1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கூட்டுக் குடும்பம்.... சுகமான காற்று..

Discussion in 'Stories in Regional Languages' started by sugamaana07, Mar 15, 2016.

  1. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    கூட்டுக் குடும்பம்.... சுகமான காற்று...
    ---------------------------------------------------------
    கூட்டுக் குடும்பம் என்று கூறும் பொழுதே சுகமான காற்று வீசுவதுபோல் உணர்கின்றேன்.... ஆனால், சில சமயங்களில் அது புயல் காற்றாய் வீசும் பொழுதுதான் வருத்தமே...

    என்னுடைய அனுபவத்தில் ஒன்று கட்டாயம் இங்கு பதிவு செய்ய கடமை பட்டிருக்கிறேன்....

    கல்யாணம் ஆனதும் ஒரு 1 அல்லது 2 ஆண்டுகள் தம்பதியர் தனிக் குடுத்தினம் செல்வது நல்லது என்பது எனது கருத்து... கட்டாயம் இது அந்தப் பெண்ணிற்கு ஒரு வரப்ப்ரசாதமாய் இருக்கும்... அம்மா வீட்டு பக்கத்திலோ அல்லது மாமியார் வீட்டு பக்கத்திலோ... இந்த நிலை கட்டாயம் மாமியார், மாட்டுப் பெண் இடையே ஒரு பாசம், அன்பு, புரிந்து கொள்ளுதல் , பரிவு ஏற்படும் என்பது எனது எண்ணம்... கூடி வாழவேண்டும் என்ற ஏக்கம் பிறக்கும் விரைவில்... இது உண்மை..

    புதியதாய் கல்யாணம் ஆனப் பெண் கட்டாயம் தன் கணவனுடன் வெளியில் செல்ல ஆசைப் படுவது இயற்கையே... இது கூட்டுக்குடும்பத்தில் கொஞ்சம் ஸ்ரமம் தான்... இப்பொழுது கொஞ்சம் நிலைமை மாறி இருக்கலாம்... ஆனால் நான் கூறுவது பொதுவானக் கருத்து....

    ஓரிரு ஆண்டுகள் ஆனவுடன் குழந்தை பிறந்ததும் கட்டாயம் கூட்டுக் குடும்பம் இன்றைய கால கட்டத்திற்கு அவசியம்... மேலும் குழந்தை பிறந்ததும் அதனுடன் தனக்கு நேரம் கிடைக்கும் பொழுது கொஞ்சவோ, நேரம் ஒதுக்கவோ கட்டாயம் கூட்டுக் குடும்பத்தில் இயலாது... வேலைக்கு செல்லும், பெண்ணாக இருப்பினும் இது பொருந்தும்... ஆனாலும், கூட்டுக் குடும்பம் சிறப்பானது.. பொறுமையாய் இருப்பது அவசியம்...

    மாமியார் சற்று ஒத்துழைத்தால் கூட்டுக் குடும்பம் போல் எதுவும் இல்லை... மாறாக அவர் கண்டிப்பானவராகவோ, குற்றம் கண்டு பிடிப்பவராகவோ இருப்பின் , தனி குடுத்தினம் நல்லது... மன கலக்கத்துடன் கூடி இருப்பது கஷ்டம்... ஒருவர் முகத்தை ஒருவர் தினமும் பார்க்க வேண்டும்... மனதில் வெறுப்போடு கூடி இருப்பதை விட சற்று தள்ளி இருந்து பாசமாய் இருப்பது மேல்...

    கொஞ்சம் குழந்தைகள் வளர்ந்தவுடன் புரியும் கூட்டுக் குடும்பதின் அருமை.. இது உண்மை வெறும் வாய் வார்த்தை அல்ல.. கூடி இருப்பதில் சுகமே... சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க என்ன வழி என்று ஆராயலாம். கொஞ்சம் முயற்சி எடுத்தால் சாத்தியமே..!

    எப்பொழுதுமே ஒன்று இல்லை என்றால் தான் அதன் அருமை புரியும்... "இக்கரைக்கு அக்கரைப் பச்சை" என்பார்களே..! அது இந்த விஷயத்தில் உன்மைதான் ...

    மாமியார் தன் மகளாய் மாட்டுப் பெண்ணை நினைத்தாலே போதும்... மாட்டுப்பெண் மாமியாரை அம்மா ஸ்தானத்தில் வைத்துப் பார்த்தால் எந்த ஒரு பிரச்சனையும் விலகும் மேகங்களாய் மறையும் என்பது உறுதி...

    கூட்டுக் குடும்பத்தை போற்றுவோம் ....

