1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குழந்தை (சிறுகதை)

Discussion in 'Posts in Regional Languages' started by iswaryadevi, Nov 12, 2010.

  1. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    குழந்தை (சிறுகதை)


    View attachment 130228


    அந்த புதிதாக திறக்கப்பட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல் வானை முட்டும் உயரத்தில் கம்பீரமாக நின்றது. வாசலில் கூர்க்கா தன காரியமே கவனமாக இருந்தார். அப்போது ஒரு சிகப்பு சட்டை மீசைக்காரன் அந்த ஹோடேலின் எதிரே வந்து நின்றான். அவர் பார்பதற்கு ஒரு பெரிய ரவுடி போல இருந்தான். இவனால் ஏதும் பிரெச்சனை வருமோ என்று ஐயத்தோடு கூர்க்கா அவனை நோட்டம் விட்டார். அவன் ஒரு அங்குலம் கூட நகராமல் அந்த இடத்திலயே நின்று ஹோடேலை வெறித்து பார்த்து கொண்டிருந்தான். ஐந்து நிமிடங்களுக்கு பிறகு இவனால் பிரெச்சனை வராது என எண்ணி மீண்டும் தன் வேலையில் கவனமானார்.

    அரை மணி நேரம் கழிந்தது. இண்டர்காமில் அந்த ஹோட்டல் முதலாளி கூர்க்காவை கூப்பிட்டார். "சின்ன கண்ணு, இன்னும் பத்து நிமிடங்களில் ஒரு மிகப்பெரிய அரசியல் பிரமுகர் வருகிறார். அவர் வரும்போது ஏதேனும் பிரெச்சனை ஏற்பட்டால் இன்று தான் நீ இங்கே கடைசியாக வேலை பார்த்த நாளாக இருக்கும். கவனமாக இரு" என கூறி தொடர்பை துண்டித்தார். சின்ன கண்ணுவுக்கு உடல் முழுதும் வேர்த்து விட்டது. இந்த வேலையை நம்பி தான் அவரும் அவர் மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். அவர் மிக கவனமாக வாசலை பார்த்தார். அந்த சிகப்பு மீசைக்காரன் அங்கே தான் இன்னும் நின்று கொண்டிருந்தான். அவர் முடிவு செய்து விட்டார். அவனுக்கு பாவம் பார்த்தால் நம் வேலை பறி போய்விடும். எப்படியும் அவனை அங்கே இருந்து வெளியேற்றி விட வேண்டும் என எண்ணியதை செயலாற்ற அவனை நோக்கி சென்றார்.

    "டேய், இங்கே எல்லாம் நிக்க கூடாது. போய் வேற வேலையை பாருடா" என்று வரவழைக்கப்பட்ட தைரியத்தோடு கூறினார்.

    "ஐயா இன்னும் சிறிது நேரம் இங்கே நின்று இந்த ஹோடல்லை பார்க்க அனுமதி கொடுங்கள்" என கெஞ்சினான்.

    "உனக்கு பாவம் பார்த்தால் என் வேலை அல்லவா போய் விடும், அதனால் இபோதே இங்கிருந்து நகரு" என சற்று கம்மியான குரலில் கூறினார்.

    "ஐயா எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இந்த ஹோட்டல் கட்டிட வேலையில் நானும் இருந்தேன். ஒரு சின்ன செங்கலில் இருந்து பிரமான்டமான கட்டிடமாக மாறியதை என் கண்களால் பார்த்து இருக்கிறேன். நான் வேலை பார்த்த கட்டிடங்கள் தான் என் குழைந்தைகள். ஒரு குழந்தையை வளர்த்து படிக்க வைத்து வேலைக்கு அனுப்பி கல்யாணம் செய்து பார்க்க எனக்கு குடுப்பினை இல்லை. இந்த கட்டிடங்களை என் குழந்தையாக பாவித்து தூர நின்று பார்க்க மட்டும் எனக்கு அனுமதி கொடுங்கள்" என கண்ணீர் வடித்தான்.

    சின்ன கண்ணு தன் கண்களில் தோன்றிய நீரை மிக சிரமப்பட்டு அடக்கி தன் இடத்தை நோக்கி மெல்ல நடந்தார்.
     
    Loading...

  2. maalti

    maalti Gold IL'ite

    Messages:
    310
    Likes Received:
    499
    Trophy Points:
    130
    Gender:
    Female
    Nice story with a small twist
     
  3. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
  4. Sarasan

    Sarasan Bronze IL'ite

    Messages:
    230
    Likes Received:
    4
    Trophy Points:
    25
    Gender:
    Female
    Nice Story Ish.........
     
  5. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    Thank you for your support in all my blogs dear :)
     
  6. Monsi

    Monsi Bronze IL'ite

    Messages:
    349
    Likes Received:
    12
    Trophy Points:
    33
    Gender:
    Female
    Cant read this one dear...:( ! Is there a translation available ?
     
  7. iswaryadevi

    iswaryadevi Platinum IL'ite

    Messages:
    3,861
    Likes Received:
    926
    Trophy Points:
    240
    Gender:
    Female
    That's so lovely of you to step in all my blogs dear. And no, I have not translated it :-(

    Hey, why don't you visit the stories sub-forum. Currently I am writing a serial thriller story. It might interest you :)
     

Share This Page