1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கோகுலத்தில் கண்ணன்-2!

Discussion in 'Posts in Regional Languages' started by deepa04, Sep 7, 2010.

  1. deepa04

    deepa04 Gold IL'ite

    Messages:
    3,652
    Likes Received:
    264
    Trophy Points:
    183
    Gender:
    Female
    பூதனா சம்ஹாரம்.
    கண்ணன் இருக்குமிடம் ,அறிந்து கொண்டான் கம்சன்,
    ஆட்டமும்,பாட்டுமாய் ஆயர் பாடி குதூகலிக்க ,ஒற்றர் படை சொல்லியது கண்ணனது வரவை.
    குழந்தை தனை யமனுலகம் அனுப்பிவைக்க, ஏவினான் பூதனையை.
    பூதனை,பெயருக்கேற்ற உருவம் கொண்ட அரக்கியவள் ,
    அழகான சுந்தரியாய்,கபட உரு கொண்டு,கோகுலத்தில் தான் புகுந்தாள்.
    பால் சுரக்கும் ,புண்ணிய தனங்களிலே விஷம் தடவி விரைந்திட்டாள்,
    கண்ணன் தனை காண வரும் மாது போல் ,அவனருகே அமர்திட்டாள்,
    யசோதையின் பாக்கியத்தை வாயார புகழ்ந்திட்டால் ,
    நேரம் செல்ல,செல்ல,ஒவ்வொருவராய் வெளி செல்ல,
    யாருமற்ற நேரத்திலே ,மாயவனை ஏந்திட்டால்,
    தன் விஷம் தோய்ந்த மார்பினின்று பால்தனை புகட்டிட்டாள்,
    பால் மட்டும் அருந்தும் பாலகனா இந்த மாயன்,
    பாலுடனே,உயிர் தனையும் சேர்த்து உறிஞ்சிட்டான் ,
    தன் உயிர் போவது உறுதி என அறிந்திட்ட பூதனை,
    குழந்தையென வந்த தன் காலன் தனை வீசி விட்டு,
    வீட்டை விட்டு வெளியேறி காடு புகுந்தாள்,
    தன் உயிர் போகும் வேளையிலே வேதனையில் வீறிட்டாள் ,
    வீழ்ந்த பின்னே,தன உருவம் பழையபடி மலை போல் பெற்றாள்,
    வினை விதைத்தவள் வினை அறுத்தாள்,
    நடந்த மாயம் அறியாத ஆயர் மக்கள் அதிர்ச்சியாய் உறைந்தனரே!
    ]ஆலிழையில் கிருஷ்ணன்,
    கிருஷ்ணன்,முற்றத்திலே உள்ள தூளியிலே சயனித்திருந்தான்,
    கை,காலை உதைக்கும் குழந்தை வடிவத்திலே,பொக்கை வாய் சிரிப்புடனே!
    விளையாட்டு செய்கையாய்,தன் கால் கட்டை விரல் தனை தூக்கி வாயினிலே வைத்தான்,
    ஆலிழையில் கிருஷ்ணன்,தன் கால் கட்டைவிரல் வாயில் வைத்தால் பிரளயம் வரும் என்பது கூற்று .
    கண்ணன் அவன் செய்கை கண்ட சிவனாரும் ,பிரளய காலம் வந்துற்றோ என நினைத்தார்,
    பிரம்மனும்,சரஸ்வதியும் இதன் பொருளை உணர்ந்தார்கள்,தேவரும் ஞானியரும் அதிர்ந்தார்கள்,
    கடல் அலை சீற்றமாய் ,வானம் வரை பொங்கியது,மேகங்கள் கடும் கர்ஜனை செய்தன,
    இவை யாவும் ,கண்ணன் அவன் ஒரு செய்கையின் விளைவென்பதை அறியார் ஆயர் பாடி மாந்தர்.
    காக அரக்கன்
    கம்சன் ஒருமுறை செய்த முயற்சியில் தோற்றுவிட்ட பின்,
    மறுமுறை காக்கை வடிவம் கொண்ட அரக்கனை ஏவிவிட்டான்,
