1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குறை ஒன்றுமில்லை.....

Discussion in 'Posts in Regional Languages' started by rajiram, Apr 17, 2011.

  1. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    குறை ஒன்றுமில்லை.....

    முன் குறிப்பு:

    தாயை இள வயதில் இழந்து, உடன்பிறப்புகளுடன்,
    தாயை ஈன்றவள் அரவணைப்பில் வளர்ந்து - தன்

    முதுமையில், தன் ஐந்து மக்களை ஒப்பிட்டு, மயங்கி,
    புதுமையான 'டிப்ரஷன்' பெற்ற அன்னைக்கு எழுதியது!

    *******************************************

    அன்பு மிகு அன்னைக்கு, ஆசை மகளின் மடல் ஒன்று;
    அன்பு மிகு வாழ்க்கைதனை எவ்வாறு வாழ்வதென்று!

    இளம் வயதில் தாய் அன்பை அறியாது வளர்ந்தீர்கள்;
    தினம் அன்பு காட்ட அவளின் அன்னையைப் பெற்றீர்கள்!

    பெண்ணாகப் பிறந்ததைக் குறைவாக நினைத்தீர்கள்;
    ஆணாக பிறக்கவில்லையே என்றும் தவித்தீர்கள்!

    சிறிய வயதில் திருமணம்; கூட்டுக் குடும்ப வாழ்வு;
    பெரிய பொறுப்புக்கள் பல ஏற்று, பாரம் சுமந்தீர்கள்!

    ஒரு கண நேரம் கூட விரயமே செய்து விடாமல், நல்ல-
    தொரு 'சகல கலா வல்லி' போலவே திகழ்ந்தீர்கள்.

    தந்தையின் சுற்றத்துக்கும், எங்களுக்கும் வேண்டி
    தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை அர்பணித்தீர்கள்.

    பாரம் அதிகமாய்ச் சுமந்து வந்த உங்களுக்கு,
    நேரம் இப்போதுதான் இளைப்பாற, மறவாதீர்!

    ஒரே போல ஒரு கை விரல்களே இருப்பதில்லை;
    ஒரே போல உம் மக்கள் இல்லாததில் வியப்பில்லை!

    உங்களின் பல்வேறு திறமைகளில் ஒரு சிலதான்,
    எங்களில் ஒவ்வொருவரும் பெற்றோம், நிஜம்தான்!

    ஒவ்வொருவர் சிறப்பை மட்டும் பாராட்டி வாழ்ந்தால்,
    ஒருபோதும் துன்பமில்லை; எல்லாமே இன்பமயமே!

    முதுமையில் உடல் வருத்தம் தெரியும்...ஆனால் அதே
    முதுமையில் அடி வைக்கும், எங்களையும் அறியுங்கள்!

    தினை அளவாய் இன்பம் பெற்றிடும்போது, அதனைப்
    பனை அளவாய்ப் பாராட்டி மகிழ்ந்திட அறிந்திடுங்கள்!

    குறை ஒன்றுமில்லை என, எப்போதும் எண்ணிடுங்கள்;
    நிறைவான மன அமைதி, என்றென்றும் பெற்றிடுங்கள்!


    பின் குறிப்பு!

    எண்பது தாண்டிய தாய்குலத்தினர் பலருக்கும்,
    இதன் பெரும் பகுதி பொருந்துமோ?

    :spin

     
    Loading...

  2. draji05

    draji05 Gold IL'ite

    Messages:
    534
    Likes Received:
    268
    Trophy Points:
    138
    Gender:
    Female
  3. SARASVADIVU

    SARASVADIVU Silver IL'ite

    Messages:
    173
    Likes Received:
    190
    Trophy Points:
    95
    Gender:
    Female
    Hello mam,

    That was indeed a touching one:bowdown

    Hope many do take the cue from your

    thought-provoking verses!

    Regards,

    Saras
     
  4. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Saras and Raji,

    Many super seniors lament that half the cup is empty when half a cup of tea is served!!

    We must thank God for his mercies and keep going with a :) .....

    Raji Ram :cheers
     
  5. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    Dear Raji...

    That was an thought provoking one...too good...
     
  6. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Malar,

    I wrote this to my mother in 2005!

    Now she has a + attitude... :thumbsup

    Cheers...
    Raji Ram:cheers
     
  7. sreemanavaneeth

    sreemanavaneeth Gold IL'ite

    Messages:
    741
    Likes Received:
    361
    Trophy Points:
    140
    Gender:
    Female
    hai RR,

    Well said தினை அளவாய் இன்பம் பெற்றிடும்போது, அதனைப்
    பனை அளவாய்ப் பாராட்டி மகிழ்ந்திட அறிந்திடுங்கள். Positive attitude should be with everyone, then automatically the self content life will cherish. Your verses are too good
     
  8. rajiram

    rajiram Gold IL'ite

    Messages:
    1,498
    Likes Received:
    280
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Thank you dear Sree! ThirukkuraL gives a lot of comparisons like this...

    Cheers, Raji Ram :)
     

Share This Page