1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கலையாத யுகம் சுகம் தானோ

Discussion in 'Stories in Regional Languages' started by saranyaraj, Oct 16, 2012.

  1. saranyaraj

    saranyaraj Silver IL'ite

    Messages:
    136
    Likes Received:
    86
    Trophy Points:
    68
    Gender:
    Female
    கலையாத யுகம் சுகம் தானோ[/CENTER]

    உன் கை அணைப்பில் உறங்கும் வரை ..
    உன் ஆழ்ந்த பேச்சில் முழ்கி இருக்கும் வரை...
    அதிகாலையில் உன் கூந்தல் மெத்தையில்
    சுகமாய் உறங்க, காதருகில் உன் மென்மையான வருடலுடன்
    கொஞ்சும் கொஞ்சல் வார்த்தைகள் கேட்கும் வரை..
    உன் முத்தம் தந்த இதழ் ஈரம் என்னை விட்டு அகலாத
    நிமிடங்கள் நிற்கும் வரை...
    உன்னோடு கை கோர்த்து சென்ற இரவுகளின்
    யாரும் இல்லா அழகிய ரோடு நீளும் வரை...
    கொஞ்சி கெஞ்சி மிஞ்சி மீர்ந்து என
    என்னோடு விளையாடி உறவாடும்
    உன்னோடு இருக்கும் மணித்துளிகள் மீதும் வரை..
    மரணிக்கும் அந்த நிமிடம் உன் முகம் பார்க்கும்
    ஒரு கணம் என்னோடு நீ இருக்கும் வரை....
    கலையாத யுகம் சுகம் தானோ..


    அனைவருக்கும் என் இனிய வணக்கம்.. :wave:


    கல்லடி படாதவரை சொல்லடியை ஆவலுடன் ஏற்று எழுதடி என சொல்லும் மனதிற்காக இந்த கதையை பதிப்பிகின்றேன்,,,

    இதோ...என்னோட கதை..


    “கலையாத யுகம் சுகம் தானோ...”


    சிலருக்கு காதல் பொழுதுபோக்கு
    சிலருக்கு காதல் வாழ்க்கை,,,
    சிலருக்கு காதல் விளங்க முடியா விளக்கம்
    சிலருக்கு விளங்கிய சுகம்..
    சிலரின் காதல் ஆயுள் வரை நீளும்
    சிலரின் காதல் மனதில் மட்டும் வாழும்..
    சிலர் காதலை ஆராதிக்க
    சிலர் காதலை சாட... – என
    இப்படி காதல் என்ற வார்த்தை
    சில பல விதமாக வாழ்வில் என்றும் நிறைந்து இருக்கும்..
    அந்த காதல் என்ற அன்பை
    ரசித்து சுகித்து வாழ்கையை
    வாழ எதிர் நோக்கும் இரு இணை பறவைகளின் கதை...
    இவர்களின் வாழ்வில் காதல்
    எப்படி மலர்ந்து மணம் விசியது.........
    இவர்களின் காதல் வாழுமா இல்லை சாகுமா..


    ஹ்ம்ம்....
    இதே கேள்வியை நம் ஸ்ரீ, சஞ்சுவிடம் கேட்க,
    கிடைத்த பதில் இது........


    உள்ளக் காதல் அருகில் இல்லை என்றாலும் வாழும்

    உடல் காதல் அருகில் இருந்தாலும் மெல்ல தணிந்து சாகும்.

    நீயே புரிந்து கொள்... தெரிந்து தெளிந்து சொல்..

    நாம் எவ்விதம் என்று......


    சரிங்க....... இனி இவர்களை பற்றி கதையில் பார்க்கலாம்...

    (ஸ்ரீ.. சஞ்சு .. இதில் யார் ஹீரோ ..ஹீரோயின் அப்படின்னு சொல்லுங்க.. முழு பெயர் என்னவாக இருக்கும்.........)

    கண்டுபிடித்து சொல்லுங்க.. உங்கள் ஆதரவை எதிர் நோக்கி காத்துஇருக்கேன்...

    என்றும் அன்புடன் ,

    சரண்யா ராஜு..


    உங்களின் கருத்துகளை கீழ் உள்ள பகுதியில் பதியவும்...

    http://www.indusladies.com/forums/s...3-2965-2994-3016-2991-3006-a.html#post2496186
     
    Last edited: Oct 16, 2012
    Loading...

  2. saranyaraj

    saranyaraj Silver IL'ite

    Messages:
    136
    Likes Received:
    86
    Trophy Points:
    68
    Gender:
    Female
    கலையாத யுகம் சுகம் தானோ,,,,

    உன் கை அணைப்பில் உறங்கும் வரை ..
    உன் ஆழ்ந்த பேச்சில் முழ்கி இருக்கும் வரை...
    அதிகாலையில் உன் கூந்தல் மெத்தையில்
    சுகமாய் உறங்க, காதருகில் உன் மென்மையான வருடலுடன்
    கொஞ்சும் கொஞ்சல் வார்த்தைகள் கேட்கும் வரை..
    உன் முத்தம் தந்த இதழ் ஈரம் என்னை விட்டு அகலாத
    நிமிடங்கள் நிற்கும் வரை...
    உன்னோடு கை கோர்த்து சென்ற இரவுகளின்
    யாரும் இல்லா அழகிய ரோடு நீளும் வரை...
    கொஞ்சி கெஞ்சி மிஞ்சி மீர்ந்து என
    என்னோடு விளையாடி உறவாடும்
    உன்னோடு இருக்கும் மணித்துளிகள் மீதும் வரை..
    மரணிக்கும் அந்த நிமிடம் உன் முகம் பார்க்கும்
    ஒரு கணம் என்னோடு நீ இருக்கும் வரை....
    கலையாத யுகம் சுகம் தானோ..

    அனைவர்க்கும் என் இனிய வணக்கம்..

    கல்லடி படாதவரை சொல்லடியை ஆவலுடன் ஏற்று எழுதடி என சொல்லும் மனதிற்காக இந்த கதையை பதிப்பிகின்றேன்,,,


    இதோ...என்னோட கதை..
    “கலையாத யுகம் சுகம் தானோ...”



    சிலருக்கு காதல் பொழுதுபோக்கு
    சிலருக்கு காதல் வாழ்க்கை,,,
    சிலருக்கு காதல் விளங்க முடியா விளக்கம்
    சிலருக்கு விளங்கிய சுகம்..
    சிலரின் காதல் ஆயுள் வரை நீளும்
    சிலரின் காதல் மனதில் மட்டும் வாழும்..
    சிலர் காதலை ஆராதிக்க
    சிலர் காதலை சாட... – என
    இப்படி காதல் என்ற வார்த்தை
    சில பல விதமாக வாழ்வில் என்றும் நிறைந்து இருக்கும்..
    அந்த காதல் என்ற அன்பை
    ரசித்து சுகித்து வாழ்கையை
    வாழ எதிர் நோக்கும் இரு இணை பறவைகளின் கதை...
    இவர்களின் வாழ்வில் காதல்
    எப்படி மலர்ந்து மணம் விசியது.........
    இவர்களின் காதல் வாழுமா இல்லை சாகுமா..


    ஹ்ம்ம்....


    இதே கேள்வியை நம் ஸ்ரீ, சஞ்சுவிடம் கேட்க,
    கிடைத்த பதில் இது........


    உள்ளக் காதல் அருகில் இல்லை என்றாலும் வாழும்
    உடல் காதல் அருகில் இருந்தாலும் மெல்ல தணிந்து சாகும்.
    இனி நீயே புரிந்து கொள்...தெரிந்து தெளிந்து சொல்..
    நாம் எவ்விதம் என்று......


    சரிங்க....... இனி இவர்களை பற்றி கதையில் பார்க்கலாம்...
    (ஸ்ரீ.. சஞ்சு .. இதில் யார் ஹீரோ ..ஹீரோயின் அப்படின்னு சொல்லுங்க.. முழு பெயர் என்னவாக இருக்கும்.........)
    கண்டுபிடித்து சொல்லுங்க.. உங்கள் ஆதரவை எதிர் நோக்கி காத்துஇருக்கேன்...


    என்றும் அன்புடன்
    சரண்யா ராஜு...