    பாசத்துடன் ----மைதிலி ராம்ஜி
     
    3 people like this.
    Loading...

  2. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    yes madam. Joint family is the best in the current situation. We can share anything in our elders and get good suggestion from them. :thumbsup

    Already iyerviji maa also wrote about this topic.
     
  3. Harini73

    Harini73 Platinum IL'ite

    Messages:
    2,498
    Likes Received:
    2,093
    Trophy Points:
    290
    Gender:
    Female
    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.ஆனால் சரியான புரிதல் இருக்க வேண்டும்.குழந்தைகளை வளர்பதற்கு சிறந்த முறை பெரியோர்கள் நம்முடன் இருப்பது தான்

     
  4. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மன்னிக்கணும் மைதிலி, நீங்க கூட்டுக் குடும்பத்தை ஆதரிக்கரீங்களா இல்ல காலத்தின் கட்டாயம் என்று சொல்லி ஒப்புக்க சொல்லறீங்களா என்று விளக்குங்கோ :) ...எனக்கு புரியலை உங்கள் கட்டுரைலிருந்து நீங்க என்ன சொல்ல வரீங்க என்று :)

    என்னைப் பொருத்தவரை, முதல் 2 ,3 வருடங்கள் அதாவது கல்யாணம் ஆனதும் கண்டிப்பாக ஒன்றாகத்தான் இருக்கணும்...............(எப்பவுமே இருக்கணும் அது வேற விஷயம்:) )...............ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், இந்த காலத்துப் பெண்கள் எல்லாம் கை நிறைய டிகிரி வைத்துக்கொண்டு இருக்கிறார்களே தவிர, வீடு நிர்வாகமோ, சமையலோ ஒன்றும் தெரியாத பூஜ்ஜியமாய்த்தான் அனுப்பி வைக்கப் படுகிறார்கள் :(

    இன்னும் அவர்களைத் தனியாய் வைத்தால் 'சுத்தம்', (உங்கள் பதிவில் இருந்து நீங்களும் நடுத்தர வயது பெண்மணியாக இருப்பீர்கள் என்று ஊகிக்கிறேன் ) வருபவளுக்கு இதே தெரியலை என்றால், நம்மாத்து வழக்கம், பண்டிகைகள் என எதுவுமே தெரியாது , எனவே நாம் தான் கூட வைத்துக்கொண்டு, பொறுப்பாக எல்லாம் சொல்லித்தரணும்.

    அவள் எதுவுமே தெரியாமல் வருவது ஒன்றும் பெரிய குத்தம் இல்லை, இந்தக்காலத்தில் 'படி படி' என்று பெண் குழந்தைகளையும் நாம் சொல்கிறோம், அப்போ இதெல்லாம் கத்துக்க அவங்களுக்கு நேரம் இல்லை, கூடவே சொல்லிக்கொடுத்தால் ரொம்ப நல்லது, அட்லீஸ்ட், கல்யாணம் நிச்சயம் ஆனதுமாவது கத்துக்க வைக்கணும், இரண்டும் இல்லாமல் போனால்..............

    பெண்ணைப் பெற்றவரளுக்கு என்ன, 'ஜாலியா' அனுப்பி வெச்சுடரா, ஒண்ணும் தெரியாதவர்களைத் தனிக்குடித்தனமும் அனுப்பிவிட்டு, பாவம் அந்த புது பெண் , எல்லாமே புதுசாய் இருக்கும், என்னத்தை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று தடுமாறுவாள்..............

    எனவே, என்னைப்பொறுத்தவரை கண்டிப்பாக கூட்டுகுடும்பம் தான் பெஸ்ட்..............20 ஆயிரம் சம்பளம் தருகிறான் என்பதற்காக ஆபீஸ் இல் மேனேஜர் சொல்வதர்க்கெல்லாம் தலை ஆட்டுபவர்கள், வீட்டில் மாமியார் மாமனார் கணவனுக்கு அனுசரணையாக இருதால்தான் என்ன?.........மேலும், இந்த வேலை போனால் மற்றும் ஒரு வேலை கிடைத்துவிடும், குடும்பம் அப்படி இல்லையே, எனவே இங்கு அட்ஜஸ்ட் செய்து கொண்டு வாழ்வது மிகவும் அவசியம்...............

