1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவி குயில்களுக்கு என் வந்தனம்!

Discussion in 'Regional Poetry' started by yams, Jun 7, 2010.

  1. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    எனக்கு கிடைத்த பல பாக்கியங்களில் இண்டுசும் ஒன்று.
    இந்துஸ் எனக்கு தந்த பாக்கியங்கள் பல உண்டு
    கவிதைகள், கதைகள் , வாழ்கையில் நடந்த பல நிகழ்சிகள்
    இவையை என்னுள் இருந்து வெளிகொணர்ந்த ஒரு மேடை
    நண்பர்கள் எண்ணிக்கையை நாளுக்கு நாள் கூட்டச்செய்யும்
    ஒரு சபை.
    பெற்ற தாய்க்கு நிகராக கருதும் ஒரு மகனையும்
    பெண் குழந்தைகள் இல்லாத எனக்கு பிறக்காமலே
    பல பெண் குழந்தைகளையும் தந்த ஒரு குடும்பம்.
    அத்தகைய பெண் குழந்தைகளில் மாணிக்கம் போல்
    ஒரு சுட்டி பெண்.
    கவிபாடும்
    கதை பேசும் இவளுக்கு லைலாவின் வேகம்.
    அவள்தான் இண்டுசின் மைல் கல்லுகளை
    படு வேகத்தில் தாக்கும் நம் யாம்ஸ் ,

    thanks yams kanna

    ganges
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    Ilஇன் குயில்கள் பற்றி
    வரிகள் சொன்ன என்
    புலவியே
    புயலாய்
    சாரல் மழையாய்
    உன் விரல் கொண்டு நீ கொடுத்த
    படைப்புகள் பற்றி யார் சொல்வார்
    வயது சிறியது
    வந்து விழும்
    வந்தனமோ பெரியது
    கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்குமா
    தொடரட்டும் உன்
    கிறுக்கல்கள் காவியமாய் .......
     
  3. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள கங்கா மா!
    தங்கள் வாய் மொழி பாராட்டை பெற பெரும் பேறு பெற்றேன்!
    நன்றி தாயே!
     
    Last edited: Jun 8, 2010
  4. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்புள்ள மல்லி கா!
    என்ன தவம் செய்தனை யசோதா?? இந்த இந்தஸ் லேடீஸ் வர?? என்று பாட தோன்றுகிறது!!
    அன்புள்ள அக்காகளில் என் மனம் கவர்ந்த மூத்த சகோதரியாய் தாங்கள்!
    [​IMG]
    தங்கையை பாராட்ட எங்கும் முதலாய் நீங்கள் இருக்கையில் என் படைப்புகளின் வேகம் தான் குறையுமோ??
    சாதனை செய்வது என் கண்ணாளனுக்கு தெரியும் ஆனால் என் அதிர்ஷ்டம் அவருக்கு தமிழே சரியாய் படிக்க வராது!
    இதில் நான் எங்கிருந்து அவரிடம் கவிபாட?? சொன்னாலும் "நல்ல இருக்கு டா" மட்டும் தான் வரும்!:bonk:bonk
     
  5. Sudha Kailas

    Sudha Kailas IL Hall of Fame

    Messages:
    12,873
    Likes Received:
    1,987
    Trophy Points:
    455
    Gender:
    Female
    Yams, you are the kick start for our interest in tamizh kavithai.......
    Now we have so many and each one of you share your thoughts so beautifully.
    I am not good in writing kavithai but enjoy reading them all..
    Keep sharing your thoughts this way dear...........
    [​IMG]
     
  6. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    என் கிறுக்கல்களை காவியமாக்கிய அன்பு அக்க சரோஜாவுக்கு நன்றிகள் பல!:bowdown
     
  7. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்பு சுதா!
    கவியை ரசிக்கும் நீங்கள் இருக்கவே தான் கவி பாடும் ஆர்வம் எங்களுள் குறைவதில்லை!
    நன்றி சுதா
    மேலும் படியுங்கள்!:bowdown
     
    Last edited: Jun 8, 2010
  8. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    அன்புள்ள யாமினி,

    உனது அன்பே அன்பு.
    சென்னையில் என்றாவது மழை பொழியும்,
    ஆனால் நீ சென்னையில் இருந்து பொழியும்,
    அன்பு மழைக்கு என்றுமே பஞ்சம் இல்லை.

    எங்கள் ஒவ்வொருவரையும் அழகு படுத்தி நீ மிக அழகாகி விட்டாய்.

    அதுவே அன்பின் சிறப்பு.

    அன்பை பொழி, அது உன்னை அழகாக்கும். பலருக்கு அது புரிவதில்லை.

    நன்றிகள் பல யாமினி. உன் அழகு கூடட்டும். ஆனந்தம் பெருகட்டும்.
     
  9. yams

    yams Platinum IL'ite

    Messages:
    7,725
    Likes Received:
    846
    Trophy Points:
    270
    Gender:
    Female
    அன்பில் அழகை கண்ட என் ஆருயிர் தோழரே!
    அன்பே அனைத்து மாயமும் செய்யும்! அதுவே என்னை இங்கு கட்டி வைப்பதும்!
    அன்புடையோர் நீண்டு வாழ வாழ்த்தும்
    நல் இதயம்!
    நன்றி நட்ஸ்!:cheers
     
  10. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    மாபெரும் கவிக்குயில்களின் பட்டியலில்
    என்னையும் ஒரு குயில் என சொன்ன யாமினிக்கு என் நன்றி.
    எனக்கு இப்படி ஒரு அடித்தளம் அமைத்துக் கொடுத்து
    நல்ல பல நண்பர்களைக் கொடுத்த IL க்கு எனது நன்றி.
    நன்றி சொல்ல இந்த வாய்பபளித்த குயிலே யாமினி........:bowdown
     
    Last edited: Jun 8, 2010

Share This Page