    உங்களின் கருத்துக்களை கீழ் உள்ள லிங்க் பதியவும்

    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/194684-a.html
     
    Last edited: Oct 16, 2012
  3. saranyaraj

    saranyaraj Silver IL'ite

    Messages:
    136
    Likes Received:
    86
    Trophy Points:
    68
    Gender:
    Female
    கலையாத யுகம் சுகம் தானோ,,,,

    உன் கை அணைப்பில் உறங்கும் வரை ..
    உன் ஆழ்ந்த பேச்சில் முழ்கி இருக்கும் வரை...
    அதிகாலையில் உன் கூந்தல் மெத்தையில்
    சுகமாய் உறங்க, காதருகில் உன் மென்மையான வருடலுடன்
    கொஞ்சும் கொஞ்சல் வார்த்தைகள் கேட்கும் வரை..
    உன் முத்தம் தந்த இதழ் ஈரம் என்னை விட்டு அகலாத
    நிமிடங்கள் நிற்கும் வரை...
    உன்னோடு கை கோர்த்து சென்ற இரவுகளின்
    யாரும் இல்லா அழகிய ரோடு நீளும் வரை...
    கொஞ்சி கெஞ்சி மிஞ்சி மீர்ந்து என
    என்னோடு விளையாடி உறவாடும்
    உன்னோடு இருக்கும் மணித்துளிகள் மீதும் வரை..
    மரணிக்கும் அந்த நிமிடம் உன் முகம் பார்க்கும்
    ஒரு கணம் என்னோடு நீ இருக்கும் வரை....
    கலையாத யுகம் சுகம் தானோ..

    அனைவர்க்கும் என் இனிய வணக்கம்..


    கல்லடி படாதவரை சொல்லடியை ஆவலுடன் ஏற்று எழுதடி என சொல்லும் மனதிற்காக இந்த கதையை பதிப்பிகின்றேன்,,,


    இதோ...என்னோட]கதை..


    “கலையாத யுகம் சுகம் தானோ...”
    சிலருக்கு காதல் பொழுதுபோக்கு
    சிலருக்கு காதல் வாழ்க்கை,,,
    சிலருக்கு காதல் விளங்க முடியா விளக்கம்
    சிலருக்கு விளங்கிய சுகம்..
    சிலரின் காதல் ஆயுள் வரை நீளும்
    சிலரின் காதல் மனதில் மட்டும் வாழும்..
    சிலர் காதலை ஆராதிக்க
    சிலர் காதலை சாட... – என
    இப்படி காதல் என்ற வார்த்தை
    சில பல விதமாக வாழ்வில் என்றும் நிறைந்து இருக்கும்..
    அந்த காதல் என்ற அன்பை
    ரசித்து சுகித்து வாழ்கையை
    வாழ எதிர் நோக்கும் இரு இணை பறவைகளின் கதை...
    இவர்களின் வாழ்வில் காதல்
    எப்படி மலர்ந்து மணம் விசியது.........
    இவர்களின் காதல் வாழுமா இல்லை சாகுமா..
    ஹ்ம்ம்....


    இதே கேள்வியை நம் ஸ்ரீ, சஞ்சுவிடம் கேட்க,
    கிடைத்த பதில் இது........

    உள்ளக் காதல் அருகில் இல்லை என்றாலும் வாழும்
    உடல் காதல் அருகில் இருந்தாலும் மெல்ல தணிந்து சாகும்.
    இனி நீயே புரிந்து கொள்...தெரிந்து தெளிந்து சொல்..
    நாம் எவ்விதம் என்று......


    சரிங்க....... இனி இவர்களை பற்றி கதையில் பார்க்கலாம்...
    (ஸ்ரீ.. சஞ்சு .. இதில் யார் ஹீரோ ..ஹீரோயின் அப்படின்னு சொல்லுங்க.. முழு பெயர் என்னவாக இருக்கும்.........)
    கண்டுபிடித்து சொல்லுங்க.. உங்கள் ஆதரவை எதிர் நோக்கி காத்துஇருக்கேன்...

    என்றும் அன்புடன்..
    சரண்யா ராஜு...
     
    Last edited: Oct 16, 2012
    1 person likes this.
  4. saranyaraj

    saranyaraj Silver IL'ite

    Messages:
    136
    Likes Received:
    86
    Trophy Points:
    68
    Gender:
    Female
  5. saranyaraj

    saranyaraj Silver IL'ite

    Messages:
    136
    Likes Received:
    86
    Trophy Points:
    68
    Gender:
    Female
    Last edited: Oct 16, 2012
  6. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    1 person likes this.
  7. saranyaraj

    saranyaraj Silver IL'ite

    Messages:
    136
    Likes Received:
    86
    Trophy Points:
    68
    Gender:
    Female
    கனவு - 1

    தென்னந்தோப்பு சிலுசிலு காற்று
    கருமை இரவு பௌர்ணமி நிலவு
    பண்ணை வீடு முன்புறம்
    ஒற்றை கட்டில் அவ்வெளியில்
    என்னவர் மடி மீது நீ அமர
    நான் பால் சோறு ஊட்ட
    பௌர்ணமி நிலவொளி கண்டு
    பொக்கை வாய் சிரிப்போடு
    ரீங்காரம் பேசிய
    உன் முதல் வார்த்தை
    “ம்மா..” என்ற அழைப்பு
    நினைவில் இருக்கும் வரை..
    கலையாத யுகம் சுகம் தானோ....



    “போக மாட்டேன்......நான் போக மாட்டேன்... அப்பத்தா........நீயே உன் பிள்ளைகிட்ட சொல்லு.... நான் இங்கிட்டே படிக்கிறேன்...... அம்புட்டு தூரம் எல்லாம் போக முடியாது..............

    அப்படி போன உனக்கு யாரு வெத்தலை மடித்து தருவாங்க....லஷ்மிக்கு யாரு புல்லு போடறது... சரோஜா பாட்டி, ராணி அத்தை, மங்கம்மா பாட்டி....இப்படி ராமாயணம் கேக்க வரவங்களுக்கு யாரு படித்து சொல்லறது...

    வாரம் ஒரு முறை போற பாட்டு, டான்ஸ் கிளாஸ் எங்க போகறது...

    நீ அப்பன்கிட்ட சொல்லி என்னை இங்க பக்கத்தில் இருக்கற காலேஜ்ல சேர்க்க சொல்லு அப்பத்தா.. நான் வார வாரம் வந்துடுவேன் இல்ல...

    நீ சொல்ற பேச்சை கூட நான் கேக்கறேன்..ஹ்ம்ம்...உன்னோட வெத்தலை பாக்கு அதில் பப்பாளி விதை எல்லாம் கலக்கமா சரியா மடித்து தருவேன்.. ப்ளீஸ்.......”, என கெஞ்சி கொஞ்சி கொண்டு இருந்தாள் ஸ்ரீ..
    ஸ்ரீ.. ஸ்ரீஷாவர்ஷினி.. கிராமத்து கிளி.. சில சமயம் அமைதி..பல சமயம் புயல் என அனைத்தும் கலந்த கலவை அவள். அழகும் அறிவும் ஒருங்கே அமைந்த ஆர்பாட்டம் அற்ற அன்பை கொண்டவள். வீட்டில் சுட்டி பெண். ஒற்றை குழந்தையாய் வளைய வரும் குட்டி தேவதை.. ராஜா – பூரணி தம்பதிகளின் தவப்புதல்வி.

    அவள் கேட்பதற்கு முன்பே அவள் தந்தை அவள் அறிவதை செய்பவர். ஆனால் இப்போது.....
    சரி..சரி... முதலில் என்ன பிரச்சனை என்று பார்ப்போம்..

    நடந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவள் முதல் பத்து இடங்களுக்குள் வந்து இருந்தாள். அதுவும் இன்னும் நாகரிக மோகம் படியாத கிராம மனம் துள்ளும் ஒரு மலைபகுதி பள்ளியில் இருந்து.. ஆம்.. அவள் இருப்பது தாளவாடி மலைபகுதி. அங்கே இருக்கும் அரசாங்க பள்ளியில் படித்து இந்த அளவு மதிப்பெண்கள் பெற்ற அவளை தமிழகமே திரும்பி பார்த்தது.. அதன் காரணத்தினால் எப்போதும் entrance கொண்டு வடித்து எடுக்கும் பழக்கம் கொண்ட சென்னையில் உள்ள புகழ்பெற்ற AGS global University, அவளை அங்கே படிக்க வருமாறு அழைப்பு விடுத்து இருந்தது. அதுவும் அவள் விரும்பும் துறையை தேர்ந்தெடுக்கலாம் என்று...