    கெட்டுப்போவதற்கா சொல்லப்போறாங்க அவங்க? :) .............நாங்க இருக்கும் பெங்களுரின் தரகமந்திரமே 'அட்ஜஸ்ட் மாடி' தான், இப்படி ரோடிலேயே behave செய்யும் போது வீட்டில் நம் மனிதர்களுடன் 'அட்ஜஸ்ட் மாடி'னால் எல்லோருக்கும் நல்லதாகும் :)

    குழந்தைகளுக்கு அனுசரித்து நடக்கவும்,விட்டுக்கொடுத்து நடக்கவும் கத்துக் கொடுங்கோ, பிற்காலத்தில் அது நமக்கே உதவும் :)
     
    1 person likes this.
  5. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    அன்பு தோழியே...வணக்கம்

    என் கட்டுரைக்கு விமர்சனம் அனுப்பியதற்கு நன்றி.... பதில் எழுதுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்...

    நான் கூட்டுக்குடும்பத்தை ஆதரிப்பவள் தான்... கூட்டுக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்.... வாய்க்கப் பட்டவள் அதில் எந்த வித சந்தேகமும் இல்லை..

    கல்யாணம் ஆகி முதல் இரண்டு வருடங்கள் தனியாக வைப்பதில் தவறென்ன? அவர்கள் தங்கள் விருப்பம் போல் இருந்து விட்டு போகட்டுமே... எல்லா மாமியார்களும் உங்களைப் போன்று புரிந்து கொள்பவர்களாக இருப்பதில்லையே... அந்த முதல் 2 ஆண்டுகள் தான் நம் வாழ்வில் ஆனந்த தருணம்.... நம் கனவுலகில் கண்டதை அனுபவிக்கும் நேரம்... அது எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு தெரியாதா?

    என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் முதல் 1 அல்லது 2 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டிய சுகங்களை அனுபவிக்க தவறினால் பின்பு கிடைக்கப் போவதில்லை... தனியாக வைத்தால் அவர்கள் தட்டு தடுமாறி முன் வரட்டுமே... சந்தோஷமாய் அவர்கள் இஷ்டப்படி இருக்கட்டுமே... பின்பு குழந்தை பிறக்கும், கடமைகள், அலுவல் எல்லாம் காலம் முழுக்க இருக்கின்றது....

    நான் கூறுவது கூட்டுக்குடும்பம் என்பது ஒரு கோயில்... அதில் ஒற்றுமை,,பொறுமை, பாசம். நேசம் அனைத்தும் தேவை.... ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு ஒற்றுமையாய் இருப்பின் நலம்....

    திருமணம் ஆனவுடன் கட்டாயம் ஒரு தாய் மாமியார் ஆகும் தருணத்தில் தன மகனை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுப்பது என்பது கஷ்டமான ஒன்று..இவ்வளவு ஆண்டுகள் தன மகனாய் இருந்தவன் இன்று கணவன் என்ற அந்தஸ்து பெற்றவுடன் தன்னை விட்டு சென்று விட்டானோ என்ற சிறு பயம் நெருங்கும்... இது இயற்கை... இதிலிருந்து மீண்டு வந்து விட்டால் சொர்க்கம்... அந்த சொர்க்கம் கட்டாயம் கூட்டுக் குடும்பமாகும்.. மாறாக இருப்பின் தனிக் குடுத்தினம் நன்று என்பதே என வாதம்...

    பெரியவர்கள் கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.... நானும் பிள்ளை பெற்றவள்தான்... ... நானும் மாமியார் அக இருக்கிறேன்... சில வருடங்களில்... ஒரே மகன்தான்... இந்தக் காலத்து மாமியார்கள் சற்று விசால மனதுடன் இருப்பதாய் அறிகிறேன்.... அதனால் தான் ஒரு இரண்டு வருடங்களில் கட்டாயம் பாருங்கள் அவர்களே வந்து நம்முடன் இருப்பார்கள்....

    நம் அகத்திற்கு வரும் பெண்ணிற்கு நம் பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள் கற்றுக் கொடுக்கவேண்டியது உண்மைதான்... ஏன் சொல்லி கொடுங்கள் கேட்கமாட்டேன் என்று யார் சொல்வார்கள்? எல்லாவற்றையும் நிதானமாகவும் , பாசத்துடனும் கூறினால் கட்டாயம் ஏற்பார்கள் என்பது என வாதம்..

    இந்தக் காலத்துப் பெண்கள் ஒன்றும் எதுவும் தெரியாதவர்கள் இல்லை.... நீங்கள் முழுக்க முழுக்க பெண் பென்றவர்கள் மீது குற்றம் சொல்வது சரி இல்லை என்பது எனது கருத்து ... மன்னிக்கவும் தயவு செய்து...