    இதெல்லாம் சிறு பிள்ளை விளையாட்டு ,என கர்வம் கொண்ட காகணும் விரைந்திட்டான்,
    கோகுலத்தின் மேல், பறந்து வந்து நந்தரின் முற்ற மதிலினிலே அமர்ந்திட்டான் ,
    அப்பொழுது தான் உறங்கிட்ட மகனை விட்டு ,அன்னையவள் அகன்றிருக்க,
    இதுதான் தக்க சமயம் என இறங்கிட்ட அரக்கன், கண்ணன் அருகினிலே சென்று,
    கொத்துவதர்க்காய் குனிந்திட்டான் ,குனிந்தவனை,கையால் திருகிட்டான் மாயன்
    கண்ணன் தன் கையினால் திருகிட்ட காக்கை தனை திருப்பி அனுப்பிட்டார் கம்சனிடம்.
    காக அரக்கன்,அலறி துடித்தபடி ,விரந்திட்டான் மதுரா நகர் நோக்கி கம்சனிடம்.
    கோகுலத்தில் இருப்பது, மானிட குழந்தயன்று,தெய்வமே மனிதனாய் வந்தது,இனி,
    அதனிடம் நம் ஆட்டம் செல்லாது,நம்மினமே அவன் கையால் அழியும் என்றான் காகன்!
    கண்ணன் வளர்தல்
    யசோதையின் ஏக்கம்.
    அசுரர்களை,அரை நொடியில் சம்ஹாரம் செய்யும் மூர்த்தி அவன்,
    மூர்த்தி சிறிதாய் இருக்கும் போதே ,கீர்த்தி பல பெற்ற பெருமாள் அவன்,
    இத்துணையும் வாய்க்க,பெற்ற தன மகனை, அறியாத அன்னையவள்,
    தன மகன் என்று, பெரியவனாய் ஆவனோ,என ஏங்கி பெரு மூச்சொரிந்தால் ,
    முட்டிக்கால் மண்ணில் பட,கைதனை தரையில் ஊன்றி,நாலு கால் பாய்ச்சலாக,
    என்று என் மகன் இந்த இல்லம் தனில் தவழ்வானோ?
    மூவுலகும் தன் பாதத்தால் அளந்த பின்னே,மூன்றாம் பாதம் மகாபலி தலையில் வைத்தான்,
    இதை அறியா அன்னை நல்லாள்,தன் மகன்,என்று தத்தி,தத்தி நடப்பானோ என ஏக்கம் கொண்டாள்.
    உபதேசம் பலபல உதிர்த்த திரு வாய் திறந்து,கொஞ்சு மொழி மழலை சொல்லால் அம்மா என அழைப்பானோ?
    அதிசயங்கள் பல புரியும் பகவான்அவன்,கை கால் உதைத்து ,அழுதுப் புரண்டு அடம் செய்வானோ?
    அனைவருக்கும் ,படியளக்கும்,படி வாசன் அவன், என்று தன் பிஞ்சு கையால்,சோறு அள்ளி உண்பானோ?
    யாவையுமே,கற்பனையில் கண்டால் அன்னை,நிஜத்தில் அவை காணும்படி
    குப்புற விழுதல் ,
    மூன்று மாதம்,முடிந்த பின்னே,குப்புற விழுந்தான் கண்ணன்,
    இதை கண்டு,தேங்காய் தலை சுற்றி திருஷ்டி கழித்து உடைத்தால் அன்னை.
    வயிறு அமுங்கி,வாய் மூக்கு,தரையில் பட்டு அடிபடவே அழுதான்,கண்ணன்,
    தான் கற்ற ,முதல் வித்தை தன்னை விடாமல் பலமுறை முயன்றான் வண்ணன்,
    எத்தனை முறை,விழுந்த போதும் ,சலிக்காமல் திருப்பி விட்டால்,அன்னை.
    கண்ணன் அமுதுன்னல்
    ஆறு மாதம் முடிந்ததுவே,ஆனந்த கண்ணன் அவன் ஆயர் பாடி அடி வைத்து!
    அனைவருக்கும் படியளக்கும் மன்னன் அவன்,அவனுக்கும் அன்னமிட, தாயவள் நாள் குறித்தாலே!
