1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கர்ணன் என் காதலன் : 37

Discussion in 'Stories in Regional Languages' started by veni_mohan75, Feb 3, 2011.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    பகுதி முப்பத்தி ஏழு : தினவாரியான யுத்தத்தின் தொடர்ச்சி:


    கர்ணன் தனக்கு தேரோட்டியாக சல்லியன் இருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம் என சொல்ல, துரியோதனன் அவரை கர்ணனின் தேரோட்டியாக இருக்குமாறு கேட்க அவரது இருப்பிடம் செல்கிறான். இனி அங்கே நடப்பவை.

    துரியோதனன் : ஆட்சியாலர்களுக்கெல்லாம் முதல்வரே, மத்ர தேசத்து மன்னரே.. வணக்கம். நான் தங்களிடம் ஒரு உதவியை நாடி வந்துள்ளேன்.

    சல்லியன் : சொல் துரியோதனா. என்ன வேண்டும்??? நானும் என் சேனையும் அதற்காய் காத்திருக்கிறோம்.

    துரியோதனன் : அர்ஜுனனை போரில் வெல்ல, நீங்கள் கர்ணனுக்கு தேரோட்டியாக இருந்து, கர்ணனை வழி நடத்த வேண்டுகிறேன் மன்னா.

    சல்லியன் : (கோபம் மிக) என்ன??? நான் கர்ணனுக்கு தேரோட்டியாவதா??? நீ என்னை அவமதிக்கிறாய் துரியோதனா...

    துரியோதனன் : கோபம் வேண்டாம் அரசே. சற்றே பொறுமையாய் கேளுங்கள்.

    நீங்கள் போரிடுவதில், கண்ணனுக்கு நிகரானவர். கர்ணனுக்கு சாரதியாய் இருந்து அவன் அர்ஜுனனை வெல்ல துணை புரிய வேண்டும்.

    நீர் அறியாதது இல்லை. பாண்டவர்களால் என் சேனை பெருத்த அழிவுக்கு உட்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் அது முழுதாய் அழிந்து விடும்.

    கர்ணன், அர்ஜுனனை அழிக்க நினைக்கிறான். ஆனால், அதற்கு பரமாத்மாவுக்கு சமமாய் ரதம் ஓட்டவல்ல தங்களின் துணை இருந்தால் நிச்சயம் கர்ணன் வெல்வான். அர்ஜுனனை தோற்கடித்தால், பின்னர் பாண்டவர்களை வெல்வது எளிது.

    அரசர்க்கு அரசர், நீங்கள் மட்டும் சம்மதித்தால், உங்கள் இருவரையும் யாராலும் அழிக்க முடியாது. அழிப்பது என்ன நெருங்கக் கூட முடியாது.

    தயை கூர்ந்து நீங்கள் சம்மதியுங்கள்.

    சல்லியன் : துரியோதனா, நான் ஒரு அரசன். ஆனால், கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன். என் நிலை இறங்கி நான் அவனுக்கு தேர் ஒட்டுவதா?? நடவாது.

    அத்தோடு நினைவில் வை, பரந்த என் தோள்களுக்கு பல்லாயிரம் வீரர்களை அழிக்கும் வலு உண்டு. காற்றின் வேகத்தில் சுழன்றோடும் என் ரத்தத்துக்கும், அதிலே கட்டப்பட்ட குதிரைகளுக்கும், ஆயிரம் சேனைகளை அழிக்கும் வலு உண்டு. என் வில்லுக்கும் அந்த வலு உண்டு. என்னிடம் உள்ள தெய்வீக அச்திரங்களுக்கு மலைகளைக் கூட தூளாக்கும் வலு உண்டு.

    ஷத்ரியர்கள் மேலானவர்கள். நான் ஒரு ஷத்ரியன். நான் பிறப்பில் இழிந்தவனான கர்ணனுக்கு ஏன் தேர் ஓட்ட வேண்டும்??? நான் ஒரு நாட்டுக்கு அரசன். பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரன். இந்த அவமானம் எனக்கு ஏன் வர வேண்டும்.

    நான் என் நாட்டுக்குத் திரும்ப என்னை அனுமதிப்பாயாக துரியோதனா.

