1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

குறிக்கோள்

Discussion in 'Stories in Regional Languages' started by pgraman, Apr 8, 2010.

  1. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    friends here i attached my short story please give your valubale comments

    விருதுநகர் மாவட்டம் தொண்டாமுத்தூர் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல் பட்டு வந்தது. அன்று பள்ளி வெள்ளி கிழமை கசாப்பு கடையை போல காட்சி அளித்தது. காரணம் பள்ளி கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. நாளை பள்ளி மீண்டும் தொடக்கம். கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் ஆவலுடன் பள்ளியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அன்று முதல் நாள் வகுப்பு கடவுள் வாழ்த்தோடு தொடங்கியது. மாணவர்கள் வகுப்பு ஆசிரியருக்கு புதியவர்கள் ஆதலால் ஒவ்வொரு மாணவருடைய பெயரையும் வரிசையாக கேட்டு வந்தார் கூடவே அவர்கள் வருங்காலத்தில் என்னவாக வர ஆசை படுகிறார்கள் என்பதையும் கேட்டு வந்தார்.

    அது இந்த வகுப்பிலுள்ள மாணவர்கள் மட்டுமல்ல பள்ளி சென்று படித்த ஒவ்வொருவரும் இந்தக் கேள்வியை அதாவது வருங்காலத்தில் நீ என்னவாக வரப் போகிறாய் என்ற கேள்வியை கேட்டிருப்பார்கள் தாங்களும் ஏதாவது ஒரு பதிலை கூறியிருப்பார்கள் ஆசிரியர் அதற்க்கு நல்லது (வெரி good) என்று கூறியிருப்பார்கள். இதே போல் அந்த வகுப்பிலும் முதலாவதாக ஒரு மாணவன் எழுந்து தன பெயரையும் thaan வருங்காலத்தில் வக்கீலாக வர vendum என்றும் கூறினான் அதற்க்கு ஆசிரியர் நல்லது (வெரி good) என்று koori அம்மாணவனை அமரும் படி கூறிவிட்டார். இதே போல் ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் பெயரையும் வருங்காலத்தில் தாங்கள் டாக்டராகவும் , engineeraagavum , விஞ்ஞானியாகவும், அரசியல் வாதியாகவும், collectoraagavum வர வேண்டும் என்ற தங்கள் ஆசைகளை தெருவித்தனர் அனைவருக்கும் ஆசிரியர் நல்லது (வெரி good) என்று கூறி விட்டு அன்றைய பாடத்தை எடுக்க ஆரம்பித்து விட்டார்.

    இந்த கிராமத்திற்கு பக்கத்து கிராமத்தில் மற்றொரு அரசு பள்ளி செயல் பட்டு வருகிறது. அந்த பள்ளியும் அன்று தான் தொடங்கியது. முன்பு பார்த்த பள்ளியை போலவே இந்த பள்ளி ஆசிரியரும் மாணவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் பெயரையும் ஆசையும் கேட்டார். மாணவர்களும் அந்த பள்ளி மாணவர்களை போலவே பதில் அளித்தனர். ஆனால் இந்த ஆசிரியர் அந்த பள்ளி ஆசிரியரை போல் அல்ல. மாணவர்கள் கூறி முடித்ததும் ஆசிரியர் முதலாவதாக கூறிய மாணவனை அழைத்து மீண்டும் ஒருமுறை கூறும் படி பணித்தார். அந்த மாணவனும் தன ஆசையை கூறினான். அதற்க்கு ஆசிரியர் அம்மானவனிடம் நீ நிச்சயமாக உன் ஆசைப்படி ஆகா வேண்டுமா என்று கேட்டார். அம்மானவனும் ஆம் என்றான். ஆசிரியர் அப்படியானால் நீ ஆசை பட்ட துறையை உன் குறிக்கோளாக வைத்து கொண்டு நான் கூறும் விசயங்களை கடைப்பிடித்து நடந்தால் நீ ஆசை பட்ட துறையை நிச்சயம் அடையலாம் என்று கூறி அவன் என்னென்னவற்றை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் கூறிவிட்டு அம்மானவனிடம் நீ இதை இப்பொழுது இருந்தே இதனை பின்பற்றி உன் குறிக்கோளை அடைய முயற்சி செய்தால் நீ நினைத்த துறையை எளிதாக அடியலாம் என்று கூறினார். இதே போல் வகுப்பிலிருந்த ஒவ்வொரு மாணவனையும் அழைத்து ஒவ்வொருவரும் தங்கள் ஆசைபாட்ட துறையை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை கூறினார். மீண்டும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவாக ஒரு அறிவுரை கூறி மாணவர்களுக்கு படிப்பின் மேல் ஒரு ஆசையை ஏற்படுத்தினார். அன்றைய தினம் முழுவதும் ஆசிரியர் இதற்காகவே செலவிட்டார்.

    சில ஆண்டுகள் கழித்து அந்த மாணவர்களை பார்த்தால் முதலாவதாக கூறிய பள்ளி மாணவர்களில் ஒரு சில மாணவர்களே தாங்கள் ஆசைப்பட்ட துறையை அடைந்திருந்தானர். ஆனால் இரண்டாவது பள்ளியில் மேற்கொண்டு படித்த மாணவர்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் தாங்கள் ஆசை பட்ட துறையை அடைந்திருந்தனர்.

    பெரும்பாலான மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்தவொரு குறிக்கோளும் இன்றி முடிவை நோக்கிய தங்கள் நெடும் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தால் அவனுக்கோ அவன் நாட்டுக்கோ எந்தவொரு பயனும் இல்லை. அது ஒரு வெட்டி பயணம். ஆனால் நாம் கண்டிப்பாக பயணம் செய்தாக வேண்டும். நம்மால் பயணத்தை அதாவது வாழ்கை பயணத்தை நிறுத்த இயலாது.

