1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காதல் என்பது எதுவரை?

Discussion in 'Posts in Regional Languages' started by mithila kannan, Oct 30, 2008.

  1. mithila kannan

    mithila kannan Gold IL'ite

    Messages:
    3,400
    Likes Received:
    189
    Trophy Points:
    155
    Gender:
    Female
    காதல் என்பது எதுவரை?
    காதல், காதல், காதல்,காதல் போயின் காதல் போயின்,சாதல் சாதல் சாதல் சாதல் சாதல் என்ற பாரதி "காதல் செய்வீர் உலகத்தீரே" என்றார்.காதல் என்பதுதான் என்ன?எத்தனையோ கவிஞர்கள் எவ்வளவோ பொருள் சொல்லியும் காதல் என்ற இந்த மாயா ஜாலத்தின் பொருள் என்னமோ புரியாத புதிராகவே உள்ளது.
    மெத்த படித்த சில அறிஞர்கள் ,"காதல் என்பது ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே ஏற்படும் ஒருவித ஈர்ப்பு என்ஞ்கின்றனர்.
    ஆகா காதல் என்பது வாழ்க்கையின் ஒரு அத்தியாவசியமான அத்தியாயம் என்பது என்னவோ உண்மைதான்.
    இந்த காதலிலே பலவகை உண்டு.
    ஒரு இளைஞனும் ஒரு யுவதியும் ஒருவரை ஒருவர் பார்கின்றனர்,பேசுகின்றனர்,காதலில் வசப் படுகின்றனர்.
    அங்கு என்ன நடக்கின்றது?அந்த ஆண் மகன் பண்பெல்லாம் உருவானவனாக இருக்கின்றான்.தன் உள்ளம் கவர்ந்த அந்த நங்கையைத் தவிர வேறொரு மாதை அவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.அவள் முகம் வாட அவன் அதை சகிக்க முடியாமல் கண் கலல்ங்குகிறான்.அவளுக்காக கார் கதவை திறந்து விடுகிறான்,தன் விரல் கூட அவள் மீது படாமல்,"கல்யாணம் ஆகும் வரை உனக்காக காத்திருப்பேன்"என்கிறான்.
    அவளோ மெல்ல புன்னகைக்கிறாள்."உங்களை போல அறிவாளி வேறு ஒருவர் உண்டோ?"என்கிறாள்.மெதுவாய்,பேசுகிறாள்,நளினமாய் நடந்து கொள்கிறாள்.இவர்கள் காதல் கல்யாணத்தில் முடிகிறது.
    கல்யாணம் ஆகி தம்பதிகளாகிவிட்ட இவர்கள் வாழ்க்கைதான் எப்படி உள்ளது.சற்று ஒதுங்கி இருந்து பார்க்கலாம் வாருங்கள்.
    திருமணம் முடிந்து சில மாதங்கள் ஆகின்றன .
    அவன் நிதானமாய் எழுந்த்ருக்கிறான்."காபி கொண்டு வா"என்று கத்துகிறான்.அவளோ நைட்டி அணிந்து, கலைந்த தலையுடன்,முகம் கூட கழுவாமல் காபி எடுத்து வந்து கோபத்துடன் நங்கென்று அவன் அருகில் வைக்கிறாள்.
    "ரூ காபி எடுத்து வர இத்தனை நேரமாடி?"என்கிறான்,கல்யாணத்திற்கு முன் அவளை தேனே,மானே என்றழைத்த அவன்.அவளோ "க்கும்" என்று முகம் கடுத்த படி செல்கிறாள்.