    ஸ்ரீயின் அப்பா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். தன் பெண் அந்த கல்லூரியில் படிக்க போவதை நினைத்து. அவள் எத்தனை விவாதம் செய்தும் அவர் உறுதியாக இருந்தாள் ஸ்ரீ அங்கு தான் படிக்க வேண்டும் என்று.

    ஆனால் ஸ்ரீக்கோ ஊரை விட்டு வெகுதொலைவு செல்வது பிடிக்கவில்லை. அதுவும் அவளின் வீட்டை விட்டு...

    ஆம்... அவள் வீடு ஒரு சொர்க்கம் தான் அவளை பொறுத்தவரை... சுற்றிலும் வயல்வெளி பசுமையாய் படர்ந்து இருக்க, தென்னை காற்று வீசும் ஒரு அழகிய மாடி வீடு. மாமரமும், பாலா மரமும் இவள் ஆசைப்பட்டு வைக்கும் செண்பகப்பூ மரம், மனதை மயக்கும் வாசனை கொண்ட சந்தன மரம் இப்படி வீட்டை சுற்றி இருக்க, விரும்பிய பூக்களை பதியமிட்டு ஆசையாய் வளர்க்கும் அவள் எப்படி அந்த நந்தவனம் விட்டு செல்லுவாள். அதுவும் வெகு தூரம்.

    அது தான் இப்போது அவளின் இந்த கொஞ்சல் கெஞ்சலுக்கு காரணம்..

    “அப்பத்தா... ப்ளீஸ்........ நீ அப்பன்கிட்ட பேசு.. நீ பேசினா மாட்டேன்னு சொல்லமாட்டார் இல்ல...
    நீ என்ன சொன்னாலும் கேக்கறேன்...

    அப்போ அப்போ சொல்லுவியே... சிகப்பி, ருக்கு மாதிரி உனக்கும் கல்யாணம் பண்ணி வைத்துடுவேன்னு அது கூட எனக்கு இப்போ சம்மதம்.. ஊரிலே பாரு.. இதோ இந்த சந்து கூட...

    ச்சே.. அவனை போய் ... ஹ்ம்ம்ம்” என பாட்டியிடம் ஆரம்பித்து,

    ‘இப்படின்னு தெரிந்து இருந்தா நான் படித்தே இருக்க மாட்டேனே.. அப்போது அவள் மனசாட்சி..இது உனக்கே ஓவரா இல்லை... நீ படித்தியா??? என அவளை கேள்வி கேட்க,
    அவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றன..

    இயற்பியல் தேர்வு அன்று அவள் படித்த விதம்...

    நண்டு நாரு கேட்-டு வந்த ஆர் அண்ட் எக்ஸ் காந்தம் கொண்டு எதிர் எதிர் என ப்ளேம்மிங் வலக்கை விதி என்னை ஈர்க்க இடக்கை விதி என்னை எதிர்க்க என படிக்க,

    அவளோடு படித்துக் கொண்டு இருந்த பக்கத்து வீட்டு மனித்தா,

    “ஹே... ஸ்ரீ..... உனக்கு என்னடி ஆச்சு? தீடிருன்னு என்னத்த உளர்ற..”

    “ஹ்ம்ம்... நான் காந்தவியல் மற்றும் எலெக்ட்ரானியவில் பத்தி படிக்கிறேன்”

    “என்னது.. நீ படிக்கிறியா?????.........

    ஹையோ... பூரணிம்மா இங்க வாங்க... ஆத்தா.. எங்கே இருக்கீங்க... இங்க உங்க பொண்ணுக்கு பேய் பிடித்திருச்சு...இதுக்கு தான் இரா சாயும் நேரம் மாந்தோப்பு பக்கம் போக வேண்டாம் அப்படின்னு சொன்னேன்.. இவள் கேக்கலையே.. ஹையோ... யாராவது இருக்கீங்களா.....”, என பயத்துடன் கேட்க,

    அவளை வம்பு செய்யும் நோக்கத்துடன்....

    “புரோட்டன்... எலெக்ட்ரான்... என்னை சுத்த...
    மோட்டர் வந்து என்னை அரைக்க..
    காந்த புலம் என்னை ஈர்க்க..
    மின்சாரம் தாக்கியதே...
    என்னை தாக்கியதே..
    ஷாக்..ஷாக்.. என் மேல கொட்டாதே ஷேக்.. ஷேக்....”

    என ஸ்ரீ பாடிக் கொண்டே எழுந்து ஆடினாள்.

    இதைபார்த்த மனி.. விட்டால் போதும் என ஓட.. இவள் விழுந்து சிரித்துக் கொண்டு இருந்தது நினைவில் வந்தது.

    ஹையோ... இவர்களை எல்லாம் விட்டு நான் எப்படி இருக்க போறேன்.. இந்த ராஜப்பாக்கு என் மேல் பாசமே இல்லை’ என புலம்பிக் கொண்டு இருந்தாள்.
    அந்தி சாயும் நேரம் வீட்டிற்கு வந்த தந்தையிடம் எப்போதும் போல் துண்டை வாங்கி வைக்காமல் தண்ணீர் கொடுக்காமல் போர் கொடி தூக்கி நின்றாள்.

    “ஹே... அம்மு... சித்த விரசா வா.......... எத்தனை நேரம் அய்யா வெளியே நிப்பாங்க...

    நீயும் உன்ற அய்யாவும் சண்டை போட்ட என் உயிர் தான் போகுது... இப்போ நீ வரப் போறயா.. இல்லை நான் கட்டை எடுத்துட்டு வரவா..இந்த வயசில் அப்படி என்ன திமிரு.. சொல் பேச்சை கேட்கமா.. எத்தனை நேரம் கத்தறது.. இது எல்லாம் உங்க அப்பன் கொடுத்த இடம்...” என பூரணி திட்டி கொண்டு இருக்க,

    இதற்கு மேல் இருந்தால் அர்ச்சனையுடன் பூரிக் கட்டையும் சேர்த்து பறக்கும் என உணர்ந்த ஸ்ரீ,
    ஒரு வழியாக தன் தந்தையிடம் வந்து,

    தண்ணீர் சொம்பை கொடுத்துவிட்டு, துண்டை வாங்க கை நீட்டினாள். ஆனால் எதுவும் பேசவில்லை.
    தனது மகளின் கோபம் புரிந்தாலும், அவளின் நலனை முன் நிறுத்தி அவளின் மௌனத்தை அவர் ஏற்றார். இருந்தாலும் அவருக்கு வலித்தது.

    “கண்ணு.... உன் நல்லதுக்கு தான்... இப்போ உனக்கு புரியாது” எனச் சொல்லிக்கொண்டே துண்டை நீட்ட,
    அவள் எதுவும் பேசமால் துண்டை மட்டும் பெற்று கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்.

    இன்னும் ஒரு வாரமே இருந்தது. அங்கே சென்று சேர, எப்படி அதை தடுப்பது என்ற யோசனையுடன் அவள் இருந்தாள்.

    இடம் : JNU Quarters, Delhi

    “சஞ்சு..... சஞ்சு......”, என குடியிருப்பு வளாகத்தில் தேடி கொண்டு இருந்தார் சுமித்ரா.


    “கணேஷ்.. சஞ்சுவை பார்த்தியா... எங்கே இருக்கான்னு தெரியுமா??”

    “தெரியாது ஆண்டி... groundல இருந்தாலும் இருக்கலாம்.. இன்று football tournament எங்களுக்கும் அந்த ராக்கி டீம்க்கும்”, எனச் சொல்லிக்கொண்டு அவர் அடுத்து பேசுவதை கேட்க கூட பொறுமை இல்லாதவனாய் விரைந்தான்.

    இப்போதைக்கு சஞ்சுவிடம் பேச முடியாது என்பதை புரிந்து,

    வீட்டிற்கு வந்த அவள் தொலைபேசியை எடுத்து தொல்லை செய்ய ஆரம்பித்தார்.

    சுமித்ராக்கு மாட்டிய ஒரே அப்பாவி அவரது கணவர் தான்.

    நீண்ட அழைப்பு மணி ஓசை இறுதி வரை செல்ல இறுதியில் அதை உயிர்பித்தார் விஸ்வநாதன்.
    எடுத்தவுடனே..

