனனின் தேர்த்தட்டில் சாரதியாய் முன்னே நிற்கிறான்.

    வெப்பம் கொடுக்கும் விமலா--
    பெருமாளின் 4 நாமங்கள்;-
    அமலன், விமலன்,நிமலன், நிர்மலன்.

    அமலன்: பாவங்களை அழிப்பவன்
    விமலன்:-அஞ்ஞானம் என்ற தோஷம் அற்றவன்
    நிமலன் :-விரோதிகளால் நெருங்க முடியாதவன்
    நிர்மலன்:-தன்னை ஆண்டும் அடியார்களிடம் குறை காணாதவன்

    இந்த பாசுரத்துடன் நப்பின்னையை எழுப்புதல் முடிவடைகிறது.இனி பவித்ரா தயவில் கண்ணனைக் காண வேண்டியது தான்.

    Jayasala 42
     
    periamma likes this.
  6. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female

    In pasurams like undhumadhal kalittran , kutthuvilakkeriya and Mupaththu moovar etc.( paasurams 18, 19 and 20)the direct meaning is erotic.Shringara rasa is topping the verses. No doubt it is one of the nine rasas.The question is: why does one have to visualise the Lord as one immersed in sensual pleasures like ordinary mortals and then go to such lengths to find another hidden meaning in such verses. Andal need not have used words to kindle sensuous feelings and made the commentators to travel extra miles to give spiritual explanations to words exhibiting plain Shringara in so clear a term.

    When this question is placed, many Vaishnavite scholars get shocked or seem to be insulted or they may take that it is an insult to Andal.

    Even great devotees tend to get such doubts.Even while Thiruppaavai conference was taking place in Srirangam, such controversial discussions were taking place in another vidvat sabha consisting of educated vaishnavites.I myself have attended and participated in such discussions during my college days.

    These questions need not be set aside as those of non believers.
    Actually all these episodes are based on Bhagavatham and Parikshit had the same doubt and Sukha gives a reply. you see, there are various kinds of bhakthi and one of them is madhurabhakthi or loving lord as one's lover. There is nothing erotic about it. The rasa of sringara is said to be the Rasa Raja merely because physical love is understood by all and it is quite beautiful if you look at it without sexual implications.That is why there are so many sculptures in the temples which a superficial on looker like a westerner calls erotic.

    Jayadeva"s ashtapadi is full of sringara and he was the greatest bhaktha.( It is anthar bhakthi and bahir Shringara-Romance outside and bhakthi inside) So were the azhvars like nammazvar whom nobody can call sensuous because he was in samadhi since his birth and never lead worldly life . He also wrote verses in his Thiruvaimozi, which is held as the essence of the vedas , imagining himself in the nayakibhava .

    Whether Andal was a man or a woman has to be settled only through the legends we have that she is the daughter of Periazvar ,the great bhaktha.Many feel that such erotic descriptions could not have been used by a girl, that too aged 10 and evidently Andal should have been a male.

    But the authorship is only secondary in any literary work and the contents are more important.In ancient days the physical expression of love was taken as natural and not condemned as in the other religions. But it is sublimated by turning it towards the lord. Loving Bhagavan who is the inner self of all is not illicit love and the experience is expressed in terms of everyday's real life so that it is easily understood.

    Looked upon in this manner, one would find the description of the Lord as an ordinary lover as something beautiful and not erotic. we are at the carnal level and these great saints try to elevate us to the sublime level and it is our choice whether we want to be elevated or not. Actually it is said that unless one possesses this divine insight one should never approach the episode as Rasaleela of Krishna.Still the chapters on Rasaleela are supposed to be the soul of Shrimath Bhagavatham.
    Dear Pavitra, this piece of information I wanted to share because this is not something commented by street walkers and divine abusers but raised by pucca vaishnavaites of high calibre and professors well versed in Tamil, Sanskrit and deep knowledge of vaishnavism.Whenever we analyse a poetic work we have to accept the criticisms and appreciations on a balanced scale.

    I feel that it is not correct to conclude that the scholars who hold the view that certain passages are erotic have'mana vikaaram'.We don't need a mirror to find out an injury on your hand.
    Spiritual process is a slow and steady process and there are likely to be such questions.Vedantha vicharam includes tharka sastra and nyaya sastra also.Prasnotthara ( Q& A) is a well recognized and accepted form of Vedantha studies.Even the great king Pareekshit had such doubts.
    I felt the need to mention about the debates while we have concluded paasuram 20.

    Don't mistake me for such interludes.This is a part of constructive criticism of literary epics and bhakthi kavyas and this was a subject of our study .
    Pavithra, proceed with'Etra kalangal and make us eligible to receive the blessings of Lord krishna.

    Jayasala 42
     
    periamma likes this.
  7. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,130
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Very nicely explained, Madam !

    I am very grateful for a scholar like you to shed light on so many aspects. Thank you very much.
     
    periamma likes this.

Share This Page