1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதையில் அந்தாதி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 17, 2010.

  1. AkhilaaSaras

    AkhilaaSaras Gold IL'ite

    Messages:
    1,514
    Likes Received:
    396
    Trophy Points:
    160
    Gender:
    Female
    பிறக்கும் முன்பும் உதைத்தாய்
    பிறந்த பின்பும் உதைத்தாய்
    அன்று கலங்கியது அன்பில்.....
    இன்று கலங்குவது வலியில்....
     
    vaidehi71 and priyangamurali like this.
  2. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    வலி தான் அன்பே !
    உன் காதல் எனக்கு வலிதான்!
    என்னுள் உறைந்த பெண்மையை
    எனக்கு ஆவேசமாக உணர வைத்த
    உன் காதல் எனக்கு வலிதான் !
    என்னுடைய உறவுகளை விட்டு
    உன் உறவே அனைத்துமென்ற
    உன் காதல் எனக்கு வலிதான் !
    எனை மறந்தேன் என் வழிமறந்தேன் !
    என் கல்வி எனக்கு போதித்த
    அறிவை எல்லாம் மறந்தேன்
    கள்வனே உன்னாலே !
    நீயே என் உலகமுமாக
    உன் உயிரே என் உணர்வாக
    கலந்து விட்ட என் தீஞ்சுவையே !
    வலிக்கிறது என் உள்ளம் -எனை
    பிரிந்து சென்ற என் கண்ணாளா
    உன் காதல் எனக்கு வலிதான் !
    உன் காதலால் எனக்கு வலிதான் !
     
    vaidehi71, AkhilaaSaras and laddubala like this.
  3. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    வலிதான் எனத்தெரிந்தும்
    சுகமாய் பெறுகிறாள் அன்னை
    அவள் நடமாடும் தெய்வம்!!!!
     
    vaidehi71 likes this.
  4. Malar2301

    Malar2301 Gold IL'ite

    Messages:
    1,594
    Likes Received:
    173
    Trophy Points:
    135
    Gender:
    Female
    தெய்வம் எங்கே என்று தேடி அலையும் மனமே...
    அகக்கண் திறந்து பார்...
    உன் வீட்டினிலே இருக்கும் அன்னையும் தெய்வமே!!
     
    vaidehi71 likes this.
  5. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    அன்னையும்(தந்தையும்) தெய்வம்
    என்று உணர்ந்தால் என்றும்
    விடமாட்டார்கள் அவர்களை
    முதியோர் இல்லத்தில்!!!
     
    vaidehi71 and priyangamurali like this.
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    முதியோர் இல்லம் ..
    தோள் கொடுக்க தோழர்கள் இல்லை
    ஆதரவாய் பேச பிள்ளைகள் இல்லை
    முதியோர்களுக்கு கிடைத்தது புதிய சரணாலயம்
    முதியோர் இல்லம் ..சமூக தீவிரவாதம்
     
    vaidehi71 and priyangamurali like this.
  7. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    தீவிரவாதியே !
    எல்லை தாண்டிய காதல் தீவிரவாதி நீ !
    உனது பயங்கரவாதத்தால்
    எனை மயக்கிய காதல் தீவிரவாதி நீ !
    நித்தமும் சிறிதும் கருணை இல்லாமல்
    காதலால் எனை கொல்லும் தீவிரவாதி நீ !
    மூச்சில் கலந்து உயிர் குடித்து
    எனை வென்ற காதல் தீவிரவாதி நீ !
    உனை வெல்லவே போராடினேன் -ஆனால்
    தோற்று போனேன் சுகமாகவே !
     
    vaidehi71 likes this.
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    சுகமே
    காலையில் கவிதையில் லயித்திடும் மனது சுகமே
    செழித்திடும் வாழ்வும் சிரித்திடும் இதயமும்
    விழித்தெழும் பட்டென.
    பார்வையில் தமிழ் பட்டதுமே
    சட்டெனவே சுட்டனவே
    வாழ்வின் வாசனைகள் :):):)
     
    vaidehi71 and knbg like this.
  9. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    வாழ்வின் வாசனைகள்
    அமைதியான வாழ்கை
    மகிழ்வான சுற்றம்
    நிலையான அன்பு
    சுகமான நினைவுகள்
    அனைத்தும் கிடைக்க
    செய்த இறைவா
    நன்றிகள் :bowdown:bowdown
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    நன்றி
    தமிழ் நெஞ்சங்கள் மறவாத மூன்றெழுத்து
    நலமான உள்ளத்திற்கும் ,வளமான அன்பிற்கும்
    நம்பிக்கையூட்டும் எழுச்சிமிக்க மந்திரம்.
    நன்றி மறப்பது நன்றன்று.....
     
    1 person likes this.

Share This Page