1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கவிதையில் அந்தாதி

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Jun 17, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    அன்பு நண்பர்களே,

    அந்தாதி என்றதும் அனைவர்க்கும் நினைவு வருவது "அபிராமி அந்தாதி" தான்.

    "அந்தாதி" என்பது அந்தம், ஆதி என்ற இரு சொற்கள் கொண்ட வட மொழி தொடர். இதில் உள்ள அந்தம் என்பது "முடிவு" என்று பொருள் தரும் "ஆதி" என்பது துவக்கம் என பொருள் தருகிறது. முடிவை முதலாகக் கொண்டு அமைவது அந்தாதி ஆகும். ஒரு செய்யுளின் இறுதியில் வரும் சொல்லை முதலாகக் கொண்டு அடுத்த செய்யுள் தொடங்குவது தான் அந்தாதி எனப் படும்.

    அது போல ஒரு புதிய முயற்சி செய்வோம். கவிதையில் அந்தாதி எழுத..... ஒருவர் ஒரு கவிதை துவங்கினால், அந்தக் கவிதையின் முடியும் சொல் கொண்டு அடுத்தவர் வேறு கவிதை சொல்ல வேண்டும். தமிழில் தேய்ந்து கொண்டிருக்கும் ஒரு செய்யுள் வகை மலர ஒரு முயற்சி...அனைவரும் வருக.
     
    kaniths and laddubala like this.
    Loading...

  2. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எப்போதும் துவங்குகையில் கடவுள் வாழ்த்துப் பாடுவது மரபு. ஆனாலும் கடவுள் நம்பிக்கை இல்லாத நண்பர்களும் நம்மிடையே இருப்பதால், ஐம் புலன்களாய் நமை ஆட்டுவிக்கும் ஐம்பூதங்களுக்கு முதல் கவிதை ....

    உலகுக்கெல்லாம் ஒரு கூரையை
    விளங்கும் வானமே
    அகழ்வாரையும் தாங்கும் நிலமே
    உலகிற்கே வெளிச்சம் தரும் ஞாயிறே
    உயிர் வளர்க்க உதவும் நீரும், காற்றுமே
    உங்கள் வாழ்வால் எங்களை வாழ்விக்கும்
    உங்களுக்கு வந்தனம்

    (அடுத்து துவங்குவோர் "வந்தனம்" எனும் வார்த்தையில் துவங்க வேண்டும்)
     
    Last edited: Jun 17, 2010
    Harini73 and kaniths like this.
  3. jananirbk

    jananirbk Senior IL'ite

    Messages:
    170
    Likes Received:
    7
    Trophy Points:
    23
    Gender:
    Female
    வந்தனம்
    வார்த்தைகளை வசமாக்கும் வித்தை கற்ற வேணிக்கு வந்தனம்!
    வனிதைகள் நிறைந்த வாசமிகு தோட்டத்துக்கு வந்தனம்!!
    அந்தமும் ஆதியும் அற்ற இறைவனுக்கு வந்தனம்!!
    அன்புள்ளம் கொண்ட அனைவர்க்கும் வந்தனம்!!
    இந்த அந்தாதி அந்தம் இன்றி நீள வேண்டும் என்பதே என் எண்ணம்!!

    Regards,
    Janani Natarajan
     
    1 person likes this.
  4. Sriniketan

    Sriniketan IL Hall of Fame

    Messages:
    12,521
    Likes Received:
    1,436
    Trophy Points:
    445
    Gender:
    Female
    வந்தனம் வந்தனம்,
    இந்த புதிய முயற்சிக்கு
    நல்ல வரவேற்ப்பு கிடைக்கச்
    செய்யும் எல்லா
    தோழர்களுக்கும் தோழிகளுக்கும்..

    தோழிகள்...அடுத்த நபர் ஆரம்பிக்கும் வார்த்தை..

    sriniketan
     
  5. Padmini

    Padmini IL Hall of Fame

    Messages:
    6,795
    Likes Received:
    1,177
    Trophy Points:
    345
    Gender:
    Female
    Ennam Aayiram siragadiththu parakkum
    Ezhuththil vadikka thudikkum
    Manadho Vaarththai thedi alaiyum
    Minnelena kavishai vadikka vizhaiyum
    Veni, un pol naan kavidhaayini illaiye!!
    anbhudan
    pad
     
  6. ganges

    ganges Gold IL'ite

    Messages:
    2,858
    Likes Received:
    52
    Trophy Points:
    110
    Gender:
    Female
    தோழிகள் வேண்டும் தோள் கொடுக்க
    சம கருத்து பரிமாறல்கள்
    தன்னலமில்லா தோழைமை
    தனிமை நாடும் இனிமை
    இவை கன்னி பருவகாலத்தை
    வசந்த காலமாக மாற்றும் ஆயுதம்


    ganges
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    இல்லையே என்ற வார்த்தை
    இல்லாதிருப்பவனுக்கே இருக்கும்
    உலகத்தில் உள்ள அனைத்து
    மகிழ்ச்சியும்!!!!!!!!
     
  8. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    மகிழ்ச்சியில் மலைத்து
    நிற்கிறேன் நான் - தங்கள்
    வருகையால் வசந்தம்
    வீசி வரச் செய்த என்
    வண்ண மலர்களே
    நன்றி உங்கள் நட்புக்கு
     
  9. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    ஆயுதங்கள் பல வசமிருந்தும்
    வெற்றி வரவில்லை நம் வசம்
    அஹிம்சையே ஆயுதமான
    போது வந்தது கைவசம்

    (இது கங்கா மா-வின் கவிதை முடிவில் ஆரம்பித்த கவிதை... இனி வருவோர் "கைவசம்" அல்லது "நட்பு" கொண்டு ஆரம்பிக்கவும்)
     
  10. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    நட்புக்கு மட்டும் நாம் செய்யும் உதவிகள்
    எல்லாம் சக மனிதர்களுக்கும் செய்யப்படுகிற
    நடப்புக்கு வந்துவிட்டால் துன்பங்கள்
    எல்லாம் வந்துவிடும்
    நடுரோட்டுக்கு!!!
     

Share This Page