1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குழந்தைகள் விளையாடுவது எங்கே????

Discussion in 'Stories in Regional Languages' started by sugamaana07, Mar 11, 2016.

  1. sugamaana07

    sugamaana07 Silver IL'ite

    Messages:
    104
    Likes Received:
    139
    Trophy Points:
    93
    Gender:
    Female
    குழந்தைகள் விளையாடுவது எங்கே????
    ______________________________________

    ஓடு! ஓடு ! சீக்கிரம்..... இது சிறு பசங்கள் ஓடி விளையாடி மகிழ்ந்த காலம்....

    இப்போவும் ஓடு ஓடு என்கின்றனர் ...... ஆனால் கையில் மொபைல் வைத்துக்கொண்டு...... வீடியோ கேம்ஸ்...... ஒன்றும் விளங்கவில்லை....

    குழந்தைகள் நன்றாக கை கால்களை அசைத்தும் கீழே விழுந்து புரண்டும்,,,, விளையாடும் விளையாட்டுக்கள் என்ன ஆயிற்று???

    அதற்கு இப்போ நேரமும் இல்லை, இடமும் இல்லை, மனிதர்களும் இல்லை... வேதனை.... பாவம் இந்தக் காலத்து பசங்க....

    ஓடி பிடிச்சு விளையாடுவதில் சுகம்! நொண்டி விளையாடுவதில் நெகிழ்ச்சி...
    போர் கார்நெர்ஸ் என்ற விளையாட்டில் இன்பம்.... கிரிக்கட் விளையாட்டில் கலகலப்பு இவை எல்லாம் எங்கு மறைந்தன?
    பெண் குழந்தைகளோ இந்த பாண்டி விளையாடுவர் பாருங்கள்... என்ன சுகம் என்ன சுகம்.... 3 மணி நேரம் விளையாடினாலும் சலிக்காது... அழிந்தே விட்டது... வேதனைதான்... அக்கம் பக்கத்துக்கு வீட்டாருடன் கூடி விளையாடும் பொழுது சமத்துவம் பெருகும்,,, பெரியவர்கள் தங்கள் இன்ப துன்பங்களை பகிர்வார்... சந்தோஷம் நிரம்பி இருந்தது...ஏன் எல்லாமே மறைந்து விட்டது.... காலத்தின் கோலமா? மனிதரின் மாறுபட்ட போக்கா? விளங்கவில்லை...

    ஏதோ இன்று பெரிய பெரிய கட்டிடங்கள் எழும்புகின்றன ,,, அதில் குழந்தைகள் விளையாட இடம் தனி என்று விளம்பரம் வேறு?? ஒன்றும் புலப்படவில்லை...

    குழந்தைகளின் மனம் விசாலமடைய பெரிதும் உதவின மேற் கூறிய விளையாட்டுக்கள்.... இது பொய் அல்ல..... மழை ஆனாலும், கொளுத்தும் வெயில் ஆனாலும் வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டுக்கள்.... கேரம், சீட்டுக்கட்டு, தாயம் ... எங்கே இதெல்லாம்? ஏதோ புது ஊருக்கு வந்தாற்போல் இவற்றை தக்ஷின சித்ராவில் ( மாமல்ல புறம் ) போகும் வழியில் சென்று ரசிக்கின்றோம்.... மனம் குமுறுகிறது...

    காலம் மாற வேண்டும்.... குழந்தைகள் எல்லா சுகங்களையும் பெற நாம்தான் வழி வகுக்க வேண்டும்.... தவறுகள் நம்மிடத்தில் தான்... யோசியுங்கள்,,, எப்படி திரும்ப நம் குழந்தைகளுக்கு, வரும் சந்ததியர்க்கு நாம் பெற்ற சுகங்களை, இன்பங்களை தரப்போகிறோம் என்று..... வழிகள் உள்ளன....எல்லாம் நம் கையில் தான் உள்ளது...

    1. வீட்டில் இடம் இல்லை என்றால் பரவாயில்லை. ,, விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன,,,, குழந்தைகளை அங்கு விளையாட அழைத்து செல்லுங்கள்... அனுமதியுங்கள்..

    2. நேரம் கிடைக்கும் பொழுது பெரிய அழகிய மால்களுக்கு அழைத்து செல்லாமல், வீட்டில் இருக்கும் இடங்களில் அவர்களை விளையாட் விடுங்கள்... அழுக்கு பாட்டால் ஒன்றும் பாதகம் இல்லை...

    3. பூங்காக்களில் கொஞ்சம் விளையாடலாம்..

    4. படி, படி என்று அவர்களை புத்தகப் புழுவாக்காமல் அவர்கள் பெறவேண்டிய இன்பங்களை அனுபவிக்க விடுங்கள்..

    5. அக்கம், பக்கத்து வீட்டாருடன் கூடி விளையாட அனுமதி கொடுங்கள்..

    6. 2 வயதிலேயே பலே பள்ளி என்று அவர்களுக்கு ஒரு வட்டத்தை ஏற்படுத்தாதீர்கள்
    .
    கொஞ்சம் நம் பங்கு இருந்தால் இது சாத்தியம்...

    குழந்தைகளின் முன்னேற்றம் நம் வசம்தான்....!!! மறக்காதீர்..

    மைதிலி ராம்ஜி
     
    Caide likes this.
    Loading...

  2. uma1966

    uma1966 Platinum IL'ite

    Messages:
    1,192
    Likes Received:
    867
    Trophy Points:
    208
    Gender:
    Female
    மைதிலி , தங்கள் ஆதங்கத்தை அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் . அந்த காலத்தில் நாம் விளையாடிய பல்லாங்குலி எல்லாம் எங்கே என்று தெரியவில்லை. இந்த காலம் கம்ப்யூட்டர் யுகம் ஆகி விட்டது . குழந்தைகளை நாம் தான் பாரம்பரிய விளையாட்டு களை விளையாட ஊக்கு விக்க வேண்டும். இதனால் உடலும் உள்ளமும் தூய்மை அடையும் . இந்த பதிவு என்னை 1970க்கு கொண்டு சென்று விட்டது :thumbsup
     
  3. Caide

    Caide IL Hall of Fame

    Messages:
    6,460
    Likes Received:
    10,829
    Trophy Points:
    438
    Gender:
    Female

Share This Page