1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கொஞ்சம் பேசலாமா?

Discussion in 'Stories in Regional Languages' started by krishnaamma, Dec 8, 2015.

  1. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    வித்யாவின் சமையல் எப்போதுமே ஏ க்ளாஸ்தான். ஆபிஸிலே கண்ட ஃபாஸ்ட்புட்களைச் சாப்பிட்டே காலம் தள்ளியவன் இன்று வீட்டுச் சமையலைப் பார்த்தவுடன் புகுந்து விளையாடிவிட்டான். ரெண்டு தரம் சாம்பார், ரெண்டு தரம் ரசம் என்று. எனக்கு சுந்து மாமாதான் நினைவுக்கு வந்தார்.




    சாப்பிட்டவுடன் நரசிம்மன்தான் கை கொடுத்து எழுப்பினான். அப்புறம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவன் ஃப்ளாட்டுக்குப் போய்விட்டான்.




    அப்பார்ட்மெண்டுக்குள் நுழையும்போதே வாசலில் வாட்ச்மேன் தடுத்தான். 'யாரைப் பார்க்கணும்?'
    'ரமேஷை பார்க்கணும். நான் அவனோட ஆஃபீஸ்லே வேலை பார்க்கறேன்' அப்படீன்னான் நரசிம்மன்.
    உடனே ஒரு நோட்டை எடுத்து பெயர், மொபைல் நம்பர், விலாசம் எல்லாம் எழுதச் சொன்னான். என்னவோ பிரதம மந்திரி வீட்டுக்குள்ள போற மாதிரிதான் பந்தா.




    லிஃப்ட்டுல ஏறி இரண்டாவது ஃப்ளோரை அழுத்தினான். வெளியே வந்ததும் மொத்த நாலு ஃப்ளாட்டுகள் இருந்தன.
    நரசிம்மன் முழித்ததைப் பார்த்ததும் கேட்டேன் 'எந்த ஃப்ளாட்டுடா?'
    'தெரியலைப்பா, ரெண்டாவது ஃப்ளோருன்னு சொன்னான். சரி இரு நான் அவனை மொபைலில் கூப்பிடறேன்.'
    'நீங்கள் டயல் செய்த மொபைல் தற்சமயம் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது'.




    சரி வருவது வரட்டும் என்று எண்ணியபடி ஒரு ஃப்ளாட்டின் காலிங் பெல்லை அழுத்தினேன்.
    சரியாத இரண்டு நிமிடம் கழித்து அரை ட்ராயர் போட்ட ஒருத்தர் காதில் ஹெட்போனுடன் வந்து பாதிக் கதவைத் திறந்து பார்த்தார் 'யெஸ்?'
    'இல்லே இங்கே ரமேஷ்னு ஒருத்தர்?'




    'சரியான நம்பர் தெரியலைனா இப்படிக் கண்ட வீட்டிலேயும் காலிங் பெல்லை அழுத்தாதீங்க. இந்த செக்யூரிட்டி எப்படி அலவ் பண்ணினான்? ஐ வில் ரெய்ஸ் திஸ் இன் தி நெக்ஸ்ட் அஸோஸியேஷன் மீட்டிங்' என்றபடியே படீரென்று கதவை சாத்தினார்.
    அந்தச் சத்தத்திலே என்னவோ ரமேஷ் தனது ஃப்ளைட்டை விட்டு வெளியே வந்து விட்டான். எங்களைப் பார்த்ததும், 'ஸாரிடா, அந்த ஆள் ஒரு மாதிரி, நீ ஃபோனிலே கேட்டிருக்கலாமே.'
    'உன் மொபைல் ஸ்விட்ச் ஆஃப்டா முட்டாள்.'




    'மறுபடியும் ஸாரிடா, அப்படியே தூங்கிட்டேனா, சார்ஜிலே வைக்க மறந்துட்டேன். உள்ளே வாங்க அங்கிள்' என்றபடியே உள்ளே அழைத்துச் சென்றான்.




