1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

"கவிதை உலாவல்" [கல்கியில் வெளியான கவிதை. ந

Discussion in 'Regional Poetry' started by bharathymanian, Oct 13, 2014.

  1. bharathymanian

    bharathymanian Silver IL'ite

    Messages:
    66
    Likes Received:
    79
    Trophy Points:
    58
    Gender:
    Male
    கவிதை கஃபே

    விழிகள்!

    [​IMG]
    பார்வை அம்புகள் தைத்த மாத்திரத்தில்
    போதையில் வீழ்த்தித் தடுமாறவைக்கும்
    உன் விழிகளென்ன மதுபானக் கடை விரிப்பா?
    அல்லது மன்மத பாணக் குவிப்பா?


    - வேலூர் மூ.மோகன்.
    %%%%%%%%%%%%%%%%%%%%


    வாழ்வியல் கணிதம்!
    ++++++++++++++


    அன்பு கூட்டி
    அறிவு பெருக்கி
    குற்றம் கழித்து
    ஒழுக்கம் வகு.
    பகைமை கழித்து
    பணிவு கூட்டி
    நேர்மை பெருக்கி
    எளிமை வகு.
    பொறாமை கழித்து
    தன்னம்பிக்கை கூட்டி
    திறமை பெருக்கி
    நன்றி வகு.
    பொறுமை கூட்டி
    குடி கழித்து
    ஆரோக்கியம் பெருக்கி
    இல்லறம் வகு.
    பேராசை கழித்து
    உழைப்பு கூட்டி
    சிக்கனம் வகுத்து
    செல்வம் பெருக்கு.
    சுயநலம் கழித்து
    பொதுநலம் பெருக்கி
    துணிவு கூட்டி
    தலைமை வகு.
    வன்முறை கழித்து
    வாய்மை பெருக்கி
    இரக்கம் கூட்டி
    அமைதி வகு.


    - சு. ஜெயக்குமார், சென்னை- 41.

    ()()()()()()()()()()()()()()()()()


    சுருக்கம்!

    *********


    [​IMG]
    நூறு வயதை நெருங்கி
    இறந்துபோன
    பாட்டியின் முகத்தைப்
    பார்ப்பது போலவே இருக்கிறது...
    பாட்டியின் பழைய
    சுருக்குப் பையைப்
    பார்க்கும்போது!


    - மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^


    மலர்ச்சி!

    %%%%


    குழந்தைகளைப் பார்த்தவுடன்
    பூக்களைப் பறிக்கச் சொல்லி
    கிளைகளை நீட்டுகின்றன பூக்கள்!


    - கி. ரவிக்குமார், நெய்வேலி.

    $$$$$$$$$$$$$$$$$$$$$$$$


    ஊடுருவல்!


    நிலவைத் தாழிட்டுத் திறக்கும்
    மேகம் போன்று
    உன் வீட்டின் ஜன்னல் கதவுகள் நகர்தலில்
    புகுந்து கொள்கிறேன் நான்.
    எதிர் வீட்டு சமையல் அறையில்
    சிறைப்படாத வாசனை போல...


    - க. கோபிலெட்சுமி, பள்ளிய அக்ரஹாரம்.
    #######################################################

    கவிதைகளை ரசிப்பது ஒரு அலாதி இன்பம் தான்! அது ஒரு வெகுமதியும் கூட. 'வாழ்வியல் கணிதம்' நாம் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று கரெக்டாக பட்டியல் போட்டு உள்ளது. Your comments are invited.

    "பாரதிமணியன்"
     
    2 people like this.
    Loading...

  2. kalpavriksham

    kalpavriksham Gold IL'ite

    Messages:
    884
    Likes Received:
    473
    Trophy Points:
    138
    Gender:
    Female
    Re: "கவிதை உலாவல்" [கல்கியில் வெளியான கவிதை. &#2

    "vazhviyal kanidham naam ennavellam seiavendum ena pattial pottu ulludhu"----idhuve oru kavidhai madhiri ezhudhi ullirgal.

    that was an excellent truth of life ! i feel i am blessed to know this. arumaiyana vasagam. thanks a lot for that.

    all kavidhais were very "rammiama irundhadhu"

    warm wishes
     

Share This Page