1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

காணாத கண்ணிரண்டால் -13 :

Discussion in 'Stories in Regional Languages' started by yams, Oct 16, 2012.

  1. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    பிரபல நடிகர் கௌத்தமன் நடித்த கிராமத்துபுற காவியம் கதை சிறந்த விமர்சனம் பெற்றுள்ளது.
    கதையோடு ஒன்றி நடித்த அவரது நடிப்பு திறமைக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம்.
    இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு ரசிகர்களின் அன்பு வாழ்த்துக்கள்!!
    என்ற செய்தியை கண்ணாடியை போட்டு படித்து கொண்டிருந்தவரின் இதழ்கள் மெல்ல புன்னகையில் விரிந்தது. பின் இயல்பு நிலைக்கு திரும்பி கை கடிகாரத்தை பார்க்க அது மணி ஏழு என்று காட்டவும் கோபித்தவர்

    "கோமதி...! ஹே கோமதி " என்று அதட்டலான குரலில் வேலையாளை அழைக்க அதற்கு பணிந்து ஓடி வந்து நின்ற வேலையாளை கண்டு
    "இன்னும் என் பையன் எழுந்து வரலையா?"
    "இல்லைங்கம்மா!"
    "அப்ப நீ என்ன பண்ணிட்டு இருக்க? போய் அவனுக்கு காபி கொடுத்து எழுப்ப வேண்டியது தானே?"
    "அம்மா..! அது...."
    "என்னடி அது இதுன்னிகிட்டு? சொன்ன வேலைய செய்" என்று பணிந்தவர் அப்போது தான் நினைவு வந்தவராய்
    "ஹ்ம்ம்...அந்த புது பொண்ணு வேலைக்கு வந்தாச்சா?"
    "ஹ்ம்ம் வந்துட்டாங்க மா...தோட்டத்துல இருக்காங்க..."
    "சரி சரி அவளை அப்பறமா வந்து என்னை பாக்க சொல்லு" என்று விட்டு தன் அறைக்கு சென்றார்.

    தன் அறையில் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தவனை எழுப்பியது கண்ணாடி வளையல் அணிந்த கையொன்று.
    அதை தட்டி விட்டவன்
    "நானா எழுந்திருக்கற வரை என்னை தொந்தரவு பண்ண வேண்டாம்னு சொல்லி இருக்கேன் ல?" என்று கண்களை திறக்காமலே கோபிக்க இம்முறை பலமாகவே அவனை அசைத்தது அவன் காதுகளில் கேட்ட குரல்

    "பிறந்த நாளும் அதுவுமா இப்படி தூங்கிற்றுகீகளே? சத்த எழுந்து சூரியனையும் பாருங்க கெளதம் சார்" என்ற குரல் அவனுக்கு பரிச்சயமானது தான். ஆனால் அது எப்படி இங்கே? என்று ஒரு கண்களை மெல்ல திறந்தவன் முன் சிரித்த முகமாய் நின்றது கௌரியே தான்.
    இம்முறை சடக்கென்று எழுந்து அமர்ந்தவன் சட்டை அணியாததை உணர்ந்து பெட் சீட்டை எடுத்து தன்னை அவசரமாய் மறைத்தபடி அவளை கண்டான்.

    மூளை மட்டும் அல்ல வார்த்தைகளுமே தூக்கத்தில் இருந்து எழுந்ததால் சற்று சண்டித்தனம் செய்தது
    "நீ..நீ...."
    "நான்...நானே தான்...எப்படி இருக்கீக? நலம் தானே?" என்றபடி படுக்கையை சரி செய்ய தொடங்கியவளை விசித்திரமாய் பார்த்தபடி இருந்தான். திடீர் என்று அந்த சந்தேகம் எழுந்தது
    சந்தேகம் என்று வந்த பின்பு அதை தீர்த்துக்கொள்ள வேண்டும் தானே? அதையும் மறக்காமல் செய்தான்.
    எல்லாம் நடப்பவை கனவா? என்ற சந்தேகம் தான்!
    அதை தீர்த்துக்கொள்ள தன்னையே கில்லி பார்த்தவனை கண்டு சிரித்தவள்
    "எல்லாம் உண்மை தான் நீங்க நம்பலாம்..அங்கன...சே...அங்க காபி வெச்சிருக்கேன் எடுத்துகோங்க" என்று ஊர்பாஷயை திருத்தியவளை இன்னும் கூட நம்ப முடியாமல் திகைத்திருந்தான்.

    வெளியேற இருந்தவளை தடுத்தவன்
    "நீ இங்க என்ன பண்ற?" என்று கேட்க
    அவனை சளைக்காமல் பார்த்திருந்தவளின் இந்த தைரியம் அவனுக்கு புதியதாய் தோன்றியது.
    "உன்னை தாண்டி கேக்குறேன்..இங்க என்ன பண்ற?" என்று குரலில் சற்று கடுமையை காட்டியவனை பார்த்து சிரிக்க தான் முடிந்தது கௌரியால்.

