1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கலங்காமல் காத்திடுவாள் காளிகாம்பாள்.

Discussion in 'Posts in Regional Languages' started by lalithavennkat, Nov 8, 2011.

  1. lalithavennkat

    lalithavennkat Silver IL'ite

    Messages:
    530
    Likes Received:
    16
    Trophy Points:
    50
    Gender:
    Female
    .

    எல்லா தெய்வங்களும் நம்மை காப்பாற்றவே உள்ளன. எந்த தாயும் தன் குழந்தைகள்
    கஷ்ட படுவதை பார்த்து கொண்டு சும்மா இருப்பதில்லை.

    என்னுடைய வாழ்வில் சென்னை தம்பு செட்டி தெருவில் இருக்கும் அன்னை காளிகாம்பாள்
    செய்த அற்புதங்கள் ஏராளம். வாரத்தில் எப்படியும் நான்கு நாட்கள் கட்டாயமாக கோவிலுக்கு
    சென்று கொண்டு இருந்தேன். இந்த கால கட்டத்தில் எனக்கு திருமணம் நடந்தது. மாமியார்
    வீடு சென்றவுடன் எவ்வளவு முயன்றும் என்னால் வாரத்தில் ஒரு நாள் கூட கோவிலுக்கு
    செல்ல முடியாமல் போய்விட்டது. இப்படியே வருடங்கள் கழிந்தன. வாழ்க்கை எந்திரமயமானது.

    எட்டு வருடங்கள் கழிந்தன. ஒரு நாள் மிகுந்த மனவருத்தத்துடன் கோவிலுக்கு சென்றேன்.
    தாயே இத்தனை வருடங்களாக உன்னை பார்க்கவர முடியாமல் போய்விட்டது. என்னை மன்னித்துவிடு என்று வாய்விட்டு கதறி அழுதேன். என்னை தாய் ஆக்கும்படி மன்றாடினேன். என்னே! அன்னையின் கருணை. அடுத்த மாதமே நான் கருவுற்றேன். அன்னையின் கருணையினால் என் கையில் ஒரு மழலை.

    வாழ்கையில் எத்தனையோ சோதனைகள். ஒவ்வொரு சமயத்திலும் காளிகாம்பாள் தான் என் கூட இருக்கிறாள். நான் அவளிடம் பக்தி செலுத்தி இருக்கிறேன். மன்றாடி இருக்கிறேன். சண்டை போட்டு இருக்கிறேன். ஆனால் அவள் என்னை கைவிட்டதே இல்லை. இன்றளவும் எனக்கு எதாவது ஒரு பிரச்சனை என்றால் அவளை தான் முதலில் அழைப்பேன். கல்யாணம், மகப்பேறு, நோய் நிவாரணம் எல்லாவற்றுக்கும் அன்னை அபிஷேக மஞ்சளே பிரசாதம்.
     
  2. knbg

    knbg Moderator Staff Member IL Hall of Fame

    Messages:
    5,815
    Likes Received:
    5,614
    Trophy Points:
    455
    Gender:
    Female
    அன்புள்ள லலிதா அவர்களே .....

    அன்னையின் அருள் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.....படித்து சிலிர்த்தேன்....

    நானும் அன்னை பக்தையே...காஞ்சி காமாக்ஷி அன்னையை, இயன்றபோதெல்லாம் பௌர்ணமியில் தரிசித்து அவள் சந்நிதியில் அமர்ந்து சஹஸ்ரநாமம் சொல்வது வழக்கம்....

    திருமணதிற்கு பின், எப்போதாவது ஒரு முறையே அந்த பாக்கியம்....ஆனால் பல துன்பமான நேரங்களில், மானசீகமாகவே அவளை மன்றாடி என் துயர் துடைக்க பெற்றேன்......

    அன்னையின் அருளே அருள்........ஓம் சக்தி.....
     
  3. sujisaran

    sujisaran Silver IL'ite

    Messages:
    259
    Likes Received:
    157
    Trophy Points:
    93
    Gender:
    Female
    அன்பு தோழியே


    மிக நன்றாக இருந்தது உங்கள் பதிவு !!! நான் எப்பொழுதும் என் பிரச்சனைகளை சீரடி பாபாவின் காலடியில் சமர்ப்பித்து விடுவேன் என்னுடையது காதல் திருமணம் நான் என்னுடைய திருமணம் எந்த பிரச்னையும் இல்லாமல் முடிய வேண்டும் என தினமும் தவறாமல் பாபா கோவில் செல்வேன் அனால் திருமணம் முடிந்த பின் செல்லவே முடிவதில்லை ஏனென்றே தெரிய வில்லை
     

Share This Page