    “என்ன சுமி... எத்தனை தடவை சொல்லறது நான் கிளாஸில் இருக்கும் சமயம் போன் செய்யாதே என்று.. இப்போ என்ன விஷயம், எதுக்கு போன் பண்ணின..”,

    “ஹ்ம்ம்.. உங்க பையன் பண்ணி இருக்கற விஷயம் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? இல்லை கூட்டு களவாணிகளா இரண்டு பேரும்”, என எடுத்தவுடன் பொரிய ஆரம்பிக்க,

    அங்கே விஸ்வநாதனுக்கு தலையும் புரியவில்லை. வாழும் புரியவில்லை.

    “சுமி........... எதுவா இருந்தாலும் புரியற மாதிரி பேசு... அதுவும் கிளாஸ் நேரத்தில் போன் பண்ணி உயிரை வாங்கற”, என கேட்க,

    “ஹ்ம்ம்.. ஆமாம்.. உங்களுக்கும் உங்க பையனுக்கும் அப்படி தான் தெரியும்... நான் உங்க உயிரை வாங்கறேனா.. உங்க பையனுக்கு சென்னையில் இருந்து Admission Card வந்து இருக்கு.. அந்த காலேஜ் entrance exam எப்போ எழுதினான்... எல்லாம் நீங்க கொடுக்கற இடம்.. டெல்லியில் இல்லாத காலேஜா....இதை எல்லாம் உங்ககிட்ட சொல்றேன் பாருங்க” எனப் சொல்லிக்கொண்டே மொபைலை கட் செய்தாள்.

    வீட்டில் ஒரு போர் நடக்க போவதை உணர்ந்த அவருக்கு இப்போது கிளாஸாவது, பாடமாவது உடனே மாணவர்களிடம் விடை பெற்று கிளம்பினார்.

    கனவு தொடரும்....
     
    3 people like this.
  8. saranyaraj

    saranyaraj Silver IL'ite

    Messages:
    136
    Likes Received:
    86
    Trophy Points:
    68
    Gender:
    Female
    கனவு -2

    என்னை அறிந்து சிரித்த
    அந்த முதல் நிமிடம்
    உன்னை தூக்கி கொஞ்சிய
    அந்த முதல் ஸ்பரிசம்
    சைகையால் என்னை அழைத்த
    அந்த முதல் நொடி
    தத்தி தத்தி நடக்க கை கோர்த்த
    அந்த முதல் தருணம்
    எழுத கைபிடித்து அரிசியில் வரைந்த
    அந்த முதல் “ஓம்”
    மாமர ஊஞ்சல் அறுந்து விழ நீ அழுத
    அந்த முதல் கண்ணீர்
    சின்னஞ்சிறு கையால் வரைந்து கொடுத்த
    அந்த முதல் வாழ்த்து
    மலர்ந்த சிரிப்பு சிந்திய கண்ணீர்
    காட்டிய பாசம் கட்டிய அணைப்பு என
    அனைத்தும் என்னுள் இருக்கும் வரை
    கலையாத யுகம் சுகம் தானே....