    (இவ்வாறு சொல்லி விட்டு, சல்லியன் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தார். அவரை தடுத்து நிறுத்திய துரியோதனன் மிகவும் பிரியமாக கீழ்க்கண்டவாறு பேசினான்)

    துரியோதனன் : உண்மைதான் அரசரே. நீங்கள் கர்ணனை விட மேலானவர்தான். நான் தங்களை அவமதிக்க விரும்பவில்லை/முயலவுமில்லை. என் மனதில் சில காரணங்கள் உண்டு. கர்ணன் அஸ்திரங்கள் உபயோகத்தில் அர்ஜுனனை விட மேலானவன். தாங்கள் ரதம் செலுத்துவதிலும், குதிரைகளை கட்டுக்குள் வைப்பதிலும் பகவான் கிருஷ்ணரை விட மேலானவர். வாசுதேவன் அனைவருக்கும் முதல்வன். அவனை யுத்தத்தில் வெல்ல யாராலும் இயலாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனாலும் அவன் பார்த்தனுக்கு சாரதியாய் இருக்கிறான். நீங்கள் கண்ணனைப் போல இருமடங்கு திறமை வாய்ந்தவர். தாங்கள் கர்ணனுக்கு ரதம் ஓட்டினால் உங்களுக்கு அது அவமானம் தராது. மாறாக பேரையும், புகழையும் தான் தரும்.

    சல்லியன் : கண்ணனுடன் என்னை ஒப்பிட்டுப் பேசிய உன் பேச்சில் மனம் மகிழ்ந்தேன் நான். உனக்காய் என முடிவை நான் மாற்றிக் கொள்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நான் என்ன சொன்னாலும் கர்ணன் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். என்னை அவமதிப்பது போலே அவன் நடந்தால் நான் அவனுக்கு சாரதியாய் இருக்க மாட்டேன். இதற்கு சம்மதம் எனில், கர்ணனுக்கு தேர் ஓட்ட நான் சம்மதிக்கிறேன்.


    துரியோதனனும், கர்ணனும், ஆவார் நிபந்தனைக்கு ஒத்துக்கொள்ள, சல்லியன் கர்ணனின் சாரதி ஆனான்.

    யுதிர்ஷ்டிரருக்கு கொடுத்த வாக்கை இவர் காப்பாற்ற வேண்டுமே.. அதாவது, கர்ணன், அர்ஜுனனுடன் போர் புரிய நேர்ந்தால், அர்ஜுனனை பாராட்டியே பேச வேண்டும். இது கர்ணனின் ஆவலைக் குன்றச் செய்யும் என்பதால்.

    தாய் மாமன் ஆயிற்றே.. விடுவாரா... செவ்வனே செய்தார் அந்தப் பணியை. ஆரம்பம் முதலே அர்ஜுனனையே பாராட்டிக் கொண்டு இருந்தார். அதில் கர்ணனின் மனம் சிறிது சலனப்பட்டாலும், பின்னர், தன்னைத் தானே தேற்றிக் கொண்டு அவரிடம் வாதிட்டான்.

    இருவரின் வாதம் கண்ட துரியோதனன் இடையே புகுந்து, இருவரும் தங்களுக்குள் போரிடுவதை நிறுத்தி, எதிரிகளுடன் போரிடுங்கள். அதுவே நான் வேண்டுவது என்றான்.

    இருவரின் கவனமும், யுத்தகளத்துக்கு வந்தது.

    இனி யுத்தகளம்...


    பதினேழாம் நாள் யுத்தம் :


    துரியோதனனின் பக்கத்தில், கிருபரும், கிருத்வர்மன் வலது புறம் இருக்க, அவர்களைத் தாண்டி, சகுனியும், உலுகனும் ஒரு இருக்க, சுசர்மன் இடது புறம் காக்க, துரியோதனன் அவர்களுக்கு நடுவே இருக்க, அவனுக்கு பின்னே, ஆயிரம் வீரர்களுடன் யானை மீது துச்சாதனன் இருக்கிறான். அனைவருக்கும் பின்னே வியூகத்தைக் காக்க அஸ்வத்தாமா இருக்கிறான்.

    இவர்கள் அனைவருக்கும் முன்னிலையில் கர்ணன் நிற்கிறான். அவனுக்கு பின்னே அவனது வீர மக்கள், விருஷசேனா, பானசேனா மற்றும் சுசேனா ஆகியோர் நிற்கிறார்கள். இவர்கள் மூவருமே பாலகர்கள். ஆனாலும் வீரர்கள். போர்க்கலையில் விர்தகர்கள். போர் வெறியன் கர்ணன். அவன் மக்கள் இப்படி இல்லாமல் இருந்தால் தான் ஆச்சரியப் படவேண்டும்.