    அவனோட ஃப்ளாட்டுக்குள் நுழைந்ததும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு பேச்சிலர் வீடு மாதிரியேயில்லை. என் ஆச்சரியத்தைப் புரிந்தபடிச் சொன்னான். 'மாசத்தொரு தடவை அப்பா வருவார் அங்கிள். இதெல்லாம் கண்டபடி இருந்தா கன்னாபின்னான்னு கத்துவார். அதான் எல்லாம் சுத்தமா வெச்சிருக்கேன்'




    அவனது அப்பாவைப் பார்க்கவேணும் போல இருந்தது. கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் அதற்குள் அவர்களிருவர் கைகளிலும் ஐ-பேடும், மொபைல் ஃபோனும், அப்போது காலிங் பெல் ஓசை கேட்டது. ரமேஷ் கதவில் இருந்த லென்ஸ் மூலமாகப் பார்த்துவிட்டு கதவைத் திறக்காமல் வந்து விட்டான்.
    'ஏம்பா, கதவைத் திறக்கலே?'




    'அய்யோ அங்கிள், அது ஒரு பைத்தியம், சும்மா யாரையாச்சும் கூப்பிட்டு வச்சிண்டு பேசிப்பேசிய உயிரை வாங்கும். இதோ பாருங்கோ வாட்ஸப் மெஸேஜிலே இவர் படம் போட்டு இந்த அபார்ட்மெண்டிலே இருக்க எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கைன்னு அனுப்பியிருக்கா.'
    கொஞ்ச நேரத்தில் எனக்கு போர் அடிக்க ஆரம்பித்து விட்டது. எனக்குப் பேசுவதற்கு நிறைய இருந்தது. ஆனால் அவர்கள் கையிலிருந்த ஐ-பேடும், மொபைலும்தான் அவர்களை ஆக்ரமித்திருந்தது. எனவே நான் புறப்பட்டேன்.




    படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும்போது, 'என்ன சார், எப்படி இருக்கீங்க, சௌக்யமா?' என்று என்னை நிறுத்தியது ஒரு குரல்.
    திரும்பிப் பார்த்தால் எனக்கு முன் பின் தெரியாத நபர், இருந்தாலும் 'சௌக்யம்' என்றேன். 'உங்களைத் தெரியலையே?'
    'நான் தான் கொஞ்ச நேரம் முன்னாடி காலிங் பெல் அடிச்சேன்'




    'ஓ நீங்கதானா அது?' சொன்னவுடன்தான் புரிந்தது. 'அது வந்து காலிங் பெல் அடித்தது காதில் விழவில்லை'
    பெரிதாகச் சிரித்தார் அவர். 'காதில் விழவில்லையென்றால் எப்போ அடிச்சீங்கன்னுதானே கேட்டிருக்கணும்? ஆனா நீங்கதான் அடிச்சதான்னு கேட்டதாலே உங்க காதிலே விழுந்ததுன்னுதானே அர்த்தம்? அது பரவாயில்லை விடுங்கோ. அந்தப் பையன் சொல்லியிருப்பான். அது பேச்சுப் பைத்தியம், கதவைத் திறங்காதீங்கான்னு, என் போட்டோதான் இப்போ வாட்ஸ் அப்பிலேயே ரொம்ப பிரபலமாயிடுச்சே.'




    எனக்கு என்னவோ போலிருந்தது. 'இல்லே எதோ சின்ன பசங்க.. நீங்க தப்பா நினைக்காதீங்க.'




    'நான் தப்பாவே நினைக்கலை ஸ்வாமி. இதெல்லாம் எனக்குப் பழகிப்போச்சு. ஆனா இவாளை நினைச்சும் வரப்போற தலைமுறைகளை நினைச்சும் நான் கவலைப்படறேன்.'
    எனக்கு ஒன்றும் புரியாமல் பார்த்தேன்.




    'நாம ஒரு உறுப்பை உபயோகப் படுத்தாமலேயே விட்டுட்டோம்னா அது கொஞ்சம் கொஞ்சமா உபயோகமில்லாமப் போயி பின்னாடி தலைமுறைகளிலே இருக்கவே இருக்காதாம்.'
    இவர் எதைச் சொல்கிறார்? கேள்வியுடன் பார்த்தேன்.




    'இப்போ மனுஷா ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கறதே ரொம்பக் குறைஞ்சு போயிடுத்து. இப்படியே போனா நாலஞ்சு தலைமுறை கழிச்சு மனுஷனுக்குப் பேச்சே இருக்காதே? அவனும் ஆடு மாடு மாதிரி ஆயிடுவானே?'
    நான் சிரித்து விட்டேன். 'அது எப்படி பேசாம இருக்க முடியும்?'
    'இப்போ நீங்க உள்ளே எவ்வளவு நேரம் இருந்தீங்க?'




