1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவியெனும் அழகி என் கனவிலும் வந்தாள்.

Discussion in 'Regional Poetry' started by iniyamalar, Dec 4, 2010.

  1. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    கவியெனும் அழகி என் கனவிலும் வந்தாள்.
    கவிசுரத்தில்* தனை மறந்த கதைதனைச் சொன்னாள்
    சிரி(ஸ்ரீ)யெனும் இளைஞனின்(?) சிறப்பெடுத்தும் சொன்னாள்
    சரி தான் அதற்கென்ன இப்பொழுது சொல் அழகி என்றேன்

    பெண்ணழகு கண்தாழ்த்தி சிரம் தாழ்த்தி நின்றாள்
    பொன்பாத விரல் வளைத்து மண்கோலமிட்டாள்.
    அடியம்மா! இது என்ன புதுக் கோலம்? என்றேன்
    அழகே உன் முகச்சிவப்பின் விவரம் சொல் என்றேன்

    நாண் வளைத்த வில் நிகர்த்த உடல் நிமிர்ந்து நின்றாள்
    நாணத்தால் சிவந்த முகம் நான் பார்க்கத் தந்தாள்
    கண்ணிரண்டும் சிவந்து கொவ்வையெனவிருக்க
    தந்தக் கை தாமிரண்டும் தன்பாட்டில் பிசைந்திருக்க

    எனைப்பார்த்துச் சொன்னாள்..எழிலாகச் சொன்னாள்.

    அவனால் தான் என் தூக்கம் பரிபோச்சே என்றாள்
    அழகான கண்ணிரண்டும் சிவப்பாச்சேவென்றாள்
    தங்கக்கொடியுடலும் துவண்டு போச்சென்றாள்
    தளிர் நடையும் அவனால் தான் தளர்ந்தாச்சேயென்றாள்

    அப்பப்பா இது ரொம்ப பொல்லாக் குற்றச்சாட்டு
    ஸ்ரீ ரொம்ப நல்ல பிள்ளை, ஆதாரம் நீ காட்டு
    அப்படி நான் சொன்னதும் அகண்டதவள் விழிகள்
    பாலில் விழுந்த திராட்சையோ என மொய்த்ததிளம் கிளிகள்.

    நித்தமெனைத் தூக்கத்தில் அழைக்கின்றான் என்றாள்
    நினைத்து நினைத்தே எனைக் கரைக்கின்றான் என்றாள்
    பலவாறு எனைப் பாடி சிரிக்கின்றான் என்றாள்
    பலர் கேட்க என் அழகை உரைக்கின்றான் என்றாள்.

    இதற்காய் தான் இப்படி கண் கசக்கினாயா நீ?
    இதுபோல ஒரு ரசிகன் கண்டதுண்டா நீ?
    அவன் கனவில் நீ வந்து கடைந்தெடுக்கும் போது
    அவன் உன்னைக் கவிபாட குறை என்பதேது?

    ஒரு மின்னல் ஒரு தூரல் ஒரு வெள்ளிக்கீற்றாய்
    அவன் எதிரில் நீ வந்தால் அவன் பறப்பான் காற்றாய்
    அது புரியாமல் நீ கரைந்தால் இது என்ன வேடிக்கை.
    இந்த சமாதானம் செய்வதெல்லாம் எனக்கல்ல வாடிக்கை

    தூக்கம் கலைப்பதெல்லாம் உம்மிருவர் வேலை
    அழகே வேலைகள் எனக்குப் பல உண்டு நாளை காலை
    சொல்லி நான் புறம் படுக்க வாடியதம்முல்லை
    எனக்கோ கண் தூக்கம் சிறிதளவும் இல்லை
    பூவிதழ் அவள் இமைகள் ஒரு பக்கம் துவள
    என் மனதோ கரைந்தது என்னவென்று சொல்ல

    உன்மத்தம் கொளச் செய்யும் உன் அழகைக் கண்டால்
    ஊனுறக்கம் பிடிக்கவில்லை பெண்ணான என்னால்
    அவன் பாவம் என்ன செய்வான் ஆண் வர்க்கம் தானே
    அழுகாதே அதற்காக ஒரு உபாயம் சொல்வேனே

    பேசாமல் அவன் முன்னே சென்று விடு நீயும்
    கானலாய் கண்டவளைக் கண்முன்னே காணும்
    அவன் மனமும் மாறி விடும் கலங்காதே நாளும்
    ஆனாலும் பெண்ணே அவன் மாறி வந்த பின்னே
    கவி பாட ஆளில்லை என்று வந்து நிற்காதே என் முன்னே

    கவலைகள் பறந்த நொடி அவள் முகம் பொன்விளக்காய் மின்ன
    அவள் இன்பம் அவன் மறப்பதல்ல அவனை நேரில் கண்டு நாண
    எனப் புரிந்து கொண்டு அவ்வழகை ஒரு நொடி மனதில் கொண்டு
    மெல்லச் சிரித்து கண்ணயர்ந்தேன் அப்புறம் புரண்டு..


    * கவிசுரம் -கவிதையில் ஸ்வரம்
    கவிதை ஜுரம்


    ஸ்ரீ அவர்களின் கவியெனும் அழகி கவிதையின் தொடர்ச்சியாய் பதிலாய் (கேள்வியே இல்லையே பதில் ஏம்மான்னு கேக்குறீங்களா? அதெல்லாம் அப்டித்தான் கண்டுக்காதீங்க ;-)) இதைக் கொள்ளலாம்


     
    Loading...