    ஆகவே குறிக்கோளற்ற வேட்டிபயனத்தை மாணவர்கள் விட்டொழித்து குறிக்கோளுடன் கூடிய வெற்றிப்பயணத்தை மாணவர்கள் அனைவரும் தொடங்க வேண்டும். இது ஒவ்வொரு தனி மாணவனாலும் ஆசிரியராலும் மட்டுமே முடியும்.

    ஆகவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அவர்களுடைய குறிக்கோளையும் அந்த குறிக்கோளை மாணவர்கள் எவ்வாறு அடையலாம் என்ற வழிகளையும் அவர்களுக்கு எடுத்து காட்டும் நல்ல வழிகாட்டியாகவும் செயல் பட்டால் நாட்டின் தூண்கள் மிகவும் வலிமையுடன் தயார் ஆவார்கள்.

    குறிக்கோளுடன் கூடிய நெடும் பயணம் வெற்றியில் முடிவடைந்து பின் சந்தோசத்தில் இனிதே துவங்கும் என்பது உறுதி.

    நன்றி
     
    Last edited: Apr 8, 2010
    Barbiebala and Caide like this.
  2. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    மிகையும் அழகான கருத்துடன் கூடிய கதை நண்பரே!!!!!
    முதலாவதாக ஒரு ஆசிரியர் எப்படி தன் மாணவர்களின் எதிர்கால விளக்கு சுடர் விட்டு எரிய தூண்டு கோலாய் அமைய வேண்டும் என்பதே தங்களின் கதையின் முக்கிய கருத்தாய் அமைந்தது உண்மை தான் இப்பொழுது உள்ள பல ஆசிரியர்கள்( அந்த தொழிலை கடவுளாய் பாவிக்கும் சிலரை தவிர) வெறும் காசுக்காய் செய்யும் கடமையாகவே கருதுகிறார்கள்!! அப்படியல்லாமல் முதலாவதாக அவர்களுக்கு தூண்டுகோலாய் இருந்த அந்த இரண்டாவது பள்ளி ஆசிரியருக்கு ஒரு பெரிய பாராட்டு!!!
    நீங்கள் அநேகமாக அந்த பள்ளியில் தான் பயின்றிருப்பீர்கள் போல! வருங்கள கலெக்டருக்கு என் வாழ்த்துகள்!!!
    தாங்கள் கூறாத ஒரு கருத்தையும் நான் கூற விரும்புகிறேன் தோழா!
    ஆசிரியர்கள் மட்டும் ஒரு மாணவனின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியாது அதில் பெற்றோரின் பங்கும் நிறையவே உண்டு பல பெற்றோர்கள் அதில் கவனம் செலுத்தாமல் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சம்பாதிப்பதிலேயே செலவிடுகிறார்கள்!! பெற்றோருக்கும் கவனம் தேவை தான் இல்லையா???
    அருமையான கருத்து நண்பா மேன்மேலும் படைத்திட என் வாழ்த்துக்கள்!!:thumbsup
     
  3. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    கண்டிப்பாக யம்ஸ் பெற்றோர் மிக முக்கியம்
    ஆசிரியர் - சாலையை வடிவமைப்பவர்
    பெற்றோர் - சாலையை உருவாக்குபவர் அதாவது சாலையை போடுபவர்
    மாணவன் - அந்த சாலையில் நடந்து சென்று இலக்கை அடைபவன்
    correcta யம்ஸ்
     
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    aamaam ram adhil nadandhu sellum iru kaalgalaai thanambikkayum vidaamuyarchiyum!!!:thumbsup
     
  5. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,597
    Likes Received:
    28,768
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Dear Raman

    Good story. Nice of the teacher to show the way to achieve their aim.
    If we struggle hard to achiev our goal, then we can achieve it

    viji
     
  6. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you viji ma for your valuable fb
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    ராம் அருமையான ஆசானைப் பற்றிய கதை.
    ஆசான் சொல்லிய வண்ணம் பின் பற்ற வேண்டிய கருத்து.

    மாணவர்கள் குழைந்த மண், குழந்தை மண்ணும் கூட.
    அதை நல்ல மண் பாண்டம் ஆக்குவதும், பாழ் ஆக்குவதும் குயவன் எனும் நல்ல ஆசான்.

    ஒரு நல்ல ஆசானிடம் பயின்றதன் பலன் கண் கூடாக தெரிகிறது உங்கள் உருவில். வாழ்த்துக்கள் ராம்.
     
  8. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you nats
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மிகவும் அருமையான கதை ராம். ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் எனபதற்கு நல்ல உதாரணம். உடம்பை ரணமாக்கும் ஆசிரியர்களுக்கு நடுவே இப்படி மாணவர்களை லட்சிய வாதிகளாக ஆக்கும் ஆசிரியர்கள் தான் வேண்டும். வருங்காலம் கலாம் காலமாக இருக்க இது போன்ற ஆசிரியர்கள் தான் நல்ல களம் அமைத்துத் தருபவர்கள்.

    நீங்கள் கூட அந்த ஆசிரியரிடம் தான் பயின்றீர்களோ??? உங்கள் லட்சியம் உங்கள் வசமாக வாழ்த்துக்கள் ராம். மிக அருமையான கதையை பகிர்ந்தமைக்கு நன்றிகள் உங்களுக்கு
     
  10. pgraman

    pgraman Gold IL'ite

    Messages:
    3,640
    Likes Received:
    208
    Trophy Points:
    160
    Gender:
    Male
    thank you venimohan
     

Share This Page