1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கரிகாலன்-4 (முற்றும்)

Discussion in 'Stories in Regional Languages' started by Ilamuriyan, Oct 9, 2012.

  1. Ilamuriyan

    Ilamuriyan Silver IL'ite

    Messages:
    102
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Male
    நீ என்னோட* நையினானு இந்த பசங்க சொல்றாங்களே என்று தாதா மணி சொன்னதும் அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்த கபாலி

    " அவங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் நீ என் மகன் மாதிரி தானே மணி" என்று சொல்லிவிட்டு சட்ட நாதனிடமும் ரங்கனிடமும்,

    கபாலி: அது எப்படி மணி என் பையன்னு சொல்றீங்க?

    ரங்கன்: நீங்க தானே சொன்னீங்க உங்க பையனோட ஒரு கால் தீயில கருகிடுச்சுனு. தாதா மணியோட இடது கால் கருகியிருக்கு அதை வைச்சு தான்......

    ரங்கன் கூறியதைக் கேட்ட கபாலி உரக்க சிரித்து, "மணி தம்பியோட கால் கருகியது அவனுக்கும் என்னோட ஆட்களுக்கும் நடந்த சண்டையில எங்காட்கள்ல ஒருத்தன் எறிஞ்ச ஆசிட் பல்ப் அவனோட இடது கால்ல பட்டு கடுக்கிடுச்சு. அப்பால நாங்க தான் மணியை ஆஸ்பத்திரிக்கு இட்டாண்டு குணப்படுத்தினோம். அன்னிக்கிருந்து மணி நம்ம தோஸ்த் ஆயிட்டான். இல்லையா மணி?". என்றான்.

    கபாலி கூறியதை கேட்டு ஏமாற்றமடைந்த சட்ட நாதன், ரங்கனிடம்

    கபாலி: உங்களுக்கு இன்னும் ஒரு வாரம் டைம் தறேன். என் பையனை கண்டுபிடிங்க இல்லை சேட்டுகிட்ட பணத்தை திருப்பி கொடுக்கிற வழியை பாருங்க. இல்லாட்டி நானும் மணியும் சேர்ந்து உங்களை கைமா பண்ணிடுவோம். போங்க.

    ஏமாற்ற*த்துடனும் கவலை தோய்ந்த முகங்களுடன் சட்ட நாதனும் ரங்கனும் தங்களுடைய கடைக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் அவர்களுடைய கவனத்தை ஒரு விளம்பரம் ஈர்த்தது.

    விளம்பரத்தில் " சுவாமி சிரிப்பானந்தா அரும்பாக்கத்தில் இருக்கும் தனது குடிலில் பகதர்களுக்கு காட்சி தருகிறார்" என்றிருந்தது. விளம்பரத்தை படித்து நின்றிருந்த அவர்களிடம் அந்த வழியே வந்த ஒருவர் " இந்த சாமியார் வரப்பிரசாதிங்க. அவர் சொல்றதெல்லாம் நடக்குது. அவருக்கு கரி நாக்கு இருக்கு" என்றார். அதைக்கேட்ட ரங்கன் " வா சட்டா நாம் அவர்கிட்ட போயி கபாலியோட பையன் எங்கே இருக்கான்னு கேப்போம்" என்றான்.

    அவர்கள் இருவரும் தேங்காய், பூ, வெத்திலை, பழங்களுடன் சிரிப்பானந்தாவை பார்க்க அரும்பாக்கம் சென்றார்கள். அங்கு சாமியாரை சுற்றி பெரும் கூட்டம் நின்றிருந்தது. சாமியாரின் சீடர்கள் பக்தர்களை க்யூவில் நிற்க வைத்து ஒருவர் ஒருவராக அனுமதித்தார்கள். மெதுவாக நகர்ந்த க்யூவில் சுவாரஸ்யமின்றி நின்று கொண்டிருந்த சட்ட நாதனை ரங்கன் உலுக்கி,

    ரங்கன்: சட்ட நாதா, நாம் தேடி வந்த கபாலி பையன் இந்த சாமியாரோ இருக்குமோனு தோணறது.

    சட்ட நாதன்: எப்படி சொல்றே?

    ரங்கன்: பகதர்கள்ல ஒருத்தர் சாமிக்கு பாத பூசை பண்ணும்போது சாமியோட*ஒரு கால் கறுகியிருந்ததை பார்த்தேன்.