    அடுத்து பாத்ரூமிலிருந்து வெளிப்படும் அவள்,பாத்ரூமை இவ்வளவு அசிங்கமாய் வைத்து விட்டு வந்திருக்கிறாயே, நீயெல்லாம் ஒரு மனிதனா?"என்கிறாள் ஏளனமாக.
    "நான் ஒரு ஆண் .கழிவறையை சுத்தம் செய்வது என் வேலை அல்ல ,அது உன்வேலை"என்கிறான்.அவளோ,"நானும் படித்தவள்.உன்னை விட அதிகம் சம்பாதிப்பவள் .ஞாபகம் இருக்கட்டும்" என்கிறாள்.
    இது மாதிரி சண்டைகள் அவர்கள் வில் வலுக்கின்றன.தம்பதிகள் எலியும் பூனையுமகின்றனர்.ஈகோ என்னும் பேய் அவர்களை பிடித்து ஆட்டுகிறது.ஆக வெகு விரைவில் இருவரும்,பிரிந்து போக முடிவெடுத்து கோர்ட்டை அணுகுகின்றனர்.மண்டபத்தில் ஆரம்பித்த மண வாழ்க்கைகோர்ட்டில் முடிகிறது..பிறந்து சில காலமே ஆவதற்குள் மடிந்து போன இந்த காதலின் சமாதியில் ஒரு சொட்டு கண்ணீர் விட்டு விட்டு,வாருங்கள் அடுத்த காதலை சந்திப்போம்.
    அவன் ஒரு வியாபாரி,அவள் ஒரு வியாபாரியின் மகள்.இருவரும் மணமக்கள்.
    தன் அருகில் அமர்ந்திருக்கும் அவளை அவன் ஜாடையாய் பார்க்கிறான்."பெண் நல்ல கலர் என்று சொன்னார்கள்.இவளோ கவிழ்த்து போட்ட வெந்நீர் தவலை போல இருக்கிறாள்.சரி.எந்த நிறமாயிருந்தால் என்ன.பணக்கார வீட்டு பெண்ண.இருட்டிலே வேல்லைஎன்ன கறுபென்ன ,எல்லா கழுதையும் ஒன்றுதான் "என்று ஏளனமாய் சிரித்து கொள்கிறான்.அவளோ,"மாப்பிள்ளை ரொம்ப பணக்காரன் என்று சொன்னார்கள் ஆனால் இவர் அம்மாவை பார்த்தால் பரதேசி போல் இருக்கிறாள்.என்னிடம் அவள் வம்பு செய்தால் நான் தனி குடித்தனம் போக வேண்டியதுதான்"என்று மனதிற்குள் கறுவுகிறாள்.
    இவர்கள் மணவாழ்க்கை தொடங்குகிறது.
    ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் சாடுகின்றனர்.
    "நீ ஒரு பேய்"என்கிறான் அவன் ."நீர் ஒரு தரித்திரம் பிடித்த மனிதன்"என்கிறாள் அவள்.காலம் இப்படியே செல்கிறது.உடல்கள் இணைகின்றன.உள்ளங்கள் விலகி வெகு நாட்களாகி விட்டன.பிள்ளைகள் பிறக்கின்றன.ஆனால் அவர்களுக்குள் வெறுப்புதான் வளருகிறது.அவன் மறந்து போயும் அவளுக்காக ஒரு முழம் பூ கூட தன் கையால் வங்கி வருவதில்லை.அவளோ,அவன் ஜுரம் வந்து படுத்த போதும் தன் கையால் கஞ்சி கூட போட்டு தருவதில்லை.
    பிள்ளைகள் சிறகுகள் முளைத்து பறந்து செல்லுகின்றனர்.இவர்கள் வாழ்கை வெறுப்பில் ஆரம்பித்து வெறுப்பில் முடிகிறது.பிறக்கும் முன்னரே வெம்பி வதங்கி செத்து விட்ட இந்த காதலுக்காக இரண்டு சொட்டு கண்ணீர் விட்டீர்களா?சரி வாருங்கள் அடுத்த காதலை சந்திப்போம்.