    காலேஜில் இருந்து கிளம்பிய விச்சு@விஸ்வநாதன் முதலில் சஞ்சுவை தேடி வந்தார். அவருக்கு தெரியும் இன்று football tournament இருப்பது.
    Here left…. Pass me… get back.. go on… go on… right pole…. Hold back, drive on….. என்ற கூச்சல் சத்தத்துடன் அவன் இங்கும் அங்கும் பாலை காலால் லாவகமாக நகர்த்திக் கொண்டே ஓடிவர, வலைக்கம்பத்தின் அருகில் வர,
    ‘Concentrate … kick a goal… you can’, என மனதை ஒருநிலை படுத்திக்கொண்டு, பார்வையை வலையில் மட்டும் நிறுத்தி பாலை அடித்து நகர்த்தி கடைசியாக கோல் போட,
    ஹே....ஹோ...........Done it man… That’s our sanju.. என்ற குரல்கள் ஒலிக்க கோலாகலமாக வெற்றியை சுவைத்துக்கொண்டு இருந்தான் சஞ்சு..
    சஞ்சு.. சஞ்சீவ் பிரகாஷ்... அழகோடு ஆண்மையும் மிளிரும்; எந்த பெண்ணுக்கும் அவன் எதிரில் வந்தால் ஒரு முறை திரும்பி பார்க்க தோன்றும். நிறைய பெண்களின் கனவை தொலைப்பவன். பெண் நண்பர்கள் உண்டு.. ஆனால் காதல் என்ற வார்த்தை கொண்டு நெருங்க முடியாத நெருப்பு.. ஏனெனில் அவனுக்கு கனவுகள் ஆயிரம்.. எப்போதும் புன்னகையை முகத்தில் நிறுத்தி தோழமையுடன் பழகும் நல்ல நண்பன். சுதந்திரமாக வளர்க்கப்பட்டவன். தன் முடிவுகளை தானே முடிவு செய்ய வேண்டும் என நினைப்பவன்.
    “வாழ்க்கை என்பது ஒரு முறை.. என் வழியில் நல்வழியில் விரும்பும் வாழ்க்கை வாழ வேண்டும்” என நினைப்பான். பாசம் நேசம் அதிகம். கிட்டார், கி-போர்ட் நன்றாக வாசிப்பான். ஓரளவு பாடுவான். அந்த வயதிலும் தெளிவாக சிந்தித்து தனது முடிவுகளை தீர்மானமாக தெரிவிக்கும் குணம் உண்டு. சில சமயம் கோபம் பல சமயம் அன்பு என அனைத்தும் கலந்த கலவை அவன்.
    அங்கிள் காரை பார்த்த மாலிக், “ஹே.. சஞ்சு... அங்கிள் கார் பாரு”, எனச் சொல்ல,
    இந்நேரத்தில் அப்பா இங்கே வர என்ன காரணம் என யோசித்துக்கொண்டே எல்லோரிடமும் விடைபெற்று தந்தையின் காரை நோக்கி வந்தான்.
    அவரும் புன்னகைத்துக்கொண்டே, “என்னப்பா.. மேட்ச் ஓவரா.. யாரு வின்னிங்... யு ஆர் ராக்கி...”, எனக் கேட்டார்.
    இது தான் விச்சு.. என்ன தான் அவசரமாய் இருந்தாலும், மற்றவர்கள் நலன் முன் நிறுத்தி யோசிப்பார். அரை மணி நேரம் முன்னே வந்து இருந்தாலும், அருகே சென்று அழைக்கமால் கிரௌண்ட் அருகே அவர்களுக்கு தெரியாத வகையில் சிறிது தள்ளி காரை நிறுத்தி, சரியாய் முடியும் நேரம் கிரௌண்ட் அருகே வந்து இருந்தார். எப்பவும் அவனின் தனிப்பட்ட உரிமையில் தலையிட கூடாது என நினைப்பவர். அவருக்கும் தெரியும் முன்னவே வந்து இருந்தால் சஞ்சுவும் கிளம்பி இருப்பான் என்று. ஆனால் அதை அவர் விரும்பவில்லை.
    “இன்னைக்கு நாங்க தான் dad...But last time he won it...” அப்பாவை போலவே பிள்ளை. யாரையும் விட்டு கொடுக்கமாட்டான்.
    “that’s good..எதில் வந்த? சைக்கிளிலா”,
    “No dad.. வரும் போது ரவி லிப்ட் கொடுத்தான்”
    “அப்போ.. சரி..வா போலாம்” ..
    “என்ன dad ப்ரோப்லேம்.. ஹ்ம்ம்........Admission card வீட்டுக்கு வந்துடுச்சா..” என்றான் யோசனையுடன்..
    அவர் அவனை பார்த்து புன்னகைத்தார். இது தான் சஞ்சு.. இந்நேரத்தில் தன்னை பார்த்து கூட்டி செல்ல வந்திருப்பதை அறிந்து, அதற்கான காரணத்தை அவனே யூகித்து இருந்தான்.
    அவருக்கு இன்னும் நினைவில் இருக்கு. இரண்டு மாதம் முன்பு ஒரு நாள்,
    “Dad... இப்போ நீங்க ப்ரீயா...”
    “சொல்லு சஞ்சு... நான் சும்மா தான் இருக்கேன்..”
    “இல்லை... நான் AGS Global University entrance test எழுதலாம் என இருக்கிறேன். Online டெஸ்ட் தான். Result அப்போவே தெரிந்துடும்.” என்றான்.
    “ஏன் சஞ்சு.. இங்கே.. டெல்லியிலே நல்ல காலேஜ் இருக்கே.. இங்கேயே சேரலாம் இல்ல... JEE entrance எழுதப் போற.. கண்டிப்பா Delhi IITல சீட் கிடைக்கும்.. இதை விட better place வேணும் என்றால் கான்பூர் IIT try பண்ணு.. பட் எதனால் நீ அங்க போகணும் அப்படின்னு நினைக்கிற... ”
    “Dad.. நீ சொல்றது கரெக்ட் தான் பட் எனக்கு அங்க போய் தான் படிக்கணும்.. சின்ன வயதில் பாட்டி வீட்டுக்கு லீவில் போகும் போதே முடிவு செய்தேன்.. என்னோட காலேஜ் படிப்பு தமிழ்நாட்டில் தான்னு.. ஐ லவ் இட்.. Beyond அந்த யுனிவர்சிட்டி பத்தி உங்களுக்கே தெரியும். சிலபஸ் முதல் அவுட் exposure வரை எல்லாமே இட்ஸ் கிரேட்.. சிவில் இன்ஜினியரிங் அங்கே ரொம்ப நல்ல இருக்கும், எனக்கும் சிவில் தான் படிக்கணும் ஆசை.. என்னோட கனவு அது.. I feel it’s a better place to explode myself.. I want to go there and study . மேலும் நான் வெளியுலகத்தை தனியா பார்க்கணும் அப்படின்னு நினைக்கிறேன்.. இங்க இருந்தா கண்டிப்பா நீங்க தலையிடலனாலும் எங்க போனாலும் உங்க பையன் அப்படின்னு தெரியும்.. எனக்கு அந்த name and fame முலமா எதுவும் வேண்டாம். I want to stand in my legs.. அதான் ” என முடித்தான்.
    அவனின் தீர்மானமான பேச்சு அவரை தலையாட்ட வைத்தது.
    “ஹ்ம்ம்.. சரிடா.. நீ சொல்றதும் கரெக்ட் தான்.. போய் பாரு.. எழுது.. எனக்கு ப்ரோப்லேம் இல்லை.. ஆனால்... சுமி.......... என இழுத்து, இப்போதைக்கு எதுவும் சொல்லாதே.. Admission card வந்த பின் பேசலாம், இப்போ பேசினா சரிவராது...” என்றார்.’
    நினைவலைகளில் இருந்து நிகல்வலை நோக்கி அவரின் கவனம் திரும்பியது.
    “ஆமாம் சஞ்சு.. உங்க அம்மா போன் பண்ணின.. காளி அவதாரம் எடுத்து நம்மை சுடுவதற்குள் தண்ணீர் உற்றி அனைக்கனும்” என்றார்.
    “உங்களால முடியும் Dad... நம்ம சுமி தானே..”,
    “ஆமாம்டா... நீ போக நான் உன் அம்மாகிட்ட அர்ச்சனை வாங்கனுமா சொல்லு.. எனக்கு தெரியாது.. நீ தான் பேசணும்.. ஆபத்து கால உதவிக்கு நான் வரேன்.. மத்தபடி நீ தான்...”, என்றார் சிரித்துக்கொண்டே.
    “no worries vichu.. I can manage sumi.. ஆனால் சிறந்த பொருளாதார நிபுணர் அப்படின்னு எல்லோரும் சொல்லற, யுனிவேர்சிட்டியை ஆட்டி படைக்கற விச்சு, இப்படி பயப்படலாம சுமியை பார்த்து..”, என சிரித்துக்கொண்டே கேட்டான்.
    “டேய்.. உனக்கு தெரியல.. இந்திய பொருளாதாரம் அரசியல் பத்தி பேசின கை தட்டு கிடைக்கும்.. வீட்டில் அரசியல் பேசினா உங்க அம்மா கரண்டி பறக்கும்.. இது எனக்கு தேவையா சொல்லு.. இன்னும் கொஞ்ச நாளில் உனக்கே புரியும்.. அப்போ நீ என்ன பண்ண போறன்னு நானும் பார்க்கிறேன்..”, என இருவரும் பேசிக்கொண்டே ஒருவழியாக வீட்டை அடைந்தனர்.
    “ஹாய்.. மா........ என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. இன்னைக்கு புட்பால் மேட்ச்ல எங்க டீம் தான் வின் பண்ணுச்சு.. ” என்று எதுவும் தெரியாது போல் பேசிக்கொண்டே இயல்பாக உள்ளே வந்து தன் அறை நோக்கி போனான்.
    சுமிக்கோ, இது எரியும் தீயில் எண்ணையை உற்றியது போல் இருந்தது.
    அவரது உக்கர பார்வை விச்சுவை நோக்கி பாய,
    “சுமி... என்னடா.. என்னை இந்த பார்வை பார்க்கிற.. நான் எதுவும் செய்யலையே.. இருந்தாலும் உன் கன்னம் சிவந்து நீ ரொம்ப அழகா இருக்கடா... இந்த மே மாச வெயிலும் எப்படி டா நீ மட்டும் ஸ்ட்ராபெரி மாதிரி இருக்கே... ஒ..கோபமா.. சாரி சுமிடியர்.. கடைசியா நீ பேசறதே கேட்கறதுக்குள்ளே நெட்வொர்க் ப்ரோப்ளேம் போல கட் ஆகிடுச்சு.. அதான் பாரு கிளாஸ் கூட முக்கியம் இல்லை என்று ஓடி வந்து இருக்கேன்”,
    (விச்சு சார்.. நல்ல தேறி இருக்கீங்க... சூப்பேர்ப் அட்டெம்ப்ட் ஆனாலும் உங்களுக்கு அடி உண்டுன்னு தான் நினைக்கிறேன் )
    “சரி.. என்ன விசயம்டா.. இப்போ சொல்லு...” என்று கேட்டார்.
    “உங்களுக்கு எதுவுமே தெரியாது இல்ல.. போன் கட் ஆகிடுச்சா.. ஒ.கே.. சஞ்சு எப்படி உங்க கூட வந்தான்...” என்றார் நம்ம சுமி.
    “அதுவா, வர வழியில் சஞ்சு நடந்து வந்து கொண்டு இருந்தான்... அதான்...”
    “ஹ்ம்ம்.. அது எப்படிங்க.... ப்ளே கிரௌண்ட் நம்ம வீட்டை தாண்டி இந்த பக்கம் போகணும்.. வீட்டை தாண்டமால் கிரௌண்ட் பக்கம் போக முடியாது.... என்னை பார்க்க வந்தேன் அப்படின்னு சொல்லிட்டு நீங்க எதுக்கு அந்த பக்கம் போனிங்க.. ஒருவேளை சங்கர் அண்ணாவை பார்க்க அவங்க வீட்டுக்கு போனிங்களா..
     
    2 people like this.
  9. saranyaraj

    saranyaraj Silver IL'ite

    Messages:
    136
    Likes Received:
    86
    Trophy Points:
    68
    Gender:
    Female
    திரும்பி வரும் போது அப்படியே சஞ்சுவை பார்த்திங்களா” எனக் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க,


    “ஹ்ம்ம்... ஆமாம்.. ஆமாம்... அதே தான் சுமி... எப்படி இப்படி கரெக்ட்டா சொல்லற” என்று தனது குட்டு வெளிப்பட்ட விதத்தில் என்ன சொல்வது எனத் தெரியமால் தலையை ஆட்ட,

    சுமி முறைத்த முறைப்பில் அவர் அடுத்து பேச வந்ததை மறந்து இருந்தார்.


    அப்போது இவர்களின் பேச்சை கேட்டு கொண்டே தனது அறையில் ரெப்ரெஷ் செய்து கொண்டு இருந்த சஞ்சு, உடையை மாற்றி கொண்டு வெளியே வந்து,


    “என் செல்ல சுமி... விச்சுக்கு தான் உன்கிட்ட பொய் சொல்ல வராதே.. அதான் இப்படி மாட்டிக்கிறார்.. பாரவாயில்லை.. இந்த டைம் எனக்காக விட்டுடு மா... ப்ளீஸ்..


    சரி..உனக்கு இப்போ என்ன தெரியணும்.. நான் தான் அங்க படிக்க போறேன்மா... Apply பண்ணும் போது சொல்லாம விட்டேன்னு கோபமா.. இது ஆன்லைன் டெஸ்ட் தான்.. இங்கயே எழுதினேன்.. எழுதறேன்னு சொல்லி நீங்க வேண்டாம் அப்படின்னு சொன்ன உங்களை மீறி எழுதறேன்னு நானும் பீல் பண்ணுவேன் நீங்களும் தான்.. அதான் அப்பாகிட்ட கூட admission card வந்தபின் உங்ககிட்ட சொல்ல சொல்லி சொன்னேன் மா..