    சட்ட நாதன்: அட போப்பா, நீ ஒண்ணு கால் கருகியிருக்கறவங்கள்லாம் கபாலியோட பையனா? ஒரு கேடியோட பையன் எப்படி சாமியாராக முடியும்?

    ரங்கன்: எல்லாம் காலத்தின் கோளாறு. இரு நாம் அவரை சந்திச்சு அவர்கிட்டையே கேட்டுடுவோம்.

    அவர்களின் முறை வந்ததும் தேங்காய் பழ தட்டை அவர் முன் வைத்து " சாமி கும்பிடறோம்" என்றார்கள். சிரிப்பானந்தா தனது ட்ரேட் மார்க் சிரிப்பை உதிர்த்து " பக்தர்களே உங்கள் குறைகள் என்ன சொல்லுங்கள். என்னால் முடிந்தால் நான் அதற்கு தீர்வு சொல்கிறேன்" என்றார் இளைஞராக தெரிந்த அவர்.

    ரங்கன்: சாமி நாங்க கபாலி தாதாவோட பையனை தேடிக்கிட்டிருக்கோம். பையனோட ஒரு கால் கருகியிருக்கும். அது ஒரு வேளை நீங்களாக இருக்குமோனு தெரிஞ்சுக்க ஆசைப்படுகிறோம்".

    ரங்கன் சொல்லி முடித்ததும் அதைக்கேட்ட சாமியாரின் பிரதான் சீடர் கோபமாக " என்ன தைரியம் உங்களுக்கு. சாமியை கேடியோட பையன்னு சொல்றதுக்கு. அபச்சாரம் அபச்சாரம்" என்று தன் காதுகளை பொத்திக் கொண்டார்.

    ஆனால் சிரிப்பானந்தா சிரித்துக் கொண்டே " பக்தர்களே உங்கள் யூகம் சரிதான். மஞ்சகுப்பத்தில் ஏழு வயதில் தீ விபத்தில் என் கால் கருகிவிட்டது. அதன் பின் நான் திருடி பிழைத்து வந்தேன். ஒரு முறை அரும்பாக்கம் அருளானந்தா ஆசிரமத்தில் இரவில் திருடினேன். கைகளில் பூசைக்குரிய வெள்ளி சாமான்களுடன் வெளியேறும் சமயத்தில் வாசலில் அருளானந்தா சிரித்த முகத்துடன் நின்றிருந்தார். அவர் கண்களை பார்த்த என்னிடம் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட்டது. கைகளிலிருந்த வெள்ளி சாமான்களை கீழே போட்டுவிட்டு அவர் கால்களில் விழுந்தேன். அவர் என்னை எடுத்து அணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து நான் அவரின் சீடனாக மாறினேன். அவர் மறைந்ததும் என்னை அவர் இடத்திற்கு ஆசிரமவாசிகள் தேர்ந்தெடுத்தனர்." என்றார்.

    ரங்கன் சட்டனாதனிடம் " வா போய் கபாலி தாதாகிட்ட அவர் பையன் கிடைச்ச விசயத்தை சொல்லுவோம்" என்றான். இருவரும் மகிழ்ச்சியுடன் கிளம்பினார்கள்.

    முற்றும்
     
    2 people like this.
  2. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Hi Ilamuriyan, nice ending. why short one?
     
  3. Ilamuriyan

    Ilamuriyan Silver IL'ite

    Messages:
    102
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Male
    Thanks for your appreciation of the story.

    Why short one is because I may not be able to visit IL for the next 2 to 3 months. Starting from next week I am attending a conference at Sydney and will be travelling to India this month end where I will be attending a conference at Mangalore and then visit Bangalore, Madurai, Mumbai and Chennai and will be back here on Nov.17. End of November I will be attending another conference at Gold Coast, Brisbane and immediately after I am leaving for U.S. to visit my son and daughter at New York and Phoenix before returning back here in Jan.2013.
     
  4. suganyarangasam

    suganyarangasam Gold IL'ite

    Messages:
    1,133
    Likes Received:
    326
    Trophy Points:
    158
    Gender:
    Female
    hi ilamuriyan..
    nice end..

    have a nice journey..
    appo next story 2 months ku aprom dhan ah??
     
  5. Ilamuriyan

    Ilamuriyan Silver IL'ite

    Messages:
    102
    Likes Received:
    71
    Trophy Points:
    68
    Gender:
    Male
    ennudaiya kathaikalukku niingkaL tharum thodantha aatharavukku mikka nanri sakothari!
     
    1 person likes this.

Share This Page