    பாண்டவர்கள் பக்கத்தில்....

    அர்ஜுனன், திஷ்டத்துய்யுமன், பீமன், சாத்யகி, பாஞ்சாலியின் புத்திரர்கள் ஐவர், சிகண்டி, நகுல, சகதேவர்கள், என அனைவரும் அணிவகுத்து நிற்க, அவர்களின் பின்னே, தருமர் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்தார்.

    மாவீரர்கள் அனைவரும் அணிவகுத்து நிற்க, சங்கநாதங்களும், போர் முரசுகளும் இரு புறமும் முழங்க, வேங்கைகளும், சிறுத்தைகளும், சீறிப் புறப்பட ஆயத்தமாய் இருந்தன. ஆனால், முதல் நாள் போரை ஒப்பிடுகையில், போர் வீரர்களில் எண்ணிக்கை, மூன்றில் ஒரு பாகமாய் குறைந்திருந்தது.

    யுத்தம் ஆரம்பமானது. ரத, கஜ, துரக, பதாதிகள் அனைவரும், வெற்றி அல்லது வீர மரணம் எனும் எண்ணம் கொண்டு, தங்கள் லட்சியமாய் முடிந்த வரை பகைவர்கள் எண்ணிக்கையை குறைப்பது என்பதைக் கொண்டு ஒருமித்தக் கருத்துடன் நடந்த அன்றைய போர்... யுத்த சரித்திரத்தில் ஒரு மைல்க் கல்தான்.

    கர்ணனின் ஆரம்பம் அசத்தலாகவும், பாண்டவர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்தது.

    பாண்டவர்களின் தரப்பில், சிறந்த வீரர்களாகக் கருதப்பட்ட, பானதேவன், சித்திரசேனன், சேனவிந்து, தபன் மற்றும் சூரசேனனை எளிதில் வீழ்த்தினான்.

    அவனது ரதத்தை இருபுறமும் இருந்து காத்தனர் அவனது இரு மக்கள். சத்தியசேனன் மற்றும் சுசேனன். விருசசேணன் கர்ணன் தேரின் பின்னால் இருந்து தன் தந்தையைக் காத்தான்.

    கர்ணன், மாவீரர்கள் ஐவரைக் கொன்றதை கண்டவுடன், அவனுடன் போரிட, பாண்டவர் தரப்பில் இருந்து, திஷ்டத்துய்மன், சாத்யகி, பாஞ்சாலியின் புத்திரர்கள், பீமன் மற்றும் சிகண்டி என இத்துணை பேரும் சேர்ந்து ஒருவனான கர்ணனை எதிர்த்தனர்.

    அனைவரையும் ஒரு புன்னகையுடனே எதிர்க்கொண்டான் கர்ணன். போர்.. போர்... என திணவெடுத்த அவன் தோள்கள் பூரிப்பில் மேலும் விரிய, சாந்தம் தவழும் முகம் சந்திரன் எனில், வீரம் ததும்பும் முகம் சூரியனின் காந்தியுடன், கொளுத்தும் வெய்யிலில், பூமியில் தோன்றிய சூரியனாய், சூரர்களை அழிக்க வந்த சொர்ண சொரூபமாய், தான் இருக்கும் இடத்தையே தன் வீரத்தால் ப்ராசிக்க வைத்தான் கர்ணன்.

    அவன் சென்ற வழி எல்லாம், எதிரிக்கு அழிவு. அவர்கள் படையில் நிலை குலைவு. அவன் வீரத்தைக் காணக் காண, ஒவ்வொரு கௌரவர் தரப்பு வீரனுக்கும், உள்ளுக்குள் உற்சாகம் குமிழியிட்டுக் கிளம்பியது.

    தீரச் செருக்கு, திமிறி வெளிப்பட்டது அனைவருக்கும். வீறு கொண்டு அவர்கள் வேங்கைகளாய் வெறும் கையுடன், பாண்டவர் தரப்பு வீரர்களைப் பந்தாடினர்.

    மின்னலும், இடியுமாய், விஜயத்தின் (கர்ணனின் வில்) வீச்சின் சத்தம் அந்த யுத்த களத்தில் எங்கு நோக்கினும் கேட்டது. சல்லியனின் திறமையில், கர்ணனின் ரதம், யுத்தகளம் எங்கும் சுற்றி, சுழன்று அடிக்கும் சூறாவளியாய், எட்டுத் திக்கும் விஜயம் செய்து, ஜெயம் தந்தது துரியோதனனுக்கு.