    இதுக்கும் அப்பாவுக்கும் ரொம்ப சம்பந்தமில்லை பட் கொஞ்சம் இருக்கு.. அவர்கிட்ட கொஞ்சம் முன்னாடி எழுதறேன்னு சொன்னேன் அவ்வளவு தான்.. மத்தபடி அவர்கிட்டையும் permission எல்லாம் கேட்கலைமா.. ஒ.கே யா..”, என்றான்.


    சஞ்சுவின் குணம் அறிந்ததால், “ஹ்ம்ம்.. இங்கயே படிக்கலாம் இல்லை.. நீயும் போய்டா.. இங்க யார் இருப்பாங்க.. உங்க அப்பாவுக்கு university தான் உலகம்.. நான் மட்டும் தனியா இருக்கணும்ல.. பெட்டெர் நீ இங்கயே படி சஞ்சு...” என்றார் சுமி..

    “சரிம்மா.. நீங்க சொல்ற மாதிரி நான் இங்கேயே படிக்கிறேன்” என்றான்.


    நம்ம விச்சு ஷாக்காகி பார்க்க, சுமியோ சந்தோசத்துடன் “உண்மையா இங்கேயே படிக்க போறியா “ என்று மீண்டும் கேட்டார்.


    “ஹ்ம்ம்... yes my dear sumi.. பட் அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒரு கேள்வி கேட்பேனாம்.. நீங்க பதில் சொல்லணும் சரியா” என்றான்.


    “சரி.. என்ன கேட்க போற கேளு” என்றார்.


    விச்சு ஓரளவு அவன் கேட்க போவதை உணர்ந்து ‘நீ நடத்து உன் நாடகத்தை’ என்று மனதில் பேசிக்கொண்டே சுமி அருகில் சென்று அமர்ந்தார்.


    “நான் இங்க UG முடித்ததும் என்ன பண்ணனும் சொல்லுங்க”


    “அதுவா.. UG முடித்திட்டு மாஸ்டர்ஸ்க்கு நீ MIT (Massachusetts Institute of Technology, USA) போகலாம். உனக்கு நல்ல exposure கிடைக்கும்.”, என்றார்.


    “அதை தான் சுமி நான் இப்போ பண்ண போறேன்.. எனக்கு அங்கே படிக்கணும், என்னோட லைப் நான் lead பண்ணனும் அப்படின்னு நினைக்கிறேன்.. அது தப்பா”, என அப்பாவியாக கேட்க,


    சுமிக்கு என்ன சொல்வதேன்ற தெரியவில்லை. அவர் மனம் இன்னும் தெரியவில்லை. ஆனால் குழம்பி இருந்தது.


    குழம்பிய குட்டையில் மீன் பிடித்தான்.


    “சுமிம்மா... அப்போ போறதை தான் இப்போ போறேன்னு சொல்றேன்.. அதுவும் தமிழ்நாட்டுக்கு.. வேணும் என்றால் நீயும் விச்சுவை விட்டிட்டு கோயம்புத்தூர் வீட்டுக்கு வந்துடுங்க... வார வாரம் நான் அங்கே வரேன்.. விச்சுவை டீலில் விட்டுடலாம்.. இல்ல அவரும் வரேன்னே வரட்டும். என்ன சொல்லறிங்க....”, என்று கேட்டான்.


    அவரும் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு பின்,


    “ஹ்ம்ம்.. இந்த ஐடியா நல்லா இருக்கே.... எனக்கும் இந்த டீல் பிடித்து இருக்குடா.. நெக்ஸ்ட் flight இல்ல..இல்ல.. train book பண்ணு.. கொஞ்சம் things எல்லாம் எடுத்துட்டு போகணும்.. என்கிட்ட பொய் சொல்றவங்க கூட எல்லாம் நான் இருக்க விரும்பவில்லை..” என்று மறைமுறைமாக அவனுக்கு சம்மதத்தையும் விச்சுக்கு தனது கோபத்தையும் புரிய வைத்தார்..


    “ஹே... என்ன இது.. சுமி என்ன நம்பலையா.. உன் சமையலை சாப்பிடமா நான் எப்படி இருப்பேன்டா. உன்னைவிட்டு என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது.. இது எல்லாம் சரிவராது.. சஞ்சு..நீ ஒன்னும் சென்னை போகவேண்டாம்..”, என்று கூற,


    “Dad.. talk, seminar அப்படின்னு foreign trip போகும் போது அம்மா கூடவே வந்தாங்களா.. இல்லை சமைத்து தந்தாங்களா.. அது மாதிரி இப்பவும் நினைத்துகோங்க... என்னம்மா...” என்றான்.


    “கரெக்ட்டா.. சஞ்சு..”


    “ஆமாம்.. நான் என்ன கூடவா வந்தேன்.. இல்லை இல்ல... அதுவும் என்கிட்ட பொய்வேற சொல்ல ஆரம்பித்துவிட்டிங்க.. இனிமேல் எனக்கு என்ன வேலை இங்க.. ”


    “சஞ்சு.. திங்க்ஸ் பேக் பண்ணு.. சீக்கிரம் கிளம்பலாம்”, என்றார்.

    (சுமிக்கும் தெரியும்.. விச்சுவால் சுமியை விட்டு அதிக நாள் இருக்க முடியாது.. ஒரு வாரம் என்றால் அவரின் பயணம் பாதி கருத்தரங்கில் என்றால் மீதி சுமியுடன் போனில் இருக்கும். அதுவும் வரும் போது பாதியாய் இளைத்தும் வருவார்..)


    இதை கேட்ட விச்சு நம்ம சஞ்சுவை பார்த்து முறைக்க,


    சஞ்சுவோ அவர் காதில், “காரில் வரும் போது, என்னவோ எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை... ஆபத்து காலத்தில் உதவிக்கு வரேன்னு சொன்னிங்க.. இப்போ நீங்க தான் in danger.. May I help you??”, என்றான்.


    அவர் இன்னும் அதிகமாய் முறைப்பதை போல் பார்த்துக்கொண்டே. சத்தமாக, சுமிக்கும் கேட்கும் வகையில்,


    “என் சுமி என்னைவிட்டு எங்கும் போகமாட்டா... உன் அம்மா வேணால் வருவா.. முடிந்தால் கூட்டி போ..”, என்று சொல்லிவிட்டு அவரின் அறை நோக்கி சென்றார்.


    அவருக்கு தெரியும் சுமி பின்னாடியே வருவாள் என்று.


    (அப்போ தானே காலில் விழுந்தாவது சமாதானம் செய்யலாம்.. என்ன சொல்லரிங்க...)


    அவர் நினைத்ததை போலவே சுமி பின்னாடியே வந்தார்.


    வந்த சுமியை பின்னிருந்து அணைத்து,


    “சுமி.. என் மேல் கோபமா”, எனக் கேட்டார்.


    “ஆமாம்.. கோபம் தான்.. எப்ப இருந்து என்கிட்ட இப்படி மறைக்க ஆரம்பித்திங்க”


    “நான் மறைக்கலை.. சொல்லமா விட்டேன்... இப்போ சொல்லிட்டேன் இல்ல.....” எனக் கூற,


    “பொருளாதார வல்லுநர்.. அரசியல் ஆலோசகர் அப்படின்னு நல்ல நிருபிக்கிறிங்க.. ஆனால் இதை எல்லாம் வெளியில் வைத்து கொள்ளுங்க இங்க வேண்டாம்... மை டியர் ஹஸ்பென்ட்..”


    “சுமி.. மறைக்கணும் அப்படின்னு நினைக்கலை.. சொல்லி இருந்தா நீ எழுத வேண்டாம் என்று சொல்லி அவன் கேட்கலை என்றால் உனக்கு கஷ்டம்.. எழுதமா விட்டா அதற்கு பின் அவன் வருத்தப்படுவான்.. எனக்கு ரெண்டு பேரும் முக்கியம்.. ஒருத்தர் வருத்தப்பட்டாலும் என்னால் தாங்க முடியாது.. அதான்டா.. கோபமா என் சுமி குட்டி..” என்றார்... தனது கடைசி ஆயுதத்தையும் பயன்படுத்தி..