    'சுமார் அரைமணி நேரம் இருக்கும்.'
    'எத்தனை வார்த்தைகள் பேசினீங்க?'
    'நான் எண்ணிப் பார்க்கவில்லையே.'
    'சரி அதைவிடுங்க, அந்தப் பையன் பேசினது எத்தனை வார்த்தைகள் இருக்கும்?'




    அப்போதுதான் யோசித்துப் பார்த்தேன். அவன் பேசியது ஒரு பத்திருபது வார்த்தைகள்தான் இருக்கும்.
    'நீங்க பேச ஆரம்பிச்ச ரெண்டாவது நிமிடம் கையிலே ஒரு மொபைல் போனையோ டேப்லட்டையோ எடுத்து வச்சிண்டிருப்பானே?'
    ஆமாம், இதையெல்லாம் நேரில் பார்த்தது போல எப்படி சொல்கிறார்?




    'என்ன அசந்து போய் நிக்கறீங்க? எப்படி இவனுக்கு இதெல்லாம் தெரிஞ்சுதுன்னா? இதெல்லாம் மாயமில்லை ஸ்வாமி. இந்தக் காலத்துப் பசங்க எல்லாமே இப்படித்தான். இங்கே ஏதாவது குழாய் ரிப்பேர் இல்லே எலக்ட்ரிகல் ரிப்பேர்னா யாரும் செக்ரட்டரியை கூப்பிட்டு சொல்றதில்லை. எல்லாம் மெசேஜ்தான். மெக்கானிக்கும் ரிப்பேர் பண்ணிட்டு பில்லை வாட்ஸ் அப்லே மெஸேஜா அனுப்பறான்.








    பில்லை செட்டி பண்றதும் ஆன்லைன்லதான். முன்னெல்லாம் பஸ்ஸிலே ட்ரெயின்லே போன்ல ஒரே சத்தமா இருக்கும். மனுஷா எல்லாரும் ஏராளமா பேசிண்டிருப்பா. ஆனா இப்போ பாருங்கோ. எல்லாரும் ஒரு மொபைலையோ ஐ-பேடையோ கையில எடுத்திண்டு காதில ஒரு ஒயரை மாட்டிண்டு மொளனமாயிடறா. ஏதாவது ஜோக் படிச்சாக்கூட அதை மத்தவாளோட பேசிப் பகிர்ந்துக்கறது கிடையாது. உடனே அவன் மொபைலுக்கு ஃபார்வார்ட்தான். யாருக்கு ஸ்வாமி பேசத் தோணறது.'




    எனக்கு என்ன பதில் சொல்றதென்றே தெரியவில்லை. எதையாவது பேச வேண்டுமேயென்று கேட்டேன். 'நீங்க இங்கேதான் இருக்கேளா?'
    'ஆமாம். நான்தான் இந்த மேன்ஷன்லயே ஓல்டஸ்ட் மெம்பர். வயசிலே மட்டுமல்ல.'
    'நீங்க தப்பா சொல்றீங்க. மேன்ஷன் இல்லை. இதுக்குப்பேர் அப்பார்ட்மெண்ட்.'




    'நீங்கதான் தப்பாச் சொல்றீங்க ஸ்வாமி. நீங்க இநத திருவல்லிக்கேணி பக்கம் போய்ப் பாருங்க. ஏகப்பட்ட பேச்சிலர்ஸ் மேன்ஷன் இருக்கும்.''கேள்விப்பட்டிருக்கேன்.'


    தொடரும்............



     
    Caide and veenago like this.
    Loading...

  2. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அங்கெல்லாம் கார்த்தாலே எட்டு மணிக்கு எல்லாம் கிளம்பிப் போயிடுவா. வேலை முடிஞ்ச வர மெஸ்ஸிலே சாப்டுட்டு ராத்திரி எட்டு மணிக்கு மேலதான் ரூமுக்கு வருவா. கார்த்தாலே எட்டுலேர்ந்து ராத்திரி எட்டு வரைக்கும் காலியா இருக்கும். அதுமாதிரிதான் இதுவும். எட்டு ஒம்பது மணிக்குள்ளே எல்லாரும் ஸ்கூல், காலேஜ், வேலைன்னு போயிடுவா.




