1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதையில் அந்தாதி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 17, 2010.

  1. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    உனை விட்டு நீங்காது
    என் நினைவு !
    கண்ணாளா
    உயிர் நீங்கி போனாலும்
    உனக்காக காத்திருப்பேன்!
    என் பிறவிகள் தோறும் !
    மறப்பாயோ என்னுயிரே !
     
    vaidehi71 likes this.
  2. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    என் உயிரே .......
    என்னுள் உரைந்து .......
    என்னுடன் உனது சின்ன சின்ன துடிப்புகளால் உரையாடும் என் கண்மணியே.....
    உன்னை கையில் ஏந்தி, கண்ணே ,மணியே என கொஞ்சி.....
    உன் கிள்ளை மொழி கேட்க ......இன்னும் ஐந்து திங்கள் காத்திருக்க வேண்டுமோ.......?
     
  3. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    வேண்டாம் நின் மெளனம் !
    ஆண்டு பல காத்திருந்து
    கண்கள் உனை பார்க்க ஏங்கி இருந்து
    என்னுள் வர மறுத்த என்னுயிரே!
    வேண்டாம் நின் மெளனம் !
    உன் மொழி கேட்கவே ஏங்கினேன் -உனை
    பாராமல் செந்தணலில் வாடினேன் !
    எனக்கான என்னுயிரே -இன்னமும்
    வேண்டாம் நின் மெளனம் !
    சுடுகிறது வெண்பனியும்!
    எரிக்கிறது முழு மதியும் !
    என் கண்களும் வற்றி விட
    ஏங்குகின்ற என் மணி வயிற்றில்
    வாராய் என் பிள்ளை கிள்ளாய் !
     
    vaidehi71 and knbg like this.
  4. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    வாராய் என் பிள்ளை கிள்ளாய்....

    கனவுலகில் தினமும் கட்டியணைக்கும் நீ.....
    கண் விழித்த பின் கண்ணாமூச்சி ஆடுகிறாய்..............

    கல்லூரியில் கால் பதித்தால்.......
    விடுதியிலே வசித்துவிட்டால்................
    நீ என் பிள்ளை இல்லை என்றாமோ....?

    நரை, திரை வந்தாலும்.......
    முதுமையே முத்தமிட்டாலும்.......
    அப்போதும் நீ என் பிள்ளை தானே......
    அம்மாவை ஒதுக்காதே என் செந்தேனே......
     
    1 person likes this.
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    செந்தேனே என்றதும் நீதானே
    என் தாயே நீதானே
    என் நாவில் இனிக்கிறாய்
    எல்லை இல்லாமல் எனக்குள்
    எப்போதும் இருக்கிறாய்
    எந்நாளும் பிறக்கிறாய்.
    எழில் கொஞ்சும் தமிழே
    எவர்க்கும் நீ அரிதே
    எற்றைக்கும் எட்டுத் திக்கும்
    எல்லாம் உன் சிறப்பே !!!!!!
     
    vaidehi71, knbg and priyangamurali like this.
  6. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சிறப்போ சிறப்பு இன்று
    காணாது போனவர்களை
    கண்டது இத்திரி இன்று
    இன்று போல் என்றுமே
    இருப்பின் கவிதைக்கு சிறப்பு...
     
    vaidehi71 likes this.
  7. kavibhanu

    kavibhanu Bronze IL'ite

    Messages:
    47
    Likes Received:
    31
    Trophy Points:
    38
    Gender:
    Female
    சிறப்பு என்ன என
    உன்னில் தேடினேன்
    நீயே எனக்கு சிறந்தவன்
    என அறியாமல்...
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    அறியாமல்தான் நானும் போனேனே
    போகும் முன் சொன்னேனே
    சொன்ன பின் சென்றேனே
    வந்த பின் அறிந்தேனே
    இங்கு ஒரு ரண களம் என்று :rant
    புரிந்தவர் பதில் உரைப்பார்
    புரியாதவர் ??????:hide:
     
    1 person likes this.
  9. priyangamurali

    priyangamurali Bronze IL'ite

    Messages:
    282
    Likes Received:
    46
    Trophy Points:
    48
    Gender:
    Female
    அறியாமல் என்னுள் நுழைந்தவனே !
    உன்னால் என் ஊன் உருகியதே !
    பாலும் கசந்ததே !படுக்கையும் நொந்ததே !
    என்ன செய்வேனடி தோழி ?
    காரணம் அறிவாயோ தோழி ?
    லேப் அசிஸ்டன்ட் சொன்னார் கேளடி தோழி !
    மலேரியா !
     
  10. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    மலேரியா....., பைலேரியா ..என்று மெதுவாக தொடங்கி.....
    எங்கள் சுகாதாரமின்மைக்கு தண்டனை தந்த கொசு சமுதாயமே......

    இப்போது பொறுமை இழந்து.....
    டெங்கு, சிக்கன் குனியா என புதிது புதியதாய் நோய் தருகிறாயே......

    பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என புரியவைக்கவா...?
     

Share This Page