    “ஹ்ம்ம்... நீங்க சொல்வதும் சரி தான்.. ஆனால் நான் ஏன் சொன்னேன் என்றால், என்னால் அவன் இல்லாமல் சமாளிக்க முடியும் ஆனால் நீங்க...” எனக் கேட்க,


    “கொஞ்சம் கஷ்டம் தான்டா.. அவன் பிறந்ததில் இருந்து அவனை சுற்றியே நான் என் வட்டத்தை வைத்து இருந்தேன்.. மகன் என்பதையும் மீறி ஒரு நல்ல நண்பன்.. பிரியா கஷ்டமா தான் இருக்கு.. இருந்தாலும் மீண்டும் என் மனைவியோட தனிக்குடித்தனம் செய்யப்போறோம் அப்படின்னு ஒரு சந்தோசமும் கூட” என்று தன் வருத்தத்தை மீறி பேச,


    “உங்களை....... திருத்தவே முடியாது.. என்னை சொல்லணும்... உங்ககிட்ட போய் ”, என்று கூறிவிட்டு வெளியே செல்ல முயல,


    சுமியை தன் கை அணைப்பில் இருந்து விடாமல் “சுமி.. உனக்கு சம்மதம் தானே.. விருப்பம் இல்லை என்றால் சொல்லு நான் பேசிபார்க்கிறேன்.. இல்லை அவன் சொன்னது போல் நீ...........” எனக் கூற முடியமால் தவிக்க,


    “ஹே.. விச்சு... எனக்கு சம்மதம் தான்.. உன்னை விட்டு நான் மட்டும் எப்படி இருப்பேன் சொல்லு.. அவன் போகட்டும்.. இது அவனோட லைப்.. நான் உங்களுக்காக தான் தயங்கினேன்”, என்று சொல்ல,


    ரொம்ப நாள் கழித்து அவள் கூறிய விச்சு என்ற அழைப்பு அவரை தனது இளம் வயதிற்கு அழைத்து சென்றது. அங்கே ஒரு இணைபறவைகள் ராகம் நடத்த,


    ஒரு வழியாக நம்ம சஞ்சு சென்னை வர அனுமதி கிடைத்துவிட்டது என்ற சந்தோசத்துடன் ஸ்ரீயை பார்ப்போம் இனி..


    ஸ்ரீயை பார்ப்பதற்கு முன் விச்சு - சுமி பற்றி ஒரு சிறு முன்னோட்டம்.

    கோவையை பூர்விகமாக கொண்ட ஒரு பெரிய கூட்டு குடும்பத்தில் பிறந்த சொந்தங்கள். பிறந்ததில் இருந்தே விச்சுக்கு சுமி தான் என்று பெரியவர்கள் முடிவு செய்து இருந்தபோதும், வளரும் பருவம் அவர்கள் இடையே மலர்ந்த நேசம் தான் அவர்களை வாழ்கையில் இணைத்தது. இருபது வருடமாய் இணை பிரியாமல் வாழும் நேசப் பறவைகள். சுமிக்கு ஒரு அண்ணன் உண்டு.. விச்சு ஒரே பையன். இவர்களை தவிர மற்ற அனைவரும் கூட்டு குடும்பமாக கோவையில் கணபதி தெருவில் வசிக்கின்றனர். இவர்களுக்கும் ஒரு வாரம் விடுமுறை என்றால் அடுத்த நாள் விடிவது அவர்களின் வீட்டில் தான். தனது படிப்பு மற்றும் வேலை மீது கொண்ட நேசத்தால் தான் விச்சு டெல்லியில் வாசம் கொண்டார். அவர் மீது கொண்ட காதலால் நம்ம சுமி அவரோடு கூட்டில் அங்கே சேர்ந்தார். அவர்களின் ஒரு புதல்வன் தான் சஞ்சீவ் பிரகாஷ்...


    சரிங்க.. இவர்களை பற்றிய சின்ன குறிப்பு போதும்.. இனி ஸ்ரீயை பற்றி பார்ப்போம்...


    கோபமாய் உள்ளே சென்ற ஸ்ரீ தனது அறையில் சென்று அமர்ந்து இருந்தாலும் அவளின் கவனம் முழுவதும் ஹாலிலே தான் இருந்தது. அவள் அப்பத்தாவை மலை போல் நம்பி இருந்தாள்.
    அவள் எதிர் பார்த்தது போல்,


    “ராசு கண்ணா... நம்ம அம்மு கண்ணா இங்கேயே எங்காவது..” என்று தொடங்கும் முன்பே,

    “அம்மா... இதை பத்தி பேசாதிங்க.. அப்படி பேசி நான் மறுத்து முதன் முதலில் உங்க வார்த்தையை மறுத்தேன்னு நீங்களும் வருத்தப்பட்டு நானும் வருத்தப்பட வேண்டியதாய் ஆயிடும்”, என்று கூற,
    அவளின் அப்பத்தாவாலும் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது.


    தனது கடைசி அஸ்திரமும் வீணாய் போனதால் உணவில் காட்ட முடிவு எடுத்து சாப்பிட செல்லாமல் இருந்தாள்.


    பூரணி எத்தனை முறை கூப்பிட்டும் அவள் வெளியே வரவில்லை.


    அவருக்கும் கஷ்டமாகத் தான் இருந்தது.


    நேற்று இரவு நடந்ததை நினைத்து பார்த்தாள்.


    “எங்க.. அவ தான் இங்கேயே பக்கத்தில் படிக்கிறேன்னு சொல்லற இல்ல.. அவள் சொல்லற படி இங்கேயே படிக்கட்டும்.. நமக்கும் போய் பார்க்க வசதியா இருக்கும் இல்ல..” என்று ஆரம்பித்தவுடனே,

    “பூரணி.. நீயும் என்னை புரிந்துகொள்ளவில்லையா...


    உனக்கே தெரியும்... நான் மேல படிக்கணும் அப்படின்னு நினைத்தேன்.. ஐயா என்னை விடலை.. இருக்கற நிலத்தையும், விவசாயத்தையும் பாரு.. இதுவே நாலு தலைமுறைக்கு வரும்.. படித்து என்ன செய்ய போறேன்னு சொல்லிட்டார்..


    நீயும் தான்... டீச்சர் ட்ரைனிங் படித்து ஸ்கூலுக்கு வேலைக்கு போகணும் அப்படின்னு நினைத்த, ஆனால் உன்ற அய்யனும் விடலை..


    நாமும் அவளுக்காக பார்த்து அவள் படிப்பை கெடுக்கணுமா? இப்போ அவளோட சின்ன பிடிவாதத்திற்காக, அவளோட எதிர்காலத்தை அழிக்கணுமா..


    அவளுக்கு விவரம் தெரியலை.. நீயும் அவளுக்காக பேசினா இன்னும் பிடிவாதம் தான் பிடிப்பா..
    இப்போ இல்லை.. எப்போவோ ஒரு நாள் அவள் நம்மை விட்டு பிரிந்து போகத் தான் போற..
    அது மாதிரி இப்போன்னு நினைத்து...” என்று அதை முடிக்க முடியமால் விட்டார்.

    அவரின் கண்களில் கண்ணீர் நிறைந்து இருந்தது.

    கனவு தொடரும்...
     
    2 people like this.
  10. saranyaraj

    saranyaraj Silver IL'ite

    Messages:
    136
    Likes Received:
    86
    Trophy Points:
    68
    Gender:
    Female
    கனவு-3

    நினைவுகளில் இருந்து திரும்பிய பூரணி, ஸ்ரீயை எப்படி சமாதனப்படுத்துவது எனத் தெரியாமல் முழித்தார்.


    ஸ்ரீ இல்லாமல் இதுவரை இரவு உணவை சுவைத்திடாத அவளின் அய்யா, அவளை எதிர்பார்த்து காத்து இருக்க,


    பூரணி என்ன செய்வது எனத் தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றார்.


    “அம்முப்பா.. நீங்க சாப்பிடுங்க.. அவளுக்கு சித்த உடல் சுகமில்லை போல.. சாப்பாடு வேண்டாம் அப்படின்னு சொன்ன.. நான் கொஞ்சம் காஞ்சி காய்ச்சி அவளுக்கு தந்து விடுவேன்.. நீங்க சாப்பிடுங்க”, என்றாள்.

    அவளின் சாமளிப்பை புரிந்து கொண்ட அவர், ஸ்ரீயின் அறையை நோக்கி சென்றார்.