    இப்புவியில் உள்ள மக்கள் தன் குழந்தைக்கு அன்னமிட குருவாயூர் சென்று அவன் சன்னதியில் ஊட்ட,
    அன்று அவன் அன்னை தன் மகனாம்,பரந்தமனுக்கே அன்னமிட அனைவரையும் அழைத்திட்டாள் ,
    கோகுலத்தின் கோபரும்,கோபியரும்,நந்தரில்லாம் வந்தனரே,மன்னன் அவன் புசித்து ,பசி தீர்க்க மகிழ்ந்தனரே!
    ஆனந்தமாய்,ஆட்டம் ஆடி,வாழ்த்து பாடி நந்த மைந்தனை கண்டு கழித்தனரே
    கண்ணன் தவழ்தல்
    முகுந்தன்,முன்னங்கால் மண்ணில் பட,கைகளை கூட்டி தவழ்கின்றான் ,
    நந்தர் தம் மாளிகையில்,செம்பொன் தூண்கள் சூழ் முற்றத்திலே,
    கைகளை முன்னால் வைத்து,கால்களை அதனுடன் கூட்டி தவழ்கின்றான்,
    தான் நகரும் அழகினை,தானே தூணில் கண்டு குதூகல குரல் எழுப்பி,
    மற்றொருவன் துணையாய் விளையாட கிடைத்தான் என்று களித்தான் ,
    எதிர் தவழ்ந்த ,தன் பிம்பம் நோக்கி,பால் பற்கள் தெரிய நகைத்தான்.
    தன் மகன், செய்கை கண்டு மனம் மகிழ்ந்த அன்னை புன்னகை பூத்தாள்.
    பரம்பொருளே,தரையினில் தவழ்ந்திட பூமித் தாயும் சிலிர்கின்றால் .
    உலகம் காட்டல்
    தவழ்ந்த கண்ணன் ,தவழ்ந்த படி, படி தனை தாண்டி மண்ணில் சென்று,
    தாய் காண பொழுதினிலே,ஒரு பிடி மண்ணை ,தன் வாயிலிட்டான்,
    தாய் யசோதையவள்,தன் மகனின் திருட்டுதனம் கண்டு கொண்டாள்.
    கம்பெடுத்து,வேகமாய் விரைந்து வந்து ,மகனை அதட்டி கேட்டாள்,
    ஆவென காட்டு,மண் அள்ளி வாயில் போட்டது உண்மைதானே என்று,
    தாயிடம்,ஏதும் அறியா பாலகனாய், கண்ணன் வாயை திறந்துக் காட்ட,
    அதனுள்ளே,முன்று உலகும் தெரிய,தாயும்,மகனும் சேர்ந்து தெரிய,
    தலை சுற்றி,கண்மூடி ,நாவரண்டு மூர்சையுற்றால் நந்தன் ராணி.
    கிருஷ்ண லீலைதனை ,வர்ணிக்க வார்த்தை தான் உண்டோ?
    நடை பயிலுதல்.
    அன்னையவள் யசோதை,தன் கண்மணிக்கு நடை பயிற்றுவிக்கிறாள்.
    முன்று உலகினையும் தன் முன்றே அடிகளினால் தாண்டியவன்.
    மகாபலியின் சிரசினிலே தன் பாதம் வைத்து பாதாளம் அனுப்பியவன்.
    இன்று,அன்னையவள் கைபிடித்து ஒரு ஒரு அடியாக நடை பயிலுகிறான்.
    வைக்கும் அடி தடுமாறி,கீழே விழுந்திடுவனோ,அதனால் புண்படுவனோ,
    என அன்னையவள் பரிதவித்து ,கண்ணன் அவன் கைபிடித்து நடத்துகிறாள்,
    தன் மைந்தன் முகம் கண்டு,ஆனந்த கூத்தாடும் அவள் தீமை அண்டாதிருக்க வேண்டுகிறாள்.
    யசோதை ,தத்தி தத்தி நடந்த மகன் நேர்நடை நடக்க கண்டு மகிழ்ச்சியுற்றாள் .
    தான் கண்ட காட்சியினை,தன் மனாளனுக்கும்,மற்றவருக்கும் காட்டுகிறாள்.
    தன் மூத்த மகன் பலராமனை அழைத்து, தம்பியுடன் விளையாட பணிக்கின்றால்.
    தயங்கி,தயங்கி நடை பயின்ற கண்ணன் முற்றம் வரை சென்று விட்டு திரும்புகிறான் .
