1. Have an Interesting Snippet to Share : Click Here
  Dismiss Notice

காக்கா கூட்டம் !

Discussion in 'Stories in Regional Languages' started by deepa04, Jul 9, 2010.

 1. deepa04

  deepa04 Gold IL'ite

  Messages:
  3,652
  Likes Received:
  264
  Trophy Points:
  183
  Gender:
  Female
  காக்கா[font=&quot] [/font]கூட்டம்! அன்று ,காலை பொழுது அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான் வீரா.தன் நண்பன் சூராவும் வந்து விடுவான்.இவர்கள் இருவரையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தது ஒரு கூட்டம்.நேற்று தான் நண்பர்கள் இருவரும் சென்ற காரியம் முடித்து திரும்ப வந்தனர்.இவர்கள் சென்றது முக்கியமான காரியம்.தலைவருக்கு அதனை பற்றிய முக்கிய குறிப்பு நேற்றே கொடுத்தாகி விட்டது.இன்று அவையில் அனைவரின் முன்னும் அதை தெரிவித்து,கலந்தாலோசித்து முடிவெடுக்கவே இந்த கூட்டம்.
  ஆகா,முன்னுரை கொடுக்காமல் கதையை ஆரம்பித்து விட்டேன் பார்த்தீர்களா!நம் கதை நடப்பது,நம் காலத்தில் தான்.நம்ம அரசாங்கம் நமக்காக தங்க நாற்கரச்சாலை போட்டாங்க இல்லை,அப்ப ஆரம்பித்தது இந்த கதையும்,கூடவே பிரச்சனையும்.
  கதையோட நாயகன்,நம்ம வீரா,பார்க்க சும்மா கரு,கருன்னு ,கண்ணு ரெண்டும் பளபளன்னு,குரல் கணீர்னு கூர்மையான மூக்கோட,கால்கள் நல்ல, வலுவானதாய் முகியமானதை சொல்ல விட்டுட்டேனே,ரெக்கை ரெண்டும் அகண்டு இருக்கும்.ஆமாங்க காக்கா தானே கதாநாயகன்.நம்ம கதாநாயகன் வீரா ,ஒரு இளைஞன் காக்கா.
  வீரா காக்காவும்,நண்பன் சூரா காக்காவும் ,ரெண்டு நாள் முன்னே வேற இடம் பார்க்க போனாங்க.இடமும் அமைஞ்சுடிச்சு .அதை பத்தின கலந்துரையாடல் தான் இப்ப நடக்க போற கூட்டம்.வர்ற எல்லாருமே காக்கைகள் தான்,அதனாலே பேர மட்டும் சொல்றேன்.
  வீரா தன் கூட்ட விட்டு கிளம்பிகிட்டு இருந்தான்,சூராவும், வந்துசேர்ந்துக்கிட்டு

  ரெண்டு பேரும் கூட்டத்துக்கு போனாங்க.அங்க ஏற்கனவே நிறைய பேர் வந்து கூடி இருந்தாங்க,தலைவர்,பெரியவர்,மூக்கன் வந்தவுடனே கூட்டம் ஆரம்பிச்சது.மூக்கன்,பேச ஆரம்பிச்சாரு.
  நம்ம எல்லாரும் இந்த பகுதியில ரோட்டோர புளிய மரகிளைகளிலே நமக்குன்னு,சின்ன கூடு கட்டி இருந்துகிட்டு இருக்கோம்.இப்ப நம்ம பிரச்சனையை என்னன்னா,இந்த மனுசங்களுக்கு,இருக்குற இடம் பத்தாம,புதுசா,ரோடு போடப் போறாங்களாம் ,அதனால இந்த மரங்களையெல்லாம் வெட்ட போறாங்க.
  "
  அய்யையோ! அப்ப நாமல்லாம் என்ன பண்றது"-என பதறியது ,வயசான கிழவி பவளாயி.
  "
  அட,சும்மா இருத்தா,அதப்பத்தி பேசத்தானே இந்த கூட்டம்",என்றால் வீரம்மா-வீரா வின் மனைவி.
  "
  கொஞ்சம் தலைவர் பேசி முடிக்கட்டும்,அப்பறம் நாமல்லாம் பேசலாம் " ராமையா,சொல்ல.
  தலைவர் தொடர்ந்தார்"மரத்த வெட்ட போறாங்கன்னு ,சொன்னேனுன்ள,அதனால,நம்ம கூட்டத்தை வேற இடத்துக்கு மாத்தரத்தை பத்திதான் இப்ப பேச்சு. நம்ம வீராவும்,சூராவும்,ஒரு இடத்தை பார்த்துட்டு வந்திருக்காங்க.அதை பத்தி வீரா சொல்ல்லுவான்."