    "மரியாதை வாழ்கையில தான் இல்லைன்னு பார்த்தா வார்த்தைகளிலையும் இல்ல போலவே?" என்று அவனுக்கு திருப்பி கொடுத்தவள்
    "இனி நீங்க என்னை தினம் சந்திக்க வேண்டி இருக்கும்...நானும் நீங்களும் ஒரே வீட்ல தான் தங்க போறோம்..முடிவா சொல்லனும்னா நானும் இனி இந்த வீட்ல ஒருத்தின்னு கூட சொல்லலாம்!" என்று சொல்லிவிட்டு திரும்பியவளின் கைகளை பற்றிய கௌத்தமனின் கோபம் அவன் பிடியிலேயே தெரிந்தது

    "என்ன உளற?"
    "உளறல?" என்றவள் அவன் கைகளை தட்டி
    "சந்தேகமா இருந்தா உங்க அம்மாகிட்டயே போய் கேளுங்க அவுக தெளிவு படுத்துவாங்க..நான் வரேன்"
    என்று சொல்லி செல்ல.. கதவின் அருகில் வந்ததும் அப்போது தான் நினைவு வந்தவளை போல்
    "ஹ்ம்ம் சொல்ல மறந்துட்டேனே...பிறந்த நாள் வாழ்த்துக்கள் கௌத்தமன் சார்! இனி உங்க வாழ்க்கை அமோகமா இருக்க என் வாழ்த்துக்கள்" என்று ஏதோ குறிப்பாய் பேசுவதை போல் பேசி வெளியேறினாள்.

    "சே! " என்று சலித்தவனாய் அமர்ந்தவனுக்கு இன்னும் கூட கொதிப்பு அடங்கவில்லை.
    இவள் இங்கே என்ன செய்கிறாள்? ஏதோ கிராமத்து பெண்,அப்ராணி! என்று பழக போக இப்போ அது காலை சுத்தின பாம்பா மாறிடுச்சே!
    என்று சலித்தபடி குளித்து முடித்து கீழே வரவும் அவன் தாயார் அவனுக்காய் சாப்பாட்டு மேஜையில் காத்திருக்கவும் சரியாய் இருந்தது.

    வரும்போதே வசைபாடலும் கூடவே தொடர்ந்தது
    "வாடா..பொறந்த நாள் அதுவுமா கூட சீக்கிரம் எழுந்திருக்க கூடாதா?" என்று திட்ட தொடங்கிய அன்னையிடம் எடுத்தவுடன் கௌரியை பற்றி கேட்டால் எப்படியும் திட்டுவிழும் என்று உணர்ந்தவனாய் அமைதி காத்தான்.
    முதலில் அவனுக்கு தேவையானவற்றை வைத்தவர் பிறகு தனக்கும் வைத்து கொண்டு அமர தண்ணீர் ஊற்ற வந்த கௌரியின் புன்னகை அவனை மேலும் எரிச்சல் அடைய செய்தது.
    இருந்த கோபத்திற்கு அவளை கொன்றுவிடலாம் போல உள்ளுக்குள்ளே கொதித்து கொண்டிருந்தான்.
    பின் மெல்ல அவன் பேச்செடுக்க நினைக்கும் நேரம் அவரே அவனுக்கு உதவியாய்...இல்லை உபத்திரமான அந்த செய்தியை வெளியிட்டார்!
    இனி இந்த வீட்டின் நிர்வாக பொறுப்பில் இருக்க போவது கௌரி தான் என்று!
     
    5 people like this.
    Loading...

  2. yalni

    yalni Silver IL'ite

    Messages:
    297
    Likes Received:
    210
    Trophy Points:
    93
    Gender:
    Female
    Hi yamini,

    thanks dear nethu tha ungalta keten update kanomnu inaike potutinga. nice update. gowri thannoda kadhala puriya vaipala?
     
  3. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi yams..
    nice update..

    ippo parkradhu pudhu gowri ah irukku..
     
  4. krithivenugopal

    krithivenugopal Bronze IL'ite

    Messages:
    124
    Likes Received:
    44
    Trophy Points:
    48
    Gender:
    Female
    super nga...Please put updates on Daily basis
     
  5. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    iva enga inga vantha??? ava veeta vitutu inga en vantha???
     
  6. hisandhiya

    hisandhiya Bronze IL'ite

    Messages:
    121
    Likes Received:
    35
    Trophy Points:
    48
    Gender:
    Female
    hi yams

    nice update,eagerly waiting 4 ur next update pls post soon


    sandhya
     
  7. ramsayliving2

    ramsayliving2 Senior IL'ite

    Messages:
    25
    Likes Received:
    10
    Trophy Points:
    23
    Gender:
    Male
    hi yams today read your story nice .wait for next update.thanks story
     
  8. devirams

    devirams Silver IL'ite

    Messages:
    528
    Likes Received:
    90
    Trophy Points:
    83
    Gender:
    Female
    nice update da :thumbsup
    Gowri Gowtham veetil eppudi????:shock:
    Gowri-kita neriya changes theriyudhu ....next update eppo???
     
  9. padmaaprasad

    padmaaprasad Senior IL'ite

    Messages:
    36
    Likes Received:
    21
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Hi yams,

    I have read two or three updates of this story. hero is a cine star and will go for a shooting to gowri's village and there gowri and her friend will go to watch the shooting, gowri's father will make arrangements for the cine gang???????? is this the same story? i noticed today only i thought u have stopped this story..... i have read all your stories pa but i missed this one....... I will try to read from where i stopped it....

    padma.
     
  10. ahalyakanna

    ahalyakanna New IL'ite

    Messages:
    12
    Likes Received:
    7
    Trophy Points:
    8
    Gender:
    Female
    Hi Yams,

    Eagerly waiting for next update ma.... Plz update soon....
     

Share This Page