    ஒரு திருமண மண்டபம்.அவனும் அவளும் அழகாக அமர்ந்திருக்கின்றனர் அருகருகே.பின் ,"நன்னு பாலிம்ப நடசி ஒச்சிதிவோ" என்று மனமெல்லாம் உவகை போங்க அவன் கரம் பற்றுகிறாள் அவள்.
    "இனி நீதான் என் உயிர்.என் வாழ்க்கையில் விளக்கேற்ற வந்தவள் நீ.உண் மகிழ்ழ்சியே என் மகிழ்ச்சி "என்று எண்ணியபடி,அவள் கரம் பிடித்து அக்னி சாட்சியாய் அவளை தன் மனைவியாக்கி கொள்கிறான் அவன்.
    இவர்கள் "அறமெனப் பட்டதே இல் வாழ்க்கை"என்ற வள்ளுவர் வாக்குக்கிணங்க வாழ்கின்றனர்.
    அவனது சுக துக்கத்தில் பங்கேற்கிறாள் அவள்."ஒரு பிரச்னை"என்று அவன் முகம் வாடும்போது,"வருந்தாதீர்,நானிருக்கிறேன்"என்கிறாள் அவள்.இரு மனமும் ஒருமனமாய் கலக்க தெய்வ சன்னதியில் விளக்கேற்றி வைத்தார் போல் இருவரும் ஒருங்கிணைய அருமையான பிள்ளைகள் பிறந்து அவர்களுக்கு பெருமை தேடி தருகின்றனர்.
    தங்கள் கடமைகளை எல்லாம் செவ்வனே செய்து முடித்த இவர்களை முதுமை வந்து அடைகிறது.அவன் தலை வழுக்கையாகிறது,பார்வை மங்குகிறது,குரல் நடுங்குகிறது.அவள் தலை தும்பையாய் நரைக்கிறது,உடல் சுருங்குகிறது.ஆனாலும் ஒருவர் மீது மற்றொருவர் வைத்த அவர்கள் காதல் மட்டும் நாளுக்கு நாள் வலுவடைகிறது.இருவரும் ஒருவர் கையை மற்றொருவர் இறுக்கமாய் பிடித்தபடி வாழ்கை பயணத்தை நடத்துகின்றனர்.
    "கண்ணே,நீ மிகவும் களைத்து விட்டாய்.என் தோள் மீது சாய்ந்து கொள்"என்கிறான் அவன்.
    "நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்வது.நீங்கள்தான் இளைத்து விட்டேர்கள்.துவண்டு விட்டீர்கள்.சற்று என் மடி மீது தலை வைத்து இளைபாருங்கள்"என்கிறாள் அவள்.
    அவர்கள் பயணம் தொடர்கிறது.
    இருவருன் ஒன்றாய் வரவில்லை ஒன்றாக போவதற்கு.அவன் பயணம் முடிந்து விடுகிறது.அவள் பயணம் தொடர்கிறது,தன்னம் தனியாளாக அவள் நடக்கிறாள்.
    ஆனால் அவள் மனம் விழவில்லை."என் மனதில் அவர் ஏற்றி வைத்த காதல் என்ற தீபம் இன்னமும் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.அந்த ஒளி தரும் வெளிச்சத்தில் நான் என் பயணத்தை தொடர்வேன்.என் அவர் எப்போதும் என்னோடு இருந்து எனக்கு வழி காட்டுவார்,என் நேரம் வரும் பொது என்னை தன்னிடம் அழைத்து கொள்வார்"என்று திண்ணமாய் எண்ணியபடி மெதுவாய் நடக்கிறாள் அவள்.

