1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கனவிலும் நினைவிலும்!

Discussion in 'Regional Poetry' started by jskls, Sep 14, 2017.

  1. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    IMG_5909.JPG
    ஒற்றை மேகம்
    கதிரவனை மறைக்க
    ஒற்றையடிப் பாதையில்
    கடந்தகால நினைவுகளை
    நிறுத்திய மிதப்பில்
    கர்வத்தோடு பயணிக்க
    கண்ணில் பட்ட
    இரண்டு அன்னபறவைகள்
    நேற்று கண்ட கனவை
    கண்முன் நிறுத்த
    அழகிய இளஞ்சிவப்பு
    உடையணிந்து
    சிரித்து பேசி மகிழ்வித்து
    கனவில் வருகைதந்த
    கணங்களை எவ்வாறு
    நிறுத்தி வைப்பேன்?
    இதயத்துடிப்பாய் ஆழ்மனதில்
    பதிந்துவிட்ட எண்ணங்களை
    எவ்வாறு புறக்கணிப்பேன்
    கனவிலும் நினைவிலும் ?
     
    Loading...

  2. PavithraS

    PavithraS Platinum IL'ite

    Messages:
    2,048
    Likes Received:
    4,129
    Trophy Points:
    290
    Gender:
    Female
    லக்ஷ்மி ! வெகு நாட்களுக்குப் பின் உங்கள் கவிதை ! அழகிய கனவு ! இளஞ்சிவப்பில் வருகை தந்தவர் பெண்மையின் அடையாளம், மென்மையான அன்பின் குறிப்பு. இழந்த ஒன்று திரும்புதலின் உத்திரவாதம். எப்படிக் கொண்டாலும் மிகவும் நேர்மறைக் கனவுக்குறிப்பு. மனதில் மகிழ்ச்சி நிறைக்கின்ற கனவு. அன்னங்களின் காட்சி,உடல்நலம் தேறுதல் மற்றும் மன ஆறுதலுக்கான அடையாளமே !
     
    kaniths, periamma and jskls like this.
  3. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,643
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:as good as THAMARAI . wish I could put my platitudes in Chaste Tamil. vazhka valarga thaangalum thngal kavithvamum. ponnana velawyil allathdu Malayil pannaga ezhudhureenga.
     
    periamma and jskls like this.
  4. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி பவித்ரா ! ஊக்குவிக்கும் தங்கள் வார்த்தைகளை வாழ்த்துக்களாகவே ஏற்கிறேன்.
    என்ன செய்தாலும் கனவுகள் விடுவதாக இல்லை. மகிழ்ச்சி தருபவை என்றால் ரசித்துவிட்டு போகலாம்.
     
    PavithraS likes this.
  5. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி ஐயா! தாமரையின் பாடல்களுக்கு ஈடாகாது எனினும் தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
     
    Thyagarajan likes this.
  6. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    லக்ஷ்மி நீண்ட நாட்களுக்கு பின் படமும் கவிதையும் கண்டு மகிழ்ந்தேன் .கனவுக் கன்னி அல்லவா நீங்கள் .உங்கள் கற்பனை மிக நேர்த்தி
     
    jskls likes this.
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    மேகத்தில் உன் முகம் கண்டான்
    வீசும் காற்றில் உன் துகில் கண்டான்
    மின்னலில் உன் கண்ணொளி கண்டான்
    இடிக்கும் இடியில் உன் கோபம் கண்டான்
    மழைச் சாரலில் உன் அன்பை கண்டான்
    நீ காணும் கனவில் அவன்
    அவன் காணும் உலகில் நீ
     
  8. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    மிக்க நன்றி பெரியம்மா. என் கனவுலகம் என்றுமே அழகான ரம்மியமான நான் நேசிக்கும் ஆன்மாக்களை சந்திக்கும் இடம்
     
    GoogleGlass and kaniths like this.
  9. jskls

    jskls IL Hall of Fame

    Messages:
    6,896
    Likes Received:
    24,888
    Trophy Points:
    490
    Gender:
    Female
    அட்டகாசமான வரிகள் அம்மா. சந்திரபாபுவின் பாடல் நினைவுக்கு வருகிறது. அவன் கனவில் அவள் வருவாள் ....
     
    kaniths likes this.
  10. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    அடடா தேக்கி வைத்த நினைவுகள்
    கனவிலும் கண்ணசர விட மாட்டேங்குதே
     
    jskls likes this.

Share This Page