    ஆரம்பத்தில் கர்ணனை ஊக்கம் கெடுத்த சல்லியனும், கர்ணனின் திறம் கண்டு உண்மையான வீரனை நான் இங்கே கண்டேன். அவன் மீது பெரும் மதிப்பு கொண்டேன் என உள்ளத்திலே கர்ணனை மெச்சி, உச்சி முகர்ந்தார்.

    அவன் கண்ணசைவில் அவன் எண்ணம் புரிந்து, களத்தை அவனுக்கு சாதகமாக்கினார்.

    காணக் காணத் தெவிட்டவில்லை சல்லியனுக்கு கர்ணனின் வீரம். களைப்பு என்பதே அறியாதவனா இவன் என மலைப்பு வந்தது அவருக்கு...

    இதுவரை இருந்த உன்னை அறிவேன் நான்
    ஓயாது இருந்த உன் கொடையின் தன்மை அறிவேன் நான்

    உன்னுள்ளே உறங்கிய வீரம் அதை இன்றே அறிந்தேன்
    ஓயாது உன்னை தூற்றிய என் சித்தம் தெளிந்தேன்

    உண்மையான வீரம் எது என்பதை அறிந்தேன்
    ஓயாத உன் தீரம் அதை இன்று அறிந்தேன்

    உனைக் கீழானவன் என்ற என் எண்ணம் அதைக் களைந்தேன்
    சுழன்று சீரும் உன்னிலே புயலின் வேகம் கண்டேன்

    ஒருவனாய், நீ எதிரிகளை மட்டும் இன்றி
    என்னை நோக்கி வரும் அம்புகளையும்
    தடுத்ததாய்.

    உன்னை மதியாத என்னை நீ மதித்தாய்
    என்னை பிறர் மிதியாது காத்தாய்

    ஆண்மகனடா நீ...
    சீரும் வேங்கையாய் உன் தீரம்
    பாயும் சிங்கமாய் உன் வீரம்

    ஆயிரம் யானைகள் சேர்ந்தது உன் யுத்த பலம்
    அளவு சொல்ல முடியாதது உன் ஆன்ம பலம்

    எனக்கு சமமில்லை நீ என்றேன். அந்த ஆண்டவனும்
    உனக்கு இணையில்லை என்கிறேன் நான்

    உத்தமனாய் உள்ளாயடா நீ போரிலும்...
    புறமுது காட்டுவோரை விடுத்து
    ஆயுதம் அற்றவரை விடுத்து,

    ஆயிரம் பேர் சேர்ந்து தாக்கினாலும் தடுத்து
    சாய்க்க முடியாத மலையாய் நின்றாய்

    ஆரம்பத்தில் இருந்த உற்சாகம்
    சிறுது கூட குன்றாமல் குறையாமல்,
    இருக்க இருக்க உன் காந்தி கூடுவது
    என்ன மாயமோ???

    விழுப்புண்கள் அவை கூட உன் அழகுக்கு
    அழகுதான் சேர்க்கிறது. வழியும் உன் குருதி
    உனக்கு வாழ்த்துதான் சொல்கிறது.

    எப்படி இருந்த கௌரவ சேனை???
    பிதாமகரின் பிரசன்னத்தில் கூட
    விசனமாய் இருந்தவர்கள், வீரன்
    உன் பிரகாசத்தில், வீறு கொண்டனர்

    நீ என் மகனாய் இருந்திருந்தால்...
    என் புகழ் இறவாது இருந்திருக்கும்

    இப்போதும் என்ன??? உன் பெயர்
    உள்ளவரை என் பெயரும் இருக்கும்

    என் வாழ்நாளின் பிறந்த பயனை
    நான் அடைந்தேன் கர்ணா உன்னாலே...
     
    Loading...

  2. priyasaki

    priyasaki Gold IL'ite

    Messages:
    712
    Likes Received:
    386
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hi veni ma,

    karnanin veera theera seyalgalai alagaga kodunthullirgal...
    paaraattukkal...
     
    Last edited: Feb 3, 2011
  3. laddubala

    laddubala Gold IL'ite

    Messages:
    4,035
    Likes Received:
    80
    Trophy Points:
    128
    Gender:
    Female
    நண்பனுக்காய் சல்லிய மன்னனை தேர்ரோட்டியாகிய துரியோதனின் பேச்சு சாதுர்யம் அருமை.