    இது காதல் இல்லை என்றால் வேறு எது அய்யா காதல்?
    கவிஞர் கண்ணதாசன் ஒரு கேள்வி
    கேட்டார்,"காதல் என்பது எதுவரை?"என்று. பின் தானே அதற்கும் அருமையாய் பதிலளித்தார்,"இளமையிலே காதல் வரும்,எது வரையில் கூட வரும்,
    முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமை வரை கூட வரும்" என்று
    முதுமையிலே நீடிக்கும் காதல் நம் வாழ்க்கையில் மணம் வீசும் காதல்.ஆல மரம் போல் வேர் ஊன்றி நிற்கும் காதல்.காலத்தையும் வென்றது இவ்வகை காதல்.
    வாழ்க காதல்.
    வாழ்க தமிழ்.
    வளர்க தமிழர் பண்பாடு.
     
    Loading...

  2. Anandchitra

    Anandchitra IL Hall of Fame

    Messages:
    6,617
    Likes Received:
    2,620
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Mithila
    :clapIf its possible to excel yourself you just did. This is one of your best writings ever. :2thumbsup:What wonderful layout and touching scenes. Not for the first nor the second scenes but love the third.. Hope I follow your footsteps... :hatsoff
     
  3. Anandchitra

    Anandchitra IL Hall of Fame

    Messages:
    6,617
    Likes Received:
    2,620
    Trophy Points:
    345
    Gender:
    Female
    காதல் என்பது எதுவரை?
    கல்யாண காலம் வரும் வரை
    கல்யாணம் என்பது எது வரை
    கயுதினில் தாலி வீஉம் வரை

    (sorry for any mistakes)

    Thanks Mithila for a great time reading your sweet lines:)
     
  4. mithila kannan

    mithila kannan Gold IL'ite

    Messages:
    3,400
    Likes Received:
    189
    Trophy Points:
    155
    Gender:
    Female
    My dear AC,
    Your words alone give me the enthusiasm to write more in Tamil.
    Thanks for that lovely fb.
    love
    mithila kannan
     
  5. manasa_gs

    manasa_gs Senior IL'ite

    Messages:
    486
    Likes Received:
    10
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hi Mithila,
    amazing ...just loved the third part of the post.
    Keep up teh good work . :thumbsup
     
  6. sundarusha

    sundarusha Gold IL'ite

    Messages:
    3,427
    Likes Received:
    181
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Mithila

    Loved the blog. The third example, the ideal one should be the goal for all.
     
  7. mithila kannan

    mithila kannan Gold IL'ite

    Messages:
    3,400
    Likes Received:
    189
    Trophy Points:
    155
    Gender:
    Female
    My dear Usha,
    Thanks dear.I thought nobody liked the Tamil blog excepting a very few,happy to see that you have likd it.It gives great pleasure to write in one's mother tongue.

    love
    mithila kannan
     
  8. mithila kannan

    mithila kannan Gold IL'ite

    Messages:
    3,400
    Likes Received:
    189
    Trophy Points:
    155
    Gender:
    Female
    My dear Manasa,
    I cherish these words my dear.I was heart broken that my friends did not like the post.Iam happy to know that you liked the post.
    love
    mithila kannan
     
  9. sundarusha

    sundarusha Gold IL'ite

    Messages:
    3,427
    Likes Received:
    181
    Trophy Points:
    160
    Gender:
    Female
    Dear Mithila

    I couldn't get to it sooner because of lack of time. I am slightly slower in reading Tamil, that's another reason.
    But it was lovely blog.
     
  10. Anandchitra

    Anandchitra IL Hall of Fame

    Messages:
    6,617
    Likes Received:
    2,620
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Mithuma .. some more to share here.. hope the spelling is correct.

    இருவருன் ஒன்றாய் வரவில்லை ஒன்றாக போவதற்கு
    நீ என் முன் சென்று விட்டால்
    நான் ஒரு கானல் நீர் போல் ஆகிவிடுவேன்
    நான் ஒரு இலை உதிர்ந்த மரம் போல் ஆகிவிடுவேன்
    வற்றிய நதி போல் ஆகிவிடுவேன்
    பச்சை மறைந்து போன பாரங்கள் போல் ஆகிவிடுவேன்
    இருவருன் ஒன்றாய் வரவில்லை ஒன்றாக போவதற்கு
    அனாலும் என் கனவா நீ இல்லாமல் நான் மட்டும்
    எப்படி இருப்பது உன் கூடவே நானும் வருவேன்
     

Share This Page