    இங்கு ஒன்று பதிவு செய்ய விரும்புகிறேன்... நான் மிகவும் செல்லமாய் வளர்ந்தவள்.... ஆச்சார அனுஷ்டான குடும்பம் என்பதால் சமையல் அறைக்கு சென்றதே மிகவும் மிகவும் குறைவு... ஆனால் சமையல் முழுதும் நானே தெரிந்து கொண்டேன்.... வீட்டு வேலைகள் எல்லாம் செய்ய விருப்பமும் கூட ... நான் திருமணம் முன்பும் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன் இப்பவும் பார்கிறேன்... நான் திருமணம் ஆகி சென்றது கூட்டுக் குடும்பத்தில்... என் அம்மா அது கூட்டுக் குடும்பம் அதனால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று சந்தோஷத்தில் இருந்தாள்... ஆனால் அவர்களோ முதல் நாளே தங்கள் குடும்ப வழக்கப் படி எல்லாம் செய்ய விரும்பினர்.. அது எப்படி சாத்தியம்? பீன்ஸ் நறுக்கும் விதத்தில் கூட வேறுபட்டது.... எத்தனை கேலி, கிண்டல் தெரியுமா? அது மட்டும் அல்ல... இவள் படித்தவள் அதனால் இவளுக்கு ஒன்றும் தெரியாது என்பதில் உறுதி..திமிர், திமிர் என்ற பட்டம் வேறு... எதற்கு என்று இன்றும் விளங்கவில்லை.... அதை மீண்டும் மீண்டும் சொல்லி குத்தி காண்பிப்பார்கள்... மன வேதனைப் படும்... புரிந்து கொள்ளுதல் என்பது இரு பக்கத்திற்கும் பொருந்தும்...

    நீங்கள் ,பெண்ணைப் பெற்று வளர்த்து ஒன்றுமே தெரியாமல் அப்படியே அனுப்பி விடுவதாய் சொல்கிறீர்கள்... இது என்னைப் பொறுத்த வரையில் தவறு.... ஒன்று இரண்டு பேர் அப்படி இருக்கலாம்.. அப்படி இருந்தால் தான் என்ன? நம் பெண்ணிற்கு சொல்லி தருவது போல் சொல்லி கொடுத்தால் என்ன? அப்புறம் எதற்கு கூட்டுக் குடும்பம்?

    எப்படி இருந்தாலும் கூட்டுக்குடும்பம் சிறந்தது தான்... மனம் ஒன்றினால்... இல்லையேல் தனித்திருந்து கூடி வாழ்வோம்....

    நன்றியுடன்... மைதிலி ராம்ஜி
     
    1 person likes this.
  6. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    @krishnaamma , maa yours comment is 100% correct. Superb comment :thumbsup
     
    1 person likes this.
  7. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Thanks Uma :)

    நன்றி உமா :) நாம் எல்லோருமே அனுபவங்களை வைத்து த்தானே எழுதுகிறோம் அது அவங்க அனுபவம் மேலே நான் சொன்னது என் அனுபவம்.....

    நம் வீட்டுக்கு வரும் பெண்ணுக்கு, இனி 'இது தான் அவளுடைய வீடு' என்பதை புரிய வைக்க நாம் தான் மெனக்கெடணும், இத்தனை நாள் அவள் இருந்தது அவள் அம்மாவின் வீடு, இப்போ வந்திருப்பது தான் அவளின் வீடு என்று புரிய வைக்கணும்.....இதற்கு கொஞ்ச காலம் ஆகும், நாம் தான் பொறுமையாய் காத்திருக்கணும்....நம் செய்கைகளால் அவளை உணர வைக்கணும்.

    இது மாமியாரின் தலையாய கடமை. பிள்ளையின் கடந்த காலம் அம்மா, வரும்காலம் மனைவி, ஆனால் இப்போ எல்லோரும் இருப்பது நிகழ் காலத்தில், எனவே , அவன் கடந்த காலம் மற்றும் எதிர்காலம் என்னும் இரட்டை மாட்டு வண்டியை இப்போ நிகழ் காலத்தில் செலுத்துபவனாகிறான்........