  2. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    மலர்.... அற்புதம்.. அருமை... இதற்கு மேல் என்ன சொல்ல...அச்சோ..பதில் கவிதை மிகவும் நன்று மா.. :thumbsup:thumbsup:thumbsup:thumbsup:thumbsup

    நாண் வளைத்த வில் நிகர்த்த உடல் நிமிர்ந்து நின்றாள்
    நாணத்தால் சிவந்த முகம் நான் பார்க்கத் தந்தாள்
    கண்ணிரண்டும் சிவந்து கொவ்வையெனவிருக்க
    தந்தக் கை தாமிரண்டும் தன்பாட்டில் பிசைந்திருக்க

    ஒரு மின்னல் ஒரு தூரல் ஒரு வெள்ளிக்கீற்றாய்
    அவன் எதிரில் நீ வந்தால் அவன் பறப்பான் காற்றாய்


    பாலில் விழுந்த திராட்சையோ என மொய்த்ததிளம் கிளிகள்

    கவலைகள் பறந்த நொடி அவள் முகம் பொன்விளக்காய் மின்ன
    அவள் இன்பம் அவன் மறப்பதல்ல அவனை நேரில் கண்டு நாண


    அடடா... இதற்காகவே நான் ரசித்து ரசித்து படித்தேன் இரு முறை!!!!
    நீங்கள் இத்தனை இடைவெளிவிட்டு கவிதை பக்கம் வருகிறீர்களே... இனி தொடர்ந்து உங்கள் கவிதைகளை இங்கு எதிர்பார்ப்பேன்.ஏமாற்றாமல் வரவும்.:)

     
  3. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    இனிய மலர், சிங்கார சென்னை, தங்க தமிழ் நாடு , என்று உங்க விவரம் கண்ட அன்று , உங்களிடம் இருக்கும் அழகிய தமிழை உணர்ந்தேன்.... இன்று ஸ்ரீக்கு பதில் தரும் இந்த கவிதை கண்டு நீங்கள் கவிதாயினி என்பதையும் உணர்ந்தேன்...அருமையாய் உள்ளது உங்கள் எழுத்து ....மேலும் எழுதுங்கள் .....
     
  4. latha85

    latha85 Silver IL'ite

    Messages:
    2,388
    Likes Received:
    41
    Trophy Points:
    83
    Gender:
    Female
    malar.....kavi alagikku neenga sonna theerpu romba sari....

    romba azhagana pthilai ..arputhama kavithayil koduthurukeenga malar....

    super ovvoru varigalum...:bowdown
     
  5. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    ரொம்ப நன்றி தேவா..
    என்ன செய்ய்யிறது..உண்மைக்குச் சொன்னா எனக்கு கதை தான் சாப்பாடு மாதிரி..கவிதை ஊறுகாய் மாதிரி..(no offense)

    ஆனாலும் வெறும் சாப்பாடு அப்பப்ப சலிச்சிறுது..ஊறுகாய் பக்கமா மனசும் ஊறுது.
    இங்க நெறைய சீரீயஸ் கவிஞர்கள் இருக்கீங்க..உங்க கவிதைகளைப் படிக்கவே அடிக்கடி வருவேன்.எழுதத் தான் நேரம் வாய்க்காது.

    இனி இங்கயும் அப்பப்ப அட்டெண்டன்ஸ் போட்டுட்டாப் போச்சு..

    இனிப்பான பின்னூட்டத்துக்கு நன்றி..:):)
     
  6. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female
    ரொம்ப நன்றி லதா மேடம்..
    கண்டிப்பா இன்னும் எழுத முயற்சி பண்றேன்..ஆனா நான் கவிதைல ரொம்ப சூரப் புலி எல்லாம் இல்லை. ஏதோ என்னால முடிஞ்ச பங்களிப்ப பண்ன முயற்சி செய்றேன்.
     
  7. iniyamalar

    iniyamalar Gold IL'ite

    Messages:
    1,432
    Likes Received:
    130
    Trophy Points:
    135
    Gender:
    Female

    thanx a lot latha...
    thank you so much....
    :):):)
     
  8. latharam09

    latharam09 Platinum IL'ite

    Messages:
    3,149
    Likes Received:
    680
    Trophy Points:
    235
    Gender:
    Female
    சூரப்புலி இல்லாமயே இந்த போடு போடறீங்க, :thumbsup

    madam lam venaame, :rant :)
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    இனியமலர் - உங்கள் ஊருகாயே முழு சாப்பாடு மாதிரி தான் இருக்கு,
    அப்ப முழு சாப்பாடு எப்படி இருக்கும்?

    பலே அந்தக் கவிதைக்கு - பதிலா இக்கவிதை - நல்லாருக்கு.

    வித விதமா சமைச்சு போடுங்க, சாப்டு குறை குத்தம்,
    சொல்ல மாட்டேன் ஆனா வம்பிழுப்பேன். அடிக்க மாட்டீங்கல்ல? :)
     
  10. abibaby

    abibaby Silver IL'ite

    Messages:
    1,500
    Likes Received:
    10
    Trophy Points:
    58
    Gender:
    Female
    Iniyamalar,

    Oru siru idaivelikku pin kavithai pakkam vanthu arputhamaana kavithai padaithirukkireergal. Vaarthai jaalam arumai. kalakkitteenga.:thumbsup:thumbsup:thumbsup

    Innum niraya ezhuthungal. Neenga soora pulli illanu sollittu ippadi asathala eluthi irukeenga.:)
     

Share This Page