  வீரா; " நானும்,சூராவும்,ரெண்டு நாளா பறந்து,திருஞ்சு,ஒரு இடத்தை பார்த்திட்டு வந்தோம்.இங்கே இருந்து ஒரு மணி பறக்கற பயநதூரத்திலெ ஒரு குடியிருப்பு பகுதி,ஒருசர்கரை ஆலை,அதுக்குள்ளே ,நம்மள சுடரவன் ஒருத்தனும்
  வரமாட்டான்.நல்லா மரங்கள் நிறையா இருக்கு,புளிய மரம்,மாமரம்,நவ்வா மரம்,எல்லாம் நல்லா வாட்ட சாட்டமா இருக்கு.மக்கள் அதிகமா இருக்கறதுனால சாப்பாடு பிரச்சனையும் இல்லை.நல்ல இடம்,அங்க போகலாம்."
  "
  ஒரு மணி பறக்கனுமா,நான் எங்கன பறந்தேன்?"என-பவளாயி பதற.
  "
  ஒண்ட இடம் வேணுமுல்லே நின்னு,நின்னு போகலாம் வா".-என வீரம்மா சொல்ல.
  "
  குடியிருப்பு பகுதி, நல்லா சாப்பிடலாம் "-காகன் சொல்ல.
  "
  ஆமா,அம்மாவாசை,கிருத்திகை,திவசம் இப்படின்ன,நம்மள மாதிரியே கத்தி கூப்ட்டு,சாப்பாடு வைக்கிறது,இலையினா,நம்மளை யாருப்பா கண்டுக்றாங்க,"

  ஏப்பா,நமக்கு மரியாதை இல்லையா என்ன ,முன்னமே ,நம்ம சிவாஜி ,அவரோட மொத படத்திலையே,நம்ம பத்தி உயர்வா பாடினாருள்ளே.-என பெரிசு சொல்ல.
  இப்ப கூட,அண்டங்காக்கா கொண்டக்காரின்னு,-நம்மள சொல்லி காதலிய படராருப்பா,ஒரு ஹீரோ.-ஒரு பொடிசு சொல்ல.
  அவ்ளவு ஏன்நம்மை போல் கூடி வாழணும்னு -சொல்லாத,கவியும் இல்லை கதையும் இல்லை.
  காக்காய் புடிக்கிறான்-அப்டின்னு இந்த மக்கள் ஒருத்தர,ஒருத்தர் சொல்றானகளே ஏன் அண்ணே?என ஒருவன் வினவ,
  அது தம்பி நம்மள புடிக்கறது ,அவ்ளோ கஷ்டம் அதுதான்-என சூரா விளக்கம் சொல்ல.

  "
  பேச வேண்டியது விட்டுட்டு ஏதேதோ,பேசுறிங்களே,விசயத்துக்கு வாங்கப்பா"-என தலைவர் மூக்கன் சொல்ல.
  "
  ஆமா,என்னப்பா சொல்றிங்க,வீரா சொன்ன இடத்துக்கு போகலாமா"-என ராமையா கேட்க்க.
  "
  ஆமா,அங்க ஏற்கனவே ஒரு கூட்டம் இருப்பாகல்ள,அவுகள ஒரு வார்த்தை கேட்டியா வீரா",-பவளாயி
  "
  பாட்டிமா,கேட்காம வருவானா,அவங்களும் நம்ம வரச்சொல்லிட்டாங்க.அது மட்டுமில்ல கூடு கட்டவும் ஒதவறத சொல்லி இருக்காங்க".என வீரா சொல்ல.
  "
  அதச் சொல்லு என்னானாலும் நம்ம கூட்டத்துக்கு இணை நம்ம தான்.மனுஷ புத்தி வராம இருக்க சாமிய கும்பிட்டுகுவோம்."

  "
  சரிப்பா,நாளன்னைக்கு முதல்ல ஒரு பத்து ,பதினஞ்சு இளவட்டங்க போயி,கூடு கட்டுங்க,நாங்க குஞ்சு,குளுன்ஜாநெல்லாம் கொஞ்சம் பறக்கற அளவு வந்தவொடனே,கொஞ்சம்,கொஞ்சமா,இந்த மாசத்துக்குள்ள எல்லாரும் வந்துடுறோம்.என முக்கண் சொல்லி கூட்டம் முடிவுக்கு வந்தது."
   

  Attached Files:

  Loading...

 2. veni_mohan75

  veni_mohan75 Platinum IL'ite

  Messages:
  11,264
  Likes Received:
  115
  Trophy Points:
  283
  Gender:
  Female
  அன்புள்ள தீபா,

  சாலையோர மரங்களை வெட்ட ஆரம்பித்த இந்த வேளையில் உங்கள் "காக்கா கூட்டம்" கதை வெகு பொருத்தமாய் உள்ளது தீபா. ரசித்து படித்தேன். ஒற்றுமைக்கும் காக்கைகளை ஒப்பிடுவது ஆதி காலம் முதலே இருந்து வருவதை. அதை உங்கள் வரிகளில் மீண்டும் படிக்கையில் வெகு அழகாய் உள்ளது.