    ஒவ்வொரு ஆணுக்கும் இது ரொம்ப கடினமான வேலை, நாம் பெண்கள் சத்தமாய் பேசி, அழுது காரியம் சாதிப்போம், ஆனால் பாருங்கள் நம் ஆண்கள் எத்தனை எத்தனை வலியை மனதில் தாங்கிக்கொண்டு காலம் கடத்துகிறார்கள்?....................:)

    அதனால் தான் சொல்கிறேன் கல்யாணத்துக்கு முன்பே குழந்தைகளுக்கு தழைந்து போவது, விட்டுக்கொடுப்பது, பெரியவங்களுக்கு மதிப்பு தருவது என்று எல்லாம் சொல்லித்தாங்கோ என்று....நிறைய சண்டை சச்சரவுகளுக்கு காரணம் ஈகோ தான்............நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்றுதான், முளைத்து 3 இலை விடாத , வரும் மாட்டுப்பெண்ணே இப்படி பேசினால், அதே வீட்டில் வாழ்ந்து கொட்டைபோட்ட முதிர்ந்த பெண்மணிக்கு ஈகோ இருக்காதா?..சொல்லுங்கள்??????

    இவங்க வீட்டுக்குத் தான் அவள் வருகிறாளே தவிர, அவ வீட்டுக்கு இவர்கள் போகவில்லையே?............ஸோ, என்னைப்பொருத்த வரை, நாம் தான் அவங்க வீட்டுக்கு போகிறோம், அதாவது' புகுந்த வீட்டுக்கு' போகிறோம்..........நம் பேரின் பின் பாதியைக்கூட, நாம் அன்று வரை வணங்கிய குலதெய்வத்தைக் கூட மாற்றிக் கொள்கிறோமே, எதற்கு?............

    நாம் ஆசை ஆசையாய் மணந்த கணவனுக்காகத்தனே?.................:) அப்படி இருக்க நமக்காக நம்மின் ஆசைக்கணவனை பெற்று இந்த அளவிற்கு வளர்த்தவர்களுக்கு கொஞ்சம் மரியாதை தந்து அவங்க சொன்ன பேச்சைக் கேட்டால்தான் என்ன? :)

    இங்கு தான் பெண்ணை பெற்றவர்கள் ( நிறைய பேர் தப்பு செய்கிறார்கள்)..............'அங்கு போய் அனுசரித்து போ' என்று சொல்வதற்கு பதில், இவங்களே, முடிந்தால் பாரு இல்லாவிட்டால் டைவேர்ஸ் வாங்கிவிடலாம் , நீ என்ன சமையக் காரியா? என்று கொம்பு சீவி விட்டு அனுப்புவார்கள்.............. எல்லோருக்கும் ஏனோ சமைப்பது என்பது அடிமைத்தொழில் போல கண்ணை உறுத்துகிறது.............எவ்வளவு புனிதமான வேலை அது?...........

    எங்கள் சொந்தக்காரப் பெண் ஒருத்தி, இப்படித்தான் இப்போ பிறந்த வீடு வந்து விட்டாள், சீமந்தம் ஆனா கையோடு....பெண்ணை பெற்றுக்கொண்டு இங்கு அம்மா ஆத்திலே இருக்கா:(..............இதைப் பார்த்த எங்கள் உறவுக்காரப் பையன் சொன்னதை இங்கு அப்படியே போடுகிறேன், " முதலில் கல்யாணம் ஆனா பெண்ணகளை ஒரு 3 மாதமாவது அவங்க அவங்க ஆத்தாகாரிக்கிட்ட செல் போனில் பேசவேணாம் என்று கேட்டுக்கொள்ளுங்கள், வேண்டுமானால் எல்லோரும் இருக்கும்போது லேன்ட் லைன் இல் பேசட்டும், இரவு சண்டை கணவனுடன் என்றால், அது காலை இல் சரியாகிவிடும், இப்போ என்னடா வென்றால் இவ உஅட்னெ, அவங்களுக்கு போன் செய்து சொல்லி, காலை விடியும் முன் அவங்க , இவங்க விட்டுக்கே வந்து விடறாங்க , கூட இருக்கும் மாமியார் மாமனாருக்கே, அவங்க வந்து தான் இவங்க சண்டை தெரியும்..என்ன கொடுமை பாருங்கோ , வந்தவள் சின்னப்பெண், ............இங்கு ஒத்துப்போக கொஞ்சம் டைம் எடுக்கும், அதுக்கான நேரத்தைத் தராமல் , எங்க ஆபீஸ் களில் கூட புதியதாய் வந்தவர்களுக்கு 3 மாசம் 6 மாசம் என்று ட்ரைனிங் உண்டே?.......அதுக்கு காத்திராமல், உடனுக்கு உடன், அவங்க அம்மா விடம் இங்கு நடப்பதை எல்லாம் சொல்லிக்கொண்டே இருந்தால்???????" விளைவு விபரீதமாகத்தான் இருக்கும் என்றானே பார்க்கணும்.......'யோசிக்க வேண்டிய விஷயம் தான் டா' என்று நாங்கள் சொன்னோம், வேறு என்ன சொல்ல ? :)

