1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கூட்டம் எங்கே?

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Aug 26, 2013.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female

    தோட்டத்திலுள்ள மாமரத்தை, நான்
    நோட்டமிடுவேன் பூத்ததா என்றறிய!

    பங்குனி மாதம் பூக்களைக் காணாது,
    இம்முறை ஏன் தாமதம் என எண்ண,

    மாம்பழக் காலம் முடியும் தருவாய்;
    மாம்பூக் கொத்துக்கள் பல வருகை!

    தாமதமாய்ப் பூத்து, காய்த்து, கனிந்து,
    தாமதமாய் மாமரத்தை நிறைந்தன!

    கிளிகள், காகங்களுடன் போட்டியிட
    அணில்கள் வந்துவிடும் அதிகாலை!

    தத்தைகளின் இனிய பேச்சுக்கள், எம்
    தூக்கத்தையும் கலைக்கும் இனிதாக!

    எப்போது காய், கனிகள் முடிந்ததோ
    அப்போது பறவைகளும் மறைந்தன!

    சின்ன விஷயமே ஆனாலும், அதிலும்
    சின்னத் தத்துவமும் இருப்பது சகஜம்!

    செல்வச் செழிப்பு நமக்கு இருந்தாலே,
    செல்லம் கொஞ்ச ஒரு கூட்டம் வரும்!

    ஏதேனும் பயன் கிட்டுமென அறிந்தால்,
    மோதுவர் அலைபோல் சுற்றம், நட்பும்!

    பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை;
    அருளிய வாக்கு பொய்யாக இயலுமா?

    ஈட்டிய செல்வத்தை பாங்காய்க் காத்து,
    ஈட்டுவோம் கூட்டமாய்ச் சுற்றம் நட்பு!


    :yes:
     
    Loading...

  2. bavm

    bavm New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    0
    Trophy Points:
    1
  3. sabdhacshine

    sabdhacshine New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Very beautyful rhithmic wording...
     
  4. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thanks for the appreciation and 'like's dear friends! :)
     

Share This Page