1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கல்கியில் வெளியான கவிதை...

Discussion in 'Regional Poetry' started by bharathymanian, Jan 8, 2016.

  1. bharathymanian

    bharathymanian Silver IL'ite

    Messages:
    66
    Likes Received:
    79
    Trophy Points:
    58
    Gender:
    Male
    கவிதை
    [h=1]எனது பசுமையை நான் எப்படி பத்திரப்படுத்துவது?[/h] ஓவியம் : ரவி
    [​IMG]
    வெண் நீரோடை
    வகுடுகளினிரு புறமும்
    வனச் சிகையாகிற
    இலைகளின் பசுமையடர்
    நீள் விரிகுடைக் காடுகளின் மேல்
    கருக்கொண்ட நீர் சூல் மேகங்கள்
    மழையெனப் பெய்து
    மரம் கழுவுகையில் -
    கரையும் பச்சைவண்ணம்
    இலைகளில் கலந்த ஆதிக் காட்டின்
    கருவறையிலிருந்து பச்சை நிறத்தைத்
    தானம் பெற்ற பச்சைக் கிளியொன்று
    தன் மென்னிறகுகளின்
    பசுமையை வனமெங்கும்
    உதிர்த்து விட்டுப்
    பறக்கையில் தான்
    பசுமை நிறமல்ல வென்று
    புரியத் தொடங்கியது!
    காட்டின் நிறங்களை
    ஒருசேரக் குழைத்து
    தனது மரக் குப்பிகளில்
    நிறைத்துக் கொண்ட மலைக்காடு -
    விருட்சங்களின் வேர்களினூடே
    காட்டாற்றி லதைக் கரைத்து
    கானகப் பட்சிகளின் கூவலி னூடே
    பச்சையமாயதை ஓட விட
    அதில் கால் நனைக்கும் உயிரினங்கள்
    விழிகளில் பசுமை வாங்கி
    கால் வழியாக உருகவிட்டப்
    பெருங்காடெல்லாம் வயலாகி!
    வயல்கள் மனையாகி
    மனைகள் வீடாகையில்
    நிழல் தரும் மரங்களை
    வெட்டி விட்டு
    நிழற்குடைகளை
    கட்டித் தருகிறவர்களிடமிருந்து
    எனது பசுமையை
    நான் எப்படி
    பத்திரப்படுத்துவது
    ============================================================
    வயல்கள் மனையாகியதால்........சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட பெறு மழையினால்....மக்கள்ப ட்ட அவஸ்தை நம் கண் முன் எப்போதும் நிற்கும். இனி அவ்வாறு நடைபெறுவதைத் தடுக்க போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அரசாங்கள் எடுக்க மக்கள் ஆவன செய்யவேண்டும்.

    "பாரதிமணியன்"
     
    1 person likes this.
    Loading...

Share This Page