    சில சினிமாக்களைப் பார்த்து இப்போ குழந்தைகள் , பெருமையாய்(?) " நான் ஒருமுறை முடிவெடுத்துவிட்டால், அப்புறம் என் பேச்சை நானே கேட்கமாட்டேன்" என்று சொல்லிக்கொள்கிறார்கள்..எங்கே போய் முட்டிக்கொள்வது? ......இது சரியா என்று நீங்களே சொல்லுங்கோ உமா? :)......@uma1966
     
  8. krishnaamma

    krishnaamma Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    10,110
    Likes Received:
    4,378
    Trophy Points:
    490
    Gender:
    Female
    ஹா..ஹா..ஹா... உங்கள் தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லை என்று தான் நான் சொன்னேன் மைதிலி :)

    எப்படி இருந்தாலும் கூட்டுக்குடும்பம் சிறந்தது தான்... மனம் ஒன்றினால்... இல்லையேல் தனித்திருந்து கூடி வாழ்வோம்..

    இப்படி சொல்வதற்கு எதற்கு இந்த கட்டுரை, அந்த மாதிரி தலைப்பு?.............

    நீங்கள் சொல்வது போல 2 வருடம் வெளியே போய் தனியாக இருந்த எந்த ஒருத்தரும் மீண்டும் அம்மா அப்பாவிடம் வந்து சேர்ந்ததாக நான் கேள்விப்பட்டது கூட இல்லை....சாரி...............:confused2:

    அப்படியே அவர்கள் இவர்களைக் பிறகு கூப்பிட்டாலும் அது அவங்க குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் வேலைக்கே இருக்குமே தவிர, அன்பாய் மாமியார் மாமனார் என்று இருக்காது............tsk

    நீங்கள் சொல்வது போல என்னைப் போல ஏன் பிறர் இல்லை என்பது தான் எனக்கு ஆச்சரியமான விஷயம் ...........பெண்ணைப் பெற்றவர்களை நான் குறை சொல்வதாக நீங்க எழுதி இருந்தீங்க, ஆமாம் குறைதான் சொல்கிறேன், எப்படி என்னால் முடிவது அவங்களுக்கு முடியலை?...இருங்கள் விளக்குகிறேன்...............

    எனக்கு ஒரே பிள்ளை, அவன் +2 முடித்ததும் நாங்க இந்தியா வந்தோம், BE சேரும் முன், கிடைத்த அந்த 3 மாத இடைவெளியில், நான் அவனுக்கு சமையல் கற்றுக் கொடுத்து விட்டேன், இதற்கும் நான் அப்போ படுத்த படுக்கையாய் இருந்தேன், அவன் வீட்டையும் பார்த்துக்கொண்டு, சமைத்தும் போட்டான்...........:kiss.

    அவனுக்கு நான் கத்துக் கொடுக்க காரணம், இன்று எல்லா பிள்ளைகளும் வேலைக்காக பல ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பறக்கிறார்கள், நாங்கள் பிராம்மணர்கள், எனவே எங்கு போனாலும் சாப்பாடு கஷ்டம் இருக்கக் கூடாது என்று தான் அவனுக்கு, தனக்கு தேவையான உணவைத் தானே செய்து கொள்ளும்படிக்கு கற்றுக்கொடுத்தேன்.......எப்பவும், எங்கும் உதவும் என்று..........

    எங்கள் வீட்டில் என் தம்பிகள் என் கணவர் , என் மாமாக்கள் என எல்லோருமே சமைப்பார்கள் :) :thumbsup

    இப்படி ஒரு ஆண் பிள்ளைக்கே என்னால் சொல்லித்தர முடிந்த பொது ஒரு பெண்ணைப் பெற்றவள் , தன் மகளின் எதிர்காலத்துக்காக ஏன் சொல்லிக் கொடுக்க கூடாது? என்று கேட்கிறேன்...........இங்கு வந்தும் கத்துக்கலாம் ஒன்றும் இது ப்ரும்ம வித்தை இல்லைதான்.....நான் குறை சொல்கிறேன் என்று நீங்கள் சொன்னதால் இதை எழுதினேன் ............

    ஏன் என்றால் , அவங்களுக்கே சமைப்பது கவுரவக் குறைச்சல்.............அது தான் ப்ரோப்ளேம்............

    உங்களுக்கு ஏற்ப்பட்ட கசப்பான நிகழ்வு உங்களை அப்படி எழுத வைத்திருக்கு, எங்க வீடு பழக்கம் என்னை அப்படி எழுத வைத்தது :)...........அவ்வளவுதான்!

