1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"காற்றாய் வருவேன், காத்திரு கண்ணே"

Discussion in 'Regional Poetry' started by suby, Nov 13, 2010.

  1. suby

    suby Silver IL'ite

    Messages:
    110
    Likes Received:
    96
    Trophy Points:
    68
    Gender:
    Male
    "காற்றாய் வருவேன், காத்திருகண்ணே"
    ஓரு பேருந்தின் பின் எழுதிருந்த சொற்க்கள்.
    புயலின் வேகம், தென்றலின் மென்மை-
    காற்றாய் வீசியது அந்த காதல் சொற்க்கள்.

    என் காதல் ஒவியத்தில் படர்ந்த காலத்தின் தூசியை
    துடைத்து சென்றன அந்த சொற்க்கள்.
    மேகங்களை அகற்றி என் வெண்ணிலவை காட்டி
    புத்துணர்ச்சியூட்டியது அந்த காதல் சொற்க்கள்.

    படத்திலிருந்து பார்க்கும் அந்த விழிகளில்,
    என்னை அன்று கவர்ந்த காந்தம் மங்கவில்லை.
    என்னை கொள்ளை கொண்டு போன அந்த முகத்தில்,
    அழகு இன்றும் குன்றவில்லை.

    என்னை அன்று வீழ்த்திய அந்த பாணம்,
    இந்த ஒவியத்தில் தெரியும் புன்னகை தான்.
    என் மயக்கத்தை நீக்கி துணை கொடுத்தது
    இந்த ஒவியத்தில் மறைந்த உள்ளம் தான்.


    அன்று முதல் முறை அவளை பார்த்தேன்,
    மின்சாரம் பாய்ந்தது என் உடலில்.
    சந்திரனை பார்த்த கடலின் கதி போல்,
    அலைகள் எழும்பின என் இதயத்தில்.

    கடலால் அலைகளை அடக்க முடியவில்லை,
    கரையை கடக்கவும் முடியவில்லை.
    இறைவா, நிலையை கெடுக்கும் நிலவை, உன்னால்
    காட்டாமலிருக்கவும் முடியவல்லை.

    எப்படி பேசுவது என்று தயக்கம்.
    அவள் மறுத்தாலோ என்று அச்சம்.
    இடி போல் தாக்கும் இதய துடிப்புகளில்
    இதயமே வெடித்து விடுமோ என்று அச்சம்.

    ஒருநாள், கொந்தளிக்கும் அலைகளிலே
    என் காதல் படகை விட துணிந்து விட்டேன்.
    தயக்கத்தின் நஙூகூரத்தை அகற்றி விட்டு
    இதய துடிப்புகளின் துடுப்புகளை இயக்கி விட்டேன்.

    என் மனதை அவளிடம் சொல்லி விட்டேன்.
    சிறு அவகாசத்தின் பிறகு, என் அழைப்பை அவள் ஏற்று கொண்டாள்.
    நான் நீட்டிய கையை பிடித்து கொண்டாள்.
    என்னுடைய படகில் அவள் ஏறி கொண்டாள்

    நடந்து போன என் காதல் கதையை
    நினைவூட்டியதற்கு நன்றி, நண்பா.
    முடி நிறைக்கும் பருவத்தில், என் வாலிபத்தை உணர்த்தி
    புத்துணர்ச்சி ஊட்டியது நீ, நண்பா.

    "காற்றாய் வருவேன், காத்திரு கண்ணே"
    என்னை கவர்ந்தன உன் சொற்க்கள்.
    உன் காதல் உள்ளத்தை அறிந்த இறைவன்,
    வைக்க மாட்டான் வழியில் கற்க்கள்.

    நீ வெற்றி அடைவாய், என் நண்பா.
    உன் காதலை அடைவாய், நீ நண்பா.

    -- சுபி
    (suby)
     
    Loading...

  2. Ramavyasarajan

    Ramavyasarajan Silver IL'ite

    Messages:
    1,523
    Likes Received:
    24
    Trophy Points:
    68
    Gender:
    Female
    arumaiyana kavithai subi.

    Ramayasarajan
     
  3. suby

    suby Silver IL'ite

    Messages:
    110
    Likes Received:
    96
    Trophy Points:
    68
    Gender:
    Male
    பாராட்டியதற்க்கு மிக்க நன்றி.
    -சுபி
     
  4. ranisuresh

    ranisuresh Senior IL'ite

    Messages:
    340
    Likes Received:
    2
    Trophy Points:
    18
    Gender:
    Female
    arumaiyana kavidai... Ungal Nanban vettri pera vazhthukkal....

    Keep writing....
     
  5. suby

    suby Silver IL'ite

    Messages:
    110
    Likes Received:
    96
    Trophy Points:
    68
    Gender:
    Male
    Thanx a lot for the encomiums. My friend is an unknown person who scribbled that romantic line on the back of a bus. Thanx that he rekindled my memories.

    -- suby

     
  6. swathi14

    swathi14 IL Hall of Fame

    Messages:
    7,587
    Likes Received:
    1,602
    Trophy Points:
    345
    Gender:
    Female
    "காற்றாய் வருவேன், காத்திருகண்ணே"
    lovely & romantic lines. the outcome is a romantic kavidhai from subi.

    i enjoyed reading it.

    andal
     
  7. suby

    suby Silver IL'ite

    Messages:
    110
    Likes Received:
    96
    Trophy Points:
    68
    Gender:
    Male
    Glad that you enjoyed the poem. Thanks for the encouraging words.

    -- suby

     

Share This Page