  பெயர்களும், அவர்கள் பேசும் வசனங்களும் படிக்க, ரசிக்க நல்ல விருந்து. கதை சொன்ன நீதி நல் மருந்து.

  முதல் முயற்சிக்கு பாராட்டுக்கள். மேலும் பல கதைகள் படிக்க ஆவலாய் உள்ளேன். நிறைய கதைகள் நீங்கள் எழுத வேண்டும் என வாழ்த்தும் இந்த அன்பு உள்ளம்
   
 3. deepa04

  deepa04 Gold IL'ite

  Messages:
  3,652
  Likes Received:
  264
  Trophy Points:
  183
  Gender:
  Female
  veni,
  thanks for your immediate reply.you are the first person to read my story.now only i typed it and post it.thanks for your fb.
   
 4. devapriya

  devapriya IL Hall of Fame

  Messages:
  10,369
  Likes Received:
  1,397
  Trophy Points:
  438
  Gender:
  Female
  எனக்கு ரொம்ப நாளாவே இதுக்கு என்ன விளக்கம் ன்னு தெரியாது அக்கா.... இன்னைக்கு தான் தெரியுது...

  மொத்த கதையுமே நீங்க அழகா தான் யோசிச்சுருக்கீங்க..... அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது இந்த பகுதி தான்... பொறுப்பா பறக்க முடியாத குஞ்சுகளும் இருக்குமே ன்னு அத பத்தியும் யோசிச்சு எழுதீருக்கீங்க....

  மனிதர்களுக்கு மட்டும் இல்ல பறவைகளுக்கும் அதன் கூடு எவ்வளவு முக்கியம் அதையும் எவ்வளவு கவனத்தோட தேர்ந்தெடுக்கணும் ன்னு சொன்ன விதம் அருமை....
  கவிதையாகட்டும் கதையாகட்டும் ரொம்ப சாதாரண விஷயத்தையும் அசாதாரனமா சொல்ற உங்க கவிநடையும் உரைநடையும் நன்று...

  இதுபோன்ற உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!!!
   
 5. Vaishnavie

  Vaishnavie Gold IL'ite

  Messages:
  2,914
  Likes Received:
  62
  Trophy Points:
  130
  Gender:
  Female
  kaakai pidikirathuku ithu than arthama... iniku than theriyum...

  athungaloda othumai manidhargaluku ilaye...:bonk

  romba nalla karuthulla kathaiyai thanthathuku :bowdown nandri akka..
   
 6. deepa04

  deepa04 Gold IL'ite

  Messages:
  3,652
  Likes Received:
  264
  Trophy Points:
  183
  Gender:
  Female
  dear deva,
  கவிதையில் மட்டுமின்றி,எனது முதல் கதை முயற்சிக்கும்,ஆதரவு தந்து,பின்ஊட்டமும் தந்த,அருமை தங்கைக்கு ,நன்றிகள் பற்பல.

  ஏதோ ,சொன்னதற்காக படித்தோம் ,என்று இல்லாமல்.நிஜமாகவே ,அக்கறையோடு விமர்சித்ததற்கு மிக்க நன்றி.
   
 7. deepa04

  deepa04 Gold IL'ite

  Messages:
  3,652
  Likes Received:
  264
  Trophy Points:
  183
  Gender:
  Female
  எனது எல்லா கவிதைக்கும் ஆதரவு தந்து,ஊட்டம் தந்தது உண்மையில் உனது,பதில்கள் தான் என் தங்கையே!
  ஒரு,கவிதை முடித்தவுடன்,அதற்க்கு என் தங்கைகள் வைஷுவும்,தேவாவும் என்ன பதில் தந்துள்ளார்கள் என ஆவலுடன்,இணையதளத்தில் சுற்றுவேன்.உமது ஆதரவுக்கு மிக்கநன்றி.
   
 8. Elvee

  Elvee Gold IL'ite

  Messages:
  507
  Likes Received:
  104
  Trophy Points:
  115
  Gender:
  Female
  intha vishayathula 'give and take' illama, namma budhiya avangalukku kodukkaama avanga parantha manasa namma vaangikuvom. oru nalla karutha ivalo azagha elimaya sonnathuku paratukalum nandrigalum ^_^:thumbsup
   
 9. shreyashreyas

  shreyashreyas Gold IL'ite

  Messages:
  4,914
  Likes Received:
  156
  Trophy Points:
  160
  Gender:
  Female
  mudhal muyarchile nalla vandhirukku deepa... nalla kadhaiyamsam .... azhagaa solli irukkeeenga....
   
 10. deepa04

  deepa04 Gold IL'ite

  Messages:
  3,652
  Likes Received:
  264
  Trophy Points:
  183
  Gender:
  Female
  thanks for your fb,elvee.
   

Share This Page