    எங்க அம்மா சொல்வா, " கல்லும் முள்ளும் நிறைந்த இடத்தில் ஒரு பாதை அமைத்து நாம் செல்வதை விட, ஏற்கனவே இருக்கும் ஒற்றை அடிப் பாதை இல் போனால், போகவேண்டிய இடத்துக்கு சீக்கிரம் போய் சேரலாம் " என்று.........அது இங்கும் பொருந்தும்..............

    வீட்டுப் பெரியவர்களைப் பார்த்து, இப்படி இருக்கணும் என்று கத்துக்க என்ன கஷ்டம்?.....புரியலை...........முதல் இரண்டு வருடத்திலேயே ஒட்டாத உறவு பின் எப்பவும் ஒட்டவே ஒட்டாது என்பது என் கருத்து, எனவே, இத்துடன் என் பின்னூட்டத்தை முடிக்கிறேன்.

    அன்புடன்,
    கிருஷ்ணாம்மா :)
     
  9. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    தங்களின் பதில்கள், திறனாய்வு என்னை மிகவும் கவர்ந்துள்ளது.... தங்களைப் போன்று ஒருவருடன் கலந்துரையடுவதில் பெருமிதம் அடைகின்றேன்...

    தாழ்மையுடுன் சில கருத்துக்களை கூற விரும்புகிறேன்...

    என் தலைப்பு --" கூட்டுக்குடும்பம் - சுகமான காற்று..... " நீங்கள் இதை ஒப்புக்கொள்கிறீர்களா இல்லையா? நான் ஒப்புக்கொள்கிறேன்... என் விருப்பம், எண்ணம் எல்லாமே ஒரு கூட்டுக்குடும்பத்தில் சுகமான காற்று என்றும் வீச வேண்டும் என்பதுதான்....

    இதற்கு தேவை, பொறுமை, விட்டுக்கொடுத்தல், புரிந்து கொள்ளுதல், ஈகோ இல்லாமல் இருத்தல் இவையே..... இவற்றில் ஒன்று இல்லையென்றாலும் சுகமான காற்று புயலாய் வீசும் என்பது என் பதிவு ... இது சரிதானே.?..

    நான் கூட்டுக் குடும்பத்தை ஆதரிப்பவள்.... நான் தனிக் குடுத்தினம் வைக்க வேண்டும் என கூறியதற்கு காரணம் --

    ஒரு பெண் தான் வளர்ந்த வீட்டை விட்டு புக்ககத்தில் நுழைகிறாள்... இததனை வருஷங்கள் வாழத வீட்டை விட்டு முற்றிலும் புதியதான ஒரு சூழ்நிலைக்கு செல்கிறாள்.. இது கால காலமாய் நடந்து கொண்டிருக்கிறது.... நீங்களும் ஒரு பெண் நானும் ஒரு பெண்..... எல்லா சிக்கல்களையும், இன்னல்களையும், சுகங்களையும், பாசத்தையும், பரிவையும் சுமந்துதான் இன்று நிற்கின்றோம்.... இல்லை என்று யாரும் மறுக்க முடியாது..... சூழ்நிலைக்கு ஏற்ப மாமியாரும் சரி , மாட்டுப் பெண்ணும் சரி ஒன்று இணைந்து நல்ல இல்லறம் அமைந்தால் நல்லது... இல்லையேல் புரிவதற்கு சற்று நேரம் ஆகும் இல்லையா? அதற்கு சற்று தள்ளி இருக்கட்டுமே என்பதுதான் என் வாதம்... தயவு செய்து இதை வேறு கோணத்தில் பார்க்க வேண்டாம்...
    ஒரு மாமியாராய் நீங்களும் சரி, நானும் சரி,,, ஒத்துப் போய் வரும் பெண்ணை பேணி காக்கின்றோம் என்றே வைத்துக் கொள்வோம்... அந்தப் பெண் அதை புரிந்து கொள்வாள் என்பது என்ன உத்திர வாதம்...? அந்த சூழ்நிலையில் தனிக் குடுத்தினம் சிறந்ததல்லவா?

    மாமியார் அம்மா ஸ்தானத்திலும் , மாட்டுப்பெண் தன்னை அந்த வீட்டு மகளாய் நினைத்திருப்பின் தனிக்குடுதினதிற்கு இடமே இல்லை...