    அவர் வருவது கூட தெரியாமல் கட்டிலில் அமர்ந்து அவர்களது குடும்ப படத்தை நீவிக் கொண்டே,


    ‘என் ராஜப்பா புரிந்துகொள்ள மாட்டிங்கறீங்க, உங்களை விட்டு.. இந்த வீட்டை விட்டு நான் எப்படி தனியா இருப்பேன் சொல்லுங்க..’, என்று கேட்டு கொண்டு இருந்தாள்.


    கண்களில் கண்ணீர் குளம் கட்டி நின்றது.


    “அம்மு குட்டி” என்ற தந்தையின் அழைப்பில்,


    அவள் கண்களை துடைத்துக்கொண்டு அவரை நிமிர்ந்து பார்த்தாள். ஆனால் எதுவும் பேசவில்லை.


    “குட்டிக்கு என் மேல கோபமா..” என்று கேட்டார்.


    அப்பவும் அவள் பதில் பேசவில்லை.


    அவள் அருகே வந்து அமர்ந்து அவள் தலையை வருடிக் கொடுக்க,


    அவள் அவரிடம் இருந்து நகர்ந்து அமர்ந்தாள்.


    அவர் மீண்டும் அவள் அருகே நகர்ந்து அமர, அவள் தள்ள இப்படி கட்டலின் அடுத்த முனை வரை தொடர்ந்தது. அதற்கு பின் ஒன்றும் செய்ய முடியமால் அமர,


    கைவிரல்களை போட்டு திருகி கொண்டு இருந்தாள்.


    “அம்முக்கு என் மேல தானே கோபம்.. விரல் என்ன செய்தது.. பாவம் விட்டுடு.. நான் கொஞ்சம் உன்கிட்ட பேசணும் குட்டி.. பேசலாமா.. அதுக்கு பின் உனக்கு போகபிடிக்கலை என்றால் உன்னை வற்புறுத்தமாட்டேன்” என்றார்..


    அவளின் கவனம் கடைசி வார்த்தையில் நிலைபெற்று, அவளின் கண்கள் மின்னின..


    “கண்டிப்பா பிடிக்கலை என்று சொன்ன போக சொல்ல மாட்டிங்க தானே... ”,


    “கண்டிப்பா ஸ்ரீகுட்டி, நான் பேசினதுக்கு பின் நீ சொன்னா நான் விட்டுடுறேன் டா...”,


    “அப்போ சரி.. சொல்லுங்க.. ”


    “குட்டிமா.... உன்னை அப்பாவுக்கு எவ்வளவு பிடிக்கும் சொல்லு...”


    “ஹ்ம்ம்... போனவாரம் வரைக்கும் இவ்வளவு.. அளக்க முடியாத அளவு, இந்த வாரம் இத்துணுண்டு... இப்போ கொஞ்சம் இவ்வளவு அதிகமாகி இருக்கு”, என்று கையை விரித்து சுருக்கி பின் கொஞ்சம் விரித்து காட்டினாள்.


    அவளின் செய்கையால் புன்னகை பூக்க,


    “ஸ்ரீ... அப்பாக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. எவ்வளவுன்னா பூரணி அம்மாவை விட... இரு..இரு.. உன்ற அம்மா இங்க இல்லை தானே.. இல்லேன்னா இராத்திரி என்னை பந்தாடிடுவா..” என்று பயந்தது போல் சுற்றும் முற்றும் பார்க்க,



    அந்த செய்கையில் பழைய ஸ்ரீ கொஞ்சம் திரும்பி,


    “போங்கப்பா.. பூரணியாவது உங்களை.. ஹ்ம்ம்... பொய் சொன்னாலும் நம்பறமாதிரி சொல்லணும்” என்று சொல்லிக்கொண்டே சிரித்தாள்.


    அவளின் சிரித்த முகத்தை பார்த்த பின் தான் ராஜாவிற்கு கொஞ்சம் மனது நிம்மதியானது.


    அவளை பார்த்துக்கொண்டே,


    “அம்மு.. உன்னை என்னால் சோமு, ரங்கா இவங்க பசங்க மாதிரி டவுன்ல படிக்க வைத்து இருக்கு முடியும்.. நான் ஏன் அப்படி செய்யமா உன்னை இங்க இருக்கற பள்ளியில் படிக்க வைத்தேன் தெரியுமா...”


    “ஹ்ம்ம்.. தெரியும்பா.. என்னை பிரிந்து இருக்க முடியாதுன்னு தானே.. ஆனா இப்போ மட்டும்...” என்று இப்பவும் இடையில் சிந்து பாடினாள்.


    “அதுவும் ஒரு காரணம் தான்... ஆனால்.. உண்மையா சொல்லனும்னா, நீ அங்க படிக்க போனதால் தான் நம் பண்ணையில் வேலை செய்யறவங்களும் அங்கே குழந்தைகள சேர்த்தாங்க.. நானும் என்ற பிள்ளையே படிக்குது உங்களுக்கு என்ன சேர்க்க வேண்டியது தானே எனச் சொல்லி அவங்க பிள்ளைகளையும் சேர்த்தேன்.


    என்னை பொறுத்தவரைக்கும் எங்க படிக்கிறோம் அப்படிங்கிறது முக்கியமில்லை.. நாம எப்படி படிக்கிறோம் அப்படின்னு தான் பார்க்கணும்... அதான் உன்னை அங்கே சேர்த்தேன்...


    என்னால் ஒரு நாலு பிள்ளைக படித்தா எனக்கு சந்தோசமே... நான் எதிர் பார்த்தது போல் அவங்களும் படித்தாங்க.. இப்பவும் படிக்கறாங்க...


    நான் நினைத்ததை நிருபிக்கும் படி நீ நல்லா படித்தாய்.. எனக்கு அது சந்தோசமே...


    இதுவரைக்கும் உன்னை நான் இது செய் அது செய்ன்னு ஏதாவது சொல்லி இருக்கேனா... சொல்லு..


    இப்போ ஏன் சொல்லறேன்னு கொஞ்சம் யோசிடா..


    இப்போ நீ படிக்க அங்க போகமா இங்கிட்டே படித்தா யாரும் நீ போகலை அப்படின்னு சொல்ல மாட்டாங்க..


    ஐயாவே பாரு.. பொண்ணை இங்கிட்டு சேர்த்து இருக்காரு.. அத்தனை மார்க் எடுத்தும் அவரு பொண்ணே இங்க தான் படிக்குது...


    உங்களுக்கு என்ன.. இங்கயே படிங்க.. இல்ல காட்டு வேலைக்கு வாங்க.. அப்படின்னு எல்லோரும் சொல்ல மாட்டாங்களா.. சொல்லு..


    நிறைய பேரு நல்ல மார்க் எடுத்து இருகாங்க இல்ல.. அவங்களுக்கும் ஆசை இருக்கும்.. உன்னால பாரு.. இப்படி எல்லாம் நடக்கும்.. அவங்க எல்லாம் பாவம் இல்லை சொல்லு...”


    அவளின் மனம் கொஞ்சம் யோசிக்க தொடங்கியது. முகம் அதை வெளிபடுத்த, அவர் தொடர்ந்தார்.


    “அது மட்டும் இல்லை குட்டி.. எனக்கும் உங்க அம்மாவுக்கும் நிறைய படிக்கணும் அப்படின்னு ஆசை இருந்தது. ஆனால் சூழ்நிலை காரணமா படிக்க முடியலை..


    உனக்கு வாய்ப்பு இருந்தும் போகமாட்டேன்னு சொல்லற..


    இதுக்கு மேல உன்னுடைய இஷ்டம் தாண்டா..


    நான் எதுவும் சொல்ல மாட்டேன்.


    போனா சந்தோசபடுவேன்.. போகலைன்னா கொஞ்சம் வருத்தம் இருக்கும்.. இருந்தாலும் என் அம்மு சந்தோசமா இருந்தா எனக்கு போதும்.. சரியா..


    யோசித்து முடிவை சொல்லு..


    இதுக்காக வயிற்றை காயப் போடதே.. வா.. வந்து சாப்பிடு.” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார்.


    அவர் எழுந்து சென்றதும்,


    அவரின் பேச்சை அவள் முழுதும் கிரகிக்கவில்லை என்றாலும்,
    ‘போனா சந்தோசபடுவேன்.. போகலைன்னா கொஞ்சம் வருத்தம் இருக்கும்..’
    என்ற வரிகள் மீண்டும் மீண்டும் அவளின் காதில் ஒலித்தன.
     
    Last edited: Oct 20, 2012
    2 people like this.

Share This Page