    நிலை படியை தாண்ட ,முயன்று கீழே விழுந்து எழுந்தான் மூஉலகம் அளந்த பெருமாள்.
    தன் மகனின் முயற்சியினை கண்ணுற்ற தாயவள் ,கைபிடித்து படியிறங்க படிப்பித்தால் .
    யசோதையுடன் கண்ணின் விளையாட்டை கண்டு மகிழ்ந்தது மூஉலகும்.
    கண்ணனவன் லீலையினை விண்ணோரும்,ஞானியரும் கண்டு மெய்மறந்து நின்றனர்.
    [FONT=&quot]
    [/FONT]
    பக்தர்களை பரவசிக்கும் பெருமாள்[FONT=&quot],[/FONT]பாற்கடலில் சயனித்திருக்கும் திருமால்[FONT=&quot],
    [/FONT]
    நாராயண எனக் கூக்குரலிட்ட கஜேந்திரனையும் காத்திட்ட காப்பான் [FONT=&quot],
    [/FONT]
    மங்கையருள் மாணிக்கமாய் திகழ்கின்ற தேவகியின் திரு வயிறு உதித்தவன்[FONT=&quot],
    [/FONT]
    தாய்மையின் திருஉருவாம் யசோதையிடம்[FONT=&quot], [/FONT]கொஞ்சி மகிழ[FONT=&quot] [/FONT]மடி புகுந்தவன்[FONT=&quot],
    [/FONT]
    வசுதேவரின் வரம் [FONT=&quot],[/FONT]நந்தரின் ஆயர் குலக்கொழுந்து[FONT=&quot],[/FONT]கண்ணனின்[FONT=&quot] [/FONT]திருவிளையாடல் [FONT=&quot],
    [/FONT]
    கண்ணன் தன் கண்ணை கசக்கி பிடிவாதம் பிடிக்க[FONT=&quot],[/FONT]அதை பொறுக்காத அன்னை விரைந்திட்டால்அவனிடமே[FONT=&quot],
    [/FONT]
    பசுந்தயிரை[FONT=&quot],[/FONT]கடத்திலிட்டு[FONT=&quot],[/FONT]மத்துதனை கொண்டு [FONT=&quot],[/FONT]வெண்ணையை பிரித்து எடுக்கும் பொழுதினிலே [FONT=&quot],
    [/FONT]
    நந்தன் மகன் [FONT=&quot],[/FONT]மாயவன்[FONT=&quot], [/FONT]மாதவன்[FONT=&quot],[/FONT]மதுசூதனன் தன் திரு விளையாடலை தொடங்கிட்டான்[FONT=&quot],
    [/FONT]
    அடம் செய்யும் தன் மகனை மடியினிலே தூக்கி வைத்து தேற்றுகிறாள் யசோதை இவ்வாறே...[FONT=&quot]
    [/FONT]
    என் உயிரே கண்ணையா[FONT=&quot],[/FONT]வெண்ணை திரண்டு வர[FONT=&quot],[/FONT]கொஞ்சநேரம் பொருப்பாய் என் கண்மணியே[FONT=&quot],
    [/FONT]
    பாற்கடலை [FONT=&quot],[/FONT]கடைந்தெடுக்க தக்க துணையாய் நின்று லக்ஷ்மியை தன் பரிசாக பெற்றவனே [FONT=&quot],
    [/FONT]
    இந்த மோரதனை கடைய பொறுத்து[FONT=&quot], [/FONT]வெண்ணையை உண்டு மகிழைய்யா என் கண்ணையா [FONT=&quot],
    [/FONT]
    நீதானே என் நிகரில்லா செல்வம் [FONT=&quot],[/FONT]உனையன்றி யாருக்கும் நான் இதனை தந்துவிடேன் [FONT=&quot],
    [/FONT]
    என பல விதமாய் தன் மகனை கொஞ்சி[FONT=&quot],[/FONT]கெஞ்சி தேற்றிவிட்டு தன் வேலை பார்கின்றால்![FONT=&quot]

    [/FONT]
     
    Loading...

Share This Page