    ஏனோ தெரியவில்லை... ஒரு பெண்ணிற்கு என்னதான் மாமியார் நல்லவளாக இருக்கட்டும், பாசமுடன் இருக்கட்டும். தன தாய் ஸ்தானத்தில் வைத்துப்பார்க்க மறுக்கின்றாள் .. இது உண்மை தான்... அவள் பெற்ற மகன் தனக்கு எல்லாமாய் இருக்க வேண்டும் , அவனிடத்தில் அணைத்து உரிமையும் வேண்டும் அது போல் தானும் அவனுக்காக எல்லாம் செய்வாள்....

    அம்மா என்ன சொன்னாலும் அதை பெரிசு படுத்தாதப பெண், மாமியார் தவறி ஒரு வார்த்தை சொன்னால் சுருக்கென்கிறது.... உண்மைதான்... அம்மா சொல்வது உரிமை என்றும் மாமியார் சொல்வது அதிகாரம் போல் உணருகிறாள்... இதில் தவறு என்று சொல்ல முடியாது... சற்று எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம் ...

    எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த இரு நெஞ்சங்கள் இணைந்து ஒரு அற்புதமான இல் வாழ்க்கை அமையவில்லையா ??? அவனைப பெற்றவளை நம் தாய் போல் நினைப்பதில் தவறென்ன??? சற்று முற்போக்காய் யோசிப்போமே!!!

    இப்படித்தான் நான் என்னை சமாதானப் படுத்தி வாழ்து வந்திருக்கிறேன்... இது எல்லோரும் உணர்ந்து நடந்தால் பிரச்சனையை இல்லையே... ஆனால், உண்மையில் இது சாத்தியமா என்று புரியவில்லை...

    என் அனுபவம் கசப்புகள் சற்று நிறைந்திருந்தாலும் .என் அம்மா ஒரு பொறுமையின் பிம்பம்... அவள் எனக்கு முற்றிலும் தன பொறுமையை கற்றுக்கொடுக்கவில்லை எனினும் " நல்ல குடும்பம் ஒரு கோயில்" என்பதை நன்கு உணர்த்தியவள்... எதையும் பொறுமையுடன் யதார்த்தத்தையும் உணர்ந்து நடக்கும் பண்பை கற்றுக் கொடுத்திருக்கிறாள்.... எனவே எந்த ஒரு நிலையிலும் புரிந்து நடப்பதை சிறு வயது முதலே பழகிக்கொண்டவள் நான்...

    ஒரு பெண்ணிற்கு அம்மா சமையல், வீட்டு வேலைகள் எல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.... ஒட்டு மொத்தமாக யாருமே இதை செய்வதில்லை என்று நாம் நினைக்கக் கூடாது என்பதுதான் என் பதிவு... மன்னிக்கவும்...

    நீங்கள் உங்கள் பையனுக்கு சமையல் கற்றுகொடுத்தாற்போல் நானும் கற்றுக் கொடுத்திருக்கேன்... இது பாராட்ட வேண்டிய விஷயம்.... உங்களை பாராட்டுகிறேன்... மற்றும் இதைத் தவிர நான் அவனுக்கு சில எளிய பண்புகளையும் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.... உனக்கு மனைவியாய் வருபவளும் உன்னைப் போல் ஒரு வீட்டில் மகளாய் வளர்ந்தவள்... அவளுக்கு தக்க மரியாதையும், மதிப்பும் தர வேண்டும்... அவளுக்கு உறு துணையாய் வேலைகளும் செய்யவேண்டும், அவள் பெண் தானே அவள் தான் வீட்டு வேலை எல்லாம் செய்யவேண்டும் என்ற எண்ணம் கூடாது இப்படி ..... இது தவறு என்று யாரும் நினைக்க வேண்டாம்.... பெண்களுக்கு பெண்களாகிய நாம் மதிப்பு முதலில் கொடுக்க வில்லை என்றால் ??

    உங்களைப் போல் மற்றவர்களும் இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பமும்... ஆனால் உண்மையில் அது சாத்தியம் இல்லை... நாம் எல்லோரும் நினைத்தால் முடியும்... முடித்துக் காட்ட வேண்டும் என்பது எனது கருத்து... கனவும் கூட.... விட்டுப் போன கூட்டுக் குடும்பதை நாம் திரும்பவும் கொண்டு வர பாடு பாடுவோமே..... இதில் நமக்கு பெருமை தானே....

    உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கின்றேன்.... ஓரிரு வார்த்தைகள் உங்கள் மனதை புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்... என் நோக்கம் அது அல்ல..

    நல்ல எண்ணங்களை வரவேற்கும்...

    மைதிலி ராம்ஜி
     

Share This Page