    அதே போல யுத்த களத்தில் கர்ணனின் வீர செயல்கள்...அவனைப் பற்றிய வர்ணனைகள் அனைத்தும் வெகு அழகு. கர்ணனே தலை வணங்குகிறேன் உன் வீரத்திற்கு :bowdown:bowdown

    தந்தையை காக்கும் பொருட்டு மைந்தர்கள் மூவர் சிறியவராயினும் வீரர்கள் அவர்கள் செயல் பாராட்ட வேண்டும்.

    இவனுக்கா நான் தேர் ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் விலகி இவனுக்கு நான் தேர் ஓட்டினேன் என்று மனதார மகிழ்ந்து சல்லியனின் உள்ளம் சொல்லும் கவிதை அழகு அழகு வெகு அழகு.:thumbsup:thumbsup

    இன்றைய பகுதி மிகவும் பிடித்து இருந்தது. :)
     
    Last edited: Feb 3, 2011
  4. MahiSree

    MahiSree Gold IL'ite

    Messages:
    562
    Likes Received:
    283
    Trophy Points:
    138
    Gender:
    Female
    அன்பு வேணி மா,

    அற்புதம் ..
    உங்கள் ஒவ்வொரு வர்ணனையும் கர்ணனை மென்மேலும் அழகாகிக்கொண்டு
    போகிறது .

    செஞ்சொற்றுக்கடனுக்காக இதை செய்தாலும் , அவன் ஒரு மஹா -வீரன் , பார்த்தனைக்காட்டிலும் .

    சல்லியனின் பெருந்தன்மையும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று .

    இந்த தொடரை ஒரு தொகுப்பாக நீங்கள் வெளியிட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும்

    உங்கள் எழுத்துப் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் :thumbsup
    ~மஹிஸ்ரீ
     
  5. prana

    prana IL Hall of Fame

    Messages:
    5,231
    Likes Received:
    2,564
    Trophy Points:
    340
    Gender:
    Female
    veni,

    indha pagudhi padikkaiyil eno negizhvaaga irundhahdu....andha kavidhai adhanudaya saramsam miga arumai...superpa....
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இந்த பதிவு படித்து....
    மேல் கொண்டு எழுத வார்த்தைகள் வர வில்லை.
    என் நெஞ்சம் கனக்கிறது...என் கர்ம வீர கர்ணனின் இறுதி முடிவு தெரிந்து.
    க..ர்...ணா ஆ ஆ ஆ!!!!!

    தோழி
    சல்லியனின் எண்ணத்தில் கர்ணனின் பெருமை
    உன் கவிதையாய்.....மிக அழகு Bow.Bow.Bow.
     
  7. Vaishnavie

    Vaishnavie Gold IL'ite

    Messages:
    2,914
    Likes Received:
    62
    Trophy Points:
    130
    Gender:
    Female
    namma hero pathi na kavithai super ka...
    salliyanoda ennatha kuda avar thiramiyaale mathitaare...
     
  8. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    எதிரிகளாய் இருந்தாலும், பகைவனின் திறமையை பாராட்டும் பழக்கம் அந்த காலத்தில் அதிகம் தான்...அருமை வேணி இந்த பகுதி.:thumbsup:thumbsup

    கர்ணனின் முடிவும் கதையின் முடிவும் நெருங்கிவிட்டதா.....:spinஇருந்தாலும் கர்ணனின் கடைசி நிமிட காட்சிகளை உங்கள் வரிகளில் படிக்க ஆவலாய் இருக்கிறது வேணிம்மா.
     
  9. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    சல்லியனின் மன ஓட்டத்தில்,
    கர்ணனின் சிறப்பை அழகுற கவிதை ஆக்கி,
    போர் விருந்து படைத்து விட்டீர்கள் வேணி.

    கர்ணனின் வீரம், தீரம், யுக்திகள் என அனைத்தையும்,
    மிக அழகாக வார்த்தையில் நெய்து பட்டென மிளிரச் செய்ததில்
    தெரிகிறது உங்கள் சாதுர்யம். உங்கள் எழுத்தில் வாழ்வான் கர்ணன்
    என்றென்றும், அவன் இப்போரில் உயிர் துறந்தாலும். தோல்வியிலும் வெற்றி அவனுக்கே...
     

Share This Page