1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கேட்டினும் உண்டோர் உறுதி

Discussion in 'Posts in Regional Languages' started by jayasala42, Oct 16, 2024.

  1. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,548
    Likes Received:
    10,763
    Trophy Points:
    438
    Gender:
    Female
    கேட்டினும் உண்டோர் உறுதி
    ==========================
    சில சயயங்களில் ஒரு கேட்டிலும் ஒரு நன்மை உண்டாவதை நாம் காண்கிறோம் .
    பைசா நகரத்துக் கோபுரம் சாயவில்லை என்றால் , அதுபற்றி நாம் பேசியிருக்க மாட்டோம் . அது சாய்ந்ததால்தான் உலகப்புகழ் அடைந்தது .
    பால் கெட்ட பின்னர்தான் சுவையான தயிர் நமக்குக் கிடைக்கிறது .
    நிலா , தேய்ந்து வளர்வதால்தான் , அழகான பிறைச் சந்திரனை விண்ணில் நாம் காண முடிகிறது .
    இதுபோல ஒரு கேட்டிலே , ஒரு நன்மை விளையக்கூடிய செயல்கள் பலவற்றை வாழ்க்கையிலே நாம் காண்கிறோம் .
    ஒருவன் செல்வச் செழிப்பிலே இருக்கும் பொழுது , அவனுடன் பலரும் கூடிக் குலாவுவர் . விதிவசத்தால் அவன் வறுமையடைந்தான் என்று வைத்துக் கொள்வோம் . என்ன நடக்கும் ? அவனைச் சுற்றியிருந்த நண்பர்கள் ஒவ்வொருவராக அவனை விட்டு விலகுவர் . இஃது உலகியல் உண்மையாகும் .
    உண்மையான நட்பு எது ?
    ஒருவனுக்குக் கேடு வந்து துன்புறும் பொழுதும் அவனை விட்டு நீங்காமல் அணுக்கமாக அமைந்து ஆதரவு கொடுத்து ஊன்றி நிற்பதுதான் உண்மையான நட்புக்கு இலக்கணம் ஆகும் .
    எனவே நண்பரின் உண்மையான நட்பை அளப்பதற்கு , ஒருவனுக்கு வரும் கேடு அளவுகோலாக உதவும் என்கிறார் வள்ளுவர் .
    கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
    நீட்டி அளப்பதோர் கோல் . (796)
    என்ற குறளின் மூலமாக உண்மையான நட்பு எதுவென்று காட்டுகிறார் வள்ளுவர் .
    நாலடியாரில் ,
    காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து
    மேலாடு மீனின் பலராவார் -- ஏலா
    இடர்ஒருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட !
    தொடர்புடையேம் என்பார் சிலர் .
    எனவரும் பாடல் இக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை அறியத்தக்கது .
    ஔவையார் , சிறந்த உறவினர் யார் என்ற கேள்விக்கு ,
    அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
    உற்றுழித் தீர்வார் உறவுஅல்லர் - அக்குளத்தில்
    கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
    ஒட்டி உறுவார் உறவு .
    என்று பதில் கூறுகிறார் . இச்செய்யுள் சிறந்த நண்பர் யார் என்ற கேள்விக்கும் பதிலாக அமையும் .

    JAYASALA 42
     
    Thyagarajan likes this.

Share This Page