1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கிருஷ்ணஜெயந்தி

Discussion in 'Regional Poetry' started by periamma, Aug 12, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    கண்ணனை கார்மேகவண்ணனை
    கொஞ்சி விளையாட ஆசை
    சீடை முறுக்கு அப்பம் அவல் வைத்து
    அன்புடன் அழைத்து பார்த்தேன்
    அவன் வரவில்லை
    கலயம் நெறைய வெண்ணெய் நிரப்பி
    உறியில் வைத்து ஒளிந்து நின்று
    எட்டி எட்டி பார்த்தேன்
    அவனை காணவில்லை
    கெஞ்சினேன் கதறினேன்
    அவன் மசியவில்லை
    சோர்ந்து அமர்ந்திருந்தேன்
    யாரோ கூப்பிடும் குரல் கேட்டேன்
    அங்கும் இங்கும் தேடினேன்
    ஆள் அரவம் இல்லை
    மீண்டும் அதே குரல்
    முட்டாள் பெண்ணே
    உன் மனத்தில் எனை சிறை வைத்து விட்டு
    வரவில்லை வரவில்லை என்று
    அழுது புலம்புகிறாயே
    ஊனக்கண்ணால் தேடுவதை நிறுத்து
    ஞானக் கண்ணால் உற்று பார்
    நான் உன்னுள்ளே என்றும்
    நிலையாக இருக்கிறேன்
    என் குழலோசையே உன் சுவாசக்காற்று
    அனுபவித்து கேள் எனை உணர்வாய் நீ
     
  2. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    :clap2::clap2::clap2: Super maa. கண்ணனை அழகாய் அழைத்துவிட்டீர்கள் கிருஷ்ணஜெயந்தி க்கு.
     
    periamma likes this.
  3. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    கண்ணனை எங்கு காண வேண்டுமென்பதை அழகாகச் சொல்லிவிட்டீர்கள் ! மன அழுக்குகள் நீங்கி, இதயம் நிர்மலமாகி, ஞானக்கண் திறந்து அந்தப் பரம்பொருளைக் காணும் பேறு எல்லோர்க்கும் கிட்டட்டும் !
     
    periamma likes this.
  4. SubashiniMahesh

    SubashiniMahesh Senior IL'ite

    Messages:
    28
    Likes Received:
    21
    Trophy Points:
    23
    Gender:
    Female
    மிகவும் அருமை ..
     
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி லக்ஷ்மி .தாமதமான நன்றியை ஏற்று கொள்ளவும்
     
    jskls likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    நன்றி பவித்ரா.பேரப் பிள்ளைகள் என் லேப்டாப்பில் விளையாடி கொண்டு இருக்கிறார்கள் .அதனால் உடனே பதில் சொல்ல முடியவில்லை .
     
    PavithraS likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மிக்க நன்றி சுபாஷிணி மகேஷ்
     
  8. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    உங்கள் இஷ்டதெய்வத்தை மிக அழகாக காட்டி புரிய வைத்தீர்கள். பாராட்டுக்கள்.
     

Share This Page