    சாயங்காலத்து மேலதான் திரும்பி வருவா. படிக்கற பசங்க டியூஷன், ஸ்பெஷல் கிளாஸுன்னு முடிச்சிட்டு வர ஒம்போது மணி ஆகிடும். பெரியவா வேலை முடிஞ்சு வரவும் அதே நேரமாகிடும். அதுலயும் இப்போ ரெண்டு பேரும்வேலைக்குப் போறதாலே முக்காவாசி நாள் வரும்போதே ஹோட்டல்லே ஆர்டர் பண்ணிட்டு வந்துடறா. குழந்தைகள் இருந்தா கார்த்தாலே வேலைக்குப் போகும்போதே க்ரஷ்ஷிலே விட்டுட்டு சாயங்காலம் வரும்போது பிக் அப் பண்ணிக்கறா. வயசான பெரியவா இருந்தா நிரந்தரமா முதியோர் இல்லத்திலே தள்ளிவிட்டுடறா.'


    கொஞ்சம் நிறுத்தி மூச்சு வாங்கிக் கொண்டார். 'இப்போ சொல்லுங்கா, இதைப் போய் மேன்ஷன்னு சொல்லாம என்ன சொல்றது?'


    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இத்தனை நாள் வேலை வேலை என்று இருந்தவனுக்கு இதெல்லாம் தோணவில்லை. இனிமே என் கதியும் இதுதானா?


    எதிர்காலம் பயமாக இருந்தாலும் ஒரு மாதிரி சமாளித்தேன். 'முன்ன மாதிரி இல்லை, இப்போ உலகம் ரொம்ப சுருங்கிடுத்து பாருங்கோ'
    'அப்படியா எனக்கு அப்படித் தோணலையே?'


    'நான் உங்களுக்குப் புரியும்படியாகச் சொல்றேன். ஒரு காலத்திலே நம்ம பொண்ணோ பிள்ளையோ வெளியூர்லே கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம்னா, அவாளைப் போய் பார்த்துட்டு வரதுக்கு வண்டி கட்டிண்டு போய்ட்டு வரதுக்கு நாள் கணக்கிலே ஆகும். ஆனா இப்போ வேகமான போக்குவரத்து இருக்கறதாலே நினைச்சா உடனே போய்ட்டுத் திரும்பி வந்துடலாமே?'


    'அப்படியா சொல்றேள்? இப்போ நான் உங்களுக்குப் புரிய வைக்கிறேன். போக்குவரத்து வேகமாயிருக்கலாம். என்னோட பையன் ஜெர்மனியிலே இருக்கான். பொண்ணு கல்யாணம் ஆகி ஆத்துக்காரோட கனடாவிலே இருக்காள். பிள்ளையைப் பார்க்கணும்னா நான் நினைச்சாப் போயிட்டுத் திரும்பி வந்துட முடியாது? ஊர்களுக்கு நடுவிலே உள்ள தூரம் குறைஞ்சிருக்கலாம். ஆனா மனுஷாளுக்குள்ளே தூரம் அதிகமாயிடுத்தே?'
    எனக்குத் தலை சுற்றியது.


    அவர் மேலும் தொடர்ந்தார். 'இப்பவே மூலைக்கு மூலை பேச்சுக்கலை அப்படீன்னு கோர்ஸ் நடத்த நல்லா பணம் பண்றா. இப்படியே போனா சில வருடங்கள்லே பேசுவது எப்படின்னு கூட கோர்ஸ் நடத்தலாம். இப்போ நாய்க்கெல்லாம் யார் நீச்சல் கத்துக் குடுக்கறா? தானா நீந்தலையா? ஆனா மனுஷனுக்கு மட்டும் ஏன் யாராவது கத்துக் கொடுத்தால்தான் நீச்சல் வர்றது? அது மாதிரியே யாராவது கத்துக் குடுத்தாத்தான் பேச்சும் இனிமேல் வரப் போறது. அதுவும் ஒரு ஸ்டேஜிலே நிந்து போயிடும்'


    அவர் பேசப் பேச எனக்குப் பயமாக இருந்தது. பேச்சை மாற்ற வேண்டிக் கேட்டேன். 'நாங்க முன்னாடி இங்கே இருந்தப்போ இங்கே ஒருத்தர் இருந்தார். தனியாத்தான் இருந்தார். அப்போ இது தனி வீடாத்தான் இருந்தது. அவர்தான் எனக்கு ருத்ரம், சமகம், ஸ்ரீசுக்தம் எல்லாம் சொல்லிக் கொடுத்தார்.'


