கூட்டுக் குடும்பம் காணாமல் போய் பலகாலம் ஆச்சு- இப்போ தனிக்குடும்பமும் திசைக்கொன்றாய் பிரியலாச்சு கணவன் ஓரிடம் மனைவி ஓரிடம் வேலை பார்க்கலாச்சு பிள்ளைகளும் படிப்பதற்கே ஹாஸ்டலுக்குப் போகலாச்சு தப்பித்தவறி எல்லோரும் ஓரிடத்தில் அமர்ந்திரிந்தாலும் ஒவொருவர் கையிலும் உள்ளதொரு அலைபேசி வாட்சப்பில் குருறுஞ்செய்தி பதிவு செய்கிறார் ஒருவர் மற்றொருவர் காதொலியில் பாட்டு கேட்கிறார் மூத்தகுடி மக்களுக்குமே முதியோர் இல்லம் வந்தாச்சு அவர்களுக்குமே அது ரொம்ப பிடித்ததாகிப் போச்சு பலகாலம் உழைத்து உழைத்து உடலும் தளர்ந்து போச்சு ஏச்சும் பேச்சும் கேட்டு மனசும் தளர்ந்து போச்சு விஞ்ஞான வளர்ச்சியாலே உலகமே கைப்பிடியிலே ஆனாலும் வீட்டுக்குள்ளே தனி உலகம் வந்தாச்சு அக்கம் பக்கம் இருப்பவர் யாருனே தெரியாது ஆஸ்திரேலியாவில் இருப்பவருடன் அளவளாவலாச்சு
I guess your thanks for my fb. It was in April and now you have propped up this thread and that will catch moreeye balls from tamil readers/followers. Seeking your blessings T