1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காத்திருக்கும் கண்கள்

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh, Jul 18, 2012.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    நிலத்தின் இயல்பு
    நீரை உறிஞ்சுவது.
    அன்றேல்
    உன் நினைப்பில்
    நான் சிந்திய கண்ணீர்
    இன்னொரு கடலாகியிருக்கும்.

    உன் பெயரை உச்சரிக்கும்
    உரிமையை என் இதழ்கள்
    இழந்த பின்னர்
    உன் பெயரை
    எழுத்து வடிவில்
    எங்காவது பார்த்தாலும்
    கண்கள் குளமாகின்றன.

    நாம் சேர்ந்திருந்த
    சுகமான கணங்கள் கூட
    புன்னகைக்கு பதில்
    கண்ணீரை வரவழைக்கும் அளவு
    உன் பிரிவின் துயரம்
    என்னை அழுத்துகிறது,

    உன் கண்களில் குடியிருந்த நான்
    இன்று
    விலாசம் தொலைந்து
    விக்கித்து நிற்கிறேன்.

    உன் நினைவுச் சுவடுகள்
    பதிந்த என் நெஞ்சத்தை
    கண்ணீர் வேலியமைத்து
    காத்தி ருக்கிறேன்.

    மரித்த தேவனே
    மீண்டும் வந்தானாம்
    மறந்த நீ மீண்டும்
    வரமாட்டாயா என்ன?
     
    Loading...

  2. rgsrinivasan

    rgsrinivasan IL Hall of Fame

    Messages:
    10,291
    Likes Received:
    9,985
    Trophy Points:
    540
    Gender:
    Male
    Perhaps the last four lines are the best, Sir, according to me. Very nicely written. Thanks. -rgs
     
  3. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    கனிவான சொற்களுக்கு மிக்க நன்றி ஸ்ரீநிவாசன்.
     

Share This Page