    நான் திடீரென்று பேச்சை மாற்றியதாலோ என்னவோ அவர் சற்று மௌனமானார். பிறகு சற்று தனிந்த குரலில் கேட்டார். 'நீங்க மிஸ்டர் சுந்தரேசனைச் சொல்றீங்களா?'


    எனக்கு ஆச்சரியம், சுந்து மாமாவை இவருக்கும் தெரியுமா? 'ஆமாம், அவரேதான்' என்று உணர்ச்சி வேகத்தில் கத்தி விட்டேன்.


    'அவர்தான் என்னோட தகப்பனார்?' என்றார் அவர்.




    ஸ்ரீ அருண்குமார்
    நன்றி கலைமகள்
     
    Caide and veenago like this.
  3. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Wonderful story ma. Thanks for sharing. Seems like the story's not been completed fully.

    Kudos to the author.

    Unfortunately, this world is going towards that side only - not speaking much but being with iphones, ipads, tablets etc.

    so sad to see this state.

    manushaloda vilayanda kuzhandaigallaam ippo cell phone-oda vilayadranga.
     
  4. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    ரொம்ப நல்ல கதை. இந்த கால உண்மை நிலையை காட்டும் கதை.
     
  5. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female

    நிஜம் சுந்தர் , முதலில் எனக்கும் அப்படித்தான் தோன்றியது.........ஆனால் நான் நினைக்கிறேன், அப்படி ருத்திரம் சமகம் நடைபெற்ற இடத்தில் அதை தொடராமல், அபார்ட்மெண்ட் கட்ட அனுமதி அளித்து விட்டு, இப்போது 'வள வள' வென்று பேசுகிறாரே அந்த மனிதர் என்று இவர் கேட்பது போல இருக்கு !......சரியா? :)
    .
    .
    .
    .
    ஆமாம், இப்போ பசங்களுக்கு யாரிடம் எப்படி பேசுவது?...பெரியவர்களிடம் எப்படி பழகுவது என்று தெரியலை........ofcourse , அப்பா அம்மாக்கு அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை [​IMG]
     
    1 person likes this.
  6. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி !
     
    1 person likes this.
  7. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    சரி தான் மா நீங்கள் சொல்வது.


    நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை நீங்கள் சொல்வது - "பெற்றோர்களுக்கு கவலை இல்லை". அனைவரும் பணம் பணம் என்று உழைக்கிறார்கள்.


    பணம் தேவை தான். ஆனால், குழந்தைகளின் நலன் அதை விட முக்கியம் இல்லியோ??


    ஆனால், நான் அப்படி இருக்க மாட்டேன் என நினைக்கிறன் மா.:exactly::yes:
     
    1 person likes this.
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ரொம்ப சந்தோஷமாய் இருக்கு உங்களின் பின்னுட்டம் பார்த்து ....................ரொம்ப நிஜம், குழந்தைகள் தான் முதலில் பிறகு தான் பணம் காசெல்லாம்...... .... முதல் 3 - 4 வயது வரை நாம் அவர்களுடன் இருப்பது ரொம்ப முக்கியம்..............அல்லது தாத்தா பாட்டியாவது கூட இருக்கணும் .............நம் மற்றும் நாட்டின் எதிர்காலமாச்சே அவா [​IMG]
     
    1 person likes this.
  9. Sun18

    Sun18 Gold IL'ite

    Messages:
    516
    Likes Received:
    648
    Trophy Points:
    188
    Gender:
    Male
    Yes, they're more important than money. Thanks ma. :lol:
     
  10. sreeram

    sreeram IL Hall of Fame

    Messages:
    3,896
    Likes Received:
    3,641
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Rightly said ma. I used to feel bad as a child when my mother was working. Though she didn't have a choice. Due to this i was very firm and told my hubby before marriage itself that i will quit my job when i conceive and want to be at home with my child. My hubby was very supportive and said don't worry i will take care of the financial part. As decided i resigned my job as soon as i became pregnant and now i am enjoying my life with my little one.

    It doesn't mean that i am against working mother's, it's just my opinion. Either the mother or grandparents should take care of the child so that we can avoid unnecessary issues in their bring up the child.
     
    1 person likes this.

Share This Page