1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காரணம்?

Discussion in 'Regional Poetry' started by rgsrinivasan, Feb 28, 2013.

  1. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    ரிக் ரிக் என ஓயாமல் ஒலிக்கும் சுவர்க்கோழி.
    இச் இச் என அவ்வப்போது பேசிடும் பல்லி.
    வள்வள் என குரைத்திடும் தெருநாய்களுக்கு அஞ்சி
    டிங் டிங் என ஒலித்து விரையும் பனிக்கூழ் வண்டி,

    டாண் டாண் என முழங்கிடும் மாதா கோயில் மணியும்
    கிணிங் கிணிங் எனச் சிணுங்கிடும் சிறுவர் வண்டியதும்,
    கலகலவென சிரித்திடும் சிறுமியர் சேர்ந்திசையும்,
    படபடவென உதறி உதறிச் செல்லும் சிற்றுந்தும்

    பரபரவென எப்போதும் எங்கோ விரைந்தபடி இருக்கும்
    நெடுநெடுவென வளர்ந்த அந்த மனிதனுக்கு இன்று
    தனித்தனியாய் கேட்டு விடக் காரணமும் என்றும்
    மிகச் சரியாய் வருமவளும் வாராதது தானோ?
     
    3 people like this.
    Loading...

  2. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    டாண் டாண் என்று வருபவள் வரவில்லை என்றால்
    இவ்வளவு சத்தமும் கேட்குதோ
    கூடவே டக் டக் இதய துடிப்போடு..:)

    Sriniketan
     
  3. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    I liked your last line so much Sriniketan. Nice icing to the cake. Thanks for your appreciation. -rgs
     
    1 person likes this.

Share This Page