1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காலம் இதுவே இதுவே....!!!!!!

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 30, 2010.

  1. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    வாட்டும் சுமைகளை மறந்து விட்டு
    வறுத்தெடுக்கும் துன்பங்களை துடைத்தெறி
    புதைந்து இருக்கும் திறமைகளை புதுப்பித்து
    புது வேகம் காட்ட புறப்படு நீ !

    விதைத்து வைத்த கனவுகளுக்கு
    விளைச்சல் காலம் இதுவென்று
    உன்னுள் பதுங்கி கிடக்கும் திறனெல்லாம்
    பூம் புனலாய் பொங்கிட புறப்படு நீ!!!!

    அடங்கிக் கிடக்கும் அலட்சியங்களுக்கு
    அறுவடை காலம் இதுவென்று
    உன் குருதியில் துஞ்சும் அணுவெல்லாம்
    உடைபட்டு உயிர்த்தெழ புறப்பட்டு நீ!!!

    எதைச் செய்ய முடியும் என்னால்
    என்று அவநம்பிக்கையுடன் துவளாதே
    கடல் போல் நம்பிக்கை இருந்தால்
    கரை சேர்ந்த பின் வெற்றியின் கிரீடங்கள் உனதே.

    என்னால் முடிந்தது என்றால்
    அது உன்னாலும் முடியுமே.
    எனகென்று ஒரு உலகம் உண்டானால்
    அதில் உனக்கென்றும் ஓரிடம் உண்டாமே.

    உனக்கென்று ஒரு உலகம்.
    உனக்கென்று ஒரு காலம்.
    உனக்கென்று ஒரு வாழ்வு .
    உனக்கென்று ஒரு முகவரி.

    உனக்கே உனக்காய் மலருது ஒரு புது யுகமே
    உன்னால் முடிந்ததை காட்ட காலம் இதுவே இதுவே!!!!!!!!
     
    Last edited: Jul 31, 2010
    Loading...

  2. ramyaraja

    ramyaraja Gold IL'ite

    Messages:
    1,622
    Likes Received:
    160
    Trophy Points:
    130
    Gender:
    Female
    புத்துணர்ச்சி ஊட்டும் வரிகள் சரோஜ்.. அருமையான கருத்துக்கள்.. அருமையான வார்த்தைகள்.. நாளை மட்டும் இல்லை இன்றும் நமதே..:bowdown
     
  3. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,480
    Likes Received:
    2,464
    Trophy Points:
    338
    Gender:
    Female
    :wowவரிகள் ஒவ்வொன்றும் கல்வெட்டுக்களாய் செதுக்க பட வேண்டியவை!! :bowdown:bowdown
     
  4. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Varigal migavum arumai Saroj..........
     
  5. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    சோர்ந்து போன எவருக்கும் உன் வரிகள் உற்சாகமூட்டி, உத்வேகம் தரும்.

    காலம் இது உனை நீ காட்ட
    காலம் அதை நீ மீட்டி
    வெற்றியதை நீ ஈட்டு...

    அழகு வரிகள் தோழி. ஆத்ம பலம் தரும் உன் விரல் வழி பூத்த இந்த வரி மலர்கள் :thumbsup
     
  6. chitrajaraika

    chitrajaraika Platinum IL'ite

    Messages:
    8,651
    Likes Received:
    260
    Trophy Points:
    220
    Gender:
    Female
    அடங்கிக் கிடக்கும் அலட்சியங்களுக்கு
    அறுவடை காலம் இதுவென்று
    உன் குருதியில் துஞ்சும் அணுவெல்லாம்
    உடைபட்டு உயிர்த்தெழ புறப்பட்டு நீ!!!

    Yennai eertha varigal migavum arumai ungal kaalam ithuvey kavithai
     
  7. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    பொங்கும் புது வெள்ளம் போல் புறப்பட தூண்டும் வரிகள்,
    புத்துணர்ச்சி ஊட்டி சாதிக்க தூண்டும் வரிகள்,
    தூண்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நன்றி தோழியே.உங்கள் வருகைக்கும் வளமான வார்த்தைகளுக்கும்
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    என் கல்வெட்டு வரிகளை உங்கள் மனவேட்டில் நிறுத்தி கொடுத்த பாராட்டுக்காய் நன்றி
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சிரத்தையாய் படித்து கொடுத்த பதிலுக்கு நன